சிமென்ட்டில் ஏழைகளை ஏமாற்றி சம்பாதித்ததும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஊரை ஏய்த்து சம்பாதிப்பதும் – நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்குமா கெடுக்குமா ?
இந்த வலைத்தளத்தில் எப்போதும் முற்போக்கான கருத்துகள் தான் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் உங்களுக்கு பழமையாக தோன்றினாலும், சில கருத்துக்களை – முழுமையாக, உறுதியாக -நான் நம்புகிறேன். அவற்றில் ஒன்று – ” முற்பகல் செயின் பிற்பகல் விளையும் ”
1800 ஆண்டுகளுக்கு முன்னர் சிலப்பதிகாரம் இயற்றும்போதே இளங்கோவன் சொன்னார் – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ! ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் – என்றெல்லாம் ! இதே கருத்தை, சில மாற்றங்களுடன் அனைத்து மதங்களும் சொல்கின்றன.
என்னைப் பொறுத்த வரை – நான் உறுதியாக நம்புகிறேன் – உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் – தப்பு செய்தவர் (எத்தனை ஆண்டுகள் ஆனாலும் – ஏன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் கூட ) தண்டிக்கப்பட்டே தீருவர் !
“இதெல்லாம் உபன்யாசகர்கள் கூறும் கதை – நடைமுறைக்கு உதவாது. நிஜத்தில் நடப்பதே வேறு – நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது ? அது எப்படி வந்த பணமாக இருந்தால் என்ன ? பணம் இருப்பவன் அனுபவிக்கிறான். – கார், பங்களா, விமானம், மது, மங்கை, பட்டம் , பதவி, வித்தியாசமான சிநேகிதங்கள் … என்று விதம் விதமாக – வாழ்க்கையை அனுபவிக்க பணம் இருந்தால் போதும் ” என்று என் நண்பர்களே என்னிடம் வாதாடுவதுண்டு !.
ஆனால் என் வாழ்க்கை அனுபவங்கள் – தப்பு செய்பவர் நிச்சயம் என்றாவது ஒரு நாள் (காலம் தாழ்த்தியாவது ) தண்டிக்கப்படுவது உறுதி என்றே எனக்கு கூறுகின்றன.
15-20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது இது –
வங்கிகள் வீடுகட்ட கடன் கொடுக்கும் வசதியை பெரிய அளவில் ஆரம்பித்த சமயம் அது. நடுத்தர வர்க்கத்து மக்கள், மாத சம்பளக்காரர்கள் நிறைய பேர் வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்திருந்தனர்.
திடீரென்று சிமென்ட் மூட்டைகள் கடைகளிலிருந்து மாயமாய் மறைந்தன. 20 – 25 நாட்களுக்கு யாரும் சிமேண்டையே கண்ணால் கூட காண முடியவில்லை. வீடு கட்டும் வேலைகள் அப்படியே ஸ்தம்பித்தன. கடைக்காரர்களை கேட்டால் லோடு வரவில்லை என்கிறார்கள். எப்போது வரும் என்று கேட்டால் – தெரியாது என்கிறார்கள் ! . என்ன ஆயிற்று – ? விஷயம் இது தான். அப்போது தமிழ்நாட்டில் திமுக அதிகாரத்தில் இருந்தது. முதல்வரின் – மனசாட்சி என்று கூறப்பட்ட மருமகன் டெல்லியில் அதிகாரத்தில் இருந்தார். சிமென்ட் இண்டஸ்ட்ரியில் அவருக்கு நிறைய தொடர்புகள், பங்குகள் இருந்ததாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு, மிகச்சில சிமென்ட் ஆலைகளே இருந்தன. அவற்றின் முதலாளிகள், அரசின் ஆசியுடனும், ஒத்துழைப்புடனும் கூடிப்பேசி ஒரு ரகசிய முடிவு எடுத்தனர் – மனசாட்சிக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.
உடனடியாக செயலில் இறங்கினர். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மார்க்கெட்டிற்கு சப்ளையை நிறுத்தி வைத்தனர். செயற்கையாக ஒரு பதற்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் மூட்டை 130 ரூபாயாக இருந்தது 150 ஆக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு பின்னர் அது 160 ரூபாய் ஆனது. இரண்டு வாரங்களுக்கு பின் மீண்டும் 180 ரூபாய் !
இப்படியே 130 லிருந்து 200 ரூபாய் வரை கொண்டு செல்லப்பட்டது. நடுத்தர மக்கள் பதறினார்கள். வீடு கட்டுவதை நிறுத்தி வைத்தால் – வங்கிக்கு வீணாக வட்டி கட்ட வேண்டும். திரும்ப எப்போது நிலைமை சரியாகும் என்றும் யாருக்கும் தெரியவில்லை. எனக்கு இதில் நேரடியான அனுபவம் உண்டு. என் நண்பர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்காக நானும் அலைந்து கொண்டிருந்தேன்.
வேறு வழி இல்லாமல் என்ன விலை இருந்தாலும் சிமென்ட் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் உள்ளாக்கப்பட்டார்கள்.
அரசாங்கம் நாடகமாடியது. விலையை கட்டுக்கு கொண்டு வருவோம் என்று சொல்லியே இன்னும் இரண்டு மாத காலம் ஒட்டியது. பின்னர் சிமென்ட் ஆலை உரிமையாளர்களின் கூட்டத்தை கூட்டி – பத்து ரூபாய் விலை குறைப்பிற்கு (!) ஏற்பாடு செய்தது. பின்னர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாக பாவலா காட்டப்பட்டது.
இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள். சொந்த வீடு கட்டிக்கொண்டிருந்த மாத சம்பளக்காரர்கள் கொள்ளை அடிக்கப்பட்டார்கள். ஒரு மூட்டைக்கு எழுபது ரூபாய் வீதம் லட்சக்கணக்கான மூட்டைகள் – கோடிக்கணக்கில் சிமென்ட் முதலைகளுக்கு போய்ச்செர்ந்தது. மனசாட்சி உட்பட எல்லாருக்கும் உரிய பங்கு உண்டு தான் !
நான் பெயரை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டில் சிமென்ட் ஆலைகள் எத்தனை இருக்கின்றன ? சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இடுகையை படித்தால் உங்களுக்கே புரியும்.
இதன் பிறகு – அண்மைய ஆண்டுகளில் ஐபிஎல் கிரிக்கெட் அணிகள. சிமென்ட் கம்பெனிக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம் ? சிமென்ட் கம்பெனியால் 400 கோடி ரூபாய்க்கு கிரிக்கெட் அணி விலை பேசி வாங்கப்பட்டது. கண்ணெதிரே சூதாட்டங்கள். இது விஷயத்தில் நான் மக்களைத்தான் குறை சொல்வேன். பித்தர்களுக்கு புத்தி எங்கே போயிற்று ? சென்னையில் குறைந்த பட்ச டிக்கெட்டே 700 ரூபாய். இதில் ப்ளாக் மார்கெட் வேறு !
இப்படி கோடி கோடியாக சம்பாதித்தார்களே – இவர்கள் எல்லாரும் அதை நிம்மதியாக அனுபவிக்க முடிகிறதா ?
விமானங்களில் பறந்து கொண்டே இருப்பார்கள் ! தினம் தினம் டின்னர்களில் கலந்து கொள்வார்கள் ! பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், பேட்டிகள், புகைப்படங்கள் – சமுதாயத்தில் பெரிய தோற்றம் ! அவர்களை வெளிலிருந்து பார்ப்பவர்களுக்கு – அவர்கள் மிகவும் வசதியாக, சந்தோஷமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் -உண்மையில், பிளாட்பாரத்தில் குடித்தனம் பண்ணும் கூலித்தொழிலாளி கூட இவர்களை விட சந்தோஷமாக இருப்பான் – அவனுக்கு படுத்தவுடன் தூக்கம் வந்து விடுகிறது.
இவர்களுக்கு ………. ?
இவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று எப்படி சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா ? அண்மையில் நிகழ்ந்த ஒரு நடப்பை சொல்கிறேன் – பிறகு இவர்கள் நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பார்களா இல்லையா என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம் !



வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
காவிரிமைந்தன் அய்யா அவர்களுக்கு வணக்கம். நல்ல கருத்துக்கள். இது போன்ற ஒரு பதிவை உங்களிடம் எதிர்பார்த்தேன். முடிந்தால் அடுத்து கிரிகெட் எனும் தனி நபர் சுரண்டல் தொழிலுக்கு வாய் வீங்க விசில் அடிக்கும் ரசிகர்கள் என்ற கோமாளிகளுக்கு உணர்த்தும் ஒரு பதிவை போடுங்கள். சிறிது நாட்களாக தங்களின் பதிவுகளை பேஸ்புக்கில் பகிர முடிவதில்லை. என்ன பிழை என்று தெரியவுமில்லை. நானும் மீண்டும் முயற்சிக்கிறேன்.
நன்றி பத்மநாதன்.
நான் டூரில் இருக்கிறேன்.
இந்த குறையை நானும் உணர்கிறேன்.
இப்போது முயற்சி செய்து பாருங்கள் –
பேஸ்புக்கில் வருமென்று நினைக்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அநீதியான சம்பாத்தியம், இயற்கைக்கு மாறான உறவு, எதிர்த்தால் சந்தி சிரிக்க வைப்பேன் எனும் வாரிசு… நீங்கள் கூற வருவது புரிகிறது.
அன்று ‘சிமென்ட்’, ‘மனசாட்சிக்கு ‘ நெருக்கமாக இருந்ததால் தான் இன்று ஒரு பக்க ‘M A சிதம்பரம்’ ஈ ஓட்டுகிறதோ?!
வருக நண்பர் எழில்,
அதுவே தான் –
“எம் ஏ சி’ விஷயம் “”சரி” செய்யப்பட்டு விட்டது போலிருக்கிறதே !
பணம் பத்தும் செய்யுமே !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
i think u will tell about srinivasan son aswin….
நண்பரே ! நீங்கள் சொன்ன காலகட்டத்தில் நானும் நேரடியாக பாதிக்கப்பட்டேன் . சிமெண்டுக்காக பாடுபட்டேன்.
அது பழைய கதை. தற்போது சமையல் கேசுக்காக அலைகிறேன்.பெப்ருவரியில் பதிவு செய்தது. மே மாதம்
சமையல் கேஸ் பெறப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே தட்டுப்பாடினால் ஆனதா? அல்லது செயற்கையான
தட்டுப்பாடினால் ஆனதா?
there are thousands like him…….!he is not going to change!!
பிரசித்திப் பெற்ற, பலராலும் விவாதிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட
cement cartel பற்றி சொல்லியுள்ளது 150 சதவீத உண்மை. சிமெண்ட் தட்டுப்பாட்டால் தனி மனிதன்/கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும்
உளவியல் பிரச்சனைகள் மையப்படுத்தி அசோகமித்திரன் கூட
ஒரு சிறுகதை எழுதியுள்ளார். கண்ணீர் வரும். ஆனால் என்ன செய்ய?
இந்த ஊழலில் பலன்பெற்றவர்கள் “நெஞ்சுக்கு நீதியாக” படித்ததும்
உணர்ந்ததும் வேறு. இவர்கள், ஆதியும் பகவனும் வள்ளுவனின்
தாய்-தந்தை என்று கண்டுபிடித்து அவர் சொன்ன “ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்கிற குறளுக்கு வேறு
பொருள் கண்டவர்கள்.
இறைவன் இருக்கிறான். அவன் தான் இந்த பிரபஞ்சத்தை ஒரு ஒழுங்கில்
இயக்குகிறான் என்பதெல்லாம் ஆத்திகர்கள் பாடமாகவே இருக்கட்டும்.
அது சமூகத்தில் தவறான நடவடிக்கைகளுக்கு ஒரு செக் பாயிண்ட்டாக
இருந்தது. இவர்கள் தான் அதை முன்னின்று உடைத்தார்கள். யாரும்
யாருக்கும் (எதற்கும் என வாசிக்கவும்) அஞ்சாது, துணிந்து துரோகம் செய்து வருகிறார்கள்.
பொருளாதார நிலையில் உயர்ந்துவிட்டால் போதும், எல்லாம் தன முன் மண்டியிடும் என நம்புகிறார்கள். வேடிக்கை என்னவென்றால், துணிந்து பாபங்களை செய்துவிட்டு புண்ணியத்தின் பலனை தேடுகிறார்கள். உலகு
பழித்தது ஒழித்துவிட்டாலே போதும் வேறு ஒரு ஆணியையும் பிடுங்க
வேண்டாம்.
“ஒன்றுமே பலன் இல்லை என்பதை எல்லோரும் ஒரு நாள் உணருவர்”.
அதுவரை, புட்டபர்த்தியிலும், சிருங்கேரியிலும், திருப்பதியிலும், அழகு பெண்களிடத்தும் தன வருமானத்தை பகிர்ந்து கொள்வர்.
கயவர்களின் கையில் இப்போது ஐ பி எல். அதிகமான பணம் புரளும்
இடத்தில் பெண்கள் நிறைந்து இருப்பார். நேர்மை ஒளிந்து இருக்கும்.
எம் எ சியும், டால்மியாவும், மோடியும் காணாமல் போனது போல்,
சீனுவாசன்களும் போவார்கள். நம்புங்கள்.
ஏன் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் என்று தைரியமாக குறிப்பிட் வேண்டியது தானே. நாற்றம் தான் எல்லோருக்கும் தெரிந்தது தானே. 160 ரூபாய் ஒரு மூட்டையின் விலை. 20 சதவிகிதம் லாபத்தோடு. இப்போது ரூபாய் 330.
நிறைய எழுதலாம். அரசியல்வாதிகளை குறை சொல்கின்றோம். ஆனால் நம் மக்கள் தான் கிரிக்கெட்டின் மீது கண்மூடித்தனமான வெறித்தனத்தோடு இருக்கிறார்களே? அவர்கள் சம்பாரிக்கத்தானே செய்வார்கள்.
வருக ஜோதிஜி,
நீண்ட நாட்கள் ஆயிற்று -உங்களுடன் உரையாடி !
பெயரை எழுதாதற்கு காரணம் – ஒரு சுவாரஸ்யத்திற்காக தான் !
எவ்வளவு பேர் உடனே கண்டுபிடிக்கிறார்கள் பாருங்களேன் !
அடுத்த இடுகையில் முழு விவரங்களும் வருகின்றன.
அடிக்கடி வாருங்கள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
40 vayasu valarndha pillai, thanaku illai endru aanadhu, eyarkaiku muranaka homosexualaga oru bengali partnerudan sutruvadhu evai ellam paarthaal, endha appanuku thookam varum? cement kassum ipl kaasum koduthaal kooda payan thirumbi kidaikamaatan enbadhuthaan nilaimai.
neengal sonna vaarthai migavaum sari. murpagal seiyin pirpagal vilayaum. edhe pol, namadhu kalaignar kudumbathil enna nadaka pogirathu enbathai poruthu irundhuthaan paarkavendum. adicha kaasu konjama nanjama…
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
திருக்குறளை சபையில் படித்து, மேற்கோள் காட்டிவிட்டு ஊழல் செப்பவர்களை ஊழ்வினைதான் உறுத்து வந்து… செய்ய வேண்டும். சாதாரண மக்கள் கவலை தான் பட முடியும், இல்லையா டி.வீ பார்த்து , மகிழலாம்..