இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ?
ராஜபக்சே தலைமையில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இந்திய தூதரை அழைக்கிறார்கள். இந்திய தூதர் – அசோக் கே.காந்தாவும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியைப் அவமதித்துப் பேசுகிறார் – ராஜபக்சேயின் தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்க முடியுமா ?
பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேயின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே நான்காவது ஈழப்போரில் ஆற்றினாரே “அரும்பெறும் செயல்” – அதை பாராட்டி எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம் – இலங்கை ஊடகவியலாளர் சி.ஏ.சந்திரப்பிரேம எழுதிய – ” கோத்தாவின் போர் ” இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றிருக்கிறது. தம்பியின் புகழ் பரப்பும் இந்த நூலை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜபக்சேயின் செயலாளர் – லலித் வீரதுங்க பேசுகிறார் –
————————————–
“ராஜீவ் காந்தி தலையிட்டிருக்கா விட்டால் – எப்போதோ – இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் விடுதலைப் புலிகளை ஒழித்திருக்க முடியும்.
கொழும்பில் 1980களின் நடுப்பகுதியில் ( விடுதலைப் புலிகளால் ) நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம். இந்த தாக்குதலில் – திட்டமிடுதல் மற்றும் நிறைவேற்றுதலில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வலுவாகப் பங்களித்திருந்தன.
வடமராட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது – இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி அந்த நடவடிக்கைக்கு எதிராக கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிறிலங்காவின் இறையாண்மையில் ராஜீவ் காந்தியின் தலைமையிலான இந்தியாவின் குறுக்கீடு தான் இலங்கையில் தீவிரவாதம் வளர முக்கிய காரணம்.
சிறிலங்கா அப்போதே தீவிரவாதத்தை ஒழித்திருக்க முடியும்.
ஆனால் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.தீக்சித் வலுவான தலையீடு செய்தார்.
அந்த நடவடிக்கை தொடர்ந்திருந்தால் சிறிலங்கா இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னரே போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.
வடமராட்சி நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைச் சந்தித்த ஜே.என்.தீக்சித் – சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் யாழ்ப்பாணம் செல்வதை இந்தியா சும்மா பார்த்துக் கொண்டிருக்காது என்று அப்பட்டமாகவே சொன்னார்.
இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், எதிர்பாராத விளைவுகளை இந்தியா ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
அதற்கு ஜே.ஆர், எதிர்பாராத விளைவு என்றால் என்னவென்று கேட்டபோது, சிறிலங்காவைத் துண்டாடுவதற்கு, விடுதலைப் புலிகளுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கும் என்று தீக்சித் பதிலளித்தார்.
சிறிலங்காவில் இந்தியாவின் பங்கு தொடர்பாக தீவிரமான விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும்” –
———————————————–
இந்திய அரசின் ஆதரவோ ஒத்துழைப்போ இல்லாமல் நான்காவது ஈழப்போரை இலங்கை வென்றிருக்க முடியுமா ?
விடுதலைப்புலிகளை ஒழித்தாகி விட்டது. பாதி தமிழர்களை கொன்று அழித்தாகி விட்டது. புதிய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் – இனி இந்தியாவின் உதவி தேவை இல்லை.
எல்லாம் முடிந்து விட்ட இன்றைய தினத்தில் – எந்த திமிரில் ராஜபக்சே கூட்டம் இவ்வாறு இந்தியாவை வம்பிற்கு இழுக்கிறது ?
அத்தனையும் உண்மையாகவே இருக்கட்டுமே – இருந்தாலும் இப்போது ராஜீவ் காந்தியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன ?
இந்திய அரசால் கடைசியாக நிகழ்ந்த போரில் தான் செய்த உதவிகள் எதைப்பற்றியும் வாய் திறந்து வெளியில் சொல்ல முடியாது என்பதாலா ?
அல்லது என்ன செய்ய முடியும் இந்தியாவால் என்கிற இறுமாப்பு காரணமாகவா ?
ராஜபக்சே அரசின் கொட்டத்தை அடக்க என்ன செய்யப்போகிறது இந்திய அரசு ?




எல்லாமே உண்மை தானே ! பாக்கிஸ்தான் இந்தியாவில் தீவிரவாத்தை வளர்பது போல அன்றைய இந்தியா இலங்கையில் தீவிரவாததை வளர்த்து உண்மையே
இந்திரா செய்த மாபேறும் தவறுகள் இரண்டு, பஞ்சாப் தீவிரவாதம் இலங்கை தீவிரவாதம். இதில் முதல் காரியத்தில் தன் உயிரையே இழந்தார், இரண்டாவதில் புதல்வரும் கொல்லபட்டார்,
இலங்கை பிரச்சனை என்பது யாழ்பாணத்தில் வாழும் தற்பெருமை வாசிகளின் போராட்டமே. இதில் மலையக தமிழர், இஸ்லாமிய தமிழர் , கிழக்கு வாசிகளுக்கு தொடர்பே இல்லை
போதும் உங்களும் ஈழ ஆதரவு விளையாட்டு. அந்த மனிதர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்
அடிவருடி ஒருவர் எழுதுவது போல் தெரிகிறது. பஞ்சாப் தீவிரவாதத்தை இந்திரா அடக்க முற்பட்டார். அது நாட்டுக்கு அவர் செய்த நல்ல காரியம். நீங்கள் சொல்வது போல் மாபெரும் தவறு கிடையாது.
மேலும் இந்திரா கிழக்கு பாகிஸ்தான் பிரச்னையை எவ்வாறு அணுகினாரோ அவ்வாறே ஈழ தமிழர் பிரச்னையை அணுகினார். ஈழ தமிழர்களின் துரதிஷ்டம் அவர் அகால மரணமடைந்தது.
நான் அடிவருடியாகவே இருந்து விட்டு போகிறேனே !!
அகாலிதளத்தை தட்டி வைக்க பிந்தரன்வாலேயை கொம்பு சீவி விட்டது இந்திரா.
பின் பிந்தரன்வாலே அடக்க முடியாத நிலைக்கு சென்றவுடம் பொற்கோவில் ஆபரேசன் இந்திரா அவர்கள் நடத்தினார்கள்.
வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு கருத்து எழுதவும்
முதலில் உங்களை அடிவருடி என்று குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன். அவ்வாறு கூற கரணம் ஒரு சிறுபான்மை இனத்தின் வாழ்வாதார பிரச்னையை ‘யாழ்பாணத்தில் வாழும் தற்பெருமை வாசிகளின் போராட்டம்’ என்று கொச்சை படுத்தியமையே.
இப்போது தமிழர்களை நாதியத்து செய்து முடித்துவிட்டு அடுத்ததாக மற்றைய சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது வெறித்தனத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் சிங்களர். 1960 இல் இருந்து இயங்கி வரும் தம்புள்ள பள்ளிவாசல் இடிக்க பட்டமை இதற்கு உதாரணம். ஆக இலங்கையில் எந்த சிறுபான்மை இனருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
சிரோன்மணி அகாலி தள், தனக்கிருந்த பெரும்பான்மை பலம் மூலம் சீக்கிசத்தை பஞ்சாபில் சட்டங்களின் மூலம் கட்டாயபடுத்தும் முயற்ச்சியில் இறங்கியபோதே இந்திரா அரசியல் ரீதியாக அவர்களை பலவீனமாக்க ஜார்னயில் சிங் பிந்திரன்வலேயை ஆதரித்தார். நீங்கள் குறிப்பிட்டது போல தீவிர வாதத்தை வளர்க்கவில்லை. ஆனால் பிந்திரன்வாலே பாகிஸ்தான் வழங்கிய ஆயுதங்கள் மூலம் காலிஸ்தானை உருவாக்க முயன்றார். அதனால் எடுக்க பட்ட நடவடிக்கை தான் ‘Operation Bluestar ‘. இது தான் உண்மை வரலாறு. நீங்கள் சொல்வது அல்ல.
செம்பியன், கடந்த காலத்தில் நடைபெற்ற உண்மைகளை அப்படியே தெரிவித்துள்ளீர்கள்.தங்களுக்கு தமிழ் துரோகி பட்டம் கிடைக்கலாம்.
ஒரு காலத்தில் இந்திய அமைதி படை மேல் அபாண்டமாக கற்பழிப்பு குற்ற்சாட்டுகளை சொன்னார்கள் புலிகள். அவர்கள் பிரசார யுத்தமே கற்பழிப்புதான். கூடவே பிரபாகரன் சொன்னது” நாங்களும் சிங்களவர்களும் அண்ணன் தம்பிகள், இந்தியர்கள் வந்தேறிகள் “
நண்பர் செம்பியனுக்கு 1976 இல் தமிழ் கட்சிகள் (தமிழர் விடுதலை கூட்டணி) ஒண்றிணைந்து தந்தை செல்வா தலைமையில் வட்டுகோட்டை பிரகடனம் வெளியிடப்பட்டது தெரியாது போல. அதில் இலங்கை வாழ் தமிழருக்கு சிங்கள அடக்கு முறைக்கு எதிராக தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை முன் வைத்து தமிழர் விடுதலை கூட்டணி 1977 இலங்கை நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் பெரும் வெற்றி பெற்று எதிர் கட்சியானது. இது நடந்தது பிரபாகன் ஒரு சக்தியாக தலை எடுப்பதற்கு முன். மேற்கூறிய ஜனநாயக் போராட்டம் சிங்களவர்களால் அடக்க பட்டதாலேயே பிரபாகன் போன்றோர் ஆய்தம் தான் ஒரே வழி என்று முடிவெடுத்து ஆயுதம் ஏந்தி போராடினர்.
எனவே தயவு செய்து உங்கள் சுய நலத்திற்காக ஒரு இன பிரச்னையை பொய்யான தகவல்களால் திசை திருப்ப முயலாதீர்கள். எங்கள் தொப்புள் கோடி உறவுகளின் வரலாறு எமக்கு நன்றாகவே தெரியும்.
87ல் நடந்த மகாணாசபை தேர்தலில் 73% வாக்கு பதிவு நடந்து. அத்தனை பேர் அந்த சம்யத்தில் இந்தியா மீது நம்பிக்கை வைத்து இருந்தார்கள். அமைதிபடையை திட்டமிட்டது குழப்பியது பிரபாகரன்.
அன்று கிடைத்த தீர்வை வேண்டாம் என சொன்னவர்களுக்கு கடைசியில் கிடைத்த முடிவு தெரிந்தது தான்.
ராஜபக்சேவிடம் இருந்து பணம் வாங்கி 2005 தேர்தலை புறக்கணிக்க சொன்னது
89ல் பிரமதாசாவிடம் இருந்து ஆயுதம் வாங்கி இந்திய படைகளை மிகவும் கோழைதனமாக தாக்கியது
ராஜீவை மிகவும் கொடூரமான முறையில் கொன்றது
இப்படி பல துரோகங்களால் இருக்கிறது புலிகள் பக்கம்
அவர்களும் தவறு பல செய்தார்கள். ஆனால் புலிகள் உத்தமர்கள் என எழுதும் போது தான் அவர்கள் தவறுகளை சுட்டி காட்ட நேர்கிறது
என்ன கொடுமை சார் இது..
காவிரி மைந்தனின் இந்த பதிவோ இல்லை எனது கருத்துக்களோ எங்கேயும் புலிகள் உத்தமர்கள் என்று எழுதப்படவில்லை. தயவு செய்து ஆத்திரபடாமல் திறந்த மனதுடன் மீண்டும் ஒரு முறை படியுங்கள்.
” நாங்களும் சிங்களவர்களும் அண்ணன் தம்பிகள், இந்தியர்கள் வந்தேறிகள் “,.//////
மேற்கண்ட வார்த்தைகளை பிரபாகரன் சொல்லவில்லை. பிரேமதாசா தான் சொன்னார்.
பிரபாகரன் தான் சொன்னார். வரலாற்றை திரும்ப படியுங்கள். பிரமதாசாவிடம் ஆயுதங்கள் வாங்கி இந்திய படையை தாக்கியது பிரபாகரன்
மீண்டும் உளறுகிறீர்கள் செம்பியன். இந்திய இராணுவம் ஒரு அமைதி படையாக (noncombative force ) இலங்கை வந்தது. 1987 அக்டோபர் 2 ஆம் நாள் 17 முக்கிய புலி உறுப்பினர்களை படகொன்றில் வைத்து இலங்கைக் இராணுவம் கைது செய்து அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல எத்தனித்தது. இலங்கை – இந்திய ஒப்பந்தப்படி போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பட்ட நிலையில் இலங்கையின் செயலுக்கு புலிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்திய அரசோ மொனமாக இருந்தது. கொழும்பு செல்லப்போகிறோம் என்று முடிவான நிலையில் 17 புலிகளும் சயனைடு அருந்தி 12 பேர் அப்போதே இறந்தனர். அதில் புலேந்திரன் குமரப்பா அடங்குவர். அதை தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் நாள் புலிகளை அழிக்க ‘Operation Pawan’ இந்திய படையால் தொடங்க பட்டது.
புலிகள் மீது இப்போர் திணிக்க பட்டதே அன்றி அவர்களால் ஆரம்பிக்க படவில்லை. இது இங்குள்ள தமிழர் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அமைதி படை நாடு திரும்பும் போது அவர்களை வரவேற்க தமிழ் நாட்டில் ஒரு ஈ காக்கை கூட செல்லவில்லை.
நேரம் இருந்தால் இதை படியுங்கள்:
http://www.sangam.org/articles/view2/IPKF-Atrocities.html
கடைசியாக 1970 களில் அனிதா பிரதாப் க்கு (பின் நாளில் இந்திய டுடே, CNN நிருபர்) பிரபாகரன் அளித்த பேட்டி முதல் அவர் கடைசியாக அளித்த அறிக்கை வரை, ஈழம் என்பது ஒரு போதும் இந்தியாவின் ஆதரவு இன்றி அமைக்க முடியாது என்பதை தெளிவாக அறிந்திருந்தார். எனவே வாய்க்கு வந்ததை எழுதாதீர். முடிந்தால் ‘Island of
Blood’ by Anita Pratap படித்து பாருங்கள்.
சங்கம் தளம் புலிகளின் அல்லது புலி சார்பு தளம்.
அதில் உண்மையான தகவல்களை எதிர்பார்பது தவறு.
கிட்டுவை பற்றி சங்கள் தளத்தில் படித்து பாருங்கள். வீரன் சூரன் என உண்மைக்கு புறனான இருக்கும்
கிட்டுவின் அயோக்கியதன்ம் பொருக்கமாட்டாமல் யாழ்பாணத்தில் சிறு தமிழ் குழு ஒன்று அவர் மீது கை எறி குண்டு தாக்குதல் நடத்தியது
பிரிட்டனில் இருந்து கிட்டுவை பண வசூல கட்டய நிதி சேகரிப்பு என சொல்லி வெளியே அனுப்பினார்கள். அந்த தகவல்கள் எல்லாம் அந்த தளத்தில் வராது.
பிரபாகரன் 90களில் இதை சொன்னார். இதற்க்கான தினதந்தி பத்திரிக்கை மூலத்தை சேகரித்து இணைக்கிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்
தயவு செய்து பிரபாகரன் 90களில் நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு சொன்னார் என்ற பத்திரிக்கை மூலத்தை upload பண்ணிவிட்டு link ஐ அனுப்பினீர்களானால் மிகுந்த நன்றியுடையவனாவேன்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்…
தங்களது அந்த குறிப்பிட்ட இனைப்பை காண காத்திருக்கிறேன்.
நன்றி
ராஜீவ் காந்தி பிரதமராகவே இறந்தவர். புலிகளால் கொல்லப்பட்டவர். இந்தியநாட்டு பிரதமரை ராஜ பக்ஷே அரசு
குறை கூறியுள்ளது. தற்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் என்ன செய்ய போகிறார்.?
ராஜீவ் எதிர்கட்சி தலைவராக இருந்தார் .அவர் கொல்ல பட்ட போது. பிரதமராக இல்லை
Sorry.
ஒரு விடுதலை போராட்டத்தை இவ்வளவு குறுக்கி பார்ப்பது எவ்வாறு என்று தெரிய வில்லை…………………உலகமெங்கும் விடுதலை போராட்டங்கள் நடந்துள்ளன நடக்கின்றன அதற்கு பக்கத்தில் உள்ள நாடுகள்உதவி விடுதலை அடைய செய்து உள்ளன ……………… மேலும் பிரபாகரனும் புலிகளும் தான் பிரச்சனையா? அதற்கு முன்பு அங்கு அகிம்சை வழியில் போராட்டம் நடைபெறவில்லையா தமிழர்கள் நசுக்கப்படவில்லையா…………. ஏன் இப்படி பூனை பார்வையில் இருந்து அணுகுகிறீர்கள்? முதலில் உலக நாடுகளின் விடுதலை வரலாறுகளை படித்து விட்டு பின்னூட்டம் போடுங்கள் ……….ஈழ விடுதலை முன்னேறட்டும் அல்லது பின்நேரட்டும்…………….. ஆனால்இன்றும் போராட்டத்திற்கு ஆனகாரணங்கள் அப்படியே தானே உள்ளன இதை தானே உலக நாடுகளும் ஊடகங்களும் சொல்கின்றன
இப்போது இந்திய தூதரின்…. விமரிசிக்க வேண்டும் என்பதற்காகவே
எழுதியது போல் தோன்றுகிறது. இலங்கை ஊடகவியலாளர் சி.ஏ.சந்திரப்பிரேமின்
Gota’s War, முழுக்க முழுக்க அவரது சொந்த அபிப்பராயம் மற்றும் அனுமானத்தின்
அடிப்படையிலானது. உண்மையும் கூட. இதில் தமிழன், இந்தியன், இநதிய அரசுக்கு எதிரான… என்கிறதான உங்கள் கருத்துகள் வியப்பளிகின்றன.
தமிழ் ஈழ விடுதலை அல்லது ஈழத் தமிழர் விடுதலை போரில் இநதியா, ராஜீவ்
காலத்திற்கு முன்பே, பலவிதமான உதவிகளை செய்து வந்தது என்பதும் அதன்
அடிப்படையிலேயே தமிழகத்தில் MGR-ம் கலைஞரும் தமிழ் ஈழ விடுதலை
குழக்களை தெரிவு செய்து தத்தமது அளவிற்கு உதவினர் என்பதும் வெள்ளிடை
மலை.
ஆனால், இதையெல்லாம் மறந்து, தன்னுடைய சுய பலத்தினாலேயே
வளர்ந்தோம், தானே பெரியவன் என்பதான பிரபாகரனின் செயல்பாட்டால்,
இநதிய/தமிழக உதவியில்லாமலே ஈழத்தை அடைந்துவிட முடியும் என்கிற அவரது சிந்தனையால்… கோத்தபையா ராஜபக்ஷேவிடம் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.
நண்பரே உங்கள் கருத்தின் தொடக்க வரியே உங்கள் சிந்தனை ஓட்டத்தை ஊகிக்க வைக்கிறது.. காவிரி மைந்தன் அவர்கள் ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து சில கேள்விகளை எழுப்பி இருக்கிறாரே தவிர அவர் சொந்தமாக எதையும் புனைந்து குறிப்பிட்ட ஒருவர் மீது விமர்சிக்க வேண்டும் என்று எழுதவில்லை. உதாரணமாக ‘Gota’s war’ book launch function turns into an India bashing session ‘ என்ற தலைப்பில் ஊடகங்களில் இந்த செய்தி ஏற்கனவே வந்தது தான்.
இந்த தருணத்தில் ‘Gota’s war’ புத்தகத்தை பற்றியும் ஒரு சில வரிகள் சொல்லி விடுகிறேன். இந்த புத்தகம் ‘திவயின’ எனும் அரச சார்பு பத்திரிகையின் columnist சி.ஏ.சந்திரப்பிரேம என்பவர் தான் எழுதியிருக்கிறார்.. இது ஏறக்குறைய கலைஞரை பற்றி நக்கீரன் கோபாலும், ஜெயலலிதாவை பற்றி சோ ராமசாமியும் எழுதுவது போன்றது. அதாவது முழுக்க முழுக்க கோதாபாயாவை ஹீரோ ஆக்கும் முயற்சி. இதையிட்டு நாம் கவலை கொள்ள தேவயில்லை.
ஆனால் ஐ நா வில் நாம் வாக்களித்த நாள் முதலாய், நடந்து வரும் மகாத்மா சிலை உடைப்பு, மற்றும் சிங்கள அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் இந்திய கொள்கை, இந்திய தலைவர்கள், முதலமைச்சர்கள் போன்றோரை அவமதிக்கும் வண்ணம் பேசி வருவது நாள் தோறும் நடந்து வருகிறது. இது நிச்சயம் எந்த இந்திய குடிமகனினதும் ஆட்சேபத்துக்கு உரியது. அதில் ஒரு நிகழ்ச்சியே கா மை அவர்களின் இந்த பதிவு.
மேலும் உங்கள் கடைசி பந்தி உங்கள் சொந்த அபிப்பராயம் மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானது என்பது எனது தாழ்மையான கருத்து.
மேலும் உங்கள் கடைசி பந்தி உங்கள் சொந்த அபிப்பராயம் மற்றும் அனுமானத்தின்
அடிப்படையிலானது என்பது எனது தாழ்மையான கருத்து.
செம்பியன்!வரலாற்றை முழுவதுமாக அறியாமல் இந்திராகாந்தி பற்றிய நுனிப்புல்லை மேய்கிறீர்கள்.அமெரிக்க,ரஷ்ய பனிப்போர் காலத்திலான அமெரிக்க ஆதரவு பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சினையை பிரதானப்படுத்தியதில் அப்போதைய வெளியுறவு செக்ரட்டரி ஹென்றி கிஸ்ஸிங்கருக்கும் மிகவும் பங்குண்டு.இந்தியாவின் மீதான பாகிஸ்தான் தலையீடுகளும் அதற்காக வேண்டி பெங்களாதேஷ் சுதந்திரத்திற்கு துணை செய்ததற்கும் காலிஸ்தான் வேண்டி சீக்கிய தங்க கோயிலில் ஆயுதங்கள் பதுக்கியிருந்ததை துணிவோடு முறியடித்ததற்கும் இந்திராவின் ஆளுமையே காரணம்.இந்த கணத்தில் சம உரிமை மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குரலையும் முள்ளிவாய்க்காலின் மனித அவலங்களையும் காலிஸ்தானோடு இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.
எழில் தர்க்கரீதியாக வாதம் செய்கிறார்.வாழ்த்துக்கள்.
தீவிரவாத எண்ணம் கொண்ட பிந்தரவன்வாலேவை யார் வளர்த்து விட்டது? அகாலிதளத்தை அடக்கி வைக்க பிந்தரன்வாலேக்கு ஆயுத பயிற்சி கொடுத்ததும் இதே இந்திராதான். ஆனால் பிந்திரன்வாலே வை அடக்க முடியாமல் ராணுவ நடவடிக்கையில் இறங்கினார். வரலாற்றை முழுதாக படிங்க சார்.
“பிந்தரன்வாலேக்கு ஆயுத பயிற்சி கொடுத்ததும் இதே இந்திராதான்”… – lol ஐயா இந்த கருத்துக்கும் ஒரு தினத்தந்தி பத்திரிக்கை மூலம் அனுப்புங்கள்.
@ நண்பர் வெங்கட்ரமணி! பொருளாதார,அரசியல் சார்பு பக்கபலம் இருந்தாலும்,ஈழ விடுதலைப்போராட்ட குழுக்களின் சண்டைகள் இருந்தாலும் கூட விடுதலைப்புலிகள் என்ற கட்டமைப்பை உருவாக்கியதில் இயக்கம் சார்ந்த போராளிகளின் பங்கும்,பிரபாகரனின் திட்டமிடுதலும் முக்கியமானவை.
திரு நாஜநடரான, இதே அமெரிக்கா சிஐஏ வின் கட்டளை ஆதரவு காரணமாகதான் ராஜீவை போட்டு தள்ளினார்கள் என்று ஒரு கருத்து உண்டு. சோசலிச ராஜீவ் இல்லாமல் போனால் அமெரிக்காவிற்க்கு நண்மையே
நண்பர் செம்பியனுக்கு!அதென்ன சோசலிச ராஜிவ்!நேரு,இந்தீரா,ராஜிவ் வரையிலான காலகட்டம் வரை ரஷ்ய சார்புடைய சோசலிச கொள்கைகளையே இந்தியா கொண்டிருந்தது.பனிப்போர் முடிந்த காலத்தில் இந்தப் பருப்பு வேகாது என்ற திவாலா நிலையில் அல்லவா நரசிம்மராவின் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை இந்தியா கொண்டு வந்து அப்போதைய பொருளாதார இப்போதைய சப்பாணி பிரதமர் மன்மோகன் சிங்கால் இன்னும் உயிர்ப்போடு அமெரிக்கசார்பு நிலையில் நின்று கொண்டிருக்கிறது!
Conspiracty theory என்ற ஆங்கில பதம் அரசியலின் ஒரு விளைவுக்கு பல காரணங்களை தோற்றுவிக்கும்.அதில் நீங்கள் குறிப்பிடும் சி.ஐ.ஏ வும் ஒன்று.நரசிம்மராவின் கால ஆட்சியில் பொக்கரான் குண்டுவெடிப்பு ஏன் நிகழவில்லை என்ற உண்மை நரசிம்மராவின் சமாதி வரை தெரியாமல் போனது போல் ராஜிவ் மரணத்தின் உண்மைகளும் பிரபாகரனின் மௌனத்தோடு தெரியாமலே போய் விட்டன.
இன்று இந்தியாவை குறை சொல்லும் இலங்கை அதிகார பீடம் போல் இந்தியாவோ அல்லது விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கையின் ஜேவிபியோ அல்லது போராளிக்குழுக்களின் செயல்பாடோ அல்லது இன்னும் சொல்லப்போனால் இலங்கை அரசோ கூட செய்திருக்க கூடிய சாத்தியமான குண்டுவெடிப்பு இன்ன பிற செயல்களுக்கான மொத்த சுமைகளையும் விடுதலைப்புலிகளே இன்று வரை சுமக்கிறார்கள்.
விட்டா இந்திராகாந்திதான் காலிஸ்தானுக்காக விதையூன்றினார் என்று வாதம் செய்வீர்கள் போல இருக்குதே.அப்போதைய காலகட்டத்துக்கு சென்சார் செய்யப்பட்ட பத்திரிகை ஊடகங்களே உதவியாக இருந்தபோதும் இப்பொழுது இணையம் ஒரு செய்தியின் பல பரிமாணங்களை முன் வைக்கிறது.வரலாற்றை அல்ல இணையத்தை முழுசாக படிங்க செம்பியன் சார்:)
போகிற போக்கில் பல ஆழமான உண்மைகளை சில வினாக்கள் மூலம் விதைத்து விட்டு போயிருக்கிறீர்கள்.rajanat . இதற்கான விடைகள் எந்த ஊடகத்திலும் நேரடியாக கிடைக்காது ஆனால் இணைய தளங்களில் மற்றும் பல புத்தகங்களிலும் பல புள்ளிகளாக அங்கும் இங்குமாக இருக்கின்றன. அந்த புள்ளிகளை இணைத்து ஒரு முழு சித்திரமாக பார்க்க வேண்டியது அவரவர் ஆர்வத்தையும், பொறுமையையும் பொறுத்தது. இந்த கருத்தை அழகாக சுருக்கமாக மேலே கூறியிருக்கிறீர்கள். – வாழ்த்துக்கள்!
காவிரி மைந்தன் அவர்களுக்கு,
முன்பெல்லாம் வேர்ட்பிரஸ் சொல்லும் கருத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும்.இப்பொழுது பெயர்,கடவு சீட்டு மறந்து விட்டாய் என்று புது கட்டளைகள் காரணமாக பல பின்னூட்டங்கள் இணைக்க இயலாமல் போய் விட்டது.
உண்மை தான் நண்பரே –
இது சிஸ்டத்தில் உள்ள கோளாறு !
என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை .
நண்பர்களே –
வேறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டாலும் –
ஒரு நல்ல கருத்துப் பரிமாற்ற மேடையாக
இந்த வலைத்தளம் வளர்ந்தது வருவது குறித்து
எனக்கு மகிழ்ச்சியே –
இந்த விஷயத்தில் என் கருத்து –
1) ஈழத்தமிழர்கள் கௌரவமாகவும், நிம்மதியாகவும்,
சந்தோஷமாகவும் வாழ ஒரே வழி – தனி தமிழ் ஈழம் தான்.
2) ராஜீவ் காந்தியின் மறைவிற்கு காரணமாக இருந்தவர்கள்
விடுதலைப்புலிகள் – எனவே அவர்களை ஒழிக்க வேண்டும்
என்ற ஒரே நோக்கத்துடன் – இந்த பிரச்சினைக்கு சற்றும்
சம்பந்தம் இல்லாத லட்சக்கணக்கான அப்பாவித்
தமிழர்கள் பாதிக்கப்படுவதைப்பற்றி கவலைப்படாமல் –
ஒரு தவறான முடிவை எடுத்து –
ராஜபக்சே அரசுக்கு உதவியது தற்போதைய இந்திய அரசு.
3) தமிழர்களை அடக்கி வைக்க வேண்டும் – அவர்களின்
எண்ணிக்கையை இயன்ற அளவு குறைக்க வேண்டும் என்கிற
நீண்ட கால சிங்கள பெரும்பான்மையினரின்
எண்ணத்தை நிறைவேற்ற இந்திய அரசின் இந்த பலவீனத்தை-
நன்கு பயன்படுத்திக்கொண்டது ராஜபக்சேயின் அரசு.
4) நோக்கம் நிறைவேறியவுடன் – இந்தியாவை விரும்பாத
நாடுகளுடன் சேர்ந்து கொண்டு – இந்தியாவுடனான தன்
பழைய கணக்குகளைத் தீர்க்கும் விதமாக இந்தியாவை
அவமானப்படுத்த, அசிங்கப்படுத்த முயல்கிறது ராஜபக்சே அரசு.
5) இனி எதிர்காலத்தில் சிங்கள பெரும்பான்மை இலங்கை அரசு
எப்போதும் இந்தியாவிற்கு எதிராகத்தான் செயல்படும். எனவே அதை
கட்டுப்படுத்தும் விதமாக, தன சொந்த நலன் கருதி கூட –
6) இந்தியாவுடன் நட்பு பாராட்டக்கூடிய தனி தமிழ் ஈழம்
அமைவது நல்லது தான் என்பதை இனியாவது புரிந்து கொண்டு –
7) செய்த தவறுக்கு ஒரு பிராயச்சித்தமாகவும் –
இந்தியா தன வெளியுறவு கொள்கையை மாற்றிக்கொண்டு
ஐ.நா. உதவியுடன் – தனி தமிழ் ஈழம் அமைவதற்கான
முயற்சிகளில் முழு மனதோடு ஆதரவு கொடுக்க வேண்டும் –
அதை நோக்கி செயல்பட வேண்டும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
//இந்தியா தன வெளியுறவு கொள்கையை மாற்றிக்கொண்டு
ஐ.நா. உதவியுடன் – தனி தமிழ் ஈழம் அமைவதற்கான
முயற்சிகளில் முழு மனதோடு ஆதரவு கொடுக்க வேண்டும்//
அது ஒரு போதும் நடக்காது என்பது தெரிந்ததுதானே. வைகோ வை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் ஈழத்தை ஆதரிக்க வில்லை. அரசியல் தீர்வை எதிர்பார்த்து இருப்பது நமது கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.
நண்பர் காவிரி மைந்தனுக்கு நல்ல மனது.
தான் விரும்பும் தனி தமிழ் ஈழத்தை இலங்க தமிழர்களுக்கு பாதிப்பில்லாமல் அமைக்க விரும்புகிறார். ஆனால் இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் பலர் இந்தா புலி வருகிறது ஐந்தாம் கட்ட போர் தொடங்க போகிறது என்று இலங்கையில் மேலும் தமிழ் விதவைகளையும் தமிழ் முடவர்களையும் தமிழ் அனாதை சிறுவர்களையும் மேலும் உற்பத்தி செய்ய துடியாய் துடிக்கிறார்கள்.
நன்றி செம்பியன்
நன்றி காவிரி மைந்தன்