குடியரசுத் தலைவர் ஆக முடியுமா ……… பி.ஏ.சங்மா ?
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நன்கு படித்த மனிதர் ! ( M.A., B.L ) வயது 64 – 8 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்- நாகாலாந்து முதல் அமைச்சராக இருந்தவர் – மத்திய அமைச்சராக இருந்தவர் – பாராளுமன்ற (லோக் சபா ) சபாநாயகராக பதவி வகுத்தவர் . நீண்ட காலம் – கிட்டத்தட்ட 26 ஆண்டுக்காலம் காங்கிரஸ் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர். திருமதி சோனியா காந்தியின் தலைமையை ஏற்க மறுத்து 1999-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர் ! காங்கிரசின் தற்போதைய கூட்டணிக்கட்சியான தேசியவாத காங்கிரஸ்’ கட்சியின் முக்கியத் தலைவர். ஆதிவாசி -மலைஜாதி இனத்தவர் !
ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்கப்படும் மற்ற வேட்பாளர்களை விட எந்த விதத்திலும் தகுதி குறைந்தவர் அல்ல – இவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா ?
டாக்டர் அப்துல் கலாம் – துணை ஜனாதிபதி / ராஜ்ய சபா தலைவர் – அன்சாரி – நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி – என்று சில பெயர்கள் – காங்கிரஸ் தலைவியின் ஆலோசனைப்படியே வேண்டுமென்றே சுற்றலில் விடப்பட்டுள்ளன !
டாக்டர் அப்துல் கலாம் – சும்மா திசை திருப்ப ! பிரணாப் முகர்ஜி – வங்காளத்தை சேர்ந்தவர் என்பதால் – இவர் பெயரை மம்தா பானர்ஜியோ இடதுசாரி கம்யூனிஸ்டுகளோ எதிர்க்க முடியாது ! அன்சாரி – முலாயம் சிங்கை ஆழம் பார்க்க !
இறுதியில் காங்கிரஸ் கட்சி யார் பெயரை முன்னிறுத்தும் ? சிறந்த “சமையற்காரர்” யார் என்பதை வழக்கமாகத் தீர்மானிப்பவர் யார் ? – அவர் மட்டுமே அறிவார் !
அரசியல் ஒரு சூதாட்டம் ! நகர்த்த வேண்டிய ஒரு காயை ஒரு நாள் முன்னதாக நகர்த்தினாலும் சரி – ஒரு நாள் தாமதமாக நகர்த்தினாலும் சரி – விளைவுகள் வேறு வேறாக இருக்கும் !!
சாதாரண சூழ்நிலையில் பி.ஏ. சங்மா வெற்றிபெற வாய்ப்பில்லை .
சாதாரணமாக ஆளும் கூட்டணியின் வேட்பாளர் தான் வெற்றி பெற வாய்ப்பு உண்டு . அடுத்த ஜனாதிபதி பெயரை ஆளும் கூட்டணி கட்சியின் தலைவர் தான் முதலில் முன்மொழிய வேண்டும். ஆனால் வேண்டுமென்றே எதிர் அணியினரை குழப்புவதற்காக பல பெயர்களை சுற்றலில் விட்டிருக்கிறது ஆளும் கூட்டணி.
ஆனால் –
முதல் முதலாக அதிகாரபூர்வமாக சங்மா பெயரை இன்று ஓடிஷா முதல்வர் பிஜு பட்நாயக் முதலில் முன்மொழிந்தது – திருமதி சோனியாவிற்கு ஒரு பின்னடைவு.
ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி பெயரையோ, அன்சாரி பெயரையோ காங்கிரஸ் அறிவித்திருந்தால் அவர்களையே ஆதரிததாக வேண்டிய ஒரு தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கப்ப்ட்டிருந்த சில கட்சிகள் அதிலிருந்து வெளிவர இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
சங்மா சபாநாயகராக பணியாற்றிய காலத்தில் மிக நல்ல பெயரைப் பெற்றிருந்தார். அனைத்துக் கட்சியினருக்கும் அவர் நன்கு பரிச்சயம் ஆனவர்.
இவரை பிஜேபி கூட ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது –
முக்கிய காரணம் – திருமதி சோனியா காந்திக்கு இவரை பிடிக்காது !!
நமக்கும் சங்மா வை பிடிக்கிறது — -அதே காரணத்திற்காக !!!




காங்கிரசில் இருந்து வந்தாலும் ராஜீவ் காந்தி கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ஜயில் சிங் போன்ற குடியரசு தலைவர் வந்து ‘அன்னை’யின் கண்ணில் விரலை விட்டு நோண்ட வேண்டும். அப்படி செய்ய கூடிய யார் வந்தாலும் மகிழ்ச்சியே!
திரு சங்க்மா அவர்கள் அரசியல்வாதி.கல்வியாளர் முதலமைச்சராக இருந்தவர் முக்கியமாக ஒரு
பழங்குடியினத்தை சேர்ந்தவர். இந்த ஒருகாரணத்துக்காகவே இவர் ஜனாதிபதியாக தகுதியுடையவர்.
சோனியாவும் இவருக்கு ஆதரவளித்து பழங்குடியினத்தை சார்ந்தவருக்கு ஒரு வாய்ப்பு அளித்து ஜனநாயகத்தை
காப்பாற்ற வேண்டும்.
பி ஏ சங்கமா படித்தவரா? பண்பாளாரா? அரசியல் முன்
அனுபவம் கொண்டவரா? அவரை/இவரை விட தகுதி அதிகம்
உடையவரா? என்பதெல்லாம் ஜனாதிபதியாக்கி விடாது. மாறாக,
பொது விவாத பொருளாக பயன்படும். விளைவாக, தேசிய அளவில்
“winnable candidate” பெயர், ஆளுங்கட்சியால் அறிவிக்கப்படும் வரை
செய்தித்தாளில் அடிபட உதவும்.
நீங்களே சொல்லியுள்ளது போல நல்ல சமையல்காரன் யார் என்பதை
பட்நாயக்கும் ஜெயலலிதாவும் தீர்மானித்துவிட முடியாது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு கட்சிகளே
வெல்லும் வேட்பாளாரை சொல்லமுடியும்.
கலாமுக்கு தேச மக்களின் ஒட்டு மொத்த ஆதரவு இருந்தாலும் தி.மு.க.
(மு.க என வாசிக்கவும்) ஆதரவு உறுதியாக கிடையாது. “எனக்கு இரண்டாம்
வாய்ப்பு வேண்டாம் என கலாம் என்னிடம் முன்னமே சொல்லிவிட்டார்”
என்கிற கலைஞரின் பழைய வசனத்தை கருத்தில் கொள்ளவும். தே காங்
தலைவர் பவாரின் ஆதரவே சங்க்மாவிற்கு இருக்கிறதா என்பதே முழுமையாக
தெரியாத நிலையில், பிரனாப் அன்சாரி பெயர்கள் எதிர்கட்சிகளின் எண்ண
ஓட்டத்தை ஆழம் பார்க்க. அம்மாவின் நிஜமான ஆதரவு பெற்ற வேட்பாளார்
எங்கோ மறைந்து இருக்கிறார்.
.
//திருமதி சோனியா காந்தியின் தலைமையை ஏற்க மறுத்து 1979-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர் //
79ல் இந்திராவே மரணிக்காத சமயத்தில், சோனியாவின் தலைமையா?
தவறை திருத்துங்கள் காவிரிமைந்தன்.
அதுபோக, இந்த பதவியால் இந்தியாவிற்கோ அல்லது இந்தியனுக்கோ ஏதாவது பிரயோஜனம் உண்டா நண்பரே?
சிறிது புரியவையுங்கள்.
அல்லது தாங்களும் மற்றொரு சமையல்காரருக்காக ஒரு பதிவையிட்டு நாமும் அதற்காக பதிலும் இட்டு… சுத்த வேஸ்ட்.
நன்றி நண்பர் சைதை அஜீஸ்,
அது 1999 என்றிருக்க வேண்டும். தவறைத் திருத்தி
விட்டேன்.
மற்ற விஷயங்கள் – தொடர்ந்து விவாதிக்கலாம் !
-வாழ்த்துக்களுடன்,
கவிரிமைந்தன்
இந்த பதவியால் இந்தியாவிற்கோ அல்லது இந்தியனுக்கோ ஏதாவது பிரயோஜனம் இல்லை என்று முற்றாக ஒதுக்கி விட முடியாது. உதாரணம் 2004 இல் அப்துல் கலாம் சோனியாவை புறம் தள்ளி மன்மோகன் சிங்கை ஆட்சி அமைக்க அழைத்ததை கூறலாம். இதுக்கு பின்னணியாக சுப்பிரமணிய சுவாமி எழுதிய ஒரு கடிதம் இருந்ததாக கூறப்பட்டாலும், அதை Article 75 மூலமாக துணிவுடன் அமுல் படுத்தியது அப்துல் கலாம் அவர்கள்.
குடியரசு தலைவர் பதவி என்பது சக்தி வாய்ந்த ஒரு உளி. ஒரு சிற்பி கையில் கொடுத்தால் மிக நன்று ஆனால் நம் துரதிஷ்டம் அது அநேக தருணங்களில் அம்மி பொழிபவன் கையில் சிக்குகிறது.
ஜனாதிபதி யார் என்பதை விட அப்துல் அஜிஸின் ஒரு பதிவையிட்டு நாமும் அதற்காக பதிலும் இட்டு… சுத்த வேஸ்ட்…..இந்த வருடம் ஜனாதிபதி அவார்டு வாங்க வேண்டிய பின்னூட்டம்:)
.
காவிரி மைந்தன் அவர்களுக்கு!
நீங்கள் வேர்ட்பிரஸிலிருந்து பிளாக்கராக இணைந்து கொள்ளலாமே!
நான் செட்டியார் மற்றும் சோழியர் வகுப்பினரைத் தரக்குறைவாக விமர்ஸனம் செய்வதாக நினைக்ககூடாது என்ற காரணத்தால், தமிழில் பொதுவாகச் சொல்லப்படும் சொலவடையைச் சற்று மாற்றிச் சொல்லுகிறேன் ” ஆதாயமில்லாமல் அம்மா ஆற்றில் போவாங்களா? அம்மா குடுமி சும்மா ஆடுமா?” தமிழ் நாட்டை ஆளும் வாய்ப்பினாலேயே சென்னை, சிறுதாவூர்,பையன ூர், கொட நாடு , மற்றும் ஹைதரபாத், லண்டன் என எல்லா இடங்களிலும் பங்களாக்களாகவும ், தோட்டம், துரவுகளாகவும் வாங்கிக் குவித்த அம்மாவும், சித்தியும் (அதான் மன்னார்குடி உ பி ச), பிரதமரோ அல்லது துணைப் பிரதமரோ ஆகிவிடும் சான்ஸ் கிடைத்துவிட்டால ் இன்னும் எங்கெங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கிக் குவிப்பார்களோ? கடைசியில் கண்ணை மூடும் நாள் வரத்தான் போகிறது! கண்ணை மூடி விட்டால் எல்லோருக்கும் தேவைப்படுமிடமோ 6 க்கு 2 அடி நிலம் தான் பிணத்தைப் புதைக்கும் போது ! அதுவும் ஒரு ஆறு அல்லது ஏழு மாதத்தில் உடலைப் புழு பூச்சி தின்ற பின்னால், மிச்சமிருக்கும் எலும்புக் குவியலை குப்பையாக எடுத்து எறிந்து விட்டு அதே இடத்தை மற்றொரு பிணத்தைப் புதைக்க எடுத்துக்கொண்டு விடுவார்கள் ! பிணத்தை எரித்துவிட்டாலோ 6 க்கு 2 அடி கூடத் தேவைப்படாது ! இன்றைக்கு நெருப்பும் நாளைக்குப் பிடி சாம்பலும் , லோட்டா பாலும் தான் ! அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆருயிர் உய்த்துவிடும்” ஆதலால் அடங்கு தாயே ! அடங்கு !
அம்மணி ஒரு சேலை கட்டிய கருணாநிதி. ஆனால் கொஞ்சம் விவரம் கம்மி. கருணாநிதி எனும் முதலைக்கு பயந்து தமிழக மக்கள் அம்மணிக்கு ஓட்டு போட்டால், அதை தனது திறமைக்கும், தகுதிக்குமான பரிசாக அம்மணி நினைத்து கொண்டிருக்கிறார ். அம்மணியின் ஆணவமான, கிறுக்குத்தனமான செயல்பாடுகளை எல்லாம் ஆளுமையுள்ள, துணிவான நடவடிக்கைகள் என்று அவாக்களேல்லாம் அள்ளிவிடுகிற கதைகளை அம்மணியே நம்பிவிட்டதுதான ் இப்போது கொடுமையிலும் கொடுமை.
தனது கட்டுப்பாடில் இருந்த ஒரு மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு இழைக்கபட்ட கொடுமைகளை தடுக்க வக்கில்லாமல், அதற்கு மறைமுக காரணமாக இருந்த இந்த அம்மணி இந்தியாவிலுள்ள பழங்குடியினரின் உரிமை பற்றி பேசுகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போறானாம். அம்மணி அரசியல் செய்வதாக தமிழ்நாட்டிலிரு ந்து டெல்லிக்கு சென்று இந்தியா பூரா தமிழர்களின் பெயரை நாறடிக்க போகிறார்.
THANKS: SAVUKKU
தேர்தலில் வோட்டு போட்டவர்கள் எல்லாம் முட்டாள்களாகவும் பயந்தாகொள்ளிகள் ஆகவும் நினைத்து
விட்டீர்களே?