பாலாஜி சக்திவேல் – மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ….
வெளியிடப்படும் முதல் நாளே திரைப்படம் பார்க்கவோ – திரைப்பட விமரிசனம் எழுதவோ – நான் சரியான ஆளில்லை.
இருந்தாலும் ஓரளவு எதிர்பார்ப்புடன் – இன்று வெளியான பாலாஜி சக்திவேலின படத்திற்கு போனேன். படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதா விட்டால் என்னால் இன்றிரவு தூங்க முடியாது என்று தோன்றுகிறது.
எனவே – ஒரே வரியில் சொல்ல விரும்புகிறேன் –
என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்த தமிழ்ப்படங்களிலேயே மிகச்சிறந்த படம் இது !!
படம் முடிந்தவுடன் – என்னையும் அறியாமல் எழுந்து நின்று கைதட்டினேன்.
ஒரு பொழுதுபோக்கு சாதனத்தை, அதன் சுவாரசியம் சிறிதும் குறையாமல், சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு உபயோகமாக பயன்படுத்த முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு மனம் நிறைந்த – வாழ்த்துக்கள் ! பாராட்டுகள் !!!




NO COMMENTS
i too watched this movie on very first show at mannargudi………gud one!criminals can get away but hw innocents are being framed by law enforcement officials ……..a neat movie indeed!thank u !!
first Appriciation without any comments from Kaviriminthan?
“வழக்கு எண் 18/9” என்ற சினிமா ஏற்படுத்தும் அதிர்வும் அதன் உணர்ச்சி குறித்தும்
கலை மனித வாழ்க்கையை புரட்டி போடுவதற்கு தான். பணம் சம்பாதிக்கவும், மக்களை அடிமைப்படுத்தவுமல்ல என்பதற்கு இந்த “வழக்கு எண் 18ஃ9” என்ற சினிமா ஒரு எடுத்துக்காட்டு.
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8501:2012-06-17-082535&catid=359:2012#comments