இன்று ஊழலுக்கு எதிராக சென்னையில் போர்….
இது வரை சென்னையில்,ஊழலுக்கு எதிரான இயக்கம்
(IAC, chennai ) மிக அமைதியான முறையில்
இயங்கி வந்தது.
கடந்த 5 நாட்களாக India Against Corruption
இயக்கத்தின் சார்பாக அண்ணா ஹஜாரே ஆதரவாளர்கள்
சென்னையில் ரங்கராஜபுரத்தில், புண்ணியகோடி
கல்யாண மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்கள்.
82 வயது ஆன அப்பா இந்திரவேல் என்கிற ஒரு
முதியவர், திருமதி காந்திமதி என்கிற ஒரு
இல்லத்தரசி மற்றும் ஜிதேந்திர மோதா, ஜானி ராஜா,
பொன் தங்கவேலு, பாலாஜி ப்ரேம், சுனில் பரத் கிருஷ்ணா,
கீழ் மருவத்தூர் கண்ணன், படூர் புருஷோத்தமன் ஆகியோர்
உட்பட பலர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக,தினமும் நிறைய பொது மக்களும்
வந்து கலந்து கொண்டனர்.
ஆனால் சென்னை பத்திரிகைகளும் சரி,
தொலைக்காட்சிகளும் சரி – சுத்தமாக இதை கண்டு
கொள்ளவே இல்லை.
முக்கியத்துவம் கொடுக்கவில்லை -சரி.
ஆனால் சாதாரண ஒரு செய்திக்கு உள்ள மரியாதையாவது
கொடுத்திருக்கலாம் அல்லவா ?
ஊழல் எதிர்ப்புக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
அவர்களுக்குத் தேவையானது “கவர்ச்சிகரமான”அல்லது
“பரபரப்பான” செய்திகள். அந்த இரண்டிற்கும் இங்கே
வழி இல்லாமல் இருந்தது. எனவே அவர்களும் இந்தப்
பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
பத்திரிகைகளையும், தொலைக்காட்சி சானல்களையும்
அலறி அடித்துக் கொண்டு ஓடி வர வைத்தது
இன்று மதியம் நடந்த ஒரு நிகழ்வு.
முன் அறிவிப்பு ஏதுமின்றி,
திடீரென்று மத்திய அமைச்சர் ப.சி. அவர்களின்
நுங்கம்பாக்கம் இல்லத்தின் முன்பு
பெண்கள் உட்பட –சுமார் 70 வாலண்டியர்கள்
போய்க்கூடி – சாலையில் அமர்ந்து,
மறியல் போராட்டத்தை துவக்கினார்கள்.
விளைவு – ஒரு திடீர் பரபரப்பு.
டெல்லி உட்பட நாட்டின் அனைத்து
தொலைக்காட்சிகளும் மத்திய உள்துறை அமைச்சரின்
இல்லத்தின் முன்பு நிகழ்ந்த இந்த மறியலை
பரபரப்புடன் ஒளிபரப்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று மாலை உண்ணாவிரத அரங்கில்
நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே –
சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கம் வெளியிட்ட
சில பிரசுரங்கள் –










பத்திரிக்கைகளும தொலைகாட்சிகளும் பாரில் நிர்வாணமாக ஆடுவதை படம்பிடித்து . அல்லது நடுரோட்டில்
பெண்ணை கற்பழிப்பு என்பதை முதல்பக்க செய்தியாக கொட்டை எழுத்தில் பத்திரிகைகளும் நாட்டை திருத்தும்
வகையில் தொலைகாட்சிகள் செக்ஸ் படங்களை அடிக்கடி ஒளி பரப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை எற்ப்படுத்துவார்கள். அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ஊழல் ஒழிப்புக்கு பொதுமக்களும் உண்ணாவிரதம் இருந்தால் அதில் என்ன த்ரில் இருக்கிறது அதேநேரத்தில் நடுரோட்டில் தர்ண போராட்டம் பண்ணினால் ஓடி வருவார்கள். ஊழல் ஒழிப்பு எனும் நெருப்பு நாடு முழுவதும் பரவி கொண்டே வருகிறது, மத்திய அரசு லோக்பாலை கொண்டுவருவதில் சும்மா போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.அன்னா ஹசாரேயின் நோக்கம் புனிதமானது. அதில் எந்த சந்தேகவும் இல்லை.பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளின் ஒத்துழைப்பு குறைந்த நிலையிலும் ஊழல் ஒழிப்பு எனும் எரிமலை வெடித்து அக்னி பிழம்பு நாட்டில் பரவி கொண்டே சென்னை வரை வந்தாகி விட்டது. ரஷியாவில் தொழில் புரட்சியை போல் இந்தியாவிலும் பொது மக்களின் ஊழல் ஒழிப்பு புரட்சி துவங்கிவிட்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஊழல் புரட்சி எனும் நெருப்பு பரவும் முன் மத்திய மற்றும்
மாநில அரசுகள் விழித்து கொள்ளுமா?
பத்திரிகைகள் செய்யத் தவறியதைத்தான்
நீங்கள் அருமையாகச் செய்து விடுகிறீர்களே.
சரியான நேரத்தில் சரியான இடுகையைப்
போடுகிறீர்கள்.நல்ல coverage.
நன்றி காவிரிமைந்தன்.
நாட்டுக்கு தேவையான செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பொது ஊடகங்கள் தவறி விடுகின்றன.அந்த கடமையை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
Many visual media channels are controlled by political parties. That explains poor or nil coverage, I guess.
Yes Mr.Chandramouli –
you are absolutely right.
I am collecting certain details and I shall soon bring out
an article with those details on the medias .
with best wishes,
kavirimainthan
“ஊழலுக்கு எதிரான இந்தியா” சென்னையில் நடத்திய
உண்ணாவிரத போராட்டத்தை பத்திரிக்கைகள் கண்டு
கொள்ளாதது ஆச்சரியமளிக்கவில்லை.
மேடியாக்களுக்கு, குறிப்பாக தமிழ் மேடியாக்களுக்கு,
இம்மாதிரியான விஷயங்கள் விஷயங்களே அல்ல.
அவர்களுக்கு கொலைகளும், கொள்ளைகளும்,
கள்ளக்காதல் (சாவுகளும்), சின்மா நடிகைகள் குறித்தான
கிசுகிசுக்களும் தான் முக்கியமான செய்திகள். இதற்கு
பத்திரிககைகள் அரசியல் சார்புடைய முதலாளிகளால்
நடத்தப்படுகின்றன என்பது மட்டுமல்ல; பெரும்பாலான
பத்திரிகையாளர்கள் “விஷய” ஞானமற்றவர்களாக,
பொறுப்புணர்ந்து செயல்படாதவர்களாக, சுயலாபம்
தேடுபவர்களாக இருப்பதும் கூட காரணம்.
பத்திரிகையாளர் சந்திப்பிற்கு (கவரா/பொருளா என)
எஸ் எம் எஸ் பார்த்துவிட்டு வருபவர்களே அதிகம்.
இவர்களுக்கு பெரும்பாலும் நாட்டு நடப்பு தெரியாது.
தவிர தினமணி மாதிரியான சார்பற்ற பத்திரிகைகள்
தமிழகத்தில், அதன் மீதான அரசியல் ரீதியிலான
தாக்குதல்களால், வாசகர்களின் எண்ணிக்கையை
இழந்து விட்டன.
உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்து இந்த விபரத்தை வெளிக்கொனர்ந்ததர்க்கு மிக்க நன்றி. உங்களுக்கும் போராட்டத்தில் பங்கு பற்றோருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!