தமிழகத்தை சேர்ந்த -மத்திய அமைச்சருக்கு தொடர்புள்ள
மருத்துவ கல்லூரி – சிபிஐ வழக்கு ….
சனிக்கிழமை வெளியான ஒரு பரபரப்பான செய்திக்கு
உண்மையில் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம்
கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழக பத்திரிகைகள் அதை சரியான விதத்தில்
வெளிக்கொண்டு வரவில்லை – ஏன் என்பது
அவர்களுக்கே வெளிச்சம் !!
தமிழகத்தைச் சேர்ந்த 3 மருத்துவ கல்லூரிகள் மீது
சிபிஐ மோசடி வழக்கு தொடர்ந்திருக்கிறது.
முக்கியமான குற்றச்சாட்டுகள் –
அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளை
நிறைவேற்றாமலே, பொய்யான தகவல்களை கொடுத்து
மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன.
எப்படி ?
மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரிடையாக ஆய்வுக்கு
வந்தபோது, வெளியூர்களில் பிரைவேட்டாக
மருத்துவ மனைகளை (க்ளினிக்) நடத்திக்கொண்டிருந்த
டாக்டர்களை – சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில்
நிரந்தர ஆசிரியர்களாக பணி புரிவதாகக் காட்டி,பொய்யான
ஆவணங்களை தயார் செய்து அளித்திருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மருத்துவ மனையில்
இல்லாத நோயாளிகளை இருப்பது போல் போலியாக
உருவாக்கி, நோயாளிகளைப் பற்றிய போலியான
தகவல்களையும் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரி நடத்த அவசியமாகத் தேவைப்படும்
சில கட்டமைப்பு வசதிகள் இல்லாமலே, அவை இருப்பதாக
ஆவணங்கள் தயாரித்து அளித்திருக்கிறார்கள்.
தங்களிடம் இல்லாத வசதிகளை எல்லாம் இருப்பதாக
மாணவர்களை நம்ப வைத்து கல்லூரியில்
சேர்த்திருக்கிறார்கள்.
இந்த 3 கல்லூரிகளில் ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த
திமுக மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களால்
தொடங்கப்பட்டு, இப்போது அவர் மகன் பெயரில் உள்ளது.



அருமை.
எனது முகனூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
மருத்துவக் கல்லூரி மட்டுமல்ல; பற்பல பொறியியல் கல்லூரிகளிலும் இதே நிலைதான். துட்டு மட்டும் விட்டெறிந்தால் போதும். AICTE அனுமதி வழங்கக் காத்துக் கிடக்கிறது. பக்கத்து கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர், தங்கள் கல்லூரியில் வேலை பார்ப்பதாக சான்றிதழ் நகல், போட்டோ உட்பட அனைத்தையும் காட்டினாலே போதுமானது!! இது போல இன்னும் பல அயோக்கியத்தனங்கள் உள்ளன. கல்லூரி நிர்வாகங்களும் AICTE ஓப்பிஸர்ஸும் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றன. பொறியியல் கல்லூரி ஒன்றில் பணியாற்றுபவன் என்ற முறையில் இக்கருத்துகளை எடுத்து வைக்கிறேன்.
பொறியியல் கவுன்சிலிங்கில் வருடாவருடம் பல ஆயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமலே காலியாக இருந்தாலும், புதிது புதிதாக வருடாவருடம் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் முளைத்துக்கொண்டே இருப்பதன் மர்மம் என்ன? ரொம்ப சிம்ப்பிளான காரணம் சலவை நோட்டுகள்தான், பணவெறிதான். NBA Accreditation என்ற ஒன்று உண்டு. இதுவும் ஏஐசிடிஇ தருவதுதான். இதில் கிரேடு வாங்கிவிட்டால், கல்விக் கட்டணத்தில் பத்து சதவீதம் கூடுதலாக வசூலித்துக் கொள்ளலாம். இந்த கிரேடு வாங்க AICTE நிர்ணயித்திருக்கும் parameters மிகவும் கடுமையானவை. ஆனாலும் சொத்தை கல்லூரிகள் கூட கிரேடு பெறும் மர்மமென்ன? பணமும் பெண்களும் சப்ளை செய்தால் போதும்!! (சொல்ல நா கூசுகிறது. கேடுகெட்ட படித்த மலந்தின்னும் இழிபிறவிகள்!)
வசூல் ராஜா MBBS கதையால்ல இருக்கு..
இது வெறும் பணம் கொள்ளை, போலி அங்கீகாரம் என்பதோடு முடிந்து விடும் பிரச்சனை அல்ல. இங்கு படித்தவர்கள் நாளை வைத்தியம் பார்க்க வரும் போது நோயாளிகளின் நிலை என்ன?!
http://savukku.net/home1/1581-2012-06-17-07-43-52.html
உங்கள் தகவலுக்கு நன்றி நண்பர் ரிஷி.
1) நண்பர் ரிஷி யின் பின்னூட்டத்திற்கு பிறகு
இது குறித்த “சவுக்கு” கட்டுரை படித்தேன்.
(அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை)
பளிச்சென்று பச்சையாகவே தெரிகிறதே !
பிரதமருக்கு என்ன பார்வையே கிடையாதா ?
அவரது அலுவலகத்திலிருந்தே தகவலை
வெளியிட்டிருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டு 5.91 கோடியாக இருந்த
அமைச்சரது சொத்து 2011ல் 70.42 கோடியாக
உயர்ந்திருக்கிறது.(அதிகாரபூர்வமான தகவல்)
இது எப்படி என்று பிரதமர்
அமைச்சரை விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா ?
வருமான வரி இலாகாவும்,Enforcement
Directorate-ம் அமைச்சர் இரண்டு
வருடங்களில் 5 கோடியை 70 கோடி ஆக்கியது
எப்படி என்று விசாரித்திருக்க வேண்டாமா ?
(அடுத்து, பிரனாப் முகர்ஜி
ஓட்டு சேகரிக்க சென்னை வருகிறாராம் –
கலைஞர் பிரம்மாண்டமான வரவேற்பும்,
விருந்தும் கொடுக்கிறார். செலவு
அநேகமாக இந்த கல்வித் தந்தையுடையதாகத்தான்
இருக்கும்.பின்னர் என்ன விசாரிப்பு இருக்கும் ?
யார் விசாரிக்க முடியும் ? )
இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் எதற்கு இருக்கின்றன,
என்ன தான் செய்கின்றன என்றே புரியவில்லை.
இப்படி நம்மைபோன்ற பொது மக்கள்
செய்கின்ற வேலையை கூட செய்யாமல்
இப்படி சோம்பிக் கிடக்கின்றார்களே !
2) வெள்ளிக்கிழமை வெளியான தகவல் –
ஞாயிறு மாலை வரை தமிழ் பத்திரிகைகள் எதிலும்
போடவில்லையே என்கிற ஆதங்கத்தில் நான் இந்த
இடுகையை போட்டேன்.
இன்று-திங்கள் – தினமலரில் முக்கியத்துவம் இல்லாத
இடத்தில் சிறியதாக இது குறித்து ஒரு தகவல் வெளியாகி
இருக்கிறது.
மறந்தும் கூட அதில் மந்திரிக்கு உள்ள தொடர்பு
பற்றி எதுவும் கூறவில்லை !
அடேயப்பா – இந்த நாட்டில் பணம் இருந்தால் –
எதையும், யாரையும் – வாங்கி விடலாம் என்பதை
எல்லாரும் மாற்றி மாற்றி உறுதி செய்து கொண்டே
இருக்கிறார்கள்.
நண்பர்களே – உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
நம்மால் இயன்ற வரையில் நமக்குத் தெரிய வரும்
இத்தகைய தகவல்களை மற்றவர்களுக்கு சொல்வோம்.
இது அதிக பட்ச மக்களைச் சென்றடைய முயற்சிப்போம்.
இன்றில்லா விட்டாலும்,
நாளை இல்லா விட்டாலும் –
என்றாவது ஒரு நாள் விடியாதா ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
எதை,யாரிடம் கொண்டு செல்வது நண்பரே?
உங்களையும்,என்னையும், மேலும் இங்கு பின்னூட்டமிடும் சில நண்பர்களையும் தவிர அனைவரும் சந்தோஷமாக இருப்பது போலத்தான் தெரிகிறது.(அல்லது உச்ச விரக்தி நிலையாகவும் இருக்கலாம்.)
IPL match களில் களிப்புடன் கும்பல்..
சினிமா award வழங்கும் விழாக்களில் களிப்புடன் கும்பல்..
தங்க,வைர,வைடூர்ய நகை கடைகளில் கறிகாய் கடைகளைவிட கும்பல்.
ஆச்சு இன்னும் ஒரு மாதத்தில் ஆடி தள்ளுபடி என சாமியாடப்போகும் கும்பல்..
பெட்ரோல் லிட்டர் நூறு ரூபா என்றாலும் வீதி எங்கும் லட்சம் கார்கள்,கோடி பைக்குகள்.
எங்கு நோக்கினும் முன்னேற்றம்..
1970 களில்
95% மதிப்பெண் எடுக்கும் ,Forward community மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கு இடம் கிடைக்காது..
இன்றோ, 2012 இல்..
95% மதிப்பெண் எடுக்கும் ,SC community மாணவர்களுக்குகூட மேற்படிப்பிற்கு இடம் கிடைப்பதில்லை…(ஆதாரம்:இன்றைய ஹிந்து நாளிதழ்)
காரணம் இவர்களுக்கு படிப்பதற்கான செலவு மொத்தம் சுமார் நாலு லட்சம் ரூபா இல்லை.
அதாவது அரசு ரூபா 200 கோடி செலவழித்தால் சுமார் 5000 சிறந்த படித்த மாணவர்களை SC community இலிருந்து உருவாக்கலாம்..
அல்லது அதே பணத்தில் ஒரு 78 வயது மூட மூதாட்டியை உற்றார் உறவினர் புடை சூழ உலக நாடுகளுக்கு சுற்றுபயணம் அனுப்பிவைக்கலாம்.
நம் அரசு இரண்டாவதைத்தான் செய்கிறது..
1006 ஜோடிகளுக்கு அரசு செலவில் சீர்செனத்தியுடன் திருமணம்..
இவர்களில் “செயல்” வீரர்களுக்கு வரும் ஜனவரி, மீண்டும் அரசு செலவில் சீமந்தம்.
இடைத்தேர்தல்கள்,வெளிநாடுப்பயணங்கள்..நடு நடுவே சிபிஐ சம்மன்கள்.
ஒரு சிலர் சிரித்தால் அவமானம்!
ஊரே சிரித்தால் கல்யாணம்..என்பார்கள்.
இங்கோ ஒரு நாடே சிரித்துக்கொண்டிருக்கிறது..
சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறது..
அதுவும் பல வருடங்களாக …
நாம் மட்டும் ஏன் முகாரி??
நாமும் சேர்ந்து சிரிப்போம்..
அல்லது அந்த கவியரசு சொன்னது போல..
அழுதுகொண்டே(யாவது) சிரிப்போம்!
நன்றி.
பிரபலமான கடவுளின் பெயரில் இயங்கி(?)வரும்
அக்கல்லூரி புதுச்சேரியில் உள்ளது. மேற்படி கல்லூரி
ஆரம்பம் முதலே இவ்விதம் தான் இயங்கிறது.
இதற்கே தான் “லட்சிய வெறியோடு கூடிய” பெற்றோரிடமிருந்து
“லட்சங்களை” கேப்பிட்டேஷனாக வசூலித்தும் வருகிறது.
நரசிம்மன் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார். மந்திரியும்
வைஷ்ணவ பக்தர் தான்.
எதிர்கால நோயாளிகள் தான் பாவம். “ஸ்பெஷலிஷ்ட்களிடம்”
வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
மெடிக்கல் கவுன்சில்ஆண்டுதோறும் நடத்தும் மேற்பார்வையின்
போது, போதுமான பணியாளர்கள் இருப்பது போலவும், கட்டமைப்பு
வசதிகள் செய்யப்பட்டு வருடவது போலவும் “சமாளிக்கிறார்கள்”.
கவுன்சில், “தரமற்ற” கல்லூரி என பிளாக் லிஸ்ட் செய்வதோடு நிறுத்தி
கொள்கிறது. கவுன்சில் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை போலும்.
தமிழ் பத்திரிகைகள் “இம்மாதிரி” விஷயங்களுக்கெல்லாம் இடம்
கொடுக்க மாட்டார்கள். வருமானம் போய்விடும். பெரும்பாலான
நிருபர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் என்றால் என்னவென்று கூட
தெரியாது. தினமலராவது போட்டதே.
தினமணியில் கூட இது வரவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.