யார் யாரை, ஏன் ஏமாற்றுகிறார்கள் ?
பெட்ரோல் விலையை ஏற்றுவதற்கு, சாதாரணமாக,
மத்திய அரசு சொல்லும் முக்கியமான காரணங்கள்
இரண்டு –
1) சர்வதேச சந்தையில் க்ரூட் ஆயில் விலை
உயர்ந்து விட்டது.
2) இந்திய எண்ணை கம்பெனிகள் தொடர்ந்து நஷ்டத்தை
சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த முறை விலையேற்றத்திற்கு மேற்சொன்ன
இரண்டுமே காரணங்கள் அல்ல. எப்படி ?
1) சர்வதேச சந்தையில் எண்ணை விலை ஏறவில்லை.
ஆனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதல
பாதாளத்திற்கு சரிந்து விட்டது.
எண்ணையின் விலை அதே 110 டாலர் தான். ஆனால்,
ரூபாயின் மதிப்பு விழுந்து விட்டதால், நாம் அதிக ரூபாய்
கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. ரூபாயின் மதிப்பு
சரிந்ததற்கு யார் காரணம் ? மக்களா ?
அரசாங்கத்தின் பொருளாதார சீர்கேடுகளா ?
2) இந்திய எண்ணை கம்பெனிகள் எந்த நஷ்டத்தையும்
சந்திக்க வில்லை. லாபத்தின் அளவு குறைந்திருக்கிறது –
அவ்வளவு தான்.
மார்ச் 2012 உடன் முடியும் 4வது காலாண்டுக்கான
நிதி அறிக்கையை ONGC நிறுவனம் சென்ற வாரம்
அறிவித்திருக்கிறது.அதிலிருந்து ஒரு பகுதி கீழே –
“Net profit in January-March quarter
rose to Rs.5,644 crore from Rs 2,791 crore
a year ago, ONGC Chairman and Managing
Director Sudhir Vasudeva told reporters”.
” Mr. Vasudeva said the company paid
a record Rs 44,466 crore in fuel subsidy
in 2011-12, up from Rs.24,892 crore in
the previous financial year.
“This subsidy outgo dented out net profit
by Rs.25,535 crore (for the full fiscal),”
he said.
ONGC net profit in FY’12 rose 33% to
Rs 25,123 crore. But for the fuel subsidy
outgo, the net profit should have been
over Rs 50,000 crore.”
-அதாவது, கடைசி பத்தியில் கூறப்படுவது –
“எரிபொருள் சப்சிடியாக ரூபாய் 25,535/- கொடுத்ததால்
எண்ணை நிறுவனத்தின் 2011-12க்கான நிகர லாபம்
ரூபாய் 25,123/- ஆக குறைந்து விட்டது.
இந்த சப்சிடி கொடுக்காமல் இருந்திருந்தால், நிகர லாபம்
ரூபாய் 50,000 கோடியைத் தாண்டி இருக்கும் !”
எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை
சந்தித்துக் கொண்டிருப்பதால்
விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று ஒரு பக்கம்
அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே –
எண்ணை நிறுவனம் சென்ற நிதி ஆண்டிற்கான நிகர லாபம்
ரூபாய் 25,123/- கோடி என்று அறிவித்துள்ளது.
யார், யாரை – ஏமாற்றுகிறார்கள் ?
மேலும் – ஒரு பீப்பாய் (பேரல்) கச்சா எண்ணை
உற்பத்தி செய்ய ONGC நிறுவனத்திற்கு ஆகும் செலவு
44 டாலர் மட்டுமே என்றும் அறிக்கையிலேயே
சொல்லப்பட்டுள்ளது ! ONGC உற்பத்தி செய்யும்
எண்ணை முழுவதும் சர்வதேச சந்தை விலைப்படியே
விற்கப்படுகிறது ! அதாவது 150 % லாபம் வைத்து,
ஒரு பீப்பாய் எண்ணை 110 டாலருக்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் எண்ணை விலை உயரும்போது
எல்லாம் ONGC யும் லாபம் பார்க்கிறது.
எனவே நஷ்டம் என்கிற பேச்சே வர வாய்ப்பு இல்லை.
லாபத்தில் குறைவு என்று தான் சொல்லலாம்.
அதைத்தான் நிறுவனத்தின் அறிக்கையும் சொல்கிறது –
இந்த ஆண்டு நிகர லாபம் ரூபாய் 25,123/- கோடி என்று.
மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் !
எண்ணை விலையை ஏற்றியது எண்ணை நிறுவனங்கள்
தான். மத்திய அரசிற்கு இதில் சம்பந்தம் இல்லை
என்று சொன்னார்கள். சரி.
ஆனால் எதிர்ப்பிற்கு பிறகு ரூபாய் 2.02
குறைத்திருக்கிறார்களே – இதைச் செய்தது யார் ?
மத்திய அரசு சொல்லாமல் எண்ணை நிறுவனங்கள் தாமாகவே
விலையை குறைத்து விட்டனவா ?
ஏற்றிய பெட்ரோல் விலையை குறைத்தது மத்திய அரசு தான்
என்றால் – விலையை நிர்ணயிப்பதில் அரசுக்கு சம்பந்தம்
இல்லை என்று கூறுவது எப்படி ?
யார், யாரை – ஏன் ஏமாற்றுகிறார்கள் ?
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான்
இருக்கிறார்கள் !




நல்ல கேள்விதான் கேட்டிறுக்கிறீர்கள்.
ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யாரு?
ஒரு 24 மணி நேரம் இந்தியாவில் யாரும் பெட்ரோல்/டீசல் பயன்படுத்தாமல் சத்தியாகிரகம் செய்யலாம்.
உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்கள் (மண்ணுமோகன், ஹல்(வா)லியா, சிவகங்கை சின்னபையன் etc) எல்லாம் இருந்தும் நம் நாட்டின் பொருளாதாரம் பல்லை காட்டிக்கொண்டிருக்கிறது. so ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிசெய்யப்படுகிறது.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான்!
🙂
இது எல்லாம் அந்த ‘சிகண்டி’க்கு தான் வெளிச்சம்!
இந்தியன் ஆயில் கார்பரேசனின் 2011-12 கடைசி காலாண்டு லாபம் ரூ. 12,700 கோடி. http://www.equitybulls.com/admin/news2006/news_det.asp?id=106698.
who will end this idiots ????????????????
I understand there is a formula in vogue which determines the “cost” of the refinery product: It is not a simple “cost” as is understood by the common man; it has several variables, rather parameters, and the “cost” is arrived at and the difference between the govt-approved selling price and the ‘cost; is taken to be the ‘loss’ to the Oil Marketing Company. While ushering in reforms starting 1991, and the approach laid down by the government after the discovery of Bombay-High has been tinkered with; moreover, the NDA government initiated the process of decontrolling oil-products . (Sunderrajan Committee) Some Election Commission directives about the revising prices of petro-products, while elcetions are in the offing gave the first excuse to the government to deviate from the “policy”; and the partial roll-back of the freeing approach after UPA assumed charge has fouled up the computation of the “loss” to the OMCs. The compensation — in common man’s undetstanding – salary and perks- enjoyed by the staff and officers of the OMCs are so high and the common man has no scent of this. In respect of ONGC, . the cost of production of the Crude in its oil wells are not factored but the global market price is taken for claculations. even though the facilities have been put up by the government in the Public Sector, and the PSUs did not have to pay market prices for factors of production, then (pre-liberation days).It is high time some enthusiast files a PIL on the ‘pricing formula’ and someone like SuSwamy or Prashant Bhushan join forces and pull out some skeletons/cobwebs and put an end to this non-sensical computation.