அரசியல்வாதிகளின் LPG கொள்ளை …!!!
பெட்ரோலியம் அமைச்சகம் தகவலை முடக்கியது.
தெரியாத்தனமாக பெட்ரோலியத் துறை அமைச்சர்
ஜெயபால் ரெட்டி அவர்கள் நேற்று LPG சிலிண்டர்
பற்றிய தகவல்களை பொது மக்கள் சுலபமாகப் பெற
உதவும் ஒரு இணையதளத்தை துவக்கி வைத்தார்.
(www.petroleum.nic.in)
அவர் போதாத காலம் –
தளத்தைத் திறந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளாக
சில புத்திசாலி பத்திரிகையாளர்கள்
வலையை ஊடுருவி தர்மசங்கடமான பல தகவல்களை
வெளிக்கொண்டு வந்தார்கள்.
உடனடியாக வெளிவந்துள்ள சில விவரங்கள் –
டெல்லியில் இருப்பிடம் உள்ள சில MPக்கள்,
அமைச்சர்கள் சிலர் – கடந்த ஒரு வருட காலத்தில்
வாங்கிய வீட்டு உபயோகத்திற்கான LPG சிலிண்டர்களின்
எண்ணிக்கை –
திருவாளர்கள் –
ஹமீத் அன்சாரி – குடியரசு துணத்தலைவர் – 171
வெளியுறவுத் துறை ராஜ்ய மந்திரி
ப்ரனீத் கௌர் – 161
செல்வி மாயாவதி – 91
நம்ம ஊர் ஆ.ராஜா – 89
“புகழ்”பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி
கே.ஜி.பாலகிருஷ்ணன் -60
பிஜெபி தலைவர் ராஜ்நாத் சிங் -80
முன்னாள் டிஜிபி கேபிஎஸ் கில் – 79
முன்னாள் அமைச்சர் எம் எஸ் கில் – 79
பிரபல தொழிலதிபர் ஜிண்டால் – 369
(இவர் காங்கிரஸ் எம்.பி.)
(இவரது பிருத்விராஜ் ரோடு இல்லத்திற்கு
இரண்டு கனெக்ஷன்கள் – அதில் ஒன்று இவரது
காலஞ்சென்ற தந்தை பெயரில் )
அமைச்சர் ஜெயபால் ரெட்டி – 26
சாதாரணமாக நம்மைப் போன்ற பொது மக்கள்,
சிலிண்டர் சப்ளை ஆகி 21 நாட்களுக்கு பின்னர் தான்
அடுத்த சிலிண்டர் பதிவு
செய்ய தகுதி பெறுகிறார்கள். அதற்குப் பின்னர்
ஊருக்கு தகுந்தபடி 15 நாட்களிலிருந்து 30 நாட்கள்
வரை ஆகிறது – டெலிவரி நிகழ.
ஆனால் இந்த பெரிய மனிதர்களுக்கு மட்டும்
ஒரு வருடத்தில் இவ்வளவு சிலிண்டர்கள்
கொடுக்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழ ஆரம்பித்தது.
அசடு வழிந்த அரசாங்கம்,
உடனடியாக சுதாரித்துக் கொண்டு –
முதல் வேலையாக –
தொடர்ந்து வரக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க –
கடந்த ஒரு வருட காலத்தில்
(அதாவது 01/06/2011 முதல் 31/05/2012
வரையுள்ள காலத்தில்) 17 சிலிண்டர்களுக்கு
மேல் கொடுக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை
முடக்கி விட்டது.
இப்போது 17 சிலிண்டர்களுக்கு மேல்
பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தளத்தில் இல்லை!




தப்பை எப்படி மறைக்கலாம் என்றே அரசாங்கத்தின் கொள்கை இருக்கும் வரை இந்திய எப்படி உருப்படும்?
இவர்களும் அரசின் மானிய விலையிலேயேதான் கேஸ் சிலிண்டர்களைப் பெற்றிருக்கின்றனர் என்பது மிக முக்கியமாக சொல்லப்படவேண்டிய ஒன்று. பன்னா..ப் பயல்கள்!
அரசாங்க கொள்ளை.. சாரி கொள்கைப்படி மக்கள் அதாவது முதல் குடிமகன் மற்றும் அவருக்கு அடுத்துள்ள மக்கள் சலுகைகளை பெற்று இருக்கின்றனர்….. அனைவருக்கும் இந்த சலுகை வேண்டும் என்றால்.. அனைவரும் அமைச்சராக வேண்டும்..
நண்பர்களே,
பொது மக்களுக்கு கொடுக்கப்படும் மானிய விலை
சிலிண்டரை வருடத்திற்கு 6 என்று கட்டுப்படுத்த
சட்டம் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது
மத்திய அரசு.
இந்த திருடர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும்
கணக்கில் அடங்காமல் சிலிண்டர் கொடுப்பது எப்படி ?
வருடத்தில் 365 நாட்களில் 52 வார விடுமுறை
நாட்கள் போக மீதி 313 நாட்களில் ஒருவருக்கு
ஒரே கனெக்ஷனில் 161 சிலிண்டர்கள் -என்றால்
இரண்டு நாட்களுக்கு ஒன்றா ?
மேலும், ஜிண்டால் உலக பணக்காரர் வரிசையில்
வருபவர். அவருக்கும் மானிய விலையில் சிலிண்டரா?
அதுவும் செத்துபோன அப்பாவின் கனெக்ஷனில் இன்னும்
சிலிண்டர் சப்ளை ஆகிறது. ஒரே விலாசத்தில்
இரண்டு கனெக்ஷன்கள் கொடுக்கப்பட மாட்டா என்பது
இண்டேன் விதிகளில் ஒன்று.
அத்தனையும் அப்பட்டமான விதிமுறை மீறல்கள்.
மேற்கொண்டு சில விவரங்களை சேகரிக்கலாமென்று
ஆனமட்டும் முயன்றேன். பிரச்சினை வருவது
தெரிந்தவுடன் உடனடியாக தகவல்களை
முடக்கி விட்டார்கள்.
எவ்வளவு முயன்றாலும், நம்மால் ஒரு எல்லையைத்
தாண்டி போக முடியவில்லை.
பத்திரிகையாளர்களும்,
எதிர்க்கட்சிகளும்
தீவிரமாக இறங்கி மேற்கொள்ள வேண்டிய பணி இது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
செய்யும் திருட்டில், திருடர்களுக்கு கூட சில நெறி முறைகள் உண்டு.
ஒரு வீட்டில் நகை,பணம் முதலியவற்றை திருட நுழைபவன் ,ஆடைகளிலும்,பாத்திரங்களிலும் கைவைக்க மாட்டான்.
ஆனால் இந்திய அரசியல்வாதியோ,வீட்டில் புகுந்து கம்ப்யூட்டரை திருடிசெல்லும் போது அப்படியே சமையலறையில் புகுந்து டப்பாவைத்திறந்து கடுகையும் அள்ளிக்கொண்டுபோவான்.
நண்பரே ,உங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்தால்,
“மறுமொழி இடுக” என்ற உங்கள் வேண்டுகோளை சற்றே மாற்றி,
“மறுமொழி கேட்காமல் சுடுக” என்று கட்டளையிட்டால்
நாடு நலம் பெறும் எனத்தோன்றுகிறது.
மனித இனத்திற்கு “பூஜ்யம்” தந்தது இந்தியரே எனும் புகழ் நமக்குண்டு.
இத்துடன் உலகிலேயே மிகக்கேவலமான உயிரினத்தை தந்திருக்கும் “பெருமை”யும் இப்போ நம்மை சேர்ந்திருக்கு..
அதன் பெயர்…
,”இந்திய அரசியல்வாதி”.
நண்பர் கண்பத்,
பகத் சிங்கோ, நேதாஜியோ அல்லது காந்திஜியோ –
தேவைக்கேற்றாப் போல் ஒருவர் அவசியம்
தோன்றுவார் (தோன்றி இருப்பார் ?) –
என்ன – நம் காலத்திற்குள் தோன்றினால் தேவலை !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கா.மை.ஸார்,
தோன்றியாகிவிட்(டார்) (து)..
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்..
அவர் பெயர் வலைத்தளேஸ்வர்.
அவர் மகன் ப்ளாக் சிங்.
இவர்கள் துணையுடன் உங்களைப்போன்ற நல்ல
ஆத்மாக்கள் உழைத்து பல உண்மைகளை
ஊருக்கு சொல்கின்றனர்.
ஊடகங்கள் அனைத்தும் ஊழலங்கள்
ஆன இந்நிலைமையில் நமக்கு
அரசு செய்யும் அக்கிரமங்கள்
வருவது உங்களைப்போன்ற செயல்வீரர்களாலே.
சவுக்கு எனும் புனைப்பெயர் கொண்ட பதிவாளர்,தன் வலைத்தளத்தில் சென்ற ஆண்டு நடத்திய புரட்சி நாம் அனைவரும் அறிந்ததே.
அவருடைய தைரியமான கட்டுரைகள்,ஊழல மிகுந்த தி.மு.க.ஆட்சியை தூக்கி அடிக்க பெரிதும் உதவியது.
இதை உணர்ந்து ஊழல காங்கிரஸ்,வலைதளத்தின் சுதந்திரத்தை பறிக்க மிகுந்த முயற்சி செய்து வருகிறது.இது இரண்டாவது எமெர்ஜென்சி ஆகும்.இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கலாகாது.
நன்றி.
இந்த பதிவை பார்க்கும் போது அரசியல்வாதிகளை மட்டும் என்னால் குறை கூற முடியவில்லை. அவர்களுடன் இயங்கும் அதிகாரிகளும் தான் முக்கிய காரணம். உதாரணமாக அன்சாரி நம்மை போல் காஸ் ஏஜண்டுக்கு அவரே போன் பண்ணி ‘வாரத்துக்கு 3 காஸ் சிலிண்டர் அனுப்புப்பா’ என்று சொல்லி இருக்க மாட்டார். அவரது பி ஏ வோ அல்லது அவரது ‘hospitality ‘ க்கு பொறுப்பான அதிகாரியோ அன்சாரி வீட்டுக்கு காஸ் போடும் போது எனது வீட்டுக்கும், கூடவே எனது சகலபாடிக்கும், என் பொண்டாட்டியின் ஒண்ணு விட்ட அக்கா பையன் வீட்டுக்கும் சேர்த்து போட்டுட்டு துணை அதிபர் கணக்கில போட்டிடுன்னு சொல்லியிருப்பார். நம்முடைய பெரிய பிரச்சனை என்ன வென்றால் பொது மக்கள் சேவையில் உள்ள அரசியல் வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ accountability என்பது சுத்தமாக கிடையாது. அதை வழக்கு, கோர்ட்டு, கேசு, சிறை என பயமுறுத்தி அமுல் படுத்தலாம் என்றால் அங்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அப்புறம் எப்படி எல்லாம் நீதி கிடைப்பதை தடுக்க முடியுமோ அத்தனை வழிகளையும் கற்று பயன்படுத்தும் சட்ட மேதைகள். எடுத்துகாட்டு இன்று ஜெயலலிதா தாக்கல் செய்திருக்கும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நியமனமே சட்டவிரோதமானது எனும் மனு. எனக்கு என்னவோ வரும் காலங்களில் மாவோயிஸ்டுகள் மிகவும் வலு பெறுவார்கள் என்றே தோன்றுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்னர், சென்னையில் வீட்டு
பணியாளராக இருக்கும் ஒரு பெனண்மணி காவல் நிலையத்திற்கு
வந்து எட்டு சவரன் செயினையும் ஒரு செல் போனையும் தன்
கணவர் தன்னிடம் கொடுத்து அடகு வைக்க சொன்னதாகவும், தன்
கணவருக்கு அப்பொருட்கள் நல்ல வழியில் கிடைத்திருக்க
வாய்ப்பில்லையென தான் நம்புவதாக்வும் சொல்லி அவற்றை
உரியவரிடம் சேர்ப்பித்துவிட சொல்லி சென்றிருக்கிறார்.
நேர்மையானவர்கள் எங்கும் இருக்கிறார்கள். என்ன அவர்களிடம்
அதிகாரமோ பதவியோ இல்லை.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.