திருமதி சோனியாவிடம் சமையல்காரராக இருந்தவரிடம்
வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு செய்தி –
டெல்லி: நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர்
பிரதீபா பட்டீல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குக்
கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள்
அனைத்தையும் தமது சொந்த கிராமமான அம்ராவதிக்கு எடுத்துச்
சென்றதுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.
அவர் தமது பதவிக்காலத்தில் இருந்த போது
150 பரிசுப் பொருட்களை பெற்றிருக்கிறார். அதில்
அமிர்தசரஸ் தங்கக் கோயில் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு
ஒன்றும் அடக்கம். அதில் ஒன்று
அமெரிக்க அதிபர் ஒபாமா கொடுத்தது. அம்ராவதியில்
இருக்கும் அனைத்து பொருட்களும் பிரதீபா குடும்பத்தினர்
நடத்தும் வித்யாபார்தி கல்லூரியில்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை இனிமேல் தான் – வரும்
டிசம்பர் மாதம் திறப்பதாக உத்தேசமாம். ஆனால் அனைத்துப்
பொருட்களும் 35 டிரக்குகளில் ஏற்கெனவே சென்று விட்டன.
பிரதீபா பட்டீலின் இந்த நடவடிக்கையானது மரபுகளை
மீறிய செயல் என்று அரசியசட்ட வல்லுநர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர். குடியரசுத் தலைவர் பொறுப்பில்
இருப்பவருக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் நாட்டுக்குச்
சொந்தமானது… அது நாட்டின் சொத்து என்றுதான் கருதப்பட
வேண்டும் என்கிறார் அரசியல்சட்ட வல்லுநர் சுஸ்காப் காஷ்யப்.
குடியரசுத் தலைவர் பதவி காலத்துக்கு பின்
பிரதீபா குடியேறுவதற்காக ராணுவ நிலத்தை அபகரித்ததாக
முன்னர் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடும் எதிர்ப்பு
காரணமாக, பின்னர் வேறுவழியின்றி அதை ஒப்படைக்க
வேண்டிய நிலைக்கு ஆளானார். இந்த நிலையில்
மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பிரதீபா பட்டீல் !
—————————
திருமதி சோனியா காந்தியின் இல்லத்தில்
சமையற்காரராக இருந்தவரிடம் வேறு எத்தகைய நடத்தையை
இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்க முடியும் ?
பதவிக்காலத்தில் பேரன் பேத்திகள் உட்பட 54 பேர் கொண்ட
குழுவுடன் 21 நாடுகளுக்கு பயணம் செய்து இந்த நாட்டு
மக்களின் 205 கோடி ரூபாயை சுரண்டிச் சாப்பிட்டனர்.
பதவி ஏற்கும் முன்னரே அவர் மீது பல குற்றச்சாட்டுகள்
சொல்லப்பட்டன.
மஹாராஷ்டிராவில்,ஜல்கானில், சந்த் முக்தாபாய்
சர்க்கரை ஆலைத்தொழிலாளர்களின் கூட்டுறவு
சங்கத்திலிருந்து,(Sant Muktabai Sahakari
Sakhar Karkhana ) அவரது சகோதரருக்கும் மற்ற
உறவினர்களுக்கும் லட்சக்கணக்கில் கடன் கொடுத்து,
திரும்ப வராமல் அந்த சங்கத்தையே திவாலாக்கி மூடியதாக !
அவரது சகோதரரை தன் செல்வாக்கை பயன்படுத்தி –
விஷ்ராம் பாடீல் கொலை வழக்கிலிருந்து விடுவித்ததாக !
எம்.பி.யாக இருந்த 1991-96 காலத்தில், தனது
எம்.பி.தொகுதி நிதியிலிருந்து 36 லட்சம் ரூபாயைத்
தன் கணவர் தேவிசிங் ஷெகாவத் நடத்தி வந்த ஒரு
ட்ரஸ்டுக்கு கொடுத்ததாக !(உறவினர்கள் யாருக்கும்
தொடர்புடைய ட்ரஸ்டுகளின் மூலம் எம்.பி.தொகுதி
நிதியை செலவழிக்கக்கூடாது என்பது சட்டம் !)
அவரது கணவர் போலீசில் பணியாற்றியபோது,
லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்டு செய்யப்பட்டதாக !
அவரது மகளின் பெயரில் மஹாராஷ்டிர அரசின்
கருணையில் நில ஒதுக்கீடு பெற்றதாக !
லேடஸ்ட் – நாக்பூரில் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு
தேர்தல் நடந்தபோது, பணப்பட்டுவாடா செய்ய
முயன்றதாக அவர் மகனிடம் சில லட்சங்கள் தேர்தல்
கமிஷன் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக !
(தற்போது அந்த தறுதலை மஹாராஷ்டிராவில்
ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.!)
————–
பேய் ஆட்சி செய்தால் –
பிணம் தின்னும் சாத்திரங்கள் …?



அரசு எந்த ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
இதற்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகள்
செய்ததைத் தானே (மத்திய அரசின் கஜானாவில்
ஒப்படைப்பது ) இவரும் செய்திருக்க வேண்டும் ?
இதை எல்லாம் யாரிடம் போய்க் கேட்பது ?
பேசாமடந்தை சிங்கிடமா ?
கவுன்சில் சேர்மன் திருமதி சோனியா காந்தியிடமா ?
இந்த நாட்டின் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும்
பொறுப்பான ஆளும் ஐக்கிய முன்னணியின் தலைவி
இதுவரை ஒரு தடவையாவது பத்திரிகையாளர்கள்
சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறாரா ? பத்திரிகையாளர்கள்
யாராவது அவரிடம் பேசி இருக்கிறார்களா ?
காங்கிரஸ் அடிமைகள் யாராவது இந்த இடுகையை
பார்த்தால் – இதற்கு அவசியம் பதில் எழுத வேண்டும்.
இந்தியாவின் மூன்றாம் குடிமகர்கள் வார்ட் மெம்பெர், கவுன்செலர், எம்.எல். ஏ., இரண்டாம் குடிமகர்கள் எம்.பி.க்கள் , முதலமைச்சர்கள், மந்திரிகள் எல்லாம் ஏன் இப்படி கேவலமாகவும் பொறுப்பில்லாமலும் குடிகெடுக்கும் பலவற்றையும் நாட்டை காட்டிகொடுக்கும் நாசவேலைகளையும் தைரியமாக உற்சாகமாக செய்கிறார்கள் என்பது இப்போது தான் தெளிவாகிறது. முதல் குடிமகர் (மரியாதை) தலையை பார்த்து வால் ஆடுமாம். த்தூ .
ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகம், நண்பர் கா.மை.,
முப்பத்தைந்து வயது நிரம்பிய ,மனநிலை பிறழாத ,அங்கீகரிக்கப்பட்ட இந்திய குடிமகன் ,ள், மற்றும் ன்+ள் யார் வேண்டுமானாலும் ஜனாதிபதி ஆகலாம் எனும் அரசியல் சாசனத்தை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு,
பணம் கிடைத்தால் தன் பெற்றோர்களைக்கூட கொலை செய்ய தயாராக உள்ள
மக்கள் பிரதிநிதிகளிடம் நம் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கொடுத்து விட்டு,
Pitza Hut கடையில் சூபர்வைசராக இருக்கவேண்டிய தகுதி மட்டும் உடைய ஒருவரை,நாட்டிற்கே எஜமானியாக வைத்துக்கொண்டு,
மூச்சு விடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் ஒருவரை
எட்டு ஆண்டுகளாக பிரதமராக வைத்துக்கொண்டு,
சுயநலம்,மந்தைக்குணம்,தேசபற்றின்மை,சுயகட்டுப்பாடின்மை ஆகிய குணநலங்களோடு வாழும் நமக்கு,
சமையல்காரரோ,தோட்டக்காரரோ,வண்டி ஒட்டியோ,அடியாளோ,
ஜனாதிபதியாக வராமல்,
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ,அன்னை தெரசாவோ,ரவீந்திரநாத் தாகூரோ ,
லீ.க்வான்.யூ வோ வா
ஜனாதிபதியாக வருவார்கள்?
ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகம், நண்பர் கா.மை.,
தங்கள் இடுகையை அகில் உலக சமையற் கலைஞர்கள்
சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
சமையற்காரர்கள் அதியக பட்சமாக ஒரு பெருங்காய டப்பாவை
வேண்டுமானால், கோவணத்தில் மறைத்து எடுத்து வரலாம்.
பிள்ளைகளுக்கு ஆகுமே என்று தான் செய்த பலகாரத்தைக் கூட
வீட்டுக்கு கொண்டு போக முடியாது. தவிர இப்போதெல்லாம்
A to Z எல்லாமே காண்டிரக்ட்டாகி விட்டது. காண்டிராக்ட்
எடுப்பவர்கள் மேற்படி தொழிலில் பழம் திண்று கொட்டையை
போட்டவர்கள்.
நிலைமை இப்படியிருக்க சமையற்காரர்கள் விசேஷத்திற்கு
வந்த மொய்பணம், பரிசுப் பொருட்கள் இவற்றையெல்லாம்
தொட்டு பார்க்கக் கூட முடியாது.
பின் எப்படி “தன்” வீட்டுக்கு எடுத்து செல்வதும், கண்காட்சி
அமைப்பதும் அதில் “அவற்றை” காட்சிப் பொருளாய்
வைப்பதும்?
****
என்டிடிவி-ஹிந்து குறித்த நான் அளித்த விவரத்தில் ஒரு திருத்தம்:
சேனல் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்த நஷடப்பட்டு வந்து,
மூன்றாண்டுகளில் நஷ்டம் சுமார் 20 கோடிகளைத் தொட்டுவிட்டது.
20 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்
பட்ட ஒர் சேனலைத்தான் “தந்தி” 15 கோடி கொடுத்து வாங்கி, இப்போது
நடத்துகிறது.
****