பிரனாப் முகர்ஜி – சோனியா காந்தியின் விருப்பத்தையும் மீறி ஜனாதிபதி வேட்பாளரானது எப்படி ?

பிரனாப் முகர்ஜி – சோனியா காந்தியின் விருப்பத்தையும்
மீறி ஜனாதிபதி வேட்பாளரானது  எப்படி ?

அரசியல்  மிக விசித்திரமான  ஒரு விளையாட்டு.
இதில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் –
முதலில் பலியாவது நேர்மையையும்,
உண்மையையும் தான் .

திருமதி சோனியா காந்தி – பிரனாப் முகர்ஜியை
இறுதியாக குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக
அறிவிப்பதற்கு முன்னர் அரசியல் அரங்கின்
உள்வட்டங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று

தெரியவரும்போது மஹா பாரதத்தின்
சகுனி  இவர்கள் முன் ஒன்றுமே இல்லை
(nothing before these people) என்று தான்
தோன்றுகிறது !

நான் கேள்விப்பட்ட விவரங்கள் –

பிரனாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு
தேர்ந்தெடுக்க திருமதி சோனியாவிற்கு விருப்பம் இல்லை.
ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லவோ,
செயல்படவோ முடியாத அளவிற்கு, பிரனாப்
முகர்ஜியிடமிருந்து மறைமுக நெருக்குதல். அவரைத்
தவிர்த்தால், அரசு கவிழ்ந்து விடும்.

என்ன காரணம் சொல்லி, எப்படி தவிர்ப்பது ?

பிரனாப் முகர்ஜி ஜனாதிபதியாவதை மம்தா பானர்ஜி
விரும்பவில்லை என்பது சோனியா காந்திக்கு தெரிய
வருகிறது. எனவே, தான் நேரிடையாக செய்வதை விட,
புத்திசாலித்தனமாக மம்தா பானர்ஜியை பகடையாகப்
பயன்படுத்தி பிரனாப் முகர்ஜியை நிராகரிக்கச்
செய்வது என்று தீர்மானிக்கிறார்.

புதன் மாலை மம்தாவை தன் வீட்டிற்கு அழைத்து,
உரையாடும்போது, பிரனாப், அன்சாரி (குடியரசு
துணைத்தலைவர் ) ஆகிய இரண்டு பெயர்கள்
ஆலோசனையில் இருப்பதைத் தெரிவித்திருக்கிறார்.
மம்தா அன்சாரிக்கு ஆதரவு அளிப்பார் என்று
எதிர்பார்த்திருக்கிறார்.

அவர் எதிர்பார்த்தது போலவே மம்தாவும் பிரனாப்
முகர்ஜியை எப்படியாவது தவிர்க்க வேண்டும்.
மைனாரிடி வகுப்பைச் சேர்ந்த அன்சாரியை ஆதரிக்க
முலாயம் சிங் உதவுவார் என்று எண்ணி –
முலாயம் சிங்குடன் கலந்து
ஆலோசிப்பதாகக் கூறி விட்டு சென்றிருக்கிறார்.

முலாயம் சிங்குடன் பேசும்போது,
பிரனாப் முகர்ஜியை தவிர்க்கவே சோனியா காந்தி
விரும்புவது போல் தோன்றுகிறது என்றும் இறுதி சாய்ஸ்
அன்சாரியாக இருக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்.

அன்சாரி மைனாரிடி சமுதாயத்தவராக இருந்தாலும்,
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் –உ.பி.யை சேர்ந்த
ஒருவர் தன்னை விட பெரிய மனிதர்  
ஆவதில் முலாயமுக்கு விருப்பமில்லை.

எனவே புதிய யோசனை உருவாகிறது.
இரண்டு பேருக்கும் பிடிக்காத, இரண்டு பேரையும்
தவிர்க்க – புதிதாக 3 பேர்களை அறிவிக்கிறார்கள்.

அப்துல் கலாம்,
மன்மோகன் சிங்,
சோம்நாத் சாட்டர்ஜி

பிரனாப் முகர்ஜியை தவிர்த்து விட்டு, இருவருமாக
சேர்ந்து அன்சாரி பெயருக்கு ஒப்புதல் கொடுப்பார்கள் என்று
காத்திருந்த சோனியா காந்திக்கு இது ஒரு அதிர்ச்சி.

மூன்று பெயர்களில் -சோம்நாத் சாட்டர்ஜி பற்றி
யாருமே சீரியஸாக இல்லை.
அப்துல் கலாம் – அவருக்கு பிடிக்காத பெயர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும்,
பிரசிடெண்டாக இருந்தாலும் ஒன்று தான் – பிரச்சினை
ஏதும் இல்லை.

ஆனால் இரண்டு இடங்களிலும்
மன்மோகன் சிங்கே இருக்க முடியாதே !
பிரதமர் பதவிக்கு இன்னொரு
மன்மோகன் சிங்கை  தேட  வேண்டுமே – அதற்கு
முகர்ஜி இடம் கொடுக்க மாட்டாரே.

என்ன செய்யலாம் ?
மம்தா – முலாயம் சிங் கூட்டணியை உடை !
இரவோடு இரவாக முலாயம் சிங்கை கூப்பிட்டு
பேசுகிறார்.

மம்தாவுடன் சேர்ந்து புதிதாக 3 பேர்களை
அறிவித்த அதே புதன் இரவு முலாயம் சிங் முதலில்
அஹமது படேலுடன் விவரமாக பேசி விட்டு, பின்னர்
சோனியா காந்தியுடன் தனியாக பேசி இருக்கிறார்.
இது போல் – காங்கிரஸ் கட்சியினர்  அல்லாத
வேறு யாருடனும் சோனியா காந்தி தனித்து
உரையாடும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதன் இரவிற்கும், வியாழன் மாலைக்கும் இடையே
இரண்டு முறை முலாயம் சிங் ரகசியமாக சோனியா
காந்தியை சந்தித்து விவாதித்திருக்கிறார் !
(சற்று நேரத்திற்கும் முன் இந்தி டிவி சானல் பேட்டி
ஒன்றில் அவரே இதை ஒப்புக் கொண்டுள்ளார் !)

முலாயம் சிங்கிற்கு என்று அவர் மனதில் தனியே
ஒரு அஜெண்டா ! காங்கிரஸ் கூட்டணியில் இருந்து
மம்தா பானர்ஜியை கழட்டி விட்டு விட்டால்,
மத்தியில் ஆட்சி தொடர, நிரந்தரமாக காங்கிரஸ்
தன்னைத் தான் நம்பி இருக்க வேண்டும்.
(முலாயம் சிங் மீது  சிபிஐ யில் நிலுவையில்
வழக்கு இருக்கிறதே ! ஆட்சி தொடர அவர் ஆதரவு
அளித்தால் – வழக்குக்கு ஒரு நல்ல தீர்வு காண்பது
கடினமா என்ன  ?)

பின்னர் என்ன – நம்பி வந்த மம்தாவை நட்டாற்றில்
விட்டு விட்டு -முகர்ஜிக்கு ஓகே சொல்லி இருக்கிறார்
முலாயம் சிங்.

முலாயம் சிங் டெல்லி தலைமையுடன் நெருக்கமாவதை
பார்த்து, கலக்கமான மாயாவதி  உடனடியாக –
தானாகவே முன்வந்து –
சோனியா காந்தியை தொடர்பு கொண்டு –
பிரனாப் முகர்ஜி அருமையான தேர்வு என்றும் தங்கள்
கட்சியின் ஆதரவு அவசியம் உண்டு என்றும்
கூறி இருக்கிறார்.(மாயாவதி மீதும் சிபிஐ யில் வழக்கு
நிலுவையில் இருக்கிறதே !)

இப்படியாக 2 மாதங்கள் முன்பு உத்திரப் பிரதேச தேர்தலின்
போது ஒருவரை ஒருவர் மகா கேவலமாக மண்ணை
வாரித் தூற்றிக்கொண்ட 3 பேரும் ஜனாதிபதி தேர்தலில்
தோள்களில் கை போட்டுக் கொண்டார்கள் !
படு தீவிரமாக இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்த
ராகுல் காந்தியை கண்ணிலேயே காணவில்லை !!

நம்புங்கள் – நடப்பது எல்லாம்
இந்த தேசத்து மக்களின் நன்மைக்காகவே !

இப்போது – விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதையில்
வருவது போல் ஒரு கேள்வி –

கீழ்க்கண்ட நபர்களில் அதி புத்திசாலி யார் ?

1)மம்தாவின் திடீர் புரட்சியை வெற்றிகரமாக அடக்கி,
ஜென்ம விரோதிகளான முலாயம் சிங், மாயாவதி
இரண்டு பேரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து,
அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதை தவிர்த்த
சோனியா காந்தியா ?    அல்லது

2) அன்சாரி ஜனாதிபதி ஆகாமல் பார்த்துக் கொண்டு,
மம்தாவை காங்கிரசிலிருந்து விலக வைத்து, தன்
முக்கியத்துவத்தை பெருக்கிக் கொண்ட முலயாம் சிங்கா ?
அல்லது

3) பிரனாப் முகர்ஜி ஜனாதிபதி ஆவதை தவிர்க்க
முடியாவிட்டாலும், சோனியாவையே எதிர்த்தவர் என்கிற
இமேஜை உண்டாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும்
மத்திய அரசுக்கு இடைத்தேர்தல் வரலாம் என்கிற  நிலையை
உருவாக்கியுள்ள மம்தா பானர்ஜியா ?     அல்லது

4)  தன்னைத் தவிர்க்க ஆன வரையில் முயன்ற சோனியா
காந்தியையும் மீறி – பார்க்க வேண்டியவர்களை பாரத்து,
பேச வேண்டியவர்களிடம் பேசி – குடியரசுத் தலைவர்
தேர்தலில் தன்னை வேட்பாளராக சோனியா காந்தியே
அறிவிக்கும்படி பார்த்துக் கொண்ட பிரனாப் முகர்ஜியா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to பிரனாப் முகர்ஜி – சோனியா காந்தியின் விருப்பத்தையும் மீறி ஜனாதிபதி வேட்பாளரானது எப்படி ?

  1. Senthil Kumar's avatar Senthil Kumar சொல்கிறார்:

    அன்புள்ள நண்பர் காவிரிமைந்தன் அவர்களே!
    வெகு சீக்கிரம் இந்தியா முட்டாள் அடிமைகளின் தேசமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த கேடு கெட்ட நிலை மாற நாம் மிகப்பெரிதாக போராட முன் வர வேண்டும்.

    செந்தில் குமார்
    தோஹா, கத்தார்

  2. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.

  3. srini's avatar srini சொல்கிறார்:

    வணக்கம் சார் .

    மிக அருமையான பதிவு .

    திரு கலாம் அவர்கள் வரவில்லை என்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் சோனியாவிற்கு பிடிக்காத இந்திய குடிமகன் பிரணாப் வருவது பரவா இல்லை . அந்த மூன்று (M) களுமே ( mamatha , maya, mulayam) நம்ப வச்சு கழுத்தறுக்கும் ஜன்மங்கள் தான் . இவர்கள் soniaya வை நம்ப வச்சு காலை வாரினால் நாட்டிற்க்கு நல்லது நடக்கும்

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    விலைவாசி உயர்வு,
    ரூபாயின் மதிப்புக் குறைவு,
    பெட்ரோல் விலையேற்றம்,
    பொருளாதார சீர்கேடு,
    லஞ்சஊழல்காரர்களை பாதுகாப்பது,
    அயல்நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும்
    கறுப்பு பணத்தை கொண்டு வராமல்
    சாக்குபோக்கு சொல்லி இழுத்தடிப்பது,
    கிடைத்த கறுப்புப்பணக்காரர்கள்
    பட்டியலை வெளியிட மறுப்பது,
    இத்தனைக்கும் சோனியா காந்தி,
    மன்மோகன் சிங், பிரனாப் முகர்ஜி ஆகிய
    மூவரும் சேர்ந்தே தான் பொறுப்பு.
    (ப.சி.யும் கூடத்தான் )

    மேற்சொன்ன காரணங்களால்
    ஜனாதிபதி பதவிக்கு லாயக்கற்றவர்
    பிரனாப் முகர்ஜி. அவரை போட்டியே இன்றி
    தேர்ந்தெடுப்பது இந்திய மக்களுக்கு
    இழைக்கப்படும் அவமானம் – துரோகம்.
    கம்யூனிஸ்டுகளும் இதில் கூட்டு சேருவது
    பச்சையான சுயநலம்.

    ஜெயிக்க வாய்ப்பில்லா விட்டால் என்ன ?
    எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டாமா ?
    நம் அரசியல்வாதிகளில்
    எவருக்குமே சொரணை இல்லையே !
    அத்தனை பேரும் சுயநலவாதிகளாகி விட்டார்களே!

    ஒரு பிச்சைக்காரரை –
    பிரனாப் முகர்ஜிக்கு எதிராக போட்டியிட
    வைத்து நம் எதிர்ப்பைக் காட்டலாம்.

    குறைந்த பட்சம் 50 MLAக்கள் சேர்ந்தால்
    போதும் – நாமினேஷன் தாக்கல் செய்ய.
    யாராவது முயற்சி எடுப்பார்களா ?

    -ஆழ்ந்த வருத்தத்துடன்,
    காவிரிமைந்தன்

  5. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    இன்னும் ஒரு சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ள ஒரு பண்டார பரதேசி, கும்பலில் அன்னை எங்கே தன்னை மறந்து விடுவாரோ என்று எண்ணி “கலாம் என்றால் கலக்கம்” என்று சம்பந்தம் இல்லாமல் உளறி வைத்திருக்கிறதே பார்த்தீர்களா! மூச்சுக்கு முந்நூறு தரம் தமிழ் தமிழ் என்று பிதற்றும் இந்த இழி பிறப்பு, தமிழர்களுக்கு உலகளாவிய மட்டத்தில் பெயர் வாங்கி கொடுத்த அப்பழுக்கிலாத, உழைப்பால் உயர்ந்த ஒரு தமிழனை பார்த்து கூறும் வார்த்தையா இது. தூ!

  6. giri's avatar giri சொல்கிறார்:

    அதி புத்திசாலி பிரனாப் முகர்ஜி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.