தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் ?
தயாநிதி, தயாநிதி என்று ஒரு மாறன் இருந்தாரே –
அவரை நினைவிருக்கிறதா ?
அநேகம் பேருக்கு இந்த விஷயமே மறந்திருக்கும்.
இது தான் நம் நாட்டில் வாடிக்கை.
எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் –
மக்கள் மறந்து விடுவார்கள் –
அரசியல்வாதிகள் மக்களின் மீது வைத்திருக்கும்
இந்த நம்பிக்கை அநேகமாக வீண் போவதில்லை !
2ஜி விவகாரத்தில் தயாநிதி மாறனும்
சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதும் அவர் மீதும் வழக்கு
இருக்கிறது என்பதும் பலருக்கும் மறந்திருக்கும்.
நேற்று 2ஜி விஷயம் பாராளுமன்ற கூட்டுக் குழுவின்
முன்னர் விசாரணைக்கு வந்தபோது –
சிபிஐ டைரெக்டர் ஏ.பி.சிங் அதன் முன் விளக்கம்
அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.
பிஜெபி உறுப்பினர் யஸ்வந்த் சின்ஹா
வழக்கு பதிவு முன்னரே ராஜாவை கைது செய்தீர்களே –
வழக்கு பதியப்பட்டு இத்தனை மாதங்கள் ஆன பின்பும்
தயாநிதி மாறனை இன்னும் கைது செய்யாமல்
இருப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார்.
சிபிஐ டைரெக்டரிடம்
இருந்து சரியான விளக்கம் இல்லாத நிலையில்,
குழு உறுப்பினர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து,
தயாநிதி மாறன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இப்படி அறியாத சிறு பிள்ளைகளாக
இருக்கிறார்களே இவர்கள் !
இவர்கள் சொன்னால் அவர் கேட்டு விடுவாரா ?
“Aunty” இருக்கும் வரை தயாநிதியை யாரும்
தொட முடியுமா ?
(பி.கு.- சாதிக் பாட்சா, சாதிக் பாட்சா என்று
ஆ.ராஜாவின் நண்பர் ஒருவர் இருந்தாரே – அவரை
யாருக்காவது இன்னும் நினைவிருக்கிறதா ?
அவர் கொலை செய்யப்பட்டு இறந்தாரா
அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்று
கண்டு பிடிக்கும் விஷயமும் இன்னும் சிபிஐ யின்
“பரிசீலனை”யில் தான் இருக்கிறது !
எல்லாவற்றிற்கும் “நேரம்”,”காலம்” வர
வேண்டும் அல்லவா !)




தயாநிதிமாறன் கைது குறித்து தாங்களே கூறிவிட்டீர்கள். ஆன்ட்டியின் தயவும தாத்தாவின் தயவும் இருக்கும் வரை கவலை இல்லை. ஆனால் ஆன்ட்டி சும்மா ஒன்றும் செய்யமாட்டார். கோடிகணக்கில் வரவு இருந்தால் மட்டுமே வேண்டியதை செய்வார். அரசு யந்திரத்தை குறைகூறி ஒன்றுமில்லை. அவர்களுக்கும் அரசியல்வாதியின்
தயவு வேண்டும். அரசு பணியில் மாறுதல் வரக்கூடாது. வரும்படியும் வேண்டும். பின் எப்படி தயாநிதிமாறன்
கைது செய்யப்படுவார். ஆனால் எதிர்பாராமல் உயர் நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் ஒருவேளை
கைது செய்யப்படலாம். ஆனால் அதிலும் பிரச்சினை என்னவென்றால் நீதிபதியையும் கவனித்து விட்டால்
வழக்கு தள்ளுபடியாகும் வரை தைரியமாக அரசியல் பண்ணலாம்.
//குழு உறுப்பினர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து,
தயாநிதி மாறன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
வற்புறுத்தி இருக்கிறார்கள்//
இந்த செய்தி ஜெயா டீவியிலும் வரவில்லையே!
எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தானே!!
இன்றல்ல நேற்றல்ல அதற்கு முன்னரே, முரளி மனோகர்
ஜோஷி ஜேபிசி தலைவராக இருந்த போதே இந்த விஷயம்
வெளி வந்தது. ஆனால் நடவடிக்கை தான் இல்லை. தவிர,
2ஜி ராசாவும் ஆரம்பம் முதலே, எனக்கு “முன்” இருந்தவர்
“என்ன” செய்தாரோ “அதையே தான் “நானும்” செய்தேன்.
“எல்லாவற்றையும்” பிரதமர் அறிவார் என்று போகுமிடமெல்லாம்
திரும்ப திரும்ப சொல்லி வந்ததை அறிவீரா?
தயாநிதிக்கு ஆண்ட்டியின் “தயை”யும் க்ராண்ட்பாவின்
“ஆசி”யும் இருப்பது ஒரு புறம் கிடக்கட்டும். அவரது தமையன்
கலாநிதி என்று ஒருவர் இருக்கிறாரே அவருக்கு தமிழகத்தில்
தொடர்ந்து கிடைத்து வருகின்ற தொழில் ரீதியிலான “சப்போர்ட்”
பற்றி அறிவீரா?
அம்மாவின் கடந்த ஆட்சியின் போதுதான் கேபிள் டி.வி
அரசுடமை சட்டாம் கொண்டு வரப்பட்டது. தாத்தாவும் பேரன்களும்
கிண்டியில்ருந்த இன்னொரு தாத்தாவைப் பார்த்து சட்டத்திற்கு
அவரது ஒப்புதலைத் தர வேண்டாமென “பிராது” கொடுத்துவிட்டு
வந்தனர்.
பின்னர் அதோ இதோ என்று “அந்த சட்டத்தை” கொண்டு
வந்தவர்களே மறந்து போன பின், தாத்தாவே பட்டத்திற்கு வந்து,
குடும்ப பிரச்சனையில் மீண்டும்
அதே சட்டம் வந்து, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான
உமாசங்கர் அந்த கழகத்திற்கு தலைமையேற்று, சன் மற்றும்
சுமங்கலி மோனோப்ளியின் அசுர கரங்களில் கேபிள் டிவி
ஆபரேஷன் தமிழகத்தில் கட்டுண்டு கிடபபதை கண்டறிந்து சீர்படுத்த
எத்தனித்த போது “குடும்பத்திற்குள்” சமரசம் ஏற்பட்டு, உமாசங்கரின்
இமேஜ் டேமேஜ் ஆன கதை தெயரியுமா?
இந்த ஆட்சி ஏற்பட்டவுடன், சேலத்து “பட” அதிபர் சன் டிவி
நிர்வாகத்தால் தான் பல கோடிகள் ஏமாற்றப்பட்டதாக “பிராது”
கொடுத்தவுடன், சக்ஸேனா கைதாகிறார். அவரது நண்பரும்,
உரிமையாளருமான கலாநிதி கிட்டத்தட்ட தலைமறைவாகிறார்.
காவல்துறை “அகப்பட்டவரை” பலமாக விசாரிக்க, அடுத்து “அவர்தான்”
என்கிற செய்தி கசிந்தவுடன், மேடியா (நேஷனல் சானல்கள் உட்பட)
கே கே நகர் போலீஸ் ஸ்டேஷன் முன் நிற்கிறது. ஆனால்,
கலாநிதி “வெளிநாடு” சுற்றுலா சென்றுவிடுகிறார். சேலத்து பட அதிபர்
சமரசமாகிறார். கலாநிதி சோஜான் முடிந்து தாயகம் திரும்புகிறார். பல
வழக்குகளில் சிக்கி டேமேஜாகி சக்ஸேனா இல்லம் திரும்புகிறார்.
அவர் இப்போது தமிழகத்திலோ அல்லது சன் டிவியிலோ இருக்கிறாரா
என்பது யாருக்கேனும் தெரியுமா?
மதுரை அண்ணன் போட்டியாக நடத்திய ……….. விஷன் ராஜ் டிவிக்கு
கோடிகளில் கட்டண பாக்கி வைத்திருப்பது தெரியுமா?
தாத்தாவின் ஆட்சியிலே “கேபிள் டிவி” அரசுடமை உண்மையென
நம்பி தீவிரமாக செயல்பட்ட உமாசங்கரை இந்த அரசு பயன்படுத்திக்
கொள்ளவில்லை. மாறாக, கேபிள் டிவி கழகம் அரசியல் தலைமையிடம்
ஒப்புவிக்கப்பட்டது. அவர் மாவட்டம் தோறும் உள்ளூர் சேனல்களை
‘ஏலம்” விட பெரும்பாலும் அவை, சுமங்கலியின் கைப்பாவைகளிடம்.
அதன் “ரகஸ்யம்” என்னவென்று தெரியுமா?
“பணம் பாதாளம் வரை பாயும்” என்கிற சொல் வழக்குத் தெரியுமா?
கருணையும் நிதியும் சேர்ந்தால் கருணாநிதியாகும்… என்கிற திமுக
பிரச்சார பாடல் கேட்டதுண்டா?
நண்பரே நீங்கள் கூறுவது உண்மைதான். குடும்ப ஆட்சிதான் முடிந்து விட்டதே . ஆனால் மத்தியிலும் நிலைமை
கூறும்படியாக இல்லையே? மத்திய அரசுக்கு எதிராக பேசியவர்கள் ஆதரவாக தானே ஒட்டு போட்டார்கள். வேறு
சிலபேர் மவுனமாக இருந்தே ஆதரவாக வோட்டு போட்டார்கள். மாநிலத்தில் சரியாக இருந்து மத்தியில் சரியில்லாமல் இருப்பதால் பாரத மாத அழுது கொண்டுதானே இருக்கிறாள். அனைத்துக்கும் காலம்தான் பதில் சொல்லவேண்டும். நாம் சொல்வதை சொல்லிக்கொண்டே இருப்போம். வாழ்க ஜனநாயகம்.
இரண்டாவதாகவும்,முக்கியமானதாகவும் நான் கருதும் அரசியல் சட்ட திருத்தம் இது.
மத்தியில் கூட்டணி ஆட்சி..
பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு தனி கட்சியும் அறுதி பெரும்பான்மை பெற்று அரசு அமைக்க முடியாத பட்சத்தில் தனித்தனி கட்சிகள் கூட்டு சேர்ந்து அரசு அமைக்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு கூட்டணி அமைத்த கட்சிகள் அடுத்த 30 மாதங்களுக்கு அரசிற்கு தாங்கள் அளிக்கும் ஆதரவை எந்த ஒரு காரணத்தினாலும் வாபஸ் பெற முடியாது.31 ஆவது மாதம் அவர்கள் விரும்பினால் ஆதரவை வாபஸ் பெறலாம் அல்லது தொடரலாம்
அவ்வாறு தொடரும் பட்சத்தில் இவ்வாறு கூட்டணி அமைத்த கட்சிகள் அடுத்த 30 மாதங்களுக்கு (அதாவது அடுத்த பொதுத்தேர்தல் வரை) அரசிற்கு தாங்கள் அளிக்கும் ஆதரவை எந்த ஒரு காரணத்தினாலும் வாபஸ் பெற முடியாது.
ஒருவேளை 31 ஆவது மாதம் கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி விட்டால்,பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
இதில் மேற்கண்ட கூட்டணி கட்சிகள் மீண்டும் கூட்டணி சேர்வது தடை செய்யப்படும்.
இதை விவாதித்து ஒரு இறுதி வடிவம் கொடுத்தபின் எப்படி நிறைவேற்றுவது என பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான உறுதியான ஆதரவு
என்பது, ஊழலை ஒழித்துவிடுமென்றோ, ஊழல் ஒன்றே
கொள்கையென வாழும் அரசியல்வாதிகளை மாற்றிவிடும்
என்றோ திடமாக எண்ண முடியவில்லை.
ஆட்சிக்காலத்திற்குள் அல்லது தனது பதவி காலத்திற்குள்
ஊரை அடித்து தன் வீட்டு உலையில் சேர்த்து விடவேண்டும்
என்கிற இலட்சிய தாகத்தோடு அரசியல் “பண்ணும்” நபர்களை
நீங்கள் முன் நிறுத்தும் திருத்தம் என்ன செய்யும்?
ஊழல் இன்னும் தீவிரமாக நடைமுறைக்கு வந்துவிடும்
வாய்ப்பினையே உங்கள் திருத்தம் கொண்டு வரும் என்று
எண்ணத் தோன்றுகிறது.
அரசியல் நாணயம் அற்றவர்களும், அரசியல் தான் பிழைப்பு
என்றிருப்பவர்களும், தனி மனித ஒழுக்கம் குறைந்தவர்களும்,
எல்லா சூழலிலும் தவறு செய்ய துணிந்தவர்களும், குற்ற
பின்னனியே “முழு” தகுதியென கொண்டவர்களும், நேர்மையை
மதியாதவர்களும், சுய முன்னேற்றத்தையே இலட்சியமாக
கொண்டவர்களும், பதவிக்காக ஏங்கி தவிப்பவர்களும்,
நாற்காலி சுகத்திற்காக எதையும் செய்பவர்களும், நிறைந்த
இந்திய அரசியலை நீங்கள் முன் வைக்கும் திருத்தம் மாற்றி
விடுமா? அவர்கள் செய்யும் அநீதிக்கு உகந்த தண்டணையை
உறுதி செய்யுமா?
நீங்கள் சொல்லுவது நல்லாத்தான் இருக்கு. ஆனா இல்லை.
நன்றி நண்பரே!
நான் எதிர்பார்ப்பதெல்லாம் இதை வெட்டியும் ஒட்டியும் நாம் செய்யும்
கார சாரமான விவாதம் தான்.அதில் உருவாகும் நல்ல கருத்துக்களைக்கொண்டு இந்த திருத்தத்தையும் மாற்றி அமைக்கலாம்.
தற்போது உள்ள நிலையில் ஆளுங் கட்சியான காங்கிரஸ், “கூட்டணி (அ)தர்மம” என்ற பேரில் தி.மு.க அடித்த அத்தனை கொள்ளைக்கும் துணை போயுள்ளது.இதை பிரதமர் மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.இதை எதிர்காலத்தில் தடுக்கவே இந்த திருத்தம் உதவும் என்பது என் எண்ணம.
நீங்கள் சொல்வது போல தங்களை அசைக்க முடியாது என்ற நிலை வரும்போது ஆளுங்கட்சியே தங்கள் கூட்டணிக்கட்சிகளோடு சேர்ந்து கொள்ளை அடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
மற்றவர்களின் கருத்து என்னவோ?
மூன்றாவதாகவும்,முக்கியமானதாகவும் நான் கருதும் அரசியல் சட்ட திருத்தம் இது.
மத்தியபுலனாய்வுத் துறை(Central Bureau of Investigation)
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பாக மாற்றப்பட்டு, தன்னாட்சி தகுதி பெறும்.. இதன் தலைவர்,தேர்தல் ஆணையர்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ,
இந்திய வரவு செலவு தணிக்கை குழுமத்தின் தலைவர் (Comptroller and Auditor General of India) போன்றோர்களுக்கு இணையான அந்தஸ்தையும்,அதிகாரத்தையும் பெற்று செயல்படுவர்.இவர்களின் முக்கிய வேலை மக்கள் பிரதிநிதிகள்/மேல்நிலை அரசு ஊழியர். மீது சுமத்தப்படும் கிரிமினல் மற்றும் பொருளாதார குற்றங்களை விசாரித்து அதை
உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்து நிரூபிப்பது.இவர் நிர்வாக முறையில் ஜனாதிபதி கீழும்,செயல் முறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கீழும்,
பணி செய்வர்.பதவிக்காலம் ஐந்தாண்டு கொண்ட இவர்களின் நியமனம் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இவர்களால் நடத்தப்படும்.
இதை விவாதித்து ஒரு இறுதி வடிவம் கொடுத்தபின் எப்படி நிறைவேற்றுவது என பார்க்கலாம்.
நீங்கள் வரிசையிட்டுள்ள உயர் பதவிகள் அத்தனைக்கும்
இப்போது கூட அதிகாரம் வரையறுத்துக் கொடுக்கப்
பட்டுள்ளது. வினோதம் என்னவென்றால், அவை இன்னதென்று
பதவியில் இருப்பவர்களுக்கு தெரியாது. “வண்டு வந்து
சொல்லும் வரைக்கும் தன் வயசு தெரியாது மலருக்கு….” என
வைரமுத்து எழுதியது மாதிரி. சேஷன் தேர்தல் ஆனையராக
வரும் வரை ஆணையத்திற்கான அதிகார வரம்பு
இன்னதென்று யாருக்குத் தெரியும்?
தமிழ் பத்திரிக்கைகளில் சமயங்க்களில் …… பதவியை
அலங்கரித்தார் என்று வருவது உண்டு. பதவியை தன்
கெளரவ சின்னமாக கருதுபவர்கள் உள்ளவரை, தனி
அதிகாரம் படைத்த அமைப்புகளாக மாற்றி என்ன செய்ய?
நம் நாட்டில் இது நாள்வரை ஒரு முதலாளியும் கைதுசெய்யப்பட்டதாக இல்லை என்றே நினைக்கின்றேன். இது மாறன்களுக்கும் பொருந்தும். ரிலையன்ஸ் அம்பாணிக்குபதில் அவரது கம்பெனியின் அதிகாரிகள்தான் சிரையில் அடைக்கப்பட்டனர். சரத்குமார் கைதானதும் அப்படிதான். வை. பாட்டிக்கு வோல்டாஸ் இடத்தைக் கொடுத்துவிட்டு பதிலாக 2ஜி பெற்று பின்னர் அதை டோ கோ மோ விற்கு விற்று ஆயிரங்கனக்கான கோடிகளை சுருட்டிய டாடாவை நெருங்க முடியுமா? அப்ப கணிமொழிய கைதுசெஞ்சாங்களேன்னு அது முதலாளிஇல்லையான்னு கேட்டா நீங்க அப்பாவின்னு அர்த்தம். ஏன்னா அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் வேண்டிய நிதி கொடுப்பவன்தான் முதலாளி. மு.க குடும்பத்துக்குள் போன பணம் திரும்பி வராது.