திரு ப. சிதம்பரம் கூறுகிறார் -“தேவனே – இன்னதென்று தெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” !!
இன்றைய செய்திகளில் படித்திருப்பீர்கள் – நேற்று பாராளுமன்றத்தில் ரகளை. திரு ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வந்த் சின்ஹா சில குற்றச்சாட்டுகளை கூறி, அவை முன்னவர் திரு பிரணாப் முகர்ஜி அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ரகளையின் ஊடே திரு ப.சிதம்பரம் அவர்கள் தன் தரப்பு விளக்கத்தை கூறினார். முடிக்கின்ற சமயத்தில், தன் மீது புகார் கிளப்புபவர்களைப்பற்றி ஒரு பைபிள வாசகத்தையும் கூறினார் !
“இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தவறு செய்கிறார்கள் – தேவனே இவர்களை மன்னித்து விடும் ”
அருமையான ஒரு கொட்டேஷனை பயன்படுத்தி இருக்கிறார் திரு ப.சி.அவர்கள் . அவருக்கு நம் பாராட்டுகள் !
அதே சமயம் நமக்கு எழும் ஒரு சின்ன சந்தேகத்தையும் திரு ப.சி. அவர்கள் தீர்த்து வைக்க வேண்டுமென்று வேண்டுகிறோம்.
தெரியாமல் செய்கிறவர்களை மன்னித்து விடலாம் – சரி !
ஆனால் –
தெரிந்தே பாதகம் செய்கின்றவர்களை –
மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றவர்களை –
தெரிந்தே லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தவர்களை –
ஆயிரக்கணக்கான விதவைகள், அனாதைச் சிறுவர்கள் – உருவாகக் காரணமாக இருந்தவர்களை –
தெரிந்தே லட்சக்கணக்கான மக்கள் நாடோடிகளாக உலகம் பூராவும் அலையக் காரணமாக இருப்பவர்களை –
என்ன செய்யலாம் ?



ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடித்த மாதிரி இருக்கு சார்…
இதற்கு நம்மளாலையும் ஒண்ணும் பண்ண முடியலயேன்னு நெனச்சா நம்ம மேலேயே ரொம்ப வெறுப்பாகவும் வருத்தமாகவும் இருக்குங்க அய்யா..
திரு சிதம்பரம் அவர்கள் பைபிளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அதே பைபிளில் பாவத்தின் சம்பளம்
மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவருக்கும் தெரிந்திருக்கும்.
பாவத்தின் சம்பளமா??
நம்ம ஊர் அரசியல்வியாதிகள் ஒவ்வொத்தனும் செஞ்ச பாவத்திற்கு 40/50 சதவிகிதம் போனஸே கொடுக்கவேண்டியிருக்கும்!! அதான் கடவுள் ஒத்தனையும் மேலே கூப்பிடவே பயப்படறார்!
இந்த வசனத்தை தான் அன்று ராஜ கண்ணப்பனும் சொல்லியிருப்பார்