“தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்” ……இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??

“தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்” …… இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ?

கடந்த இரண்டு இடுகைகளில்  –  “தவறு செய்தவர் தண்டிக்கப்பட்டே தீருவர் – தாமதமாகவாகினும் அவர்கள் நிச்சயம் வருந்த நேரிடும்”

“அடுத்தவருக்கு துரோகம் செய்தும்,  வருத்தியும், ஏமாற்றியும்  நாம் சேர்க்கும் செல்வம் நிலைக்காது. அதன் மூலம் இறுதியில்  விளைவது நிம்மதியின்மையும், துயரமும், அவமானமுமே  என்பதை உணர வேண்டும்.’

-என்கிற கருத்தை வலியுறுத்தி எழுதி இருந்தேன்.

இதைப் படித்த – இந்த வலைத்தள நண்பர் ஒருவர் ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பி இருக்கிறார்.

வாழ்நாள் முழுவதும், சூழ்ச்சி, வஞ்சகம்,  ஏமாற்றுதல், துரோகம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒருவரின் இன்றைய நிலையை காட்டும்  இந்த புகைப்படத்தை பார்த்த பிறகும் நீங்கள் அதே கருத்தை வலியுறுத்துவீர்களா  என்று வினா எழுப்பி உள்ளார் !

நண்பர் அனுப்பிய புகைப்படத்தை –  கீழே  இட்டிருக்கிறேன்.

இந்த வலைத்தளம் அற்புதமான  பல நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.  சில நண்பர்கள் வெவ்வேறு கோணங்களில் யோசித்து அருமையான பின்னூட்டங்களை அளிப்பதை பல சந்தர்ப்பங்களில் காண்கிறேன்.

எனவே – இந்த கேள்விக்கு  நான் பதில் அளிப்பதை விட, இந்த வலைத்தள நண்பர்களாகிய நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுவீர்களா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to “தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்” ……இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    கடவுள் நல்லவர்களை சோதிப்பான்… ஆனால் கை விடுவதில்லை
    கெட்டவர்களுக்கு கடவுள் நிறைய கொடுப்பான்… ஆனால் கை விட்டுவிடுவான்.
    பணம் தான் அனைத்திற்கும் முக்கியம் என்றால் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர் என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். பணத்தை விட ஆத்ம நிம்மதியே முக்கியம் என்பதாலேயே இவர்களும் நடித்துக்கொண்டிருக்கின்றனர். நாத்திகம் பேசிக்கொண்டு கோயில் கோயிலாக சுற்றுகின்றனர் நிம்மதியை தேடி.

  2. வினொத்'s avatar வினொத் சொல்கிறார்:

    nice picture…

  3. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    தவறு செய்தவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அதற்குரியதண்டனை அடைந்தே ஆகவேண்டும்.செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தம் வேண்டி கோவில் கோவிலாக சென்று உண்டியலில் போட்டாலும் அல்லது ஏழைகளுக்கு உதவி செய்தாலும் அல்லது அறக்கட்டளை ஏற்படுத்தி தான தர்மங்கள் செய்தாலும் வெளி உலகுக்கு அவர்கள் சந்தோஷமாக இருப்பது போல் காட்டலாமே தவிர குற்றம் புரிந்தவர்கள்
    வாழ்க்கையில் நிம்மதி என்பது இருக்காது.

  4. prakash's avatar prakash சொல்கிறார்:

    thanaku aduthu entha paiyana aatchiyil amara vaika vendum nu theriyama ivaru padara padum…kanimozhiyoda kaithum…azakirikum stalinkum ulla otrumaiye itharku sandru..ivaru mela ponathuku appuram ivarudaya santhathiyinar padapora padum namaku therinthathe…….

    kattayamaga ivarukum , ivar kudupathirkum thandanai undu..

  5. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ஒழுக்கம், நேர்மை, தீங்கு எண்ணாமை, எளிமையாய் இருத்தல் போன்றவை மனிதன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட உயரிய பண்புகளில் சில. மனிதன் சமூகமாய் வாழும்போது தன்னால் இயன்றவரை சக மனிதனுக்கு இன்னல் நேராமல் தானும் சிறப்புற வாழ்ந்து பிறரையும் அவ்வாறே நாடி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகக் கூறலாம்.

    வருத்தம், கோபம், மனக்குழப்பம், பயம், எரிச்சல் – இவை போன்ற மனதைப் பாதிக்கச் செய்யும் அனைத்து எதிர்மறை உணர்ச்சிகள் எல்லோருக்குமே உண்டு. ஏழைக்கும், நடுத்தரவாசிக்கும், மாளிகையில் வசிப்போனுக்கும் எல்லோருக்குமே உண்டு. அபரிமிதமான பணம், அபரிமிதமான பதவி சுகம், அளப்பரிய புகழ், கட்டற்ற அதிகார எல்லைகள் இந்த எதிர்மறை உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்துவிடும். எப்போது மனிதனின் குற்றவுணர்ச்சி நீர்த்துப் போகிறதோ அப்போது எவ்வித பாவச்செயல் புரிந்தாலும் அதன் துன்பியல் விளைவுகளிலிருந்து அவன் மனம் விலகியே நிற்கிறது. நேர்மறை உணர்ச்சிகளால் எவ்வித சந்தோஷத்திற்கும் அவன் ஆட்படுவதில்லை. அதனால் ஏற்படும் வெற்றிடத்தைப் போக்கிட அதிகார வெறியும், பணபோதையும் உதவுகின்றன.

    இது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டை நேர்மையாய் விளையாடுவோர் விதிகளுக்குள் கட்டுண்டு கிடந்து அதற்குள் விளையாடுகின்றனர். அநீதியாய் விளையாடுவோர் அசர அடிக்கின்றனர். அவர்களாக டயர்டாகி(!) ஓய்ந்தால்தான் உண்டு!!!

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      ஒரு அருமையான விவாதத்திற்கு வழிவகுத்திருக்கும்
      காவிரி மைந்தன் அவர்களுக்கு முதற்கண் நன்றி.

      ரிஷியின் கருத்துக்கள் மிகசிறப்பாக அமைந்துள்ளன
      வாழ்த்துக்கள்.

      ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வேண்டுமென்றால்
      கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாத்திகர்கள்
      என அழைத்திருக்கக்கூடும்.ஆனால் இப்பொழுது அது தவறு.
      கடவுள் அல்லது நமக்கு மீறிய சக்தி ஒன்று இருப்பதை
      அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.இப்பொழுது நாத்திகம்
      என்பது இந்த உலகை நம் ஆத்திகர்கள் சொல்வதை/நினைப்பதைப்போல
      கடவுள் நிர்வகிப்பதில்லை எனும் சிந்தனையே ஆகும்.

      இந்தியாவை பொருத்தவரை சுதந்திரம் கிடைத்த நாள் முதல்
      அநீதியும்,ஊழலும்,அராஜகமும் பெருகி வருவது கண்கூடு
      பயிரை காக்கவேண்டிய வேலியே பயிரை அழிப்பது போல
      சாதாரண குடிமக்களுக்கு வரும் இன்னல்கள், பெரும்பாலும் அரசிடமிருந்தும் அதை சார்ந்த இயந்திரங்களிருந்துதான் வருகின்றன.

      நம்மை விட எளியவர்கள் செய்யும் சிறு தவறையும் சட்டம் மூலமாக
      தண்டிக்கத் தயாராக இருக்கும் நாம்,நம்மை விட வலியவர்கள் செய்யும்
      இமாலய குற்றங்களை, செளகரியமாக கடவுள் கோர்ட்டிற்கு அனுப்பிவிடுகிறோம்..

      சரி இதுவாவது ஒரு முதலமைச்சர்/உயர்போலீஸ் அதிகாரி போன்ற சிறியகுழாமா எனப்பார்த்தால் அதுவும் இல்லை..
      இப்போ கவுன்சிலர்/கான்ஸ்டபிள் /குமாஸ்தா செய்யும் குற்றங்கள் கூட நேராக கடவுள் கோர்டிற்கே செல்கின்றன.
      இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல.

      ஒருவன் தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் செயலுக்கும்,
      பலர் பார்க்க அவளை அடித்து துன்புறுத்தும் செயலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
      இரண்டாவதை நாம்தான் தடுக்கவேண்டும்/தண்டிக்கவேண்டும்.

      எதற்கெடுத்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார் என சொல்வது மிகுந்த ஆயாசத்தை தருகிறது.அமெரிக்க அரசின் கொள்கை..”In God we Trust” என்பதாகும்..நம் கொள்கை “In God we rust” என்பதோ எனும் ஐயம் வருகிறது

      நம்முடைய மெத்தனம் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு மிகப்பெரிய
      அநீதியை கொடுத்துக்கொண்டிருக்கிறது.இதை நாம் மறக்கலாகாது

      முடிவாக இந்தபடத்தைபார்க்கையில்,எனக்கு எழும் எண்ணம..
      “கடவுள், தன் இருப்பை (existence) நிரூபிக்க பிரபஞ்சத்தையும்,
      இல்லாததை நிரூபிக்க இதைப்போன்ற குடும்பங்களையும் படைத்திருக்கிறாரோ!”

  6. siddhan's avatar siddhan சொல்கிறார்:

    நல்ல நகைச்சுவை. உலகத்திலேயே இந்த புகைப்படத்தில் உள்ள நபர் மட்டுமே தவறு செய்து விட்டு சுகமாக வாழ்கிறாரா,
    மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் தும்பை பூ போல பரிசுத்த வாழ்க்கை வாழ்பவர்களா?

    • பாரதி's avatar பாரதி சொல்கிறார்:

      நல்ல கேள்வி.. ஆனால் தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.. இது ஒரு உதாரணம் மட்டுமே..

  7. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    இந்தப் புகைப்படம் ஒரு உதாரணத்திற்காக மட்டுமே இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது. மன்னார்குடி கும்பல், சோனியா கும்பல், கர்னாடக ரெட்டி கும்பல், இன்னும் பலப் பல கும்பல்கள் உள்ளன. அரசியல்வாதிகள் மட்டுமல்ல… பெரும் தொழில் முதலாளிகள், அதிகாரங்களின் உச்சங்களில் உள்ளோர், ஏரியா தாதாக்கள், பக்தி விற்பனையாளர்கள், நாத்திக விற்பனையாளர்கள், இன்னும்…. அனைவருக்குமே இது பொருந்தும். உண்மையிலேயே நடைமுறையில் அதர்மத்தை தர்மம் வீழ்த்துகிறதா? என்ற கேள்வி கேட்டால் நான் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன்.

  8. MURUGANANDAM.'s avatar MURUGANANDAM. சொல்கிறார்:

    Man can not understand the weaving of fate. Fate is very cruel to the wrong doers. Nobody can escape from the results of an action. The thing is, whatever may the cause, the result is definite; only the time when the result or punishment will burst out in a chain of action.

  9. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    அம்பானியைப் பற்றிப் பேசும்போது ஒரு நண்பர் தெரிவித்த கருத்து : அவன் ஆயிரம் முறைகேடுகள் செஞ்சி தொழில்ல முன்னுக்கு வந்திருக்கலாம். ஆனாலும் அவன் ஒரு சாதனையாளன்தான். என்று கூறுகிறார். நேர்மை என நாம் குறிப்பிடும் ஒரு பண்பு, தனிநபரிடம் வழுக்கினால் அது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அதுவே தொழில் முனையும் முறையில் வழுக்கினால் அது தொழிலின் ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது. எனில் எது சரி? எது தவறு?

  10. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    “கடவுள், தன் இருப்பை (existence) நிரூபிக்க பிரபஞ்சத்தையும்,
    இல்லாததை நிரூபிக்க இதைப்போன்ற குடும்பங்களையும் படைத்திருக்கிறாரோ!”

    வலைதளத்தின் மூலம் உருப்படியான கருத்துக்களை பெற முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.

  11. venkataramanir's avatar venkataramanir சொல்கிறார்:

    மெகஸ்தனிஸ் இந்தியாவுக்கு வந்த காலத்தில் எங்கும் வீடுகளுக்கு
    கதவுகள் கிடையாது. தெருவில் தங்கமே கிடந்தாலும் தனதில்லையென்றால்
    ஒருவரும் எடுக்கமாட்டார்கள் என்றெல்லாம் படித்ததாக நினைவு.

    அந்த ஒழுங்கும் நேர்மையும் இந்தியர்களிடம் காணாமல் போனது எப்படி?

    கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் தனி மனித ஒழுக்கமும்
    நேர்மையும் கொஞ்சம் கொஞ்சமாக வழ்க்கொழிந்து போனது எவ்விதம்?

    மன்னராட்சி போய் மக்களாட்சி வந்து, ஆட்சி அதிகாரம் தகுதியற்ற
    வாய்ச்சொல் வீரர்களிடத்து போய் சேர்ந்தது எங்ஙனம்?

    அவர்கள் துணிந்து எப்போதும் எதிலும் பொய்யும், சூதும், வஞ்சகமும்,
    துரோகமும், பழிச்செயல்களுமாய் செயல்பட்டு வருவது ஏன்?

    கடவுள் என ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் அவருக்கு இவர்களின்
    செயல்களை மேற்பார்வையிடுவதும், தண்டிப்பதும் தான் வேலையா?

    அப்படியானால், ஒருவருக்குப் பின் ஒருவராக தொடர்ந்து தீய வழிகளில்
    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் செயல்பட முடிகிறது?

    கடவுள் பரிகாரத்திற்கும் பிராயச்சித்தத்திற்கும் இரங்குவார் என்றால்,
    அது இவர்களுக்கும் பொருந்துமா?

    தப்பு செய்தவன் மனம் வருந்தினால் மட்டுமே பிராயச்சித்தம் என்றால்,
    பெரும்பாலும் ஊரையடித்து தன் வீட்டு உலையில் போட காரணமாய் இருக்கும்
    இவர்களின் தாயார், மனைவி மற்றும் இதர பெண்டீருக்கு, கடவுள் தரவிருக்கும்
    தண்டனைதான் என்ன?

    இறைவனுக்கு அவனை நம்பாதவரை தண்டிக்கும் அதிகாரமுண்டா?

    இவர்கள்தான் 100 தலைமுறை “முறையற்று வாழும் வகைக்கு” சொத்து
    சேர்த்து வைத்திருக்கிறார்களே. பின் எவ்விதம் மனம் வருந்துவார்கள்? ஊரார்
    பழிப்பைத் தவிர, இவ்விஷயத்தில் சமூகம் கண்டதுதான் என்ன?
    ……………..இம்மாதிரி “பகுத்தறிவு” கொண்டு கேட்டுக் கொண்டே போகலாம்.

    இவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, ஆட்சி
    மாறும் போதெல்லாம் “அடுத்த” தலைமக்குப் பயந்து “தன் நிறத்தையும்
    செயலையும்” மாற்றி அம்மா (ஜெயா) விடமும் அன்னை (சோனியா) விடமும்
    மண்டியிட்டு தொழுவதைக் காணக் கண் கோடி வேண்டும். தாயார்
    கருணையின் வடிவமல்லாவா? கோரிக்கை உடன் நிறைவேறி விடுகிறது.
    கொள்ளைத் தொடர்கிறது. எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொண்டுதான்
    இருக்கிறான். (இது நம் நம்பிக்கை)

  12. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எதிர்பார்த்தபடியே வித்தியாசமான கோணங்களில்
    கருத்துக்களை தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும்
    நன்றி.

    இந்த வலைத்தளம் உயிர்ப்புடன் விளங்க காரணமே
    உங்கள் அனைவரின் சமூக அக்கறையே.

    நண்பர் ரிஷி சொன்னது போல் – இந்த புகைப்படம்
    ஒரு உதாரணத்திற்கு தான் எடுத்தாளப்பட்டு
    உள்ளது. இதைப் போல் இன்னும்
    எத்தனை எத்தனையோ கும்பல்கள் – ஒட்டுண்ணிகள்
    உலவுகின்றன நம் சமுதாயத்தில் !

    நண்பர் கண்பத் –
    “கடவுள் தன இருப்பை நிரூபிக்க பிரபஞ்சத்தையும்.
    இல்லாததை நிரூபிக்க இதைப்போன்ற குடும்பங்களையும்
    படைத்திருக்கின்றானோ ?”
    என்று கூறியது அற்புதமான சிந்தனை வளத்தின் வெளிப்பாடு !

    நண்பர் ஜோதிஜி சொன்னது போல் –
    “வலைத்தளத்தின் மூலம் பல உருப்படியான கருத்துக்களை
    பெற முடியும்” – என்பதற்கு இந்த இடுகைக்கு வந்துள்ள
    பின்னூட்டங்களே சாட்சி !

    என் கருத்து என்னவென்றால் –

    “இறைவன் என்று ஒருவன் இருக்கிறானோ இல்லையோ –
    இறை நம்பிக்கை சமுதாயத்தை நல்வழிப்படுத்த
    உதவுகிறது” என்பது போல் –

    தவறு செய்பவர்கள் அனைவரும் தண்டனை பெறுகிறார்களோ
    இல்லையோ -” தப்பு செய்தால் தண்டனை நிச்சயம்” என்கிற
    ஒரு உணர்வு சமுதாயத்தில் அவசியம் வேண்டும் – என்பதே !
    அந்த உணர்வு தொடர்ந்து நிலவ நாம் முயல வேண்டும்.

    நாம் இருக்கும் சமுதாயம் இன்னும் மேம்பட வேண்டும் என்றால் –
    நமது மனசாட்சி உயிர்ப்புடன், துடிப்புடன் இயங்கிக்கொண்டே
    இருக்க வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று
    சோர்ந்து விடாமல்,
    இயன்றபோதேல்லாம் –
    இயன்ற விதங்களிலேல்லாம் –
    குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    மிகச்சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டது நம் நாடு.
    அற்புதமான தலைவர்களை எல்லாம் நாம் கண்டிருக்கிறோம் !
    இன்று இருப்பவர்கள் இப்படி இருக்கலாம் –
    காலம் மாறும் – புதியவர்கள் வருவார்கள் !
    நம்பிக்கையோடு நம்மால் முடிந்ததை செய்வோம் !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      மிகவும் நன்றி நண்பர் கா.மை.,

      மேலும்,வந்த பின்னூட்டங்களை தொகுத்தால்…

      1) குற்றம் செய்பவர்கள், உடனடியாக இல்லாவிட்டாலும், எப்பொழுதாவது
      தண்டிக்கப்படுவார்கள்..அது நம் காலத்திற்கு பிறகு கூட இருக்கலாம்..

      2) ஒருவன் பொருட்செல்வம் அதிகமாக பெற்றிருத்தல் அவன் சந்தோஷமாக வாழ்கிறான் என்பதை குறிக்காது..

      ஒருவன் பொருட்செல்வம் அதிகமாக பெற்று, சந்தோஷமாகவும் வாழ்தல், அவன் நிம்மதியாக வாழ்கிறான் என்பதை குறிக்காது.

      ஒருவன் பொருட்செல்வம் அதிகமாக பெற்று, சந்தோஷமாகவும்,நிம்மதியாகவும் வாழ்தல்,
      அவன் அவ்வாறு நீண்டகாலம் வாழ்வான் என்பதை குறிக்காது.

      ஒருவன் பொருட்செல்வம் அதிகமாக பெற்று, சந்தோஷமாகவும்,நிம்மதியாகவும்,நீண்டகாலம் வாழ்தல்,
      அவன் அடுத்த பிறவியில் மிகவும் இன்னலுறுவான் என்பதை குறிக்கும்…

      3) சுருக்கமாக சொன்னால், நல்லதையே நினைத்து,நல்லதையே செய்பவர்களுக்கு, நல்லதே நடக்கும் என்று நம்புவதை விட,நல்லதையே நினைத்து,நல்லதையே செய்பவர்களுக்கு, எது நடக்கிறதோ அதுவே நல்லது என உணர்வதே ஞானம்….

      • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

        கண்பத் மிகவும் அருமையாக தொகுத்துவிட்டீர்கள்.
        உங்களது மூன்றாவது பாய்ண்டில் (கருத்தில்?) கூறியுள்ள “நல்லது” என்பதின் புரிதலில்தான் சிக்கலே உள்ளது. என்வேதான் “எது நடக்கிறதோ அதுவே நல்லது” என்று இருந்துவிடுகிறோம்.
        இரண்டாவது பாய்ண்டிற்கு ஒரு உதாரணத்தோடு விளக்கலாம்.
        திரு முக முத்து, செல்வி ஜெயலலிதாவிடம் சென்று பண உதவி பெற்றதை கேள்விபட்ட கலைஞரின் வேதனைக்கு “அடுத்த பிறவிவரையோ, நீண்ட காலம் வாழாமலேயே, நிம்மதி இழந்து, சந்தோஷமற்று, நம் காலத்துக்கு பிறகா” பார்த்தோம்?

        இத்தனைக்கும் காரணமாக நான் பார்ப்பது தனி மனித ஒழுக்கம். இது என்னவோ அடுத்தவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல நாம் அனைவரும் சுலபமாக பழியை அடுத்தவன் மீது போட்டுவிடுகிறோம்.

        in god we rust… well said

        • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

          நன்றி அஜீஸ்..

          நான் சொல்ல வருவது இதுதான்..

          கருணா(அல்லது ஊழல செய்த எந்த இந்திய அமைச்சர் ஆனாலும் )
          செய்த பொருளாதார குற்றங்கள்
          விசேட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு
          இந்தியன் பீனல் கோட் சட்டப்படி அவருடைய
          சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ,
          அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படவேண்டும்.
          இதற்கு அதிகபட்சம் ஒருவருடமே ஆகவேண்டும்.

          மற்றபடி அதை செய்ய முடியாத நாமும், நம் சட்டமும்,

          அவர் இத்தனை கோடி சொத்து சேர்த்து என்ன பயன்?,

          அவருக்கு நாலு சுளை பலாப்பழம் சாப்பிட்டால் பேதி ஆகிறது,

          அவர் மனைவி தீபாவளிக்கு எடுத்த 25000 ரூபா பட்டு சேலைக்கு
          பல கடைகள் ஏறி இறங்கியும் மேச்சிங் ப்ளவுஸ் கிடைக்கவில்லை,

          அவர் மகனுக்கு நாற்பது வயதிலேயே வழுக்கை விழுந்து விட்டது,

          ஒரு நாள் அவர் பேரன் ஆயிரம் ரூபா நோட்டிற்கு சில்லறை கிடைக்காமல்
          தெருத்தெருவாக அலைந்தான்..

          அவர் வளர்க்கும் அல்சேஷன் தொடர்ந்து பெண் குட்டிகளையே
          ஈன்று வருகிறது..

          என்றெல்லாம் சமாதானம் செய்துகொள்வது..
          மன்னிக்கவும்,ஏனோ என் மனதிற்கு ஒப்பவில்லை.

  13. dinakaran's avatar dinakaran சொல்கிறார்:

    do u remember HARILAL GANDHI……first son of mahatma GANDHI?

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      எனக்குத் தெரியாது. நீங்கள் தெரிவிக்க விரும்புவதை சொல்லுங்கள்.

  14. swami's avatar swami சொல்கிறார்:

    என்னை பொறுத்தவரை உலகம்
    cause and effect தியரி படி சரியாகவே நடந்து வருகிறது. அதர்மம் செய்பவன்
    சரியாக தண்டிக்கப்பட்டு கொண்டு இருக்கிறான். லௌகீகமா பார்த்தால் கெட்டவன் பண வசதியோடு, சகல
    பாக்கியத்தோடு வாழ்வது போல தோன்றுவது ஒரு பிரம்மை. அவனிடம் பணத்தை தவிர வேறு எதுவுமே இல்லை என்பதே உண்மை.

  15. Mohideen's avatar Mohideen சொல்கிறார்:

    I am reading this blog and replies. One thing we should remember. GOD exist very well and HE knows/aware all the deeds done by not only human beings but all HIS creatures. HE knows when, where and how to punish wrong doers. As many of you replied here, rich seems to be living happy but in reality they were not. Their mind is not happy or peaceful. We will hope that all wrong doers will be punished at their designated time.

    Hope this suffice.
    Regards,
    Mohideen, Chennai.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.