முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ?

முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ?

சுப்ரீம் கோர்ட்டில் empowered committee தன் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்ததை தொடர்ந்து,  கோர்ட் – இரு மாநிலங்களுக்கும் அதன் நகலை கொடுக்கச்சொல்லி உத்திரவு போட்டு விட்டு  வழக்கை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்து விட்டது.

அறிக்கையை இன்னும் முழுவதுமாகப் படித்தவர் யாருமில்லை – அதனை தயாரித்தவர்களைத் தவிர !

ஆனால் ஊடகங்களில்  கசிந்த – வெளிவந்த – தகவல்களின்படி. அறிக்கை தமிழ்நாட்டுக்கு ஓரளவு  சாதகமாக இருப்பதாகத் தெரிய வந்ததை அடுத்து – தமிழ்நாட்டு மக்கள் பதட்டம் நீங்கி அமைதியாக தங்கள் வழக்கமான  வேலைகளை பார்க்கக் சென்று  விட்டார்கள்.

ஆனால் கேரளாவில் நிலைமை  வேறுவிதமாக இருக்கிறது.  தமிழ் மீடியாக்கள் இதை சரியாக கவனிக்கவே இல்லை ! அங்கு நடப்பதை தமிழ் மக்களுக்கு தெரிவிக்கவும் இல்லை !

எனவே அங்கே நடப்பதை  –  சுருக்கமாக  கீழே தருகிறேன் – –

சுப்ரீம் கோர்ட் தீர்க்கமான ஆலோசனைக்கு பிறகு  தான் empowered committee யை அமைத்தது.  நல்ல அனுபவம் வாய்ந்த ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியை அதற்கு தலைவராகவும், நீர்ப்பாசன மற்றும் கட்டுமானத்துறையில் மிகச்சிறந்த நிபுணத்துவம் பெற்ற இரண்டு பொறியாளர்களை உறுப்பினர்களாகவும் நியமித்தது.  கேரளா, தமிழ் நாடு இரண்டு  மாநிலங்களும்  தங்கள் சார்பில் ஒவ்வொரு நிபுணரை ஆலோசகராக நியமிக்கவும் அனுமதி கொடுத்தது. எனவே இந்த கமிட்டி குறைசொல்ல முடியாத அளவிற்கு தான் அமைந்திருந்தது.

ரிப்போர்ட் கேரளாவிற்கு சாதகமாக இல்லை என்று தெரிந்தவுடன் ஆரம்பித்து விட்டார்கள் ஆட்டத்தை –

சீனியர் இடது கம்யூனிஸ்ட் தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் –

“நிபுணர் கமிட்டி ரிப்போர்ட் ஒருதலைப்பட்சமானது, தமிழ் நாட்டுக்கு சாதகமானது,  தமிழ்நாடு அரசு தன் செல்வாக்கை பயன்படுத்தி ரிப்போர்ட்டை தனக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்டு விட்டது” – என்றெல்லாம் உளறி இருக்கிறார்.

” முதலமைச்சர்  உம்மன் சாண்டி ஒரு உதவாக்கரை – தன் முந்தைய  கம்யூனிஸ்ட் அரசு அணை விஷயத்தில் செய்து வைத்தது அனைத்தும் உம்மன் சான்டியால்  பாழாகி விட்டது ” என்று இதை  லோக்கல்  அரசியலாக்கி விட்டார்.

அடுத்தது கேரளா நீர்ப்பாசன அமைச்சர் பி.ஜே. ஜோசப் –

“கேரளாவின் சார்பாக நியமிக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ் – கேரளாவைக் காட்டிக் கொடுத்து விட்டார். ரிப்போர்ட் கேரளாவிற்கு பாதகமாக வர அவரே காரணம்” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டிப்பேச –

அவரது கட்சியை சேர்ந்த ஒரு கும்பல், ஒரு பாதிரியாரின்  தலைமையில் – நீதிபதி கே.டி.தாமஸ அவர்களின் வீட்டை  நோக்கி கோஷம் போட்டுக்கொண்டு முற்றுகையிடசென்றது. போலீஸ் தலையிட்டு அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கின்றனர் ! நீதிபதி கே.டி.தாமஸ,  இது குறித்து தான் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாகக் கூறி இருக்கிறார்.

அடுத்த ஆசாமியின் போக்கு தான் மகா கேவலம் ! முன்னாள் கம்யூனிஸ்டும், ஒய்வு பெற்ற நீதிபதியுமாகிய ஈ.ஆர. கிருஷ்ணய்யர்  உளறியது  –

“சுப்ரீம் கோர்ட்டுக்கு அணைகளைப் பற்றி  என்ன தெரியும் ? ஒய்வு பெற்ற நீதிபதிகளை கமிட்டியில் போட்டு அறிக்கை வாங்க இது என்ன சட்டப்பிரச்சினையா ? கமிட்டியில் இருப்பவர்களுக்கு  அணையப்பற்றிய அடிப்படை அறிவே கிடையாது.  சுப்ரீம் கோர்ட் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை கேட்டிருக்க  வேண்டும்.  இந்த ரிப்போர்ட் ஏற்கத்தக்கதல்ல  – கேரளா இதை நிராகரிக்க வேண்டும். ”

கேரள அரசு கூறுகிறது –

இந்த அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. புதிய அணை ஒன்றே இந்த பிரச்சினைக்கு  தீர்வு.   இது குறித்து தமிழ்நாடும் கேரளாவும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த  வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுவாக  கேரள மக்களிடையே இது குறித்து இப்போதைக்கு இயல்பான சீரியஸ்   ரீ-ஆக் ஷன் எதுவும் இல்லை.  ஆனால் அரசியல்வாதிகளும், பாதிரியார்களும் கூச்சல்  போடுவதும் தூண்டிவிடுவதுமாக இருக்கிறார்கள் !! (கேரள அரசில்  கூட்டணி கட்சியான கேரள காங்கிரஸ் சிரியன் கிறிஸ்தவ  பாதிரியார்களின்  கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது !)

முக்கியமாக இத்தனைக்கும் பின்னால் இருப்பது – பணம் ! முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் ரிசார்ட்டுகளின் சொந்தக்காரர்கள்  செலவழிக்கும் பணம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ?

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஒருதலைப்பட்சமான தீர்ப்பு என்று தீர்ப்பு வருவதற்கு முன்பே கூறும் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்?
    ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதே சரியான தீர்வுக்காகத்தான்! அந்த சரியான தீர்வு என்பது தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்று கோருவது அல்லது நிர்பந்திப்பது என்பது கீழ்த்தரமானது. கேரளத்தவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லாமல் கட்டபஞ்சாய்த்திலேயே அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்போல!
    இப்போது அதுபோக கூடங்குளம் மின்சாரத்தில் வேறு பங்கு கேட்கின்றனர்.
    வெட்கங்கெட்டவர்கள்!

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மற்றவர்களை விடுங்கள் கா.மை.
    ஏதோ நீதி தேவதையின் மூத்த மகன் என பரவலாக கருதப்படும் கிருஷ்ண ஐயர,
    முதலில் தான் ஒரு மலையாளி பிறகுதான் எல்லாம் என நிரூபித்து விட்டார்.இவரெல்லாம் ஒரு நீதிபதி!! வெட்கப்படுகிறேன்.
    ஆமாம்,தமிழக நலனில் கா.மை.தவிர வேறு ஆர்வலர்களுக்கோ,ஊடகங்களுக்கோ எந்த ஆர்வமும் இருப்பது போல தெரியவில்லையே!
    ஜெயாவின் நிலை என்ன?

  3. rachinn's avatar rachinn சொல்கிறார்:

    @ Ganpat //முதலில் தான் ஒரு மலையாளி பிறகுதான் எல்லாம் என நிரூபித்து விட்டார்//
    நீதிபதி கிருஷ்ணய்யர் உண்மையில் நல்லவர்தான்.மனித உரிமை செயல்பாட்டாளர்!அவர் மலயாளி அல்ல!இருந்தாலும் தவறும் இல்லை!!!
    அவர் பாலக்காடு அய்யர்!அதாவது தமிழர் !!!!

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    மரண தண்டனைக்கு எதிராக நீதிபதி கிருஷ்ணய்யரது கருத்துக்களால் அவர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. கடைசியில் அவரும் சராசரி அரசியல்வாதி போல உளற தொடங்கி விட்டாரே!

  5. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    ஒய்வு பெற்ற நீதிபதி திரு ஜோசப் கூறுகிறார் நான் அரசு சார்பற்றவன் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கமிட்டியில்
    உள்ளவர். தமிழ்நாட்டுக்கோ அல்லது கேரளாவுக்கோ ஒருதலை பட்சமாக எனது கருத்தை கூறவில்லை. என்மீது
    கேரளத்தை சேர்ந்தவர்கள் குறை கூறுவதை என்னால ஏற்று கொள்ளமுடியாது. ஆவணங்களின் அடிப்படையில்
    ஆய்வு செய்து எனது கருத்தை கூறியுள்ளேன். கேரள முதல்வர் திரு உம்மன்சாண்டியும் அதனை ஏற்று கொண்டுள்ளார்.
    இந்த செய்தி மாத்ருபூமி மலையாள பத்திரிகையில் வெளிவந்தது ஆகும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.