IPL = பைத்தியக்காரத்தனம் + ஏமாளித்தனம் +மோசடி + வரி ஏய்ப்பு + குடியர்களின் வெறியாட்டம் +அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்களின்கருப்புப்பணத்தின் வெளிப்பாடு !!!

IPL = பைத்தியக்காரத்தனம் + ஏமாளித்தனம் + மோசடி + வரி ஏய்ப்பு + குடியர்களின் வெறியாட்டம் + அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்களின் கருப்புப்பணத்தின் வெளிப்பாடு  !!!

அண்மைக்காலங்களில் இதைவிட பைத்தியக்காரத்தனமான ஒரு மோசடிக்கு மக்கள் உட்பட்டதில்லை. இது மக்கள் தாமே வரவழைத்துக் கொண்ட கேடு. அதிக எண்ணிக்கையில்  வயது வித்தியாசமின்றி மந்திரித்து விட்ட ஆடு போல் பித்தம் பிடித்து ஆடுகிறார்கள்.

வேண்டுமென்றே முடிவை மாற்றுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. சொல்லி வைத்துக் கொண்டு ஆட்டத்தை தீர்மானிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. சென்னையில்  பைனல்ஸ்  என்பதற்காக எங்கேயோ இருந்த சென்னை டீமை முன்னுக்கு நகர்த்துகிறார்கள். ஷா ரூக் கானிடம் பணம் வாங்கிக்கொண்டு கடைசி இரண்டு பந்துகளில் முடிவை மாற்றுகிறார்கள்.

நான் சகட்டு மேனிக்கு திட்டுவது சிலருக்கு – ஏன் பலருக்கு – பிடிக்காமல் இருக்கலாம்.

இந்த வலைத்தளத்தை பத்தாம்பசலி என்று கூறினால் கூட நான் இதை  எழுத  தயங்கப்போவதில்லை.

இன்று மதியம் கொல்கத்தாவில் நடைபெற்ற அசிங்கமான, அலம்பல்கள், ஆர்ப்பாட்டங்கள் – நேரடி தொலைக்காட்சியில் பல விஷயங்கள் தெளிவாகின்றன. குடிகார ஷாரூக் கானுடன் சேர்ந்தது மம்தா பானர்ஜி ஏதோ உலகத்தையே வெற்றி கொண்டு விட்டதைப் போல்  ஆடியது – பாடியது – மகா மகா கேவலம் ! இந்த வெற்றி வங்காளம் பெற்ற வெற்றி என்று வேறு மம்தா முழங்கினார். அந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் எவ்வளவு பேர் வங்காளிகள் இருந்தனர் என்பதை மம்தாவால் வெளியே சொல்ல முடியுமா ? வெளிநாட்டினரையும், வெளிமாநிலத்தவரையும் பெரும்பாலும் கொண்ட அந்த டீமின் உரிமையாளர்கள்  ஷாரூக் கானும், ஜூஹி சாவ்லாவும் வங்க்காளிகளா ? அத்தனையும் சுயநலம் – தன சரிந்து வரும் இமேஜை சரிக்கட்ட இந்த ஷோவை பயன்படுத்துகிறார் மம்தா !

வெறும் சூதாட்டம்.  முன்னாள் -இந்நாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், அரசியல்வாதிகள், கார்பொரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள்,  சினிமா நடிகர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி, கிரிக்கெட் விளையாட்டில் உண்மையான ஆர்வம் உடைய ரசிகர்களை ஏமாற்றி, போலியாக விறுவிறுப்பைக் கூட்டி, சமையலில் உப்பு காரம் சேர்ப்பது போல் மது, மாது ஆகிய போதைகளையும் சேர்த்து  நேரடி தொலைக்காட்சியில் பலவித கோணங்களில் சுடச்சுட பரிமாறி போதை ஏற்றுகிறார்கள் ! !

இந்த ஐபில் விளையாட்டு போட்டிகளின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு கருப்புப்பணம் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு வெள்ளையாக சாயம் பூசப்பட்டது ?

ஒவ்வொரு டீமும் 300 கோடி ரூபாய்  400 கோடி ரூபாய் என்று அள்ளி வீசி விலைக்கு வாங்குகிறார்களே – எங்கிருந்து வருகிறது இத்தனை பணமும் ? உள்நாட்டிலிருந்தா – வெளிநாடுகளிலிருந்தா ? இவ்வளவு முதல் போடுவதாக இருந்தால் – எவ்வளவு லாபம் எடுப்பார்கள் ? யார் பார்க்கிறார்கள் இந்த கணக்குகளை எல்லாம் ? கிரிக்கெட் போர்டை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர மறுப்பது ஏன் ?

அதெப்படி Enforcement Directorate  இருக்கிற இடமே தெரியாமல் பதுங்கிக் கிடக்கிறது ? மத்திய அரசுக்கு இங்கு எப்படி எல்லாம் கருப்பு வெள்ளையாகிறது என்பது தெரியாதா ? வருமானவரி இலாகாவிற்கு இந்த விளையாட்டுகளில் உள்ளாக ஆடப்படும் விளையாட்டுகள் பற்றி ஒன்றும் சந்தேகமே எழவில்லையா ?

ஆளும்கட்சி தான் வாயைத்திறக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்று கேட்க நினைத்தேன் – ஆனால் கேட்காமல் நிறுத்தி விட்டேன்.

இதில் எல்லாரும் பங்காளிகள் தானே ? ரவிஷங்கர் பிரசாத்தும் – லாலு பிரசாத்தும் அருண் ஜெட்லியும் – பரூக் அப்துல்லாவும், ராஜீவ் ஷுக்லாவும் – சரத் பவாரும் – அருகருகே உட்கார்ந்து கொண்டு அல்லவா எல்லாவற்றிலும் பங்கு கொள்கிறார்கள் ( ? ) பின் யார், எப்படி,  எதைப்பற்றி கேள்வி கேட்பார்கள் ?

கேவலம் – மகா கேவலம்  ! இந்த வேட்கக்கேட்டிற்கு  நாமே பொறுப்பு !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to IPL = பைத்தியக்காரத்தனம் + ஏமாளித்தனம் +மோசடி + வரி ஏய்ப்பு + குடியர்களின் வெறியாட்டம் +அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்களின்கருப்புப்பணத்தின் வெளிப்பாடு !!!

  1. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    ஏமாற ஒருவன் இருந்தால் ஏமாற்ற ஒன்பது பேர் இருப்பார்கள்.கிரிக்கெட்டை பொறுத்தவரை மக்களின்
    மயக்கம் தீரும் வரை குல்மால் நடந்து கொண்டேயிருக்கும்.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    You different…(meaning,.. நீங்க வேற!)
    2013 ஆண்டுக்கான IPL க்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி விட்டன.
    இம்முறை ஆஆஆஆ தீனகர்த்தா நித்தியானந்தன் மற்றும் கைதி கசாப் (Kasab) கூட
    sponsor செய்து இரண்டு புது டீம் கள் பங்கேறகப்போவதாக
    ஒரு வதந்தியும் உள்ளது.ஒன்று “தெய்வ பக்தர் லெவன்” என்றும் மற்றொன்று
    “தேச பக்தர் லெவன்” என்றும் நாமகரணம் செய்யப்படும்..

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    அதாகப்பட்டது, இந்த கூத்துக்கு பேரு DLF IPL . இந்த DLF இன் business partner யாரு? ராபர்ட் வாத்ரா. அப்புறம் இத நடத்தும் BCCI இருக்கே… அது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராதாம். இதுக்கு மேல என்னத்த சொல்ல…

  4. Veera's avatar Veera சொல்கிறார்:

    we people are utterly stupid. why we should spend our money and time on this. we are learned idiots.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.