எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் ….. ?
கடந்த நான்கு நாட்களில் செய்தித்தாள்களில் பல்வேறு அமைப்புகளால் காசு கொடுத்து செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் இவை …….
எங்கே, எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் நாம் ? இந்த லட்சணத்தில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் வேறு ….. !
இவை சாதனையையா பிரதிபலிக்கின்றன ?
நான் இதை ஒரு அவமானகரமான நிலையாக
நினைக்கிறேன். உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா ?











🙂
நடிகர் கருணாஸ் அகமுடையார், கள்ளர், மறவர் எனும் முக்குலத்தோர் பிரிவினரை “தேவர்” என்றே ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்!!
அவரவர் ஜாதிகளில் எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டுவதற்குத்தான் இந்த அறிவிப்புகள். அடுத்தபடியாக, இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது, பெரும்பான்மை ஜாதி எதுவோ அவர்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று குரல் எழும்பக்கூடிய வாய்ப்பிருக்கிறது!!
இரு ஜாதியினர் கூட்டணி அமைத்துக்கொண்டு – இப்போ எங்க பலம் ஜாஸ்தி – என்று சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது!!! ஹா..ஹா… கலக்குங்க மக்களே!!
நீண்ட காலமாக ஜாதிப் பெயர் அனைவருடனும் வாலாக
ஒட்டிக்கொண்டிருந்தது. உண்மை (அய்யர் / அய்யங்கார் / முதலியார்/ செட்டியார்/
நாயுடு / நாயக்கர் /பிள்ளை / கவுண்டர் / தேவர் !)
பெரியாரையே ராமசாமி நாயக்கர் என்று தானே ஆரம்ப காலத்தில்
அழைத்தார்கள் ?!
பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகளால் சமுதாயம் கொஞ்சம்
கொஞ்சமாக மாற மாற ஜாதிப்பெயர்களை சேர்த்துக்கொள்ள
மக்கள் வெட்கப்பட ஆரம்பித்தார்கள்.
.
இப்போது கேடுகெட்ட சுயனல அரசியல்வாதிகளால் மீண்டும்
ஜாதிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஜாதி ஓட்டுக்காக கூட்டணி
அமைக்கிறார்கள்.. பெரியாரின் வழி வந்தவர்கள்
ஜாதிக்கட்சிகள் உருவாக ஊக்கம் கொடுக்கிரார்கள்.
ஜாதிகளின் அடிப்படையிலேயே வேட்பாளர்களை தேர்தலில்
நிறுத்துகிறார்கள்.
இப்போது மீண்டும் ஜாதிகள் தோன்றக்காரணம் நிச்சயமாக மக்கள் அல்ல –
ஜாதிகளை வைத்து பிரிவினையையும், போட்டியையும் உண்டுபண்ணும்
கேடு கேட்ட சுயநலவாத அரசியல்வாதிகளே !
ஜாதிப் பெயரை தேர்தலில் பயன்படுத்துவது சட்டவிரோதம்
என்று அறிவிக்க வேண்டும்.
ஜாதியின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்
பழக்கம் ஒழிய வேண்டும்.
No alarming needed on this. In my view these advt.s are for information to show that they are the leaders in their factions obviously to peep their heads in future elections. In most of families of Caste leaders , there may be Inter caste marriages either in their own or nearest.
ஜாதி வாரி கணக்கெடுப்பு என மத்திய அரசு தீர்மானித்த போது தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா என்று தெரியாது
அவ்வாறு தெரிவிக்காமல் இருந்திருந்தால் தற்போது ஜாதி சங்கங்களின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க
தங்களுக்கு தார்மீக உரிமையில்லை. கல்வியானாலும். வேலைக்காக இருந்தாலும் வோட்டு போடவேண்டுமானாலும்
பொருளாதார ரீதியாக இருந்தாலும் ஜாதியையும் மதத்தையும் யாராலும் ஒழிக்க முடியாது.
ஒழிக்கமுடியாது என்பதைக் காட்டிலும் ‘ஒழிக்கக் கூடாது’ என்ற எண்ணமே மேலோங்கி இருப்பது போலத் தெரிகிறது!!! வாழ்க நண்பரே!
நிச்சயமாக இது ஒரு அவமானச் செயலே திரு காவிரிமைந்தன் அவர்களே!
ஆனால் இது திரு. ராஜராஜசோழன் கூறுவது போல “கேடு கேட்ட சுயநலவாத அரசியல்வாதிகள்” மட்டுமே காரணமல்ல. மக்களும்தான்.
நம்மில் எத்தனைபேர் “கோட்டா” வேண்டும் என்று தன்னுடைய ஜாதியை மாற்றி/தாழ்த்தி சான்றிதழை பெறுகிறோம். ஜாதிகளில்லை என்று கூறிக்கொள்ளும் இஸுலாமியர்கள் தங்களை லப்பை, ராவுத்தர், பட்டானி என்று போட்டுக்கொண்டும், கிறிஸ்துவர்கள் தங்களை தாழ்த்தப்பட்ட கிறிஸ்து என்றும் சலுகைகளை பெறாமலா இருக்கின்றோம்?
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் இந்த “கோட்டா” சிஸ்டத்தால் ஜாதிகள் அழியாமல் மேலும் மேலும் வளர்க்கப்பட்டுள்ளன என்பதே உண்மை நிலை.
அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகள் யாரும் ஜாதியை முக்கியப்படுத்தி எந்த சலுகையும் பெறமுடியாதவாரு ஒரு சட்டதிருத்தம் கொண்டுவந்து முயற்சி செய்து பார்க்கலாம். அப்படியாவது நாடு முன்னேறினால் சரிதான்.
ண்பர் ரிஷி கூறியது உண்மைதான். சைதை அஜீஸ் கூறிய கருத்தின் அடிப்படையில் ஜாதி அடிப்படையில்
சலுகைகள் வழங்கும் காலம் வரை ஜாதியும் மதவும் ஒழிக்க முடியாததுதான்.
சாதி வாரி சலுகை இருக்கும் வரை சாதி இருக்கும்
நண்பர்களே –
இது குறித்து மேலும் விவாதிப்பதற்காக
சில கேள்விகள் –
தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும் சரி,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும் சரி –
ஏற்கெனவே சலுகைகளைப் பெற்று முன்னுக்கு வந்தவர்கள் பலர்
(நான் எல்லாரையும் சொல்லவில்லை )
சலுகை பெறத்தகுதி உள்ள மற்றவர்களுக்கு அந்த சலுகைகள்
கிடைக்காமல் இவர்களே மீண்டும் மீண்டும் வழியை அடைத்து
பெற்றுக்கொள்கிறார்கள்.
சலுகைகள் காரணமாக பதவி பெற்ற ஒரே குடும்பத்தில்,
மூன்று நான்கு IAS /IPS அதிகாரிகளை சகஜமாகப் பார்க்க
முடிகிறது.
எங்கெல்லாம் அரசியல் சட்டத்தில் சலுகைகள் தரப்படுகின்றனவோ
அங்கெல்லாம், குடும்பத்தில் முதல் நபருக்கு மட்டுமே சலுகை
என்று ஒரு விதி கொண்டு வந்தால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதா ?
சலுகை என்பது நிஜமாகவே அது தேவைப்படுபவர்களுக்கு
மட்டும் தான் அளிக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே வசதியாக உள்ளவர்கள் ஜாதி அடிப்படையை மட்டும்
காரணம் காட்டி சலுகைகளைபெற அனுமதிக்கக் கூடாது
என்று ஒரு விதி கொண்டு வந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா ?
நல்ல வசதி உள்ளவர்கள் ஜாதியை காரணம் காட்டி சலுகைகள்
பெற முயல்வது – அவமானகரமான விஷயம் என்று சொன்னால்
அதை ஏற்றுக்கொள்வீர்களா ?
ஜாதி அடிப்படையில் இயங்கும் அமைப்புக்கள்
தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டா என்று ஒரு
விதி கொண்டு வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா ?
தேர்தலில் ஜாதிப் பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதோ –
ஒட்டு கேட்பதோ – சட்ட விரோதம் என்று தேர்தல் கமிஷன்
ஒரு விதி கொண்டு வந்தால் – அதை வரவேற்பீர்களா?
என் கருத்து –
ஜாதிகளின் அடிப்படையில் யாரையும் உயர்வாகவோ
தாழ்வாகவோ கருதுவது அபத்தமானது.
எப்படியோ ஜாதிகள் நம் சமூக வழக்கில் ஒரு முக்கிய
இடத்தை பெற்று விட்டன.
ஜாதிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டாலே –
காலப்போக்கில் அவை தாமாகவே தீவிரம் குறைந்து
வெறும் கலாச்சார அடையாளமாக மட்டும் –
குடும்ப சடங்குகளில் மட்டும் வெளிப்படுவதுடன் நின்று விடும்.
சங்கங்கள் அமைத்தும், வித்தியாசங்களை தீவிரமாக
உணர்த்தியும், குழுவாக சேர்ந்து கொண்டு செயல்பட்டும்,
ஜாதி உணர்வைத்தூண்டும் விதத்தில் செயல்படுவதும்,
அரசியல் நோக்கங்களுக்கு ஜாதி வித்தியாசங்களைப்
பயன்படுத்துவதும் தான் ஜாதிகள் மீண்டும் தலை தூக்கக் காரணம்
என்று தோன்றுகிறது.
உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் நண்பர்களே –
இது குறித்து உணர்ச்சி வசப்படாமல் சிறிது யோசிப்போமே !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நம்ம இங்கே பேசி பயன் இல்லை ……முதலில் தமிழ் நாட்லே உள்ள
சாதி தலைவர்கள் சிலையை எல்லாம் இடிக்க வேண்டும் …….
இந்தியாவில் 3000 ஆண்டுகளாக பார்பனியம் தன்னுடைய சாதியஅமைப்பின் மூலமே (கல்விமறுப்பு, குல வேலை மற்றும் தீண்டாமை ) ஒடுக்குமுறை செய்து வந்துள்ளது ……..ஆகவே இவ்வமைப்பில் இருந்து விடுதலை பெறவும் அசாதியயே பயன்படுதவேண்டி உள்ளது ……. கடந்தகாலங்களில் நாம் அவ்வாறே பயன் பெற்றுள்ளோம் ஆகவே இதில் வேதனை படவோ வெட்கப்படவோ ஒன்றும் இல்லை. இது எல்லாம் தவறு என்று சொல்பவர்கள் முதலில் இன்டர்நெட் மூலம் சாதி பார்த்து திருமணம் செய்வதை நிறுத்தட்டும்…………அவர்கள் வேண்டுமானால் சாதி சான்றிதல் வாங்குவதை நிறுத்தி கொள்ளட்டும்……. வகுப்பு வாரி பிரதிநித்துவம் என்பது பெரியாரால் அம்பேத்கரால் நமக்கு பெற்று தரப்பட்ட உரிமை அவுரிமையை நாம் மேலும் செழுமை படுத்தி பயன் பெறுவோம் !
தோழர் கருத்தான் அவர்கள் கவனத்திற்கு,
மேலே உள்ள விளம்பரங்களில் காணப்படும்
ஆறு நாட்டு வேளாளர்,
கவரா நாயுடு,
பலிஜா நாயுடு,
அகமுடையார்,
செங்குந்தர்,
துளுவ வேளாளர்,
வேளாளர்,
கைக்கோளர்,
பிள்ளைமார்,
சேனைதலைவர்,
உடையார்,
முதலியார்,
ரெட்டி கஞ்சம்,
கோனார் பிள்ளை
மந்திரி கரையாளர்,
அம்பலம்,
தாஸ் நாயுடு,
வடுக இடையர்,
நம்பியார்,
கொல்லர்,
குரும்ப கவுண்டர் –
என்கிற இந்த ஜாதிகளை எல்லாம் எந்த பார்ப்பனர் உண்டு பண்ணினார் ?
பார்ப்பனர் உண்டுபண்ணியதாகக் கூறப்படுவது நான்கு ஜாதிகள்
மட்டும் தானே ? மீதி எல்லாம் நமது பெருமை மிக்க உருவாக்கம் தானே ?
ஏன் எதற்கெடுத்தாலும் பார்ப்பனரை குறை கூறித் தப்பித்துப் போகிறீர்கள் ?
பார்ப்பனர்களை விட – மேல் ஜாதி இந்துக்கள் என்று
கூறிக்கொண்டு சிலர் – தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும்
கொடுமைகளை நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை ?
இன்றும் இரட்டை டம்ளர் முறையை அனுசரிப்பது யார் ?
அதை எதிர்த்து கேள்வி கேட்க உங்களுக்கு தோன்றாதது ஏன் ?
மேலே நண்பர் ரிஷி கூறியுள்ளவற்றிற்கு உங்கள் விளக்கம் என்ன ?
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நீங்கள் “செழுமையாக”
பயன்படுத்திக்கொள்வது பற்றி மேலே காவிரிமைந்தன்
பல கேள்விகளை எழுப்பி இருக்கிறாரே
அவற்றிற்கான உங்கள் விளக்கங்களையும் நீங்கள்
அளிக்கும்போது தானே உங்கள் பதில் முழுமை பெறும் ?
இப்போ மூன்றே பிரிவுகள் தான் உள்ளன:
A.பார்பனர்கள்
B.ஜாதி இந்துக்கள்
C.தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குடியினர்.
இதில் இடஒதுக்கீடு கொள்கையால் மிகவும் பயன் அடைந்தவர்கள் ஜாதி இந்துக்கள்
மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பார்பனர்கள்.
ஆனால் ஜாதி இந்துக்கள் மிகவும் சாதுர்யமாக எப்பொழுதெல்லாம் ஜாதி பிரச்சினை வருகிறதோ அப்பொழுதெல்லாம் பழியை பார்பனர்கள் மீது போட்டு தப்பித்து விடுவார்கள்.உண்மையில் மிகவும் ஜாதி பற்று கொண்டவர்கள் ஜாதி இந்துக்களே.
எனக்குதெரிந்தவரை இந்த நிலை இப்போதைக்கு மாற வாய்ப்பில்லை.அதாவது இன்னும் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு.ஜனநாயகம் என்பது எண்ணிக்கை சார்ந்தது.இனி இங்கு பார்பனர்கள் மேலே வர வாய்ப்பில்லை.அதை உணர்ந்து அவர்களும் வெளிநாடுகளுக்கு புலம் பெயர துவங்கி விட்டனர்.
இதில் நியாய அநியாயம் என்பது ஒன்றும் கிடையாது.செளகரியங்கள் உள்ளவரை ஜாதிகள் இருக்கும்.
பின் என்னதான் செய்யலாம்.???
(தொடரும்..யாராவது விரும்பினால்!)
//Ganpat says:
1:56 மு.பகல் இல் மே 8, 2012
இப்போ மூன்றே பிரிவுகள் தான் உள்ளன:
A.பார்பனர்கள்
B.ஜாதி இந்துக்கள்
C.தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குடியினர்.
இதில் இடஒதுக்கீடு கொள்கையால் மிகவும் பயன் அடைந்தவர்கள் ஜாதி இந்துக்கள்
மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பார்பனர்கள்.
ஆனால் ஜாதி இந்துக்கள் மிகவும் சாதுர்யமாக எப்பொழுதெல்லாம் ஜாதி பிரச்சினை வருகிறதோ அப்பொழுதெல்லாம் பழியை பார்பனர்கள் மீது போட்டு தப்பித்து விடுவார்கள்//
ஒதுக்கீட்டு முறையால் ஜாதி இந்துக்கள் பயன் பெற்றிருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் அவர்களில் யாருக்கு அந்த ஊன்றுகோல் அவசியமோ, அவர்களுக்கு உதவியதா? அல்லது பொருளாதார மற்றும் சமூக நிலையில் ஓரளவு நல்ல நிலையில் இருந்தவர்களுக்கு உதவியதா??
மேலும், மண்டல் சொன்னவற்றில் சரியான க்ரீமி லேயர் அணுகுமுறையை விரிவாக்க இந்த கணக்கெடுப்பு பயன் தருமா?
கா.மை. எழுப்பிய வினாக்களுக்கு கருத்தான்கள் , கோவிகள், மதிமாறன்கள் , வினவுகள் பதில் சொல்லட்டும்.
திராவிட கட்சிகளின் ஆட்சியின் விளைவால் அமைந்த
அரசியல் களமும், சாதி ரீதியிலான அமைப்புகள் அரசியல்
கட்சிகளாக உருவம் பெற்றதும், ஜெயலலிதாவால் அரசியல்
பின்னடைவுகளை சந்தித்த தலைவர்கள் (?!) சாதி ரீதியிலான
அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு மீண்டும் தலைவர்கள்
ஆனதும். இவற்றையெல்லாம் தாண்டி “மக்கள்” அறிவு
முதிர்ச்சி அடையாததும் (இதற்கு முதல் காரணமே காரணம்)
தான் இந்த நிலைக்கு காரணம்.
அனால், ஆரியர்களே (தமிழ் மக்களின்) சாதி அமைப்புகளுக்கு
காரணம் என்கிறதாய் ஒரு பிரசாரம் தொடங்கி வெகுகாலமாகி
விட்டது. ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்டதாய் சொல்லப்படும்
நான்கு வர்ண ஆஸ்ரமத்தில், சாதிகள் இல்லை. மாறாக, சொல்லப்பட்ட
வர்நாதிகள் நடைமுறை வாழ்க்கைக்கான செயல் முறைகள்தான்
சொல்லப்பட்டுள்ளன. (சூத்திரனுக்கு சுகம், வைசியனுக்கு வணிகம்,
க்ஷத்திர்யனுக்கு வீரம், பிராமிணனுக்கு தர்மம் — இப்போது
பெயருக்குத்தான் பிராமிணன் என்பது வேறு விஷயம்).
சாதிக்கும், தலைவர்களுக்கு அங்கீகாரமும் வந்த பின்னர் ஒதுக்கீடு
வந்து, தலைவர்கள் தலையிட்டு உள்ஒதுக்கீடு வந்து, பயன் பெற்றவரே
மீண்டும் மீண்டும் பயனடைந்து. ஏதாவது மாயம் நடந்துவிடாதா
நாமும் மேலேறிவிட மாட்டோமா என தவிப்பவன் தவித்துக் கொண்டே
இருக்க, நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோம்.
நாளை என்ன என்பதை யாரால் எளிதில் கணித்துவிட முடியும்?
அனைவருக்கும் பொருளாதார ரீதியாக மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும். கல்வி மற்றும் வேலையை பொறுத்த வரை தகுதி உள்ளவர்களுக்கு மெரிட்டின் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பழைய பார்ப்பனீய கதைகளை கூறி சலுகைகள் பெறுவதை அவமானமாக கருதும் மனபக்குவம் வரவேண்டும். இந்த நிலை
வரும்வரை ஜாதிகள் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
முதலில் கோட்டா ஸிஸ்டம் வந்ததின் நோக்கம் மிகப்புனிதமானது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் பின்னர் அதை நாம் நம் இஷ்டத்துக்கு மாற்றி அதை அதன் நோக்கத்தை அதன் புனிதத்தை கெடுத்துவிட்டு இப்போது அந்த ஸிஸ்டமே தவறு என்பது போல கதறுகிறோம் என்பதே என் கருத்து.
உதாரணத்துக்கு, பிளாஸ்டிக், அணு பிளவு, ஏன் நம் இபிகோ சட்டங்கள் கூட!
திரு காவிரிமைந்தன் கூறுவதுபோல, குடும்பத்திற்கு ஒருவருக்குதான் சலுகை என்றால், உடனே நான் அந்த குடும்பத்தில் இல்லை என்று ஒரு சான்று கொண்டுவந்து, அப்போதும் அந்த சட்டத்தை கேலி செய்ய பலர் இருப்பர்.
“ஜாதிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டாலே –
காலப்போக்கில் அவை தாமாகவே தீவிரம் குறைந்துவிடும்” என்பதையும் நம்ப மனம் மறுக்கிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்… என்பதுபோல நாம் அதை பயன்படுத்துவதை அவமானமாக கருதவேண்டும். மாற்றம் என்பது முதலில் என்னிடமிருந்து வரவேண்டும்.
ஆனால் நாமோ காரில் சென்று இலவச டிவி கிரைண்டர் மிக்ஸி வாங்குவதில் வெட்கப்படுவதில்லை!
வோட்டுக்கு பணம் வாங்க வேதனைப்படுவதில்லை!
இந்த மதத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த மதத்திற்கு சென்றுவிட்டு ஆனாலும் பழையமதத்தில் உள்ள சலுகையை கோர அவமானப்படுவதில்லை!
“பார்ப்பனர்களை விட – மேல் ஜாதி இந்துக்கள் என்று
கூறிக்கொண்டு சிலர் – தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும்
கொடுமைகளை நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை ?
இன்றும் இரட்டை டம்ளர் முறையை அனுசரிப்பது யார் ?”
நூறு சதவீத உண்மை..தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது..
குறிப்பிட்ட அந்த சாதி மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னமும் அடிமையாகவே இருக்கின்றனர்..இது இங்குள்ள எல்லா கட்சி
அரசியல்வாதிகளுக்கும் தெரியும்..அதே இனத்தில் நல்ல மனிதர்களும் இருக்கின்றனர்..ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு
தங்களை உயர்த்தி மற்றவர்களை வேறுபடுத்தி, தாழ்த்திப் பார்க்க அடிமனது விரும்புகிறது..இது எல்லா சாதி மக்களுக்கும் பொருந்தும்.
உதாரணம்=தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லப்படும் மக்களிடையே காணப்படும் உட்பிரிவு வேறுபாடுகள்..தனிமனித மனமாற்றம்,
நல்ல கல்வி, சுயமரியாதை கருத்துக்கள், போன்றவை பெருகினால் தான் மாற்றம்
வரும். ஆனால் தற்போதைய அரசியல் சமுதாய சூழ்நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.நானும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் தான்…
உலகநாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது அவர்கள் எந்த முறையில் ஒடுக்க பட்டார்களோ …..நிறவேற்றுமை இனவேற்றுமை ………அதே முறையில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் பார்பனிய சாதி அமைப்பின் மூலம் ஒடுக்குமுறை நடந்துள்ளது ஆகவே அதன் அடிப்படையில் ஒது கீடு வழங்கப்பட்டுள்ளது இதில் அனைவருக்கும் வாயப்புகிடைக்க வேண்டும் என்பது சரியானது அதை செழுமை படுத்துவோம் அதில் ஒரு சோதனை முயற்சியே சாதிவாரி கணக்கெடுப்பு ……….கருணாஸ் கூறியபடி தேவர் என்று சொன்னால் அவர் முற்பட்டவர் ஆகி விடுவார்……கள்ளர் அல்லது மறவர் என்றால்தான் மிகவும் பிற்பட்டவர் ஆவர் ஆகவே தேவர் முதலியார் பிள்ளை கவுண்டர் இவை எல்லாம் பட்டங்கள் ஆகும் இவற்றை கூறினால் அவர் முற்பட்டவர் ஆகி உரிமையை இழக்க நேரிடும் …………மேலும் இங்கு இனக்குழு சமூகங்கள் மீதும் வேலைபிரிவினாயால் ஏற்பட்ட குழுக்களின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அவற்றை சாதிகளகியது பார்ப்பனீயம் உதாரணம் ……மறவர் என்பது இனக்குழு அதனை தேவர் என்பது பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்த்ததற்கு கிடைத்த பட்டம் …………………….மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையில் முரண்பாடு என்பது பிற்படுத்த பட்ட மக்களிடம் உள்ள பார்ப்பனியத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள ஆதிக்க சாதி கண்ணோட்டமே உதாரணம் சத்திரிய இனமே என்று அழைப்பது தமிழ் நாட்டில் சத்திரிய இனம் என்று ஒன்றுகிடயாது
ஒரு யோசனை –
ஜாதிவாரி சமுதாய விவரங்களை சேகரிப்பதற்காக
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்கெனவே தங்கள் பணியை
துவங்கி விட்டார்கள். எப்போது வேண்டுமானாலும்
நம் வீட்டிற்கு வருவார்கள்.
ஜாதி சம்பந்தப்பட்ட விவரங்களை கேட்கும்போது –
தெரிவிக்க விருப்பமில்லை என்று சொல்ல நமக்கு
உரிமை உண்டு. அந்த உரிமையை பயன்படுத்தினால் என்ன ?
இதனால் என்ன பலன் என்று கேட்கலாம் –
தேர்தலில் வாக்குப்பதிவின் போது -49 -0 பிரிவின் கீழ –
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு
செய்கிறோம் அல்லவா ?
அதே போல் இந்த கணக்கெடுப்பின் முடிவில்
ஜாதிப்பெயரை தெரிவிக்க விரும்பாதோர் என்று ஒரு
பிரிவில் எண்ணிக்கையும் வெளியிடப்படும்.
ஜாதிப்பெயரை பயன்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர்கள்
நிறைய பேர் இருக்கிறோம் என்பதையும் பதிவு செய்வோமே –
தெரியப்படுத்துவோமே !
ஒரு சிறு முயற்சி தான் ! இருந்தாலும் இப்படியும் மக்கள்
நினைக்கிறார்கள் என்பது பதிவாகட்டுமே –
என்ன சொல்கிறீர்கள் ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நல்ல யோசனை. ஆனால் எத்தனை பேர் தங்கள் சலுகைகளை இழக்க முன்வருவார்கள்.
ஜாதி ஒழிய வேணுமானால் எப்படி மதம் மாறும் உரிமை நமக்கு உள்ளதோ அது போல ஜாதி மாறும் உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.4பிரிவுகள் மட்டுமே அரசின் சலுகைகளை பெற வைத்துகொள்ள வேண்டும்.அதாவது முனேறிய பிரிவு,பிற்படுத்தப்பட்ட பிரிவு,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு தாழ்த்தப்பட்ட பிரிவு என்பது மட்டுமே சட்டம் ஒப்புக்கொள்ளவேண்டும்,பெயர் மாற்றுவது போல யார் எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் மாறி கொள்ளலாம் என்று ஆகிவிட்டால் ஜாதிகள் பெருமளவு குறைந்துவிடும்.
நண்பர் தங்கம் சொன்னது பிரமாதமான யோசனை …..!
ஆனால் அதில் ஒரே ஒரு சங்கடம் இருக்கும் –
அத்தனை பெறும் நாலாவது பிரிவிற்கு மாறி விடுவார்கள் !
பிறகு ரிசர்வேஷன் சட்டம் என்ன ஆகும் ?
சாதியை நிச்சயமாக ஒழிக்க முடியும்.. கீழ்கண்டவற்றை நம்மால் செய்ய முடிந்தால்..
1) பிறப்பின் அடிப்படையில் சாதியை தீர்மானிக்காமல் தொழில் அடிபடையில் தீர்மானித்தால்.. உதரணமாக பொறியியல் சார்ந்த அனைவரும் ஆசாரி.. காவல், படையில் வேலை செய்யும் அனைவரும் சத்திரியர், தொழில் முனைவோர் அனைவரும் வைசியர்..அர்ச்சகர் படிப்பு முடித்து தகுதி பெற்ற அனைவரும் பிராமணர்..
2 ) படித்த சாதி மறுக்கும்/மறைக்க/பதிவு செய்ய விரும்பாத நாம் அனைவரும் திருமணங்கள் செய்யும் போது பிறப்பின் அடிப்படையிலான வேறு சாதியுடன் மட்டுமே செய்ய உறுதி எடுத்தால்..
3) மேல் சாதி, உயர் சாதி மக்கள் குறிப்பாக பட்டியல் (reservation) சாதிகள் எனப்படும் SC /ST சாதி மக்களை நிறைய திருமணம் செய்ய வேண்டும்.அதுவும் குறிப்பாக யார் யார் எல்லாம் இட ஒதுக்கீடு மூலமாக பாதிக்கபடுவதாக நினைக்கிறார்களோ அவர்களோ அல்லது அவர்கள் பிள்ளைகளோ செய்வதாக உறுதி பூண்டால்..
4) இட ஒதுக்கீடு மூலமாக நிறைய லாபம் அடைந்து சமூகத்தின் முன்னேறிய அடையாளமாக திகழும் SC /ST /BC /MBC /DC மக்கள் பெரிய மனது பண்ணி மற்ற சாதி மக்களை தங்களுக்குள் உறவு முறையில் (மண முறையில்) சேர்த்து கொள்ள முன் வந்தால்..
இன்னும் இருக்கு.. இதுக்கு மத்தவங்க என்ன கருதுறாங்கனு பாக்கணும்..