ஒவ்வொரு நாளும் நம்முடைய பணம் 2.02 லட்சத்தில் சாப்பிட்ட ஒரு ஊதாரிக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல — என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது ?
மன்மோகன் சிங் பதவிக்கு வரும் வரை – சீக்கியர்களை பற்றி இருந்த இமேஜ –
சீக்கியர்கள் பொதுவாக கடினமான உழைப்பாளிகள், ஆட்டோமொபைல் துறையில், ராணுவத்தில் – அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். தைரியசாலிகள், நாட்டுப்பற்று மிக்கவர்கள் – மூளையை அதிகம் பயன்படுத்தாதவர்கள் – என்பது தான் !
ஆனால் இப்போது … ?
கஷ்டப்படாமல் சொகுசாக வாழ்வது எப்படி ? அரசாங்க செலவில் வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டிருப்பது எப்படி ? சொல்லப்படும் எந்த குறைகளையும் காதில் போட்டுக்கொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பது எப்படி ? சுயமரியாதை, கௌரவம் – என்றால் என்ன விலை ? யாரைப் பிடித்தால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் ?
– இன்று இதை எல்லாம் இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது ! சீக்கியர்களா இப்படி என்று அதிசயமாக இருக்கிறது.
மன்மோகன் சிங்கால் முன்னுக்கு கொண்டு வரப்பட்ட இன்னொரு சிங் இவர் – பொருளாதார நிபுணர என்று பட்டம் வேறு ! இந்த நாட்டுக்காக இவர் ஆற்றியுள்ள அரும்பெரும் பணிக்காக இவருக்கு பத்ம விபூஷன் பட்டம் வேறு – திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா !
சில நாட்களுக்கு முன்னர், இந்த நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலாக இந்த நிபுணர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் – நகரமாக இருந்தால் ரூபாய் 32-ம் கிராமமாக இருந்தால் ரூபாய் 26-ம் தான் வறுமைக்கோடாக கருதப்பட வேண்டும். இந்த அளவிற்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்பட முடியாது. அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த புண்ணியவான் வாதாடி இருக்கிறார் ! இந்த தொகைக்கு மேல் சம்பாதிப்பவர்கள் யாரும் வறுமையில் வாடுவதாக கருதப்பட முடியாது – 32 ரூபாயில் ஒரு நாளை கடத்தி விடலாம் என்று சொல்லும் இந்த அதிகாரி அரசு முறையில் பயணம் செய்யும்போது தனக்காக ஒரு நாளைக்கு சராசரியாக செலவிட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா ? ரூபாய் 2.02 லட்சம்….!
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தியா டுடே இதழைச்சேர்ந்த ஷ்யாம்லால் யாதவ் என்பவரும், ஸ்டேட்ஸ்மன் நியூஸ் சர்வீஸ் இதழை சேர்ந்த இன்னொரு நபரும் (பெயர் வெளியிடப்படவில்லை ) பெற்று வெளியிட்டுள்ள தகவல்களிலிருந்து நம் தலைப்புக்கு தொடர்புள்ள சில முக்கியமான விவரங்கள் கீழே –
2011-ம் ஆண்டு மே மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த நபர் நான்கு முறை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மொத்தம் 18 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த இவர் பயணத்துக்கு, – ஓட்டலுக்கும் சாப்பாட்டிற்குமாக செலவழித்த தொகை சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்.
முதலில் இந்த விவரங்களைப் பெற்று அதில் ஆச்சரியம் அடைந்தவர்கள் இவர் பதவியில் இருந்த முழு காலத்திற்கும் (2004 முதல் 2011 வரையில்) உண்டான விவரங்களை கேட்டு பெற்றுள்ளார்கள்.
ஏழு வருடங்களில், மொத்தம் 274 நாட்கள் இவர் வெளிநாடுகளில் கழித்திருக்கிறார் – நம் செலவில் தான் – நம் அரசாங்க செலவில் தான் !
மொத்தம் 42 பயணங்கள் !! – 274 நாட்கள் !!! அதில் பாதிக்கு மேல் அமெரிக்காவிற்கு !!! (இவர் இந்திய திட்டக் கமிஷனுக்கு தலைவரா இல்லை அமெரிக்க திட்டக் கமிஷன் தலைவரா என்று சந்தேகம் எழுகிறதோ ? ) அவரது பதவிக்காலத்தில் – ஒவ்வொரு ஒன்பது நாளிலும் ஒரு நாள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார் !
இவர் வகித்து வரும் பதவி – திட்டக்கமிஷன் துணைத்தலைவர். இவரது வேலை -பொறுப்பு – பல்வேறு அமைப்புகளுடனும், மாநில-மத்திய அரசுகளுடன் கலந்து பேசியும் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்குதல்.
11-வது ஐந்தாண்டு திட்டம் துவங்கிய நாள் ஏப்ரல் 1, 2007 ! ஆனால் இந்த ஐந்தாண்டு திட்டத்திற்கான ஆவணங்கள் தயாரானதே ஜூன் 25, 2008 அன்று தான் !!
இதாவது போகட்டும் – அடுத்து 12-வது ஐந்தாண்டு திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான எத்தகைய ஆவணங்களும் இன்னும் கண்ணிலேயே தென்படவில்லை என்கிறார்கள்.
இப்படி ஒரு திட்டம் – அதற்கு ஒரு கமிஷன் – அதற்கு ஒரு தலை – சிங் – ஒரு துணைத்தலை – சிங் ! இவர்கள் தலை(மை)யில் எப்படி உருப்படும் இந்த நாடு ?




திரு அப்துல் கலாம் அவர்களை பரிசோதனை செய்யும் விமான நிலைய அதிகாரிகள் கண்ணில் இதுபோன்ற
பெருச்சாளிகள் தட்டுப்படாதோ?
இந்த ஆளிடம் ஐந்து பேர் கொண்ட ஒரு நகரத்துக் குடும்பம் வாழ்வதற்கு மாத பட்ஜெட் போட்டுத் தரச் சொல்ல வேண்டும். அதையே தான் ஒரு மாத காலம் வாழ்ந்து காட்டவேண்டும். அதன்பின் இந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்வோம்.