இன்று கசிந்துள்ள தகவல் நிஜமாகும் என்றால் …
கோடி நன்றிகள் தமிழக முதல்வருக்கு !!
இன்று வெளியாகியுள்ள வார இதழ் ஒன்றின் மூலம்
கசிந்துள்ள தகவல் –
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்களுக்கு,
முக்கியமாக இல்லத்துப் பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் –
ஒரு நல்ல செய்தியை தருகிறது !
“டாஸ்மாக்” சாராயக் கடைகளை மூடுவது பற்றியும்,
தமிழ்நாட்டில் தீவிரமாக மதுவிலக்கை அமுலுக்கு கொண்டு
வருவது பற்றியும் தமிழக முதல்வர்
ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கான
அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும்
அந்தத் தகவல் சொல்கிறது.
இந்த செய்தி பல பேருக்கு கசப்பாக இருக்கும் –
இதற்கு எதிரான முயற்சிகளில் பல
திமிங்கிலங்கள் இப்போதே தீவிரமாக ஈடுபடக்கூடும்.
தமிழ் நாட்டின் நடுத்தர மற்றும், கடைத்தட்டு மக்களின்
ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும்,
அவர்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் –
மனதில் கொண்டு முதல்வர் இதில் உறுதியாக
இருப்பார் என்றே நம்புகிறேன்.
இன்றைய தினத்தில் –
தமிழ் மக்களுக்கு இதைவிட நல்லது பயக்ககூடிய முடிவு
எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை.
எதிர்பார்ப்புகளுடனும் – நம்பிக்கைகளுடனும்,
தமிழக முதல்வருக்கு –
முன்னதாகவே நன்றியும் வாழ்த்துக்களும் !




இது நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ இந்த செய்தியை கூறிய தங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும். மது விலக்கு நடை முறைக்கு வந்தால் கோடி கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்படும் உண்மைதான். ஆனால்அதைவிட லட்ச கணக்கில் ஏழைகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். காந்தி மகான் கண்ட
கிராம ராஜ்ஜியம் மட்டுமல்ல காமராஜர் ஆட்சி ஏற்படுத்தப்படும். ஆனால் அது நடக்குமா ? பணமுதலைகள் விடுவார்களா? சந்தேகம்தான். இருப்பினும் நினைத்ததை நடைமுறைபடுத்தும் போராட்ட குணம் படைத்தவர்
முதல்வர் ஜெயலலிதா. கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ளுவதன் மூலம் மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னிலைபடுத்துவாரா?
இது மட்டும் செய்தால் தமிழகம் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்!
I haven’t come across this news anywhere. It would be a boon to the people, particularly to womenfolk, of Tamil Nadu, if these liquor shops are shut down. I don’t know it would mean bringing back prohibition. But, any steps to curtail easy access to consumption, it could be a step in the direct direction. JJ, right or wrong, has proved to be a courageous person (I reckon she is the only MAN among the political class in India) who could take bold decisions, and she should go ahead. My whole-hearted support. Thanks for this breaking news!
A small correction: I haven’t come across this news anywhere. It would be a boon to the people, particularly to womenfolk, of Tamil Nadu, if these liquor shops are shut down. I don’t know it would mean bringing back prohibition. But, any effort to curtail easy access to consumption could be a step in the direct direction. JJ, right or wrong, has proved to be a courageous person (I reckon she is the only MAN among the political class in India) who could take bold decisions, and she should go ahead. My whole-hearted support. Thanks for this breaking news!
arppudha seidhi ennaal namb mudiyavillai indha arpudham nadandhaal ottumothththa indhiyaavu thamizhagaththaiyum thamizhaga mudhalvaraiyum thalai nimirndhu parkkum nandri vaazhththukkal
surendran
எனகென்னவோ பணியாளர்கள் வேலை நிறுத்தம்
செய்ய உத்தேசித்திருப்பதை முன்னிட்டு விடப்பட்ட
பயமுறுத்தல் என நினைக்கிறேன்
உண்மை. இந்த செய்தியை என்னாலும் நம்ப முடியவில்லை.
இது நடந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் குடிப்பவர்கள் எப்படியாவது குடித்துக் கொண்டே தானே இருக்கிறார்கள். அவர்கள் தான், தானாக திருந்த வேண்டும்..
எனக்கு ஒன்று மட்டும் புரியமாட்டேங்குது.
லாட்டரியை தடை செய்த அரசு, ஏன் சாராயத்தை இலக்கு வைத்து விற்கிறார்கள்?
வருமானம் வரும் என்றால் கஞ்சா/அஃபின் போன்றவற்றையும் விற்கவேண்டியதுதானே? இதில் சாராயத்தைவிட அதிக வருமானம் கிடைக்குமே அரசுக்கு.
கள்ளக்கடத்தலையும் கொள்ளைகளையும் லைசென்ஸ் கொடுத்து தொழிலாக செய்தாலும் செய்வார்கள் இவர்கள்!
ஏனென்றால் அரசுக்கு வருமானம் தானே முக்கியம்!
போபாலில் விஷ வாயு கசிந்து லட்சக்கணக்கான மக்கள், 25 ஆண்டுகள் கழித்தும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அது விபத்து என்றால்…
இன்று ஒரு தலைமுறையே நாசமாகிக்கொண்டிருப்பதற்கும் இந்த அரசே பொறுப்பாகிறது!
உண்மையில் காவிரிமைந்தன் அவர்களின் இந்த பதிவு மட்டும் நடந்துவிட்டால்…
நாடு கண்டிப்பாக சுபிக்ஷமாகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, உண்மைதான்…
//குடிப்பவர்கள் எப்படியாவது குடித்துக் கொண்டே தானே இருக்கிறார்கள். அவர்கள் தான், தானாக திருந்த வேண்டும்..//
ஆனால் அதற்காக சாலைக்கு நாலு கடைகளை திறந்தால் குடிக்காதவர்களும், ஏன் குழந்தைகளும் பெண்களும் கூட அதை ருசித்து கெட்டுவிடுகின்றனர் என்பதே உண்மை.
பாண்டிச்சேரியின் புகழ் அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கும் இந்த மாதிரி அநியாயம்(ஒரு தலைமுறை சீர்கேடு) நடக்கவில்லையே நண்பரே!
டாஸ்மாக்கின் சப்ளையர்களின் வரிசையில் முதலில் இருப்பது மிடாஸ் நிறுவனம். இது கொடநாடு சின்னம்மாவின் உறவினர்களால் நடத்தப்படும் நிறுவனம். இன்று கசிந்துள்ள தகவல் யாரை வழிக்கொண்டுவருவதற்கு, மிடாஸையா அல்லது டாஸ்மாக் ஊழியர்களையா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.
“நோ டாஸ்மாக்” கேட்க நல்லாத் தான் இருக்கு.
நடக்கனுமே.
இப்படித்தான் அம்மா கொஞ்ச நாள் முன்னாடி
சகோதரியையும் அவர் தம் உறவுகளையும்
கட்சியிலிருந்தும் (உறுப்பினராக இல்லாத நடராசனையும்
சேர்த்து) வீட்டிலிருந்தும் விலக்கி வைத்தார். நீங்கள்
வரவேற்றீர்கள்.
பின் என்ன ஆச்சு?
“கொஞ்ச நாளைக்கு” ப்பிறகு, சகோதரி அக்காவுக்கு
பாவ மன்னிப்பு மடல் வரைந்தார். சகோதரி கார்டனுக்கு
உள்ளேயும் “மற்றவர்கள்” (நடராசனும் தான்) வெளியேயும்
வந்தார்கள்.
உற்சாகத்தில் கவனிக்கத் தவறிய விஷயம்: சகோதரியின்
சரக்கு தான் (கலைஞர் ஆட்சியிலும்) டாஸ்மாக்கில்
வெள்ளம் போல் “ஓடுகிறது”. பின் எப்படி அணை கட்டுவார்?
மிஸ்டர் கழுகுகள் சமயத்தில் வியாபாரத்திற்கு
விளம்பரமும் செய்வதுண்டு.
நண்பர் வெங்கட்ரமணி,
கழுகைத்தவிர வேறு சில
பட்சிகளும் சொல்கின்றன !
நம்பிக்கையில் தான் –
எதிர்பார்ப்பில் தான் –
எழுதி இருக்கிறேன்.
இனி இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை.
நடந்தால் நல்லது …. நம்புவோம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
எந்த வார இதழ் ? சொல்லமுடியுமா