சூப்பர் ஷாட் மம்தாஜி ….!!!
வாழ்த்துக்கள் !
கடந்த இரண்டு மாதங்களாக அனைவரையும்
மடையராக்கிக் கொண்டிருந்தார் காங்கிரஸ் கட்சியின்
ஏகபோக உரிமையாளர் !
மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவராக இருந்தாலும்,
குடியரசுத் தலைவர் பதவிக்கு இன்னாரை முன்னிருத்த
ஆலோசிக்கிறோம் என்று வெளிப்படையாகக் கூறாமல்,
ஏகப்பட்ட பெயர்களை சுற்றில் விட்டு, எல்லாரையும்
சுற்றலில் விட்டார் திருமதி சோனியா காந்தி.
இன்று மாலை –
திருமதி சோனியாவுடன் 35 நிமிட சந்திப்பு –
வெளியே வந்தவுடன், மிக ஆவலுடன் காத்திருந்த
மீடியாவிடம் சோனியா காந்தி ரகசியமாகப்
பாதுகாத்து வந்த இரண்டு பெயர்களையும்
(பிரனாப் முகர்ஜி, அன்சாரி ) பட்டென்று
போட்டு உடைத்து விட்டு – தன் முடிவைச் சொல்லாமல்
பறந்து விட்டார் முலாயம் சிங் வீட்டிற்கு.
அடுத்த ஒரு மணி நேரத்தில் முலாயம் சிங் வீட்டில்
அவருடன் சேர்ந்து மீடியாவுடன் ஒரு சந்திப்பு.
திருமதி சோனியா கனவிலும் நினைக்காத திருப்பம் !
முலாயம் சிங் மற்றும் மம்தா இரண்டு பேரும் சேர்ந்து,
ஜனாதிபதி பதவிக்கு
முன்வைக்கும் புதிய பெயர்கள் –
திருவாளர்கள் –
அப்துல் கலாம்,
மன்மோகன் சிங்,
சோம்நாத் சாட்டர்ஜி
அப்துல் கலாம் அவர்கள் கனவில் வந்தால் கூட
பிடிக்காது அம்மையாருக்கு.
மன்மோகன் சிங் பெயரை ஏற்கலாம்
பிரச்சினை இல்லை.
ஆனால் –
காலியாகும் பிரதமர் பதவிக்கு யாரை நியமிப்பது ?
ராகுல் காந்தி 2014-க்கான கனவுப் பிரதமர்.
எனவே தயாராக காத்திருக்கும் பிரனாப் முகர்ஜியை
தவிர்க்கவே முடியாது.
ஏற்றுக் கொண்டாலோ – பிற்பாடு
அவரை அதிலிருந்து இறக்கவே முடியாது –
இன்னொரு மன்மோகன் சிங் அல்ல பிரனாப் !
பிரனாப் முகர்ஜிக்கு என்று சொந்தமாக மூளை உண்டு –
சமயத்தில் முதலுக்கே மோசமாகலாம் –
ஆபத்தாக முடியக்கூடும்.
சோம்நாத் சாட்டர்ஜி – இடது சாரி கட்சிகள் ஆதரிக்காது.
பாஜகவும் ஆதரிக்காது. எனவே தேற வாய்ப்பில்லை.
பிரமாதமான இக்கட்டில் காங்கிரஸ் தலைமையை
மாட்டி விட்ட மம்தா தீதியை
மனதார வாழ்த்துகிறேன் ….
(இந்த சூப்பர் ஷாட்டிற்காக
மட்டும் தான் ….. !!! )




ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் விஷயத்தை
தன் வீட்டு சமையல்காரரை தேர்ந்தெடுப்பது
போல் நடத்தத் துணிந்த காங்கிரஸ் தலைவருக்கும்,
அவரது அடிவருடிகளுக்கும் சரியான ஷாக்
ட்ரீட்மெண்ட் கொடுத்த மம்தா பானர்ஜியை
அவசியம் பாராட்ட வேண்டும்.
நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி.
அது என்னவோ இந்த வாரம் நல்ல செய்திகளாகவே வருது…
– சொறி நாய் ராஜபக்சேவை லண்டனில் தமிழர்கள் அவமானபடுத்தி, இவனை தெரியாத்தனமா கூப்பிட்டு விட்டுடமோன்னு அரச குடும்பமே யோசிக்க வச்சது.
– செல்ல பிராணிய இழுத்துகிட்டு போற மாதிரி ஆதினத்த தள்ளி கொண்டு திரிந்த நித்திய நோக்கி சதானந்த கௌடா சாட்டையை சுழற்றியது
– அடுத்த இந்தியாவின் முதல் குடிமகனை இத்தாலி அன்னையே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் பொட்டை தலைவர்கள் சாசனம் எழுதி கொடுத்து விட்டு வர, இரு மண்ணின் மைந்தர்கள் (இந்த புகழ்ச்சி இந்த விஷயத்தில் மட்டும்) உணமையிலேயே அன்னையை வெலவெலத்து போக வைத்திருக்கிறார்கள். கூடவே மண்ணாங்கட்டி சிங்கை ஒரு வேட்பாளராக தெரிவித்ததன் மூலம், இந்த ஆளு பிரதமரா சொம்பு அடித்தது போதும் என்கிற செய்தியையும் சொல்லியிருக்கிறார்கள்.
என்ன நாளைக்கே உங்கள் மாநிலத்துக்கு சிறப்பு நிதி தருகிறோம் என்றவுடம் இரண்டு பெரும் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி!
ஆஹா இது உண்மையா? மண் மோகன் ஜனதிபதியாகப்போகிறாரா?
எவ்வளவு நல்ல செய்தி.நமக்கு ஒரு நல்ல பிரதமர் கிடைக்கப்போகிறார்.
என்னைக்கேட்டால் ஜனாதிபதியாக சோனியாவும்,துணை ஜனாதிபதியாக மண் சிங்கையும் நியமித்து அவர்கள் அலுவலகத்தை தென் அல்லது வட துருவதிற்கு மாற்றிவிட்டு,நாம் இங்கு நிம்மதியாக இருக்கலாம்!
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் குப்தா “மண்ணாங்கட்டி சிங்கை குடியரசு தலைவராக்க மம்தா மூலம் அன்னை போடும் நாடகம் இது” என்று ஒரு புது குண்டை தூக்கி போட்டிருக்கிறார். திடீரென்று ‘நம்ப ரொம்ப அவசர பட்டுடோமோ…” என்று எண்ண தோன்றுகிறது.
ezhil solluvathu pol, soniavaiyum, congressiyum namba mudiyathu….. nadagamaga kooda irukalam.
இதுவரை மிகக்கடினமான பொருள் (hardest substance) என அறியப்பட்டது வைரம்.
ஆனால் அதை இன்று தோற்கடித்து விட்டது மன்மோஹன்சிங்கின் மேற்தோல்(skin)
பிரதமராக பதவி வகிக்கும் ஒருவரை ஜனாதிபதி ஆக்க நினைப்பது ஒரு degradation ஆகும்.அதையும் கேட்டுக்கொண்டு மண்ணாய் இருக்கிறார் இந்த மன்
மமதாவின் இந்த அறிவிப்பு சோனியாவுக்கு வைத்த “செக்”கல்ல.
மாறாக, முகர்ஜிக்கு வைத்ததாகவோ அல்லது சேர்ந்து நடத்தும்
நாடகமாகவோ இருக்கலாம். சகோதரிக்கு அன்சாரியை பிடிக்குமோ
பிடிக்காதோ, முகர்ஜியை அம்மணி காங்க்கிரஸில் இருந்த
காலத்திலிருந்தே பிடிக்காது. அம்மணியை காங்ககிரஸில்
வளர்த்து ஆளாக்கியது, அண்ணாரின் பரம வைரி. நினைவிருக்கட்டும்.
ஜ்னாதிபதி தேர்தலில், அன்னை இன்னமும் தனது துருப்பு சீட்டைத்
திறக்கவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. கலாம், சாட்டர்ஜி,
சிங் பெயர்கள் எல்லாம் மீடியாக்களுக்குப் போட்ட இரண்டொரு நாள்
தீனி.
சகோதரி இன்று மீண்டும் அன்னையை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
சிங்கைத் தவிர இன்னொருவரை பிரதமராக நினைக்கவும் காங்கிரஸ்
தயாரில்லையென்று அறிவித்தாகிவிட்டது. திரிணாமுல் நண்பரிடம்
இருந்து “தகவல்” வந்ததோடு சரி. தெளிவாக ஒன்றும் இல்லை என
சாட்டர்ஜி சொல்லிவிட்டார். வரட்டும் பார்க்கலாம் என்கிறார் கலாம்.
இன்று அம்மா அத்வானியோடு பேசிவிட்டு இவ்விஷயத்தில் இணைந்து
செயல்பட போவதாக சொல்லியிருக்கிறார். சங்க்மா இன்னமும் தேசம்
எங்கும் போய் “ஆதரவு” தேடி வருகிறார்.
அன்னையின் ஆதரவு பெற்ற நிஜமான (காங்கிரஸ்) வேட்பாளர் எங்கோ
ஒளிந்து இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவர் சிங்கா? பார்ப்போம்.
.
விட்டுப் போய்விட்டது. எனவே தொடர்கிறேன்…..
பி ஜே பியோடு இணைந்து செயல்பட போவது அம்மாவின்
இறுதி நிலைப்பாடானால், சங்மாவுக்கு அவர் அளித்த ஆதரவும்
எதிர் காட்சிகளுக்கு வைத்த வேண்டுகோளும் என்ன ஆயிற்று?
நமபகத்தன்மைக்கும் அம்மாவுக்கும் “ரொம்ப” தூரமோ?
நம்பியவர்களை நட்டாற்றில் விடுவதில் அம்மா கை தேர்ந்தவர்
என்று கேப்டன் இரண்டு நாள் முன் சொன்னது மெய்தானா?