இந்திய தொலைக்காட்சிகளில் -மன்னிக்கவும் –
இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக …
பல வருடங்களுக்கு முன் ஒரு இந்தி திரைப்படம் –
பெயர் நினைவிற்கு வர மாட்டேனென்கிறது –
(பின்னால் ரஜினி நடித்து தமிழில் கூட எடுக்கப்பட்டது)
ஒரு சிறுவன் – “மேரா பாப் சோர் ஹை”
(என் அப்பா ஒரு திருடன் ) என்று பச்சைகுத்திய
கையுடன் அலைந்து கொண்டிருப்பான்.
அதே நிலைமை இன்று – இந்தியர்களாகிய நம்
அனைவருக்கும் !
15 மத்திய அமைச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் !
நீதி விசாரணை கேட்டு டீம் அண்ணா குழுவினர்
டெல்லி, ஜந்தர் மந்தரில் – நாளைக் காலையிலிருந்து
கால வரையற்ற
உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர் –
ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் –
நாளை ஜனாதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார் –
பட்டினிப் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து –
5 கிலோமீட்டர் தூரத்திலேயே பதவியேற்பு வைபவம்.
இன்னோருவர் – ஏற்கெனவே பிரதமராக இருக்கிறார்.
மற்ற ஊழல் மந்திரிகள் அனைவரும் விழாவில்
சாட்சியாக கலந்து கொள்ளப்போகிறார்கள்.
அந்தச் அநாதைச் சிறுவனைப்போல்,
நாம் எல்லாரும்
அலைய வேண்டியது தான் –
“எங்கள் ஜனாதிபதி ஒரு ஊழல்வாதி “
“எங்கள் பிரதம மந்திரி ஒரு ஊழல்வாதி”
“எங்கள் மந்திரிகளில் பலர் ஊழல் மன்னர்கள்”
என்று பச்சை குத்திக் கொண்டு !
வாழிய பாரத மணித்திருநாடு –
வந்தே மாதரம் – வந்தே மாதரம் – வந்தே மாதரம் !




“வாசல்ல ஏதோ கொரல் கேக்குது. இருங்க சார் பாத்துட்டு
வந்துர்றேன்.
“பச்ச குத்தறது – பச்ச குத்தறது –
அய்யா ஒரு பச்ச குத்தினா இன்னொண்ணு ப்ரீஈஈஈஈ”
அட நீங்க சொன்னவொடனே பச்ச குத்தறவரே வந்துட்டாரே –
வாங்க சார் குத்திட்டு வந்துடலாம்.”
அருமையான “சுருக்”.பாராட்டுக்கள் காவிரிமைந்தன் சார்.
எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்லது என்று பழ மொழி கேட்டிருக்கிறேன். பேசாமல் ஊழல் செய்வதை சட்டமாக்கிவிடலாம். ஏதோ ஒரு சினிமாவில் பார்த்ததன விளைவு. ஊழல் குற்றச்சாட்டு நிருபணமானால் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கில் போடவேண்டும். வாலிபர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு
மேல் அரசியலிலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். எம் எல் எ . எம் பி அமைச்சர் யாராக இருந்தாலும் ஊழலில்
ஈடு பட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் பொது மக்களுக்கு வழங்கப்படவேண்டும் . ஆட்சியாளர்கள் தான் தீவீரவாதிகளை ஊக்குவிக்கிறார்கள்.அரசுஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் சிறையில் தறை.
கோடி கணக்கில் வாங்கும் அரசியல்வாதிக்கு சிறையில் பங்களா வாசம்.
ஆமாமா, பச்சை குத்திக் கொண்டா ஈசியா அடையாளம் கண்டு கொள்ளலாம்
அப்படி போட்டுத் தாக்கு அற்புதமான கமென்ட்கள்
தாங்கள் எழுதியது அனைத்தும் உண்மைதான்.
ஆனால் என் செய்வது? நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு 2014 தானே.
ஐயா நீங்கள் கூறியிருக்கும் படம் 1981 இல் வெளிவந்த ‘தீ’. அது அமிதாப் பச்சன், சசிகபூர் நடித்த ‘Deewar’ எனும் இந்தி படத்தின் தமிழ் வடிவம்.
அல்பதனமான பின்னூட்டம் என்று எண்ணாதீர்கள். என்ன இருந்தாலும் நமக்கு வரலாறு முக்கியம் அல்லவா!
மிக்க நன்றி நண்பர் எழில்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
காவிரிமைந்தன்,
இன்னும் எவ்வளவு நாள் தான்
காய்ச்சலை அளவிடுவதிலேயே
காலத்தை கழிக்கப்போகிறோம்?
ஏதாவது மருந்து இருக்கா கடையில்?
மூன்று நாட்களுக்கு முன் என் மனைவி
புதியதாக பதார்த்தம் ஒன்று செய்தாள்
ருசித்தேன்..
“சகிக்கவில்லை.தூக்கி குப்பையில் எறி” என்றேன்.
நேற்றும் அதே கதை..
இன்றும் அதே கதை..
“நான் என்ன செய்வது?
இந்த புத்தகத்தைப்பார்த்துதான்
நான் அனைத்து பதார்த்தங்களையும் சமைத்தேன்”
என்று பரிதாபமாக சொன்ன
அவள் கையில் ஒரு புத்தகம்
“101 புது வகை பதார்த்தங்கள் செய்யும் முறைகள்”
“ஓஹோ! இப்போதான் புரிகிறது எல்லாத்துக்கும் காரணம்.
தூக்கி குப்பையில் எறி அந்த புத்தகத்தை!!” என்றேன்.
நாடு முழுவதும் அராஜகம் ஊழல்
கொலை கொள்ளை கற்பழிப்பு
தவறு செய்பவர்களை தண்டிக்க
ஆண்டுகள் ஆயிரம் ஆகின்றன.
அரசன் முதல் ஆண்டி (=சாமியார்) வரை..
அன்னை முதல் ஆண்டி (=aunty) வரை,..
இன்னும் அண்ணா,தாத்தா அம்மா என்று
அனைவரும் செய்யும் “அடிலூட்டி” தாங்கவில்லை..(வினைத்தொகை=அடித்த,அடிக்கின்ற,அடிக்கப்போகும்..லூட்டி)
“ஐயோ! இதற்கு ஒரு முடிவில்லையா?” எனக் கதறினேன்..
“என்ன சொல்கிறாய்? இந்த புத்தகங்களை வழிகாட்டியாக
கொண்டுதான் நாங்கள் ஆட்சி செய்கிறோம்!”
என்றனர் எங்கள் பிரதிநிதிகளான
எம்.பி…எம்.எல்.ஏ,.மற்றும் கவுன்சிலர்கள்..
அவர்கள் கையில் இரண்டு கனத்த புத்தகங்கள்..
ஒன்று..:”இந்திய அரசியல் நிர்ணய சட்டம்”
மற்றொன்று…”இந்தியா குற்றவியல் சட்டம்”
நான் என்ன செய்யட்டும்,சொல்லுங்கோ?
(தலைப்பிற்கு நன்றி: ஜெயகாந்தன்)
ஒரு துளி விஷம ..
ஒரு முழம் கயிறு ..
மூன்றாவது என்ன …அய்யகோ மறந்து விட்டதே !
கண்பத் மற்றும் இதர நண்பர்களே,
வழி ஏன் இல்லை ? நிச்சயம் உண்டு.
இது உடனே நடக்காமல் போகலாம் –
நீண்ட நாட்கள் ஆகலாம். ஆனால்
ஒரு நாள் நடந்தே தீர வேண்டும்.
சமுதாயத்தை
செம்மைப்படுத்த குறுக்கு வழி ஏதும் இல்லை.
ஒவ்வொன்றாக கையில் எடுத்துக் கொண்டு
போராட வேண்டும்.
நமக்குத் தெரிய வரும் அனைத்து ஊழல்களையும்
பகிரங்கப் படுத்துவோம். அதிகம் பேருக்கு
அதை தெரிவிப்போம்.
ஊழல், லஞ்ச – வழக்குகள் புகார் வந்தால் –
ஒரு வருடத்துக்குள் விசாரணை முடிவடைய
வேண்டும் என்பதையும்,
அடுத்த ஒரு வருடத்துக்குள் வழக்கு நீதிமன்றத்தில்
நடத்தி முடிக்கப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட
வேண்டும் வலியுறுத்துவோம்.
ஆக மொத்தம் எந்த புகார் ஆனாலும் இரண்டு ஆண்டுகளில்
தீர்ப்பு வர உறுதி செய்தால் போதும்.
பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
லஞ்சத்தையும், ஊழலையும் எதிர்க்க யார்
முன் வந்தாலும்,
எந்தவிதத்தில் போராடினாலும் – ஆதரிப்போம்.
சேர்ந்து குரல் கொடுப்போம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
முதலாவதாகவும்,அதிமுக்கியமானதாகவும் நான் கருதும் அரசியல் சட்ட திருத்தம் இது.
கிரிமினல் அல்லது பொருளாதார குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அந்த இந்திய குடிமகன் எந்த மக்கள் பிரதிநிதுத்வ தேர்தலிலும் போட்டியிடவோ,ஒட்டுபோடவோ தடையிடப்படும்.இது மேல்சபை நியமனங்களுக்கும் பொருந்தும்.
அந்த குற்றமானது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனை பெறும் பட்சத்தில் அவர் ஆயுட் காலத்திற்கு எந்தப் மக்கள் பிரதிநிதுத்வ தேர்தலிலும் போட்டியிடவோ,ஒட்டுபோடவோ தடையிடப்படும்.
இது மேல்சபை நியமனங்களுக்கும் பொருந்தும்.
இதை விவாதித்து ஒரு இறுதி வடிவம் கொடுத்தபின் எப்படி நிறைவேற்றுவது என பார்க்கலாம்.
Sure Sir..
அன்னா ஹசாரே குழுவினரையே பின் தள்ளிய வலிமையான ஆட்சி மையம்.இதற்கு முக்கிய காரணம் என்னவென்று யோசித்தால் தொடர்ந்து பதவி நாற்காலியில் உட்காரும் சுகம் தொடர் போராட்டத்தில் இல்லையென்பதோடு போராட்டத்தை திசை திருப்பும் சூத்திரதாரிகளாகவும் அரசியல்வாதிகள் விளங்குகிறார்கள்.
பதவியில் இல்லாமலும் தமிழகத்தில் தன்னை நினைவு கொள்ளும் சூத்திரத்தையும் அரசியலில் பிழைப்பு நடத்தும் தந்திரம் என்னவென்றால் அறிக்கை,போராட்டம்,சிறை நிரப்புவோம் கொள்கை என்பவற்றோடு மக்களின் காலப்போக்கில் மறந்து போகும் சுபாவத்தை அனுபவ ரீதியாக புரிந்து கொண்டவர்கள்.இவற்றையெல்லாம் விட தனக்கு கிடைத்த தொண்டர்கள் எனும் அடிமைகள்.
புதுடில்லி
நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பார்லிமென்டின் மையப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டோர் இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
தலைவரின் நினைவிடங்களில் பிரணாப் அஞ்சலி : நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக, தனது இல்லத்திலிருந்து கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராவின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
21 குண்டுகள் முழங்க பிரணாபுக்கு மரியாதை : நாட்டின் முதல் குடிமகன் எனும் உயரிய பொறுப்பான ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்றதும் அவருக்கு இந்திய ராணுவம் சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி பிரணாப் உரை : நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பின், ஏற்புரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது, மேற்குவங்க மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்த நான், நாட்டின் தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன், அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன். நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன், நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன், ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன். மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம், மதம் மற்றும் மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன், நாட்டின் இறையாண்மையை காப்பேன், எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் காட்டுவேன் என்று அவர் கூறினார்.
பிரணாப்பிற்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன? : நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, மாதம் ஒன்றுக்கு, 1.5 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டில்லியில் உள்ள பிரமாண்டமான மாளிகையில் வசிக்கலாம். இந்த மாளிகையில், மிகப் பெரிய அறைகளும், பூங்காக்களும் உள்ளன. அவருக்கு உதவி செய்ய, மாளிகையில், 200 ஊழியர்கள் பணியாற்றுவர். அவர் ஓய்வெடுக்க, சிம்லா மற்றும் ஐதராபாத்தில் மாளிகைகள் உள்ளன. முப்படைக்கும் தளபதியான அவர், தனி விமானத்தில், எந்த நாட்டுக்கும் பறக்கலாம். வேண்டுமானால், குடும்பத்துடன் செல்லலாம். நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, பிரணாப் முகர்ஜி ராணுவத் துறையால் பதிவு செய்யப்பட்ட அம்பாசிடர் காரில் தான் பயணித்து வந்தார். இன்று முதல், அவர், மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிக்கலாம். அதுதான், இனி அவரது அலுவலக கார். குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டது. அவர் பதவியில் இருக்கும்போது, இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கும் என்றால், அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக, 75 ஆயிரம் ரூபாயும், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பங்களா, அதில், இரு தரைவழி தொலைபேசி இணைப்புகள் இருக்கும். அத்துடன், மொபைல்போன் இணைப்பும் வழங்கப்படும். ஒரு கார், ஒரு தனிச் செயலர் உட்பட, ஐந்து ஊழியர்கள் அவருக்காக பணி அமர்த்தப்படுவர். அவர்களது மாதச் செலவுக்கென, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இலவசமாக விமானத்திலும், ரயிலிலும் அவரின் மனைவியுடன், நாடு முழுவதும் செல்ல சலுகையும் வழங்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் :ஜனாதிபதியாக பிரணாப் இன்று பதவியேற்ற நிலையில் டில்லி முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக டில்லியில் உள்ள மத்திய தலைமை செயலகம், கான் மார்க்கெட், உத்யோக் பவன் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரணாப் பதவியேற்று முடிக்கும் வரை தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதாகவும், மற்ற இடங்களில் வழக்கம் போல ரயில்கள் இயங்கியதாக டில்லி மெட்ரோ ரயில் கழக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரணாப் தொகுதியில் போட்டியிட மகன் அபிஜித் ஆசை: நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வாகியுள்ளதால், அவரின் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அவரது மகனும், மேற்குவங்க சட்டசபை எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேர்ந்ததால், அவர் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தன் தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, பிரணாப்பின் மகனும், பிர்பும் மாவட்ட நல்ஹாதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான, ஆதிர் சவுத்திரி கூறுகையில், “”ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதியில், பிரணாப் முகர்ஜி, நிறைய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எனவே, அபிஜித் முகர்ஜி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது நிச்சயம்,” என்றார்.
நன்றி:தினமலர்
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சுரேஷ் கம்னாட்டி, அடச்சீ, கல்மாடியும் பங்கேற்றுள்ளார்.
அனைத்து மொள்ளமாரிகளும் ஒரே கூரையின் கீழ்.
வாழ்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.
ஜனங்களுக்கு நாமம்தான்!
ஐ… ஜாலி
இதையும் கொஞ்சம் பாருங்கள் அய்யா –
அன்னா குழு போராட்டம் துவங்கியது
புதுடில்லி : ஊழல் கறைபடிந்த அமைச்சர்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுக்கள், ஊழல் எம்.பி.க்களுக்கு அதிவிரைவு கோர்ட் மூலம் தண்டனை, வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்டவைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டம் டில்லி ஜந்தர் மந்தரில் துவங்கியது. ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க இந்த இரண்டாம் கட்ட போராட்டம் உதவும், நாட்டைக் காப்போம் என்று கூறியபடியே, அன்னா குழு உறுப்பினர் அர்விந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை துவக்கினார்.
(நன்றி – தினமலர் )
வறுமையை ஒழிப்போம்–ஜனாதிபதி
ஊழலை ஒழிப்போம்..- அன்னா ஹசாரே
ஹி ஹி ஹி ஹி..நீங்கள் இருவரும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.,- சோனியா,மன்மோகன்,முலாயம்,மம்தா,கருணா,ஜெயா
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப்போல் அல்லாது
என் தலைவன் வழியிலே நடப்பான்
பொய்யை மட்டுமே பேசுவான்
தேச சேவை என்ற பெயராலே
நாட்டைக் கொள்ளை அடிப்பான்
மாட்டிக்கொள்ள மாட்டான் ஆனால்
வந்தே மாதரம் என்றே முழங்குவான்.