“எங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேணும் தாயே”

“எங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேணும் தாயே”

120 கோடி மக்களைக் கொண்ட
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.

இதை ஆளும் காங்கிரஸ் கட்சியின்,
அதன் கூட்டணி கட்சிககளின் –
ஒட்டுமொத்த ஒரே தலைவர்
அன்னை சோனியா காந்திக்கு ஒரு கேள்வி  … !

இந்த நாட்டின் பத்து வயது பள்ளிச் சிறுவர் முதல்,
கல்லூரி மாணவ, மாணவியர் முதல்,
பெண்களும், முதியோரும், பெரும்பான்மை இனத்தவரும்,
சிறுபான்மை இனத்தவரும்  ஒன்று சேர விரும்பும்,
மனதார நேசிக்கும் – ஒரு சிறந்த மனிதர்,தேச பக்தர்  –
APJ அப்துல் கலாம் அவர்களை –

உங்களுக்கு மட்டும் எப்படி பிடிக்காமல் போய் விட்டது ?

அப்படி அவர் செய்த பாவம் தான் என்ன ?

இத்தனை பேரால் விரும்பப்படும் ஒருவரை –
இத்தனை பேரால் ஆர்வமுடன் குடியரசுத் தலைவர் பதவிக்கு
முன்மொழியப்படும் ஒருவரை –

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது ஏன் ?

நீங்கள் பார்லிமெண்டில் பெரும்பான்மை கட்சிக்கு
தலைவர் அல்ல.
இருப்பதற்குள் பெரிய கட்சி ஒன்றுக்கு
தான் தலைவர்.
உங்களுக்கு என்று தனி பலம் கிடையாது.
எனவே உங்கள் கூட்டணியில் இருப்பவர்கள்
சொல்வதையும் கேட்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு
இருக்கிறது !

அப்படி இருக்கும்போது –
உங்கள் கூட்டணியில் இருப்பவர்களே முன்மொழியும்,
பெரும்பான்மை மக்கள் விரும்பும் ஒரு நல்ல மனிதரை
நிராகரிக்க உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது ?

எப்படியோ கட்சிகளுள் குழப்பங்களை ஏற்படுத்தி,
சிபிஐ வழக்குகளை காட்டி – அவரவர் பலவீனங்களை
பயன்படுத்தி,
சிலரை வழிக்குக் கொண்டு வந்து
உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
அதற்கான சக்தியும், ஆற்றலும், அதிகார பலமும்,
ஆள் பலமும் உங்களுக்கு உண்டு – உண்மை தான் !!

ஆனாலும்   –

இது ஒரு ஜனநாயக நாடு.
அப்துல் கலாமிடம் அவர்களிடம் நீங்கள் காணும் குறை என்ன ?
அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது
என்று நீங்கள் முடிவெடுப்பதற்கான –

காரணம் என்ன ?

என்பதை மட்டுமாவது இந்த நாட்டு மக்கள்
தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

உங்களுக்கு தோதாக வரும்  எந்த சமையல்காரரை
வேண்டுமானாலும்
தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !
அதைச்செய்யத்தான் ஏகப்பட்ட பேர்
வரிசையில் காத்திருக்கிறார்களே !

ஆனால் -அப்துல் கலாம் அவர்களை நீங்கள்
நிராகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை மட்டும்
சொல்லி விட்டு  –
மற்றதைச் செய்து கொள்ளுங்கள்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to “எங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேணும் தாயே”

  1. VINOTH's avatar VINOTH சொல்கிறார்:

    who told abthul kalam is good peoinroson ? he is not a person who we can belive,
    he also a worst person like other politican who can kill own people for his self well ness
    glomoinc@gmail.com

  2. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது எனக்கூறி ஒரு மசோதாவை ஏற்காமல் திருப்பி அனுப்பினார். அந்த மசோதா சோனியாவுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டது. அது திருத்தங்களுடன் வந்தபோது மீண்டும் திருப்பி அனுப்பியதாக நினைவு. அந்த ‘காண்டு’ இருக்கலாம்.

    மற்றபடி, அப்துல் கலாம் ஒரு விளம்பரப்படுத்திப் பிரபலப்படுத்தப்பட்ட நபராகவே நான் பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த விஞ்ஞானியாக இருக்கலாம். அவரை விடவும் சிறந்த நாட்டுப்பற்றோடு கூடிய விஞ்ஞானிகள் நாட்டில் உண்டு என்று உறுதியாகக் கருதுகிறேன். அவர்களுக்கு மீடியா வெளிச்சம் இல்லாததால் வெளியில் தெரிவதில்லை.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    டெல்லியில் பாரதிராஜாவின் “மண்ணுவாசனை”படம்…
    மண்ணு ஜனாதிபதி என்றால் தான் எங்கள் ஆதரவு உண்டு…தீதீ
    மண்ணுவை பிரதமர் பதவியை விட்டு அகற்றமாட்டோம்.. மா
    இப்படி மண்வாசனை பட பஞ்சாயத்து டெல்லியில் நடக்கிறது.
    இதற்கு பார்வையாளரான ஜனகராஜ் அளிக்கும் தீர்ப்பு..
    “மண்ணு வே இந்த இரு பதவியையும் வகிப்பார்.”

  4. ஜெகதீஸ்வரன்'s avatar ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    குடியரசு தலைவர் பதவி என்பதே ஒரு செயல்பாடில்லாத பதவி. சுருக்கமாக சொன்னால் அந்த பதவியை பொம்மை எனலாம். ஆட்சியில் இருக்கும் கட்சி ஆட்டி வைக்கும்படியெல்லாம் அந்த பொம்மை ஆட வேண்டிய கட்டாயம். அரசியல் சாசனமும் மிகப்பெரிய பதவியாக அதை அங்கிகரிக்கவில்லை. அதில் கலாம் வந்தால் என்ன, கத்துக்குட்டி வந்தால் என்ன.

    யார் வந்தாலும் இந்தியர்களின் நிலையோ, தமிழர்களின் நிலையோ கொஞ்சம் கூட மாறுவதில்லை. மாறப்போவதும் இல்லை என்பதே என் கருத்து.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களே,

      இந்த இடுகையில் முக்கியமாக ஒரு விஷயத்தை
      கோடி காட்ட நினைத்தேன். அது சரியான
      விதத்தில் பிரதிபலிக்கப்படவில்லை என்று
      நினைக்கிறேன்.

      முன்பு அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத்தலைவராக
      இருந்த போது, திருமதி சோனியா பிரதமர் பதவி
      ஏற்க முயற்சித்தார் என்றும் அதற்கு கலாம் அவர்கள்
      தடங்கலாக இருந்தார் என்றும் டாக்டர் சுப்ரமணியன்
      சுவாமி கூறி இருந்தார்.

      இப்போது அப்தும் கலாம் அவர்களின் பெயரை
      நிராகரிப்பதன் மூலம் சோனியா இதை உறுதி செய்கிறாரோ
      என்று தோன்றியது.

      இந்த வலைத்தளத்திற்கு வருகை தரும் நண்பர்கள்
      பலர் நிறைய புதிய செய்திகளையும் வித்தியாசமான
      கருத்துக்களையும் முன் வைப்பதைக் காண்கிறேன்.
      எனவே இது குறித்து மேற்கொண்டு விஷயம்
      தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கலாம் என்றும் அவர்கள்
      மூலமாக இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்
      என்றும் நினைத்து தான் இதை எழுதினேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • ஜெகதீஸ்வரன்'s avatar ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

        கூடன்குள விஷயத்தில் காங்கிரஸூக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் கலாம். அவருடைய செல்வாக்கு தமிழகத்தில் சரிய காரணமாக இருந்தது, கூடன்குளத்திற்கு அவர் அளித்த ஆதரவு. இன்னும் கூட சில தமிழர்கள் கலாமை தமிழர் என்ற முறையில் அங்கிகாரம் செய்வதை காண்கிறேன். ஆனால் முன்பிருந்த அளவு தமிழர்களிடம் செல்வாக்கில்லத நிலையே நான் உணர்கிறேன்.

        சோனியாவுக்கு கலாமை விடவும், பிரணாப் பொம்மையாக இருக்க ஏற்றவர் என்று நினைத்திருக்கலாம். அதுவும் காங்கிரஸ்காரர் என்பதால் ஆட்டி வைப்பதற்கெல்லாம் ஆடும் ஒரு பொம்மையாக இருக்கப்போகிறார் பிரணாப். உங்கள் நிலைபாட்டிலிருந்து என் நிலைபாட்டினை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கும். எனினும் சோனியா, கலாம் பற்றி மேலும் தகவல்கள் கிடைக்க வாழ்த்துகள்.

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    இந்த வினாவை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரும்,
    திராவிட உரிமை காப்பாள்ருமான, கலைஞரிடம் கூட கேட்கலாம்.
    கூடவே, கலாம் தமிழர் இல்லையா?, என்றும் சேர்த்துக்
    கொள்ளுங்கள்.

    நிற்க, அன்னையின் அவாவையும், காங்கிரஸாரின் விருப்பத்தையும்
    நிறைவேற்றாது கலாம் தேசத்தைக் காத்தார். ராஷ்டிரபதி பவனை
    மக்களுக்கு திறந்து விட்டார். ஓய்வெடுத்து உறங்காது, தேசம் முழுதும்
    சுற்றி, இந்த தேசத்திற்கு இப்போது என்ன தேவை, இளைஞர்கள்
    முன்னேற என்ன வழி, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை
    ஏற்படுத்தியது என்று அரசியல்வாதிகள் செய்ய தவறிய ஆனால் செய்ய
    வேண்டியதை செய்தார். கலாம் வேறு ஒன்றும் பெரிதாக் செய்துவிட
    வில்லை.

    எம்.பிக்களின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு, அன்னையை
    பிரதமராக்காத காரணத்தை, கலாமின் முன்னாள் காரியதரிசி திரு.பி.எம்.
    நாயர் (அவரது ஓய்விற்குப் பின்) ஒரளவிற்கு எழுதியிருக்கிறார். அதிலும்
    நிறைய யூகங்களுக்கு இடம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தது.

    முன்னர் வழ்க்குகள் பல நிலுவையில் இருந்த பின்னணியில் சட்டம்
    அனுமதிக்காத போதிலும் அம்மாவை முதல்வராக்கி, பின் கண்டணத்துக்கு
    பணிந்து, தன் பதவியைத் துறந்த பாத்திமா பீவி கதை (அம்மாவும் பதவி
    இழந்து, பன்னீர்செல்வம் முதல்வரான அரசியல் கதை) நினைவிருக்கிறதா?

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர் வெங்கட்ரமணி !

    இத்தகைய ஊட்டங்களை எதிர்பார்த்து தான்
    இந்த பதிவை நான் எழுதினேன்.

    நிறைய விஷயங்களை நினைவு படுத்தினீர்கள் –
    மிக்க நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    என்ன இருந்தால் என்ன? இன்னும் மம்தா தீதீ அரசியலில் நிறைய கற்றுகொள்ள வேண்டும் என காங்கிரஸ் பெருச்சாளி கூட்டமும்,கபடத்தில் கருணா to the power n
    ஆனா முலாயமும் நிரூபித்து விட்டனர்.ஒரு hardcore அரசியல்வாதியும் இந்திரா குடும்பத்தின் விசுவாசியுமான பிரணாப் ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு நல்லதில்லை.காரணம்:

    1.2014 போது தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு.அப்படி ஒருவேளை அவர்களே ஆட்சி அமைத்தால் ராகுல் பிரதமராக்கப்பட்டு அவருக்கு ஒரு நல்ல rubber stamp ஆக பிரணாப் இருப்பார்.

    2. அல்லது BJP ஆட்சி அமைத்தால் அரசிற்கு வேண்டிய உபத்திரவம் கொடுக்கவும் அவர் பயன்படுவார்.(எடுரப்பாவிற்கு கர்நாடக ஆளுநர் கொடுத்து போல)ஆளுனர்களையும்,ஜனாதிபதிகளையும் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்வது காங்கிரசிறகு கைவந்த கலை

    எந்தவகையில் பார்த்தாலும் பிரணாப் ஜனாதிபதியாவது நாட்டிற்கு நல்லதல்ல.

  8. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    இது நாள் வரை இந்திய ஜனாதிபதிகள் யாரும் தான்
    ரப்பர் ஸ்டாம்ப் இல்லையென நிருபிக்கவில்லை. அரசின் பல
    முடிவுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் ஓப்பமிட்டு
    அனுப்பியவர்கள் தான்.

    நிற்க ராகுல் பிரதமராகும் போது பிரணப் “ஸ்டாம்ப்”
    உபயோகமாக இருக்கும் என்கிற கருத்து ஏற்புடையதாக
    தோன்றவில்லை.

    அம்மையார் இந்திரா மரணத்தின் போது, பிரணப் டெல்லிக்கு
    வெளியே இருந்தார். செய்தி கேட்டு பிரணப் விமானத்தில்
    தலைநகர் திரும்புகையில், “எனக்குத்தான் கூடுதல் சுமை.
    பிரதமராக வேண்டியிருக்கும்” என்கிற ரீதியில் பேசி வந்த
    தகவல் அவருக்கு முன்னரே காங். தலைமையகத்தை
    அடைந்திருந்தது. “உனக்கு இம்மாதிரியெல்லம் வேறு
    ஒரு கனவு இருக்கிறதா? அது கனவாகவே இருக்கட்டும். சுமையை
    ராஜீவ் சுமப்பார்” என காங். தலைவர்கள் முடிவெடுத்தனர் என்று
    செய்தி உண்டு.

    பிரணப் அதை மறந்திருக்க வாய்ப்பில்லை.

  9. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    காலம் கடந்து விட்டது. இருந்தாலும் படித்துப் பாருங்கள். நன்றி.

  10. arthanari / salem's avatar arthanari / salem சொல்கிறார்:

    the fact is APJ A KALAM will never allow for CORRUPTION ,

  11. மின்னலன்'s avatar மின்னலன் சொல்கிறார்:

    venkataramani says:
    2:05 பிற்பகல் இல் ஜூன் 16, 2012

    இது நாள் வரை இந்திய ஜனாதிபதிகள் யாரும் தான்
    ரப்பர் ஸ்டாம்ப் இல்லையென நிருபிக்கவில்லை. அரசின் பல
    முடிவுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் ஓப்பமிட்டு
    அனுப்பியவர்கள் தான்.

    நிற்க ராகுல் பிரதமராகும் போது பிரணப் “ஸ்டாம்ப்”
    உபயோகமாக இருக்கும் என்கிற கருத்து ஏற்புடையதாக
    தோன்றவில்லை.

    அம்மையார் இந்திரா மரணத்தின் போது, பிரணப் டெல்லிக்கு
    வெளியே இருந்தார். செய்தி கேட்டு பிரணப் விமானத்தில்
    தலைநகர் திரும்புகையில், “எனக்குத்தான் கூடுதல் சுமை.
    பிரதமராக வேண்டியிருக்கும்” என்கிற ரீதியில் பேசி வந்த
    தகவல் அவருக்கு முன்னரே காங். தலைமையகத்தை
    அடைந்திருந்தது. “உனக்கு இம்மாதிரியெல்லம் வேறு
    ஒரு கனவு இருக்கிறதா? அது கனவாகவே இருக்கட்டும். சுமையை
    ராஜீவ் சுமப்பார்” என காங். தலைவர்கள் முடிவெடுத்தனர் என்று
    செய்தி உண்டு.

    பிரணப் அதை மறந்திருக்க வாய்ப்பில்லை.

  12. P Rajeswaran's avatar P Rajeswaran சொல்கிறார்:

    Most Indians favour Mr Kalaam becasue of his one simple slogan ‘Nation First’. Being a religious Muslim-expected to always believe and say ‘God first’- he has proven that he loves his nation more than anything else. There are of course many such scientists, laurates and people in every front like him (even better than him) but we can only recognise and choose from those availabe & ready to be in the limelight. He was brought to the limelight by Mr Vajpai & proved himself to be a credible person for that exhalted position.
    We all know why Sonia Gandhi doesn’t prefer him at all. I am glad that commentors here have good memories and have posted well. I do want a contest for this election. If Mr Kalaam denies to contest owing to lack of numbers, then Mr Sangma should be supported by those who oppose Congress (and Sonia Gandhi’s ways).even with an imminent defeat staring at him. We never know- with a host of regional votes that could probably tilt any side even after openly taking one side-anything may happen. It is not a good precedent for India to elect someone as President – one who has hitherto been a politician, a man in position and a man belonging to a political party.
    Sangma also is no different in that aspect but he is the only alternative for a contest. I wish that Mr Kalaam agrees to contest and (like the ‘conscience vote’ for VV Giri – a shameful episode) with some ‘GOOD’ conscience votes, may him win this election. He certainly deserves this second term especially to register a ‘snub’ for Sonia Gandhi. Cases like 2GSpectrum & Aadharsh scam, CG scam and their likes will all fall into oblivian if Mr Kalaam doesn’t get elected.
    (I would very much love to post in Tamil but i am not sure how to use that font! sorry!). P Rajeswaran,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.