இவர்கள் யாருக்கும் வெட்கம் இல்லை ….

இவர்கள்  யாருக்கும் வெட்கம் இல்லை ….

28, டிசம்பர் 1985ல்  இந்திய தேசிய காங்கிரஸ்
தொடங்கியது  முதல் இன்று வரை இவ்வளவு கேவலமான
ஒரு நிலையை இந்த  நாடு கண்டதில்லை.

எப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் வீற்றிருந்த இடம்!
மஹாத்மா காந்தி   –
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,
பால கங்காதர திலகர்,
ஜவஹர்லால் நேரு  – என்று  எவ்வளவோ சிறந்த
தேசபக்தர்கள் வீற்றிருந்த இடம் !
இந்த மண்ணின் முழு வீச்சையும் உணர்ந்தவர்கள்
இருந்த இடம் !

இன்று வீற்றிருப்பது யார் – ???

ஜூன் 4ந்தேதி காங்கிரஸ் கட்சியின் விசேஷ
காரிய கமிட்டி கூடுகிறது.
அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள்,
காங்கிரஸ்  முதல் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள்,
விசேஷ அழைப்பாளிகள், நிரந்தர உறுப்பினர்கள் –
அத்தனை பேரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எதற்கு ?

இந்த நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் மற்றும்
துணைத்தலைவர்களாக யாரை பரிந்துரைக்கலாம் என்று
கலந்து ஆலோசிப்பதற்காக !

ஆனால் – கலந்து ஆலோசித்தார்களா ?

கூட்டம் முடிந்து பிரனாப் முகர்ஜி வெளியே வந்து ஆவலுடன்
காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.

வாய் திறந்து வார்த்தைகைளை உதிர்க்கிறார் –

“அடுத்த குடியரசுத் தலைவர் மற்றும் துணத்தலைவருக்கான
தகுதியான நபர்களை  காங்கிரஸ் கட்சியின் தலைவி
திருமதி சோனியா தீர்மானிப்பார்.”

பிறகு இத்தனை பேரும்  எதற்கு கூடினார்கள் ?
ஏன் அழைக்கப்பட்டார்கள் ?

“இதை விவாதிக்க எங்கள் யாருக்கும்  தகுதியோ,
திறமையோ, உரிமையோ இல்லை – எங்கள்
அனைவரையும் காத்தருளும் அன்னையே நீங்கள் தான்
இதைச் செய்ய வல்லவர் ” என்று சேர்ந்திசைப்பு
செய்து விட்டு வரவா ?

120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டின்,
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க தகுதி உள்ளவர்
யார் என்பதை –

தேர்ந்தெடுக்க அல்ல –
ஆலோசனை செய்யக்கூட,
பரிசீலனை செய்யக்கூட – பெயரைச் சொல்லக்கூட,
வேறு யாருக்கும் தகுதி இல்லை  !

8000 கிலோ மீட்டர் தாண்டி உள்ள ஒரு நாட்டிலிருந்து,
இந்த நாட்டு குடிமகன் ஒருவரை திருமணம் செய்து
கொண்டு, அந்த உரிமையால் மட்டுமே
இங்கு தங்கி இருக்கும் ஒருவர் தான் –

இதை எல்லாம் தீர்மானிக்கும் சர்வ வல்லமை
உடையவர்   என்று  அடிமை சாசனம் எழுதிக்
கொடுத்து விட்டு வந்திருக்கும் இந்த
வெட்கங்கெட்ட  சுயநலவாதிகளை இந்த நாடு –
எதிர்காலத்தில் மறக்கவே மறக்காது.

சரித்திரம் அவர்கள் முகத்தில் காரித் துப்பும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இவர்கள் யாருக்கும் வெட்கம் இல்லை ….

  1. samy's avatar samy சொல்கிறார்:

    Kaviri, you are trying to say something, but we are deaf. Anyhow long live sockka thangam. samy

  2. prakash's avatar prakash சொல்கிறார்:

    1885 or 1985??

  3. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்? எனத் தெரியவில்லை.

    இந்திராவின் மறுமகள் என்பதைவிட அவரது முழு ஆதரவு பெற்றவர்
    என்பதினாலேயே கட்சித் தலைமையும், வீட்டு சாவிக் கொத்தும்
    இவரிடம் இருக்கிறது.

    கட்சியின் தலைமை பொறுப்பும், சொத்தின் அதிகாரமும் அன்னையிடம்
    இருப்பதினாலேயே, தலைவர்கள் மண்டியிட்டுலக் கிடக்கிறார்கள்.இதை
    யெல்லாம் (?!) பொறுக்காத பவார்களும், சங்மாக்களும் தனிக்கடை
    திறந்து போனியாகாமல் தாயகம் திரும்பியது வேறு கதை.

    அது சரி மண்ணின் மகளாகவும், இந்திராவின் மருமகளாகவும் இருந்த
    போதிலும், மேனகாவை (இவரும் காந்திதான்) இவர்களில் யாரும் ஒரு
    போதும் ஆதரிக்காதது ஏன்? அரசியலில் ராஜீவை விடவும், சஞ்சய்
    இந்திராவுக்கு பெரிதும் துணை நின்றவர் என்பதும், பலவித நெருக்கடிகளை தாயுடன் சேர்ந்தே சந்தித்தவர் என்பதும் நாடறிந்த ரகஸ்யம்.

  4. srini's avatar srini சொல்கிறார்:

    kaverimainthan sir,
    did u read about planning commission toilet scam. the govt is stinking, but not sinking, becoz we are able to withstand stinking. 5 lakh for 60 smart cards for secured entering into the toilet …hahahaha, and 28 rs as daily consumption for the voters.

  5. காவிரிமைந்தன்'s avatar காவிரிமைந்தன் சொல்கிறார்:

    உண்மை நண்பரே – வயிறு எரிகிறது.

    திட்டக் கமிஷன் அலுவலகத்தில்
    குறிப்பிட்ட சிலர் மட்டும் உபயோகிக்க
    என்று 35 லட்ச ரூபாய் செலவில்
    2 டாய்லெட்கள் கட்டி இருக்கிறார்கள்.
    அந்த குறிப்பிட்ட சிலருக்கு ஸ்மார்ட் கார்டு
    கொடுக்கப்பட்டு, அதை பயன்படுத்தினால்
    தான் டாய்லட் கதவு திறக்கும்படி
    5 லட்ச ரூபாய் செலவில் எலெக்ட்ரானிக்
    வேலை செய்திருக்கிறார்கள்.
    இதைப்பற்றி கேள்வி கேட்ட நிருபரிடம்
    அலுவாலியா கொந்தளித்திருக்கிறார் !

    திருமதி சோனியாவின் வலது கரம் அலுவாலியா –
    பாதி நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுகிறார் !
    அவர் என்ன செய்தாலும் கேள்வி கேட்க
    ஆளில்லை.

    பார்ப்போம் – மக்கள் இதை எல்லாம் இன்னும்
    எவ்வளவு காலம் சகித்துக் கொள்ளப் போகிறார்கள்
    என்று !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.