தமிழருவி மணியனின் கடிதம் ……..
தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் எழுதியுள்ள கடிதத்திலிருந்து சில பகுதிகள் – – – – (மட்டும் ! )
…………கலைஞரை வீட்டுக்கு அனுப்பும் விருப்பத்துடன் மக்கள் வழங்கிய தீர்ப்பு உங்களை கோட்டையில் கொண்டு போய் அமரச்செய்தது. களப்பிரர்களை காட்டிலும் மோசமாக ஆட்சி செய்த கலைஞரின் பரிவாரத்திடமிருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவித்தாக வேண்டும் என்பதே வாக்காளர்களின் வேட்கையாக இருந்தது.
ஓர் ஆண்டு ஆட்சியில் நிகழ்ந்தது அனைத்துமே வாக்காளர்களின் வரவேற்புக்கு உரியன அல்ல என்பதை உளவுத்துறையின் மூலம் நீங்கள் உணர முடியும்.
நில அபகரிப்பு சிறப்புக் காவல் பிரிவு உருவாக்கமும், அதன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த உங்கள் சிந்தனையும் பாராட்டுக்கு உரியவை.
பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் எட்டும் வகையில் 15 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க “தமிழ் நாடு தொலைநோக்கு திட்டம் – 2023 ” வெற்றிகரமாக செயல்பெறுமானால், அது உங்கள் சரித்திர சாதனையாக இருக்கும்.
ஆரோக்கியமான அரசியலமைப்புக்கு ஊழலற்ற ஆட்சியே அடித்தளம். உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் தக்க நடவடிக்கை எடுப்பீர்களா ?
முகலாய பேரரசர் ஷாஜஹானைப் போன்று மக்கள் வரிப்பணத்தில் ஆயிரம் கோடி ரூபாயை விரயமாக்கி புதிய சட்டமன்ற கட்டிடத்தை கலைஞர் கட்டியதை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதை உயர்சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற நீங்கள் முடிவெடுத்தது பாராட்டுக்குரியது.
ஆனால் அண்ணா நூலகத்தில் நீங்கள் கைவைத்த போது அதை எந்த அறிவுஜீவியாலும் ஏற்க முடியவில்லை. உங்களை ஒரு அறிவுஜீவியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். நீங்கள் இதை ஒரு கெளரவபிரச்சினையாக கருதாமல், நூலகம் அங்கே தொடர்ந்து செயல்பட வழி விட வேண்டும்.
உங்கள் புதிய காப்பீட்டு திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு நீங்கள் இடம் தரவில்லை என்பது மனம் விட்டு வாழ்த்த வேண்டிய அம்சம். ஆனால் இந்த நிதியைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க ஏன் பயன்படுத்தக் கூடாது ?
சட்டப் பேரவையை சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேவாலயமாகவும், நல்ல சட்டங்களுக்கு வடிவம் தரும் நியாயஸ்தலமாகவும், ஜனநாயக மரபுகள் கொலுவிருக்கும் மாண்புமிகு மண்டபமாகவும் இருப்பதற்கு அன்புகூர்ந்து அனுமதியுங்கள்.
மாநில அமைச்சர்களும், ஆளும் தரப்பு உறுப்பினர்களும், குழைந்து பேசும் கூட்டணித்தலைவர்களும் கொஞ்சமும் கூச்சமின்றி எல்லை மீறி உங்களை புகழ்ந்து பேசுவதும் ….. வார்த்தைக்கு வார்த்தை பொய்யாய் உருகி போலியாய் நடிப்பதும் ….. எந்த புகழுரையும் முகஸ்துதியும் உண்மை இல்லை – ……எல்லாம் சொந்த ஆதாயத்துக்காக.
இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. எங்களுக்கு தேவை காமராஜரை போல் எளிமை சார்ந்த – தன்னலமற்ற ஒரு முதல்வர். ஆடம்பர ஆரவாரங்களுக்கு இடம்தராத ஆட்சிமுறை. போலி புகழுரையும், வசைமொழியும் இல்லாத சட்டப்பேரவை. எதிர்க்கட்சிகளை கண்ணியமுடன் நடத்தும் மனோபாவம். நேர்மையான தேர்தலுக்கான சூழல். ஊழலின் நிழல் படாத உயரிய நிர்வாகம்.
விமரிசனங்கள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் – காது கொடுத்து கேட்கும் பெருந்தன்மை. இவை தான் நல்ல அரசியலை நாடும் மக்களின் பிரார்த்தனை.



எனக்கு ஒன்று புரியவேயில்லை.
பல ஊடகங்களில் ஜெயாவின் ஒரு ஆண்டு கால ஆச்சியின் விமரிசனங்கள் படித்தேன்.அனைவரும் ஜெயாவின் மீது உள்ள பயத்தின் காரணமாகவோ அல்லது கருணாவின் மீது உள்ள வெறுப்பின் காரணமாகவோ ஜெயா ஆசசியை குறை கூற தயங்குகின்றனர்.
நாம் ஜெயாவின் குணாதியங்களை நன்கு உணர்ந்தே தேர்ந்தெடுத்தோம்
இதற்கு காரணம் கருணாவின் காட்டாட்சி.
ஜெயாவும் நாம் அவர் மீதுள்ள நம்பிக்கையை பொய்ப்பிக்காமல்,
அதே அகம்பாவம்,
எடுத்தேன் கவிழ்த்தேன் மனப்பான்மை,
பழிவாங்கும் உணர்ச்சி
இவைகளுடன்
ஒராண்டு ஆச்சி புரிந்துள்ளார்.
வரும் நான்கு ஆண்டுகளும் ஆச்சி இதேபோலவோ அல்லது
இதை விட மோசமாகவோ தான் இருக்கும் என்பது என் ஊகம.
வழக்கம்போல 2016 தேர்தலில் நாம் மீண்டும் கருணாவை சரணடைந்து அம்மாவிடமிருந்து காப்பாற்றப்படுவோம்.
அதே சமயம் இது நடக்காமல் இருந்தால் நண்பர் கா.மை.அளவிற்கு நானும் மகிழ்வேன்..
அம்மாவின் ஒராண்டு ஆட்சி சொல்லிக் கொல்லும் வண்ணம்
அமையவில்லை என்பதே உண்மை.
புதிய தலைமுறையும் (பொதுவான நியாயமான விமர்சனத்தை
வைத்துள்ளது) நக்கீரனும் (கொஞ்சம் தி மு க சார்போ
என சந்தேகிக்கும் வண்ணம்) செய்தி விமர்சனத்தை வெலியிட்டுள்ளன.
அதே நிலையில்தான் த மணியனும் அவரது விமர்சனத்தை வைத்துள்ளார்.
மக்களின் மன வருத்தம் அம்மாவின் (திருச்)செவிகளில் விழுமா
என்பது தொரியவில்லை.
கலைஞர் தன் குடும்பங்களுக்காக உழைத்தார். வீழ்ந்தார். அம்மா
மன்னர்குடி நட்பின் சொந்தங்க்களுக்காக(வே) உழைக்கிறார். எம் எல் ஏக்கள்
தொ¢விலிருந்து, ஐ ஏ எஸ்/ஐ பி எஸ் அதிகாரிகளின் பனியிட அமர்வு வரை
நட்பும் அவர் தம் தொடர்புகளுமே முடிவு செய்தன என்றும், அதற்கான
வசூல் வேட்டையிலும் இறங்கினர் என்றும், ஒரு கட்டத்தில் அம்மாவை
தூக்கிவிட்டு “சாதகமான ஒருவரை”க் கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற சதி
செய்தனர் என்றும் செய்தித்தாள்களில் தொடர்கதைகள் வந்தனவே அவை
என்ன ஆயிற்று? முன்னாள் தி.மு.க மந்திரிகள் வருமானத்திற்கு அதிகமான
சொத்து செர்த்துள்ளனர் என்பதாக கூறி நாளும் ரெய்டு நடக்கிரதே, அது
பொன்றதொரு நடவடிக்கை வருமனமே இல்லாத, ஆனால் பல கோடிகளை
செர்த்துள்ள மன்னார்குடி தொடர்புகள் மீது யாதொரு நடவடிக்கையும்
இல்லையே ஏன்?
கோட்டையே பொதுமானது என்றால் அம்மா தனது கடந்த ஆட்சியில்
வேறிடம் தேடியது ஏன்?
அம்மா இன்னமும் கிஞ்சித்தும் மாறவில்லையென்பதே உண்மை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அவர் தயார் இல்லை என்பதையே, விஜயகாந்த் விஷயத்தில்அவரது செயல்பாடு வெளிப்படுத்திற்று.
முன்னம் கங்கிரஸை எக்ஸ்ட் ரா லக்கேஜ் என்றார். இப்பொது
தே மு தி க-வின் பங்க்களிப்பை மறுத்து பேசுகிறார். சபையில் அதீத
புகழுரைக்கு மயங்குகிறார். நாடறிய நிதியமைச்சர் ப.செல்வம்
சபையில் தன் காலில் விழுவதை ரசிக்கிறார். எதிர்கட்சியினர் பேச வாய்ப்பு
மறுக்கிறார்.
தி.மு.க விட்டால் அ.தி.மு.க என்பதான ஒரு மாயை மீண்டும் தொற்றுவிக்க
பெரிதும் முயல்கிறார். மூன்றாவதை ஒருவர் வளர்வதை ஏற்றுக் கொள்ள மறுக்க்கிறார். இன்னும் என்ன வேண்டும்?
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலம் சொல்லும்படியாக இல்லை. ரஜனிகாந்த் கூட அவரது ஆட்சியை
பற்றி கூறும்போது ஒரு கட்டத்தில் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என கூறினார். முந்தைய
ஆட்சியை ஒப்பிடும்போது தற்போது பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் தமிழகத்தை முன்னேற்றி காண்பிக்க வேண்டும்என்ற நோக்கம் தெரிகிறது. செயல்பாடுகளில் சில குறைபாடுகள் இருக்கவே செய்கிறது.
தெரியாமல் தப்பு செய்தால் தப்பில்லை. தெரிந்தே தப்பு செய்தால் தப்புதான். அதிலும் தற்போது தேசீய
அளவில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளது. அவர் சுயநல வாதியா பொதுநலவாதியா
என எதிர்காலம் பதில் சொல்லும்.