வெளிச்சத்துக்கு வராத அபூர்வ வழக்கு – தமிழகத்திற்கு எதிராக ப.சிதம்பரம் அவர்கள் வாதாடி இருக்கும் விசித்திரம் !!

வெளிச்சத்துக்கு வராத அபூர்வ  வழக்கு – தமிழகத்திற்கு எதிராக  ப.சிதம்பரம் அவர்கள்  வாதாடி இருக்கும் விசித்திரம் !!

நம்ப முடியாத அளவிற்கு ஒரு விசித்திரமான வழக்கு நடந்திருக்கிறது – அதைப்பற்றிய தகவலே இதுநாள் வரை வெளிவரவில்லை !

இப்போது வெளிவந்துள்ள விவரங்கள் –

திமுக  அதிகாரத்தில்  இருந்தபோது  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் வீடியோகான்  நிறுவனத்திற்கும் இடையே மின் உற்பத்தி நிறுவனம் தொடங்குவது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

பின்னர் – என்ன காரணம் என்று தெரியவில்லை – தமிழ் நாடு அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது.

செய்துகொண்ட ஒப்பந்தத்தை தன்னிச்சையாக  ரத்து செய்ததால் 3000 கோடி  (ஆமாம் மூவாயிரம் கோடி ) ரூபாய்  நஷ்டஈடு கோரி தமிழ்நாடு மின்வாரியத்தின் மீது வீடியோகான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் – சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறது.  இறுதியில் – தமிழ்நாடு மின்வாரியம், வீடியோகான் நிறுவனத்திற்கு  125 கோடி ( ஆமாம் நூற்றி இருபத்தி ஐந்து கோடி ) ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று  சிங்கப்பூரில் உள்ள சர்வ தேச நீதிமன்றம்  தீர்ப்பு அளித்திருக்கிறது. ( இதை எதிர்த்து அப்பீல் செய்திருப்பதாக தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது !)

இந்த வழக்கில் வீடியோகான் நிறுவனத்தின் சார்பாகவும், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு எதிராகவும் – திரு ப. சிதம்பரம் அவர்கள் வாதாடி வீடியோகான் நிறுவனத்திற்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறார் !!

தமிழ்நாட்டிற்கு எதிராக ப.சி அவர்கள் வாதாடினார் என்பதை நம்ப முடியாமல் விவரங்களைத் தேடி  மீண்டும் பார்த்தேன்.

இந்த தகவல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் – மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்  அவர்கள் மின்துறை  மானிய கோரிக்கைக்கான விவாதங்களின் போது ஆற்றிய உரையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் என்பதால் – இதில் நம்பகத்தன்மை குறித்து எந்தவித ஐயத்திற்கும் இடமே  இல்லை.

இந்த செய்தி குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன –

1)  இந்த  ஒப்பந்தம் எப்போது போடப்பட்டது ?

2)  பின்னர் எப்போது  ரத்து செய்யப்பட்டது ? ஏன் ரத்து செய்யப்பட்டது  ?

3)  ஒப்பந்தத்தில் நஷ்டஈடு குறித்து சரத்து ஏதாவது இருந்திருக்க வேண்டுமே – ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது அதுகுறித்து யோசிக்கப்படவில்லையா ?

4)  சாதாரணமாக தமிழ்நாட்டில் போடப்படும் ஒப்பந்தங்களில் இரு தரப்பாருக்கும் இடையே பிரச்சினைகள் ஏதேனும் வந்தால் அவை இந்திய நீதிமன்றத்தின் ஆளுகைக்குள் வரும்படி ஒரு சரத்து சேர்க்கப்பட்டிருக்குமே – இதில் மட்டும் எப்படி சர்வதேச நீதிமன்றம் உள்ளே  வந்தது ?

5) தமிழ்நாட்டிற்கு எதிரான ஒரு  வழக்கில் ஆஜராகி, வாதாடி, தமிழ்நாட்டிற்கு  நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாய்  நஷ்டம் ஏற்படும் அளவிற்கு   ப.சி. செயல்படுவாரா ? இந்த செய்தியால் அவருக்கு அரசியல் ரீதியாக ஏற்படும் பாதிப்பு குறித்து யோசித்திருக்க மாட்டாரா ? (உண்மையில் அவர்கள் கேட்டு வாதாடி இருப்பது – மூவாயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ! )

6) முக்கியமாக- கூட்டணிக்கட்சியான திமுக ஆட்சியில் இருக்கும் போது இப்படி  செயல்பட்டிருப்பது எந்த அளவுக்கு   சரியாகும்  ?

இன்னுமொரு முக்கியமான விஷயம் திரு ப.சி. அவர்கள் மத்திய அமைச்சர் பதவியில் இருக்கும்போது இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை – அவர் மே 2004 முதல் இன்றுவரை தொடர்ந்து மத்திய அமைச்சராக இருக்கிறார்.  எனவே அவர் அமைச்சர்  பதவியில் இல்லாத போது – அதாவது  2004 க்கும் முற்பட்ட காலத்தில் தான் இது நிகழ்ந்திருக்க வேண்டும் !

இது ஒரு விசித்திரமான வழக்கு – எப்போது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை ! எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டின் எந்த செய்தி பத்திரிகைகளிலும் இது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.  இப்போது சட்டமன்றத்தில் வெளிவந்த பிறகு தான் வெளியுலகிற்கு முதன் முதலாகத் தெரிய வருகிறது ! இது எப்படி – ஏன், இவ்வளவு நாட்களாக  மர்மமாக வைக்கப்பட்டிருந்தது ?

தமிழ்நாட்டின்  பத்திரிகைகள் ஏதாவது – இனியாவது இதுகுறித்த விவரங்களை கண்டுபிடித்து வெளியிட்டு பத்திரிகை தர்மம் என்று சொல்லிக் கொள்கிறார்களே – அதை கடைப்பிடிக்குமா ?

இந்த தகவல் சட்டமன்றத்தில் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது.  எதற்கெடுத்தாலும்  உடனே  அறிக்கை விடும் திமுக தலைவர் கருணாநிதியோ – திமுக சட்டமன்ற கட்சித்தலைவர் ஸ்டாலினோ இது குறித்து ஒன்றும் கூறாமல் ஆழ்ந்த மௌனம் சாதிப்பது ஏன் ?

பதில் கூற முடியாதபடி இதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா ?

தவறு எங்கே – யார் மீது  இருக்கிறது என்று  தமிழ் நாட்டு மக்கள்  தெரிந்து கொள்ள வேண்டாமா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to வெளிச்சத்துக்கு வராத அபூர்வ வழக்கு – தமிழகத்திற்கு எதிராக ப.சிதம்பரம் அவர்கள் வாதாடி இருக்கும் விசித்திரம் !!

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நமது செய்தித் தாள்களும், ஊடகங்களும் ‘பரபரப்புக்கு தான்’ முக்கியத்துவம் தருகிறார்கள். ஆழ்ந்து தொடர வேண்டிய (matters to be followed & analysed) விஷயத்தை தொடுவதே இல்லை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    • Thiruvengadam's avatar Thiruvengadam சொல்கிறார்:

      It is better to confirm who represented TNEB in the International Tribunal consisting 2 Indian Retired Judges and headed by a Foreign Lawyer. They gave the award and now the follow ups by Videocon Power Ltd for execution and appeal by TNEB against it. Once the proceedings have been stayed due to the Representation by Harish Salwe on behalf of Videocon while he himself is a Govt Attorney. Lawyer is always a Lawyer for his Client. Postmortem of the case with ref to current events seems to be not proper. General Redtapism is one of the cause for this National Loss.

  2. மாசிலா's avatar மாசிலா சொல்கிறார்:

    மொத்தத்தில் பார்த்தால் இவை அனைத்தும் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்திதான்.

    இருந்தாலும், கோர்ட்டில் வழக்கு என வந்துவிட்ட பிறகு வாதாடும் இரு கட்சிகளுக்கும் வக்கீல் கட்டாயம் தேவை. இங்கு குறிப்பிட்டுள்ள வழக்கில் வீடியோகான் சார்பாக ப.சிதம்பரம் வாதாடி இல்லாதிருந்தால் அவருக்கு பதில் கட்டாயம் வேறு யாராவது ஒரு வக்கீல் வாதாடி இதே போல் ஒரு நஷ்ட ஈட்டை பெற்று கொடுத்திருப்பார். சிதம்பரத்திற்கு பதில் ஒரு அமெரிக்கரோ அல்லது ஒரு சீன வக்கீலோ வாதாடி இருந்தால் நஷ்ட ஈடு 125 கோடியிலிருந்து 250 அல்லது 500 வரை தாண்டியிருக்கும். யார் கண்டது? இப்போதும் கூட தமிழக அரசு 125 கோடி நஷ்ட ஈட்டை எதிர்த்து அப்பீல் செய்த வழக்கில் வீடீயோகான் சார்பாக யார் வாதாடுவார், அவர் இன்னும் எவ்வளவு தொகை கேட்பார் என்பதை பொறுத்திருந்து அதிர்ச்சியோடு பார்க்க வேண்டும்.

    குறிப்பு : பதிவில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளதுபோல் 3000 கோடி தொகை ஒப்பந்தத்திற்கு அதே அளவு தொகையான 3000 கோடியை யாரும் நஷ்ட ஈடாக கேட்க முடியாது. ஒப்பந்த தொகையில் 10% – 30% வரைதான் கேட்க முடியும் என்பது பொது நியதி.

    எனவே இன்றைய தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க வினாலும், பல முக்கிய மாநில மற்றும் அகில-இந்திய அரசியல் கட்சிகளாலும், இந்து மத சாதி சார்புடைய இயக்கங்களாலும், ஈழத்து மண்ணில் நடந்தேறிய அக்கிரமங்களை சாக்கு வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தும் பல சந்தர்ப்பவாத இயக்கங்களாலும் வெறுத்தும் சகித்துக்கொள்ள முடியாத (சோனியா) காங்கிரசின் ப. சிதம்பரம் எனும் இன்றைய மத்திய அமைச்சர், தி.மு.க.வின் மறைந்த தோழமை கூட்டாளி அரசின் தமிழர் போன்ற உள் நோக்கங்களை கருத்தில் கொண்டு ப.சிதம்பரத்தின் மீது சேற்றை வாரி இரைக்கிறீர்களோ என சந்தேகமாக உள்ளது. தமிழனுக்கு எதிராக அந்நிய நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழனை அழிப்பதற்கு இன்னொரு தமிழன் அதிலும் இன்று அவன் இன்று ஒரு மத்திய அமைச்சன் போன்ற பிரிவினைகளை வெறுப்புகளை மக்கள் மத்தியில் அதுவும் இளைஞர்கள் மனதில் வித்திட முயல்வது மிகுந்த ஆபத்தான விளையாட்டாகும். மறைந்த மறைக்கப்பட்ட உண்மைகளை அறிந்துகொள்வது நம் அனைவரின் உரிமையே. ஆனால், அவரசப்பட்டு ஏதோ ஒரு யூகத்தின் பெயரில் அதை திரித்துக்கூற முயல்வது சரியாகாது.

    திமுக-காங்கிரஸ் மத்திய கூட்டரசின் காலத்தில் பல மத்திய அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி பெரும்பான்மையான தமிழர்கள் நம் தமிழ் மத்திய அமைச்சர்களை நினைத்து பெரிதாக மார் தட்டி பெருமை கொண்டதாக சொல்லிக்கொள்ள முடியாது என்றே சொல்லலாம். இதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் இன்று (பழைய) தமிழ் மத்திய அமைச்சர் அ.ராசா சிறையில் வாடி வருவதில் தமிழர்களாகிய நமக்குத்தான் என்மொரு அளவலாவிய மகிழ்ச்சி! தமிழச்சி கனிமொழி சிறையில் வாடிய காட்சிகளை வைத்து பிழைப்பு நடத்திய தமிழ் அரசியல் மற்றும் சந்தர்ப்பவாத இயக்கங்கள் எத்தனை எத்தனையோ.

    தமிழன் தன்னை அழித்துக்கொள்வதற்கு எதிரி எங்கும் வெளியிலிருந்து வரத் தேவையில்லை. அவன் நம்முடனே மிக அருகில் நம் பக்கமே உலாவுகிறான்.

    உஷார்! உஷார்!

    • ramanans's avatar ramanans சொல்கிறார்:

      தமிழன் என்பதற்காக தவறுகளை நியாயப்படுத்த முடியுமா? ”நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற பரம்பரையில் வந்தவர்கள் தமிழர்கள். இறையையே எதிர்த்தவர்கள்.

      யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். அதை தமிழன் என்பதற்காக நியாயப்படுத்துவதோ, சகித்துக் கொண்டு செல்வதோ நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது.

      காவிரிமைந்தன் :

      இப்படி யோசித்துப் பாருங்கள்: ப.சி. வாதாடி 125 கோடியில் முடித்திருக்கிறார் (இறுதி அல்ல என்றாலும்) வேறு யாரேனும் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் இதை விட அதிகமாகத் தான் நஷ்ட ஈட்டுத் தொகை வந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

      மேற்கொண்டு முழுமையான விஷயங்கள் (குறிப்பாக அப்போதைய தமிழக அரசின் இந்த ஒப்பந்தம் / ரத்து /உள்நோக்கம் சம்பந்தமான விஷயங்கள்) தெரியாமல் இது பற்றி முழுமையாகக் கருத்து கூறுவது சரியானதாக இருக்காது.

      ஆனால்…

      எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,
      ( இது நண்பர் மாசிலா விற்கு )

      நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ?

      நான் சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட ஒரு செய்தியை அடிப்படையாகக்கொண்டு சில வினாக்களை எழுப்பி இருக்கிறேன்..
      எதையும் திரித்துக்கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை.
      தவறைக் கண்டால் இடித்துக் கூறுபவன் நான்.
      யாராக இருந்தால் எனக்கென்ன ?

      இது ஒரு ஜனநாயக நாடு.- இந்த நாட்டின் குடிமகன் நான்
      யார் தவறு செய்தாலும் கேள்வி கேட்கும் உரிமை
      ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு –
      இந்த உரிமையை நாம் சரியாக பயன்படுத்தாததால்
      தான் நாடு இப்படி சீரழிந்து கிடக்கிறது !

      நீங்கள் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிராப்போல்
      தோன்றுகிறது !

      துரோகம் செய்பவன் தமிழனாக இருந்தால் –
      பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களாகவே
      இருந்தாலும் – அதைப்பற்றி பேசக்கூடாது என்பது உங்கள் வாதமா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. dinakaran's avatar dinakaran சொல்கிறார்:

    p.chidambaram is a corporate lawyer!he happens to be a TAMILIAN.wearing dhoti,talking politely but ruining the nation…this is chidambaram’s doctrine .

  4. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    Whether it is possible to get proper information under the Right to information Act?

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மாசிலா,

    உம் கருத்து வியப்பையும்,வேதனையையும் தருகிறது.

    சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் சென்ற பிறகும்,ஒரு நாளைக்கு ரூ.40 வருமானத்திற்கு கீழ் சுமார் 80 கோடி பேர் வாழும் நாட்டில் பிறந்த நீர் எப்படி அய்யா கூசாமல் குற்றவாளிகளை இவன் தமிழன் இவன் தெலுங்கன் என்றெல்லாம் நினைக்கமுடிகிறது?

    பட்டினியில் ஏது சுவாமி, பரம்பரையும், பிறப்பும் ?

    கருணா,சிதம்பரம்,மன்மோகன்,ஜெயா,மாயாவதி போன்றோர் உண்மையில் மனிதர்கள்தானா அல்லது வேறு ஏதாவது உயிரினமா என நாங்கள் வெம்பிகொண்டிருக்கையில்,நீர் இவர் தமிழர்,இவர் மராட்டி என்றெல்லாம்….ம்ம்ம்ம்…. வெட்கம்!

    நான் திருநெல்வேலிகாரன்..ஆனால் எவனாவது திருப்பாச்சி அறுவாளால் என்னை வெட்ட முயன்றால்,போனால் போகட்டும்,அது நம் மாவட்ட அறுவாளால்தானே என வேடிக்கை பார்க்க மாட்டேன்.இங்கிலாந்து நாட்டு துப்பாக்கியாக இருந்தாலும் எடுத்து சுட்டு விடுவேன்.

  6. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //சிதம்பரத்திற்கு பதில் ஒரு அமெரிக்கரோ அல்லது ஒரு சீன வக்கீலோ வாதாடி இருந்தால் நஷ்ட ஈடு 125 கோடியிலிருந்து 250 அல்லது 500 வரை தாண்டியிருக்கும்//
    என்ன சொல்லவரீங்க மாசிலா?
    ஒரு வக்கீல் தன் கட்சிக்காரரிடமிருந்து ஃபீஸ் வாங்கிக்கொண்டு, எதிர்தர்ப்பிற்கு சாதகமாக செயல்பட்டுள்ளார் என்கிறீர்களா?
    அல்லது
    ஒரு தமிழன் வடநாட்டுக்காரனுக்கு துரோகம் இழைத்தான் என்கிறீர்களா?
    அல்லது
    ஒரு தமிழன் தமிழ் நாட்டுக்கு குறைந்த அளவே துரோகம் இழைத்தான் என்கிறீர்களா?
    நீங்கள் எப்படி சொன்னாலும், ஒரு வக்கீல்(சிதம்பரம்) தன்னை நம்பி கேஸ் கொடுத்த கட்சிக்காரருக்கும், தன் இனத்திற்கும் தன் நாட்டிற்கும் கேடு விளைவித்தார் என்றே நான் நம்புவேன்!

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    கா.மை.அவர்களே,

    முதற்கண் உங்கள் உழைப்பிற்கும் பதிவிற்கும் நன்றி.

    நீங்கள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு மேல் எனக்கும் சில தோன்றுகின்றன..
    இந்த ஒப்பந்தம் தி.மு.க அரசால் போடப்பட்டது ;இருப்பினும் ஜெயா அரசும் இதை அடக்கி வசிப்பது ஏன்?

    கடந்த ஆண்டு தேர்தலின் போது ஜெயா தன் பிரசாரத்தில் கருணா மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் பல ஊழல் குற்றசாட்டுகளை அடுக்கினார்.ஆனால் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது இன்னும் கருணா மீதோ அல்லது அவர் குடும்பத்தினர் மீதோ ஒரு parking offense வழக்கு கூட போடவில்லை.இதற்கு காரணம் என்ன?

    என்னுடைய நெடுநாள் சந்தேகம் ,,இரு கழகங்களுக்கும் இடையில் ஏதோ கூட்டு இருக்கிறது.ஒருவர் மாற்றி ஒருவர் ஆட்சியை பிடிப்பதில் இருவருக்கும் பல அனுகூலங்கள் உள்ளன,நாம் ஏதோ இரு திறமையான நடிகர்கள் நடிக்கும் நாடகத்தை இருபது ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிரோமோ என ஐயம வருகிறது.

    வாணிகத்தில் கோகோ கோலா vs பெப்சி கோலா சண்டைகள் உலகப்ப்ரசித்தம்.உள்ளுறை எடுத்துக்கொண்டால் சரவணா ஸ்டோர்ஸ் vs ஜெயசந்திரன் போல..

    ம ர் ம தே ச ம்

    அன்புடன்,

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் கண்பத்.

      நீங்கள் சொல்லும் மீதி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.
      ஆனால் – மன்னிக்கவும் – இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள
      முடியவில்லை !

      இவர்களிடையே கூட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை.

      மற்றபடி – எதிலும் சொந்த லாப நஷ்ட,
      சௌகரிய- அசௌகரியங்கள்
      பார்த்து செயல்படுவார்கள் !
      எனவே நடக்கும் என்று நாம் எதிர்பார்ப்பது நடப்பதில்லை –
      நடக்காது என்று நினைப்பது எல்லாம் நடக்கிறது !

      உங்கள் ஆழ்ந்த கருத்தூட்டங்களுக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  8. ilatchiyakudumbam's avatar ilatchiyakudumbam சொல்கிறார்:

    New Delhi, Chennai, Oct 11:: Videocon Power, promoters of the 1,050 mw North Madras power venture, has filed a decree in the Madras High Court enforcing the international arbitration tribunal’s order against Tamil Nadu Electricity Board (TNEB). The tribunal has asked TNEB to pay close to Rs 130 crore to Videocon as compensation for expenses incurred in developing the project.
    Sources said this was the first time such an international commercial arbitration under the United Nations Commission on International Trade Law Arbitration Rules of 1976 had been passed against a government entity.

    The petition has requested the high court to issue a “pro-order to Garnishee Bank to attach the bank accounts/cash accounts and fixed deposits held by the respondent/judgment debtor (TNEB)”.

    Videocon took TNEB to the arbitration tribunal in August 2000 after the latter decided to cancel the critical agreements entered into with the company for setting up the power project citing inordinate delays in implementation and…cost escalation.
    The promoters, however, contested this stand and first, got a stay order on the cancellation from the high court and thereafter went in for international arbitration. The project was conceived way back in 1996. (See chart for chronology of events).

    Thereafter, Singapore-based international tribunal, headed by VV Veeder of the UK along with one arbitrator nominated by TNEB and one by Videocon, heard both the parties and gave its verdict on ten issues that came up for dispute.

    These ranged from lapse and expiry of power purchase agreement (PPA); termination of PPA; shared facilities and support services (the common port infrastructure that was to be used by Videocon Power, another power developer Trishakti and TNEB itself), to escrow accounts and counter claims.

    The three-member arbitration panel, in its order on damages upheld Videocon’s “claims for damages to be valid”. The company had claimed Rs 1,600 crore as compensation for.loss of opportunity and profits, which the tribunal limited to “costs wasted by wrongful repudiation of the PPA and its related agreements”.
    Going by the tribunal’s order dated June 21, 2004, the sum to be paid by TNEB (of Rs 128 crore) keeps mounting. “(TNEB) shall pay simple interest to (Videocon) on all sums remaining unpaid under this award, from this date of award (June 21) at the rate of 13% on Indian Rs amounts and 5% on US$ amounts.”

    The international arbitration order allowed TNEB 90 days to challenge the verdict. The deadline expired on September 21 and sources said the board did not appeal against it.

    The high court has now set the hearing for 18th of this month when TNEB is expected to file its response. Top state electricity board officials, despite repeated attempts, were not available for comment….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே (இலட்சியக்குடும்பம் ),

      சரியான நேரத்தில் – சரியான தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள்.
      உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும் மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. ilatchiyakudumbam's avatar ilatchiyakudumbam சொல்கிறார்:

    in the year 2004 october it happens

  10. ilatchiyakudumbam's avatar ilatchiyakudumbam சொல்கிறார்:

    Videocon wins global tribunal case against TNEB

    Posted: Tuesday, Oct 12, 2004 at 0000 hrs IST in financial express

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.