அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம் – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !!

அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம்  – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !!

போபர்ஸ்  பற்றி எழுதாத பத்திரிகை இல்லை – பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை. இருந்தாலும் – அத்தனையும் வெளிவரக்காரனமாக இருந்தவர் யார் என்பது இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாமல் மர்மமாகவே இருந்தது.   இந்தியாவில் முதல் முதலில் மிகப்  பெரிய அளவில் இதை வெளிப்படுத்தி இந்து ஆங்கில நாடு மிகப்பெரிய புகழையும், விளம்பரத்தையும் பெற்றது.

இந்து ஆசிரியர் ராம் தங்கள் பத்திரிகையின்  சர்குலேஷன் பயங்கரமாக எகிற இந்த விஷயத்தை  நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

போபர்ஸ் லஞ்ச ஊழல பற்றிய முதல் தகவல் ஏப்ரல் 1987-ல்  வெளிவந்து இந்த மாதத்துடன் 25  ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி  சுவீடன் நாட்டின் ஒய்வு பெற்ற போலீஸ் தலைவர்  ஸ்டென் லின்ட்ஸ்றோம்  ( Sten Lindstrom ) அளித்துள்ள பேட்டி ஒன்றின் மூலம் இந்த ஊழல் வெளி  உலகத்திற்கு வெளிவர முழுமுதல் காரணமும்  அவரே என்கிற பரபரப்பு செய்தி இப்போது அவர் மூலமே தெரிய வருகிறது. ( ராம் இதுவரை வாயைத் திறக்கவில்லை !)

அவர் மூலம் தெரிய வரும் சில புதிய தகவல்கள் –

ஸ்வீடன் அரசும் சரி, மக்களும் சரி  – யாராக இருந்தாலும் லஞ்சம கொடுப்பதை அனுமதிப்பவர்களோ, ஏற்றுக்கொள்பவர்களோ அல்ல.

ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ்  தொழிற்சாலை உலகின் பல நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று வந்தது. இடைத்தரகர்கள் அதிகாரபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியமாக கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது.  நமது விற்பனை பிரதிநிதிகள் மாதிரி !

இந்தியாவிற்கான பீரங்கிகளின் தேவை – 410 இந்த ஆர்டர் போபர்சு தொழிற்சாலைக்கு  கிடைத்தால் அது ஸ்வீடனில் சுமார்  900 தொழிலாளிகளுக்கு பத்து வருடங்களுக்கான வேலையை கொடுக்கும். ஆனால் இந்தியா இடைத்தரகர்கள் கூடாது என்று கண்டிஷன் போட்டது. (இடைத்தரகருக்கு கொடுக்கப்பட வேண்டிய கமிஷன் தான் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கணக்கில் காட்டாமல்  கொடுக்கப்பட வேண்டி இருந்தது ! ) எனவே போபர்ஸ் நிறுவனத்திற்கு – நேர்மையாக இருந்து பீரங்கிக்கான ஆர்டரை இழப்பதா   அல்லது மறைமுகமாக கணக்கில் காட்டாமல்  கமிஷன் கொடுப்பதா என்று இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே இடைத்தரகர் பெயர், கமிஷன் விவரம் அனைத்தும் போபர்ஸ் நிறுவனத்தால்  ரகசியமாக வைக்கப்பட்டது.

ஒவ்வொரு முறை இந்திய அரசிடமிருந்து தவணை தொகை வரும்போதும் அதில் மூன்று சதவீதம் ( 3 % ) சுவிஸ் வங்கியில் ரகசியப பெயர் / கணக்கில் செலுத்தப்பட்டது.  இந்த கமிஷன் பணம் அனைத்தும் அந்த சமயத்தில் இந்தியாவில் ஏ.ஈ.சர்வீசஸ் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த (சோனியா அம்மையாருக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்த ) இத்தாலியர் கொட்டராச்சியின் கணக்குக்கு போய் சேர்ந்தது.

இந்த விஷயம் அனைத்தும் – அப்போதைய ஸ்வீடன்  போலீஸ் தலைவர்  ஸ்டென் லின்ட்ஸ்றோம் -க்கு முற்றிலும் தற்செயலாகத் தெரிய வந்துள்ளது. அப்போதைய சூழ்நிலையில் ஸ்வீடிஷ் அரசிடம் இந்த தகவலையும் ஆதாரங்களையும் கொடுத்ததால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அவருக்கு தோன்றியுள்ளது. ஏனெனில் மிகப்பெரிய வியாபாரமும் தொழில் வாய்ப்பும் பறிபோவதுடன் நாட்டின் பெயரும் கெடும். இந்திய அரசிடம் கொடுப்பதிலும் அர்த்தமில்லை – ஏனெனில் இந்தியாவில் அரசியலில் மிகப்பெரிய பதவியில் உள்ளவர்கள் தான் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஊழல விவரம் தெரிந்தும் சும்மா இருக்கவோ மூடி மறைக்கவோ அவருக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.  எனவே ஏதாவது பத்திரிக்கை மூலம் தன் பெயர் வெளிவராமல் அதை வெளியிட விரும்பி இருக்கிறார்.  இந்து பத்திரிக்கை நிருபர் சித்ரா சுப்பிரமணியம் அது சமயம் ஸ்வீடனில் இருந்திருக்கிறார்.  அவரை தொடர்பு கொண்டவுடன், அவர் உடனடியாக ஆசிரியர் ராம் அவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.  ராம்  உடனடியாக சுவீடனுக்கு நேரே சென்று போலீஸ் தலைவர்  ஸ்டென் லின்ட்ஸ்றோம்- ஐ சந்தித்து சகல ஆவணங்களையும் பெற்றிருக்கிறார்.

இந்து பத்திரிகை தானே அரும்பாடுபட்டு இந்த விஷயத்தை கண்டு பிடித்தது போல் பில்ட் அப செய்து ஸ்கூப் ஆக வெளியிட்டது.

ஒரே சமயத்தில் அனைத்து விவரங்களையும் வெளியிடாமல் – பத்திரிக்கை சர்குலேஷனுக்காக  பல இடைவேளைகளை உண்டுபண்ணி ராம் இந்த செய்தியை வெளியிட்டது தனக்கு பெரும் கேட்டை உண்டு பண்ணி விட்டது என்கிறார் ஸ்டென். இடைவெளியை பயன்படுத்தி – இந்திய அரசும், ஸ்வீடன் அரசும் அநேகமாக தன் மூலம் தான் செய்தி போயிருக்க வேண்டுமென்று ஊகித்து, தனக்கும் தன குடும்பத்திற்கும்  பல பிரச்சினைகளை உண்டு பண்ணின என்கிறார். இந்து பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவிய – மிகப்பெரிய செய்தியை கொடுத்த தனக்கு –  ராம் இழைத்த கைம்மாறு இது என்றும் வருத்தப்பட்டுக் கொள்கிறார்.

கொட்டரோச்சிக்கு நிச்சயமாக சட்டவிரோதமாகப் பணம் பட்டுவாடா ஆகி இருக்கிறது. ஆனால் கொட்டரோச்சியிடமிருந்து  ராஜீவுக்கோ அல்லது அவர் மனைவி குடும்பத்தினருக்கோ பணம் போனதா என்பது தனக்குத் தெரியாது என்கிறார் ஸ்டென். ராஜீவ் காந்தி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லை என்று சொல்லும் ஸ்டென் அதே சமயம் கொட்டரோச்சியை பற்றிய தகவலோ, ஆதாரமோ வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள அனைத்து விதத்திலும் ராஜீவ் முயன்றார் என்கிறார். கொட்டரோச்சி தப்பித்துக்கொள்ளவும் -விவகாரம் அமுக்கப்படவும், அப்போதைய ராணுவ அமைச்சரும் ராஜீவ் காந்தியின் உறவினருமான அருண் நேருவும் இவை அனைத்திலும் சம்பந்தப்பட்டிருந்திருக்கிறார். கொட்டரோச்சிக்கும்,  சோனியா காந்தியின் குடும்பத்திற்கும் ;உள்ள தொடர்புகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன.

வேறு யார் பெயரை வேண்டுமானாலும் சேருங்கள் – ஆனால் ஆர (ராஜீவ்) பெயரோ க்யூ (கொட்டரோச்சி) பெயரோ வெளியே வரக்கூடாது  என்று விசாரணைக்குப் போனவர்கள் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சம்பந்தமே இல்லாமல் அப்பாவிகள் பல பேர்களின் பெயர்கள் வேண்டுமென்றே இதில் விஷயத்தை திசை திருப்புவதற்காக செருகப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட அப்பாவி அமிதாப் பச்சன். தன் மீது சாட்டப்பெற்ற வீண்பழியை போக்கிக்கொள்ள அமிதாப் பச்சன்  படாத பாடு பட்டார் என்கிறார்.

கொட்டராச்சிக்கு பணம் போன விதம பற்றி –

ஒவ்வொரு முறை இந்திய அரசு பணம் செலுத்தும்போதும் அதில் மூன்று சதவீதம் கொட்டரோச்சியின் கீழ்க்கண்ட கணக்குகள் ஏதேனும் ஒன்றுக்கு போய் விடும் –

ஏஈ சர்விசெஸ், ஜூரிச், கொல்பார் இன்வெஸ்ட்மென்ட், பனாமா, (இதற்கு டெல்லியில் – இல்லாத ஒரு போய் விலாசத்தை கொடுத்திருக்கிறார் கொட்டரோச்சி ) வேடேல்சென் ஓவர்சீஸ், சவுத் ஆப்பிரிக்கா, இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், அன்ச்பசார்,

இருபது ஆண்டுகளில், ஐந்து முறை ஸ்வீடன் மற்றும் பல நாடுகளுக்கும்  போய விசாரணை நடத்தியும், 250 கோடி ரூபாய் வரை செலவழிந்தது தான் மிச்சம். கொட்டரோச்சியின் மீது உள்ள குற்றசாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை – எனவே அவர் கணக்கில் உள்ள  பணத்தை விடுவிக்கலாம்  என்று இந்திய அரசே சர்டிபிகேட கொடுத்து இந்த பணம் அனைத்தையும் கடைசி பைசா வரை கொட்டரோசசி சுரண்டி எடுத்துக்கொள்ள இந்திய அரசின் சிபி ஐ உதவி வேறு செய்திருக்கிறது.

பேட்டியின் இறுதியில் –  இவ்வளவு  ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன் இதைப்பற்றி வெளியே பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஸ்டென் கூறுகிறார் –  இவ்வளவு பெரிய ஊழல்களும், குற்றங்களும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கண்டுகொள்ளப்படாமலே, தண்டிக்கப்படாமலே இருப்பது மன வேதனையை அளிக்கிறது.  இதயத்திலிருந்து  ரத்தம் வடிகிறது. ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நமக்கு நம் மீதே நம்பிக்கை இல்லாமல் போகிறது.  இது நல்லதல்ல. இதனால் – இப்படி வெளிவந்து பேசுவதனால் – பலன் விளைகிறதோ இல்லையோ – ஆனால் இனியும் பேசாமல்  அமைதியாக இருக்க முடியவில்லை !

ஸ்டென் – ஒரு பைத்தியக்காரர் !! நூற்றி இருபது கோடி இந்தியர்களான நாமெல்லாம், இத்தனையையும் பார்த்துக்கொண்டு இத்தனை நாளாக அமைதியாக  இல்லையா  என்ன ????????????? நம் மக்கள் – சம்பந்தப்பட்டவர்களையே இன்னும் தலைவராகக் கொண்டாட வில்லையா என்ன ?

பின்குறிப்பு –

மறந்து விட்டேனே – அண்மையில் இந்தியாவில் நடந்த  இத்தாலியர் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள் –

கேரளா கடல் எல்லையில் இரண்டு மீனவர்களை இத்தாலிய கப்பல் ஒன்றின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம்.

இந்திய கடல் எல்லைக்குள் சம்பவம் நடந்தது என்று கூறி கேரளா அரசு அவர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்து, தகுந்த நஷ்ட ஈடு பெற்றுத்தரவும், தண்டனை வாங்கித்தரவும் முயற்சி செய்து கொண்டிருக்கும்போது – மத்திய அரசின் வழக்கறிஞ்ர் – சுப்ரீம் கோர்ட்டில் சம்பவம் நடந்த இடம் இந்தியக் கடல் எல்லைக்குள் இல்லை என்று கூறி இருக்கிறார். கேரளாவிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், கப்பல்துறை அமைச்சரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் – வக்கீல் கூறியது அவரது சொந்த அபிப்பிராயம் என்று கூறி இப்போது சமாளிக்கின்றனர்.

யார் கொடுத்த  அல்லது யார் இருக்கும் தைரியத்தில் அந்த அரசு வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் இப்படி ஒரு  கருத்து கூறினார் ?

அடுத்த சம்பவம் – இரண்டு இத்தாலிய டூரிஸ்டுகள் (என்று சொல்லிக்கொள்கிறார்கள் )  ஓடிஷாவில் காட்டுப்பகுதியில் சுற்றுலா போய் நக்சலைட்டுகளுடன் ஒட்டி உறவாடி விட்டு, அவர்கள் நக்சலைட்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. பின்னர் அவர்களை விடுவிப்பதற்காக ஓடிஷா அரசு கஷ்டப்பட்டு பிடித்த  27 நக்சல் தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டது.  இந்த இத்தாலிய டூரிச்டுகளுக்கு இந்தியா என்ன மாமியார் வீடா ?  அவர்களுக்கு டூர் போக ஓடிஷாவில் நக்சல்கள் இருக்கும் இடத்தை விட்டால் வேறு இடம் கிடைக்கவில்லையா ?. இவர்கள் எல்லாம் யார் இருக்கும் தைரியத்தில் இந்தியாவில் வந்து இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம் – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !!

  1. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    இன்னும் என்ன என்னவெல்லாம் வெளியே வர இருக்கிறதோ, தெரியவில்லை. அன்று அந்நியன் சுரண்டினான் என நம்மவரை ஆள விட்டோம். இன்று, இவர்கள் அவனே பரவாயில்லை என்னும் நிலைமைக்கு இந்தியாவை ஆளாக்கி விட்டனர். இந்த நிலை இப்படியே தொடர்ந்து கொண்டு போனால்…. ??? நம் பாரதத்தை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

    அலசி ஆராய்ந்து மிகவும் சிறப்பாக (வழக்கம்போல்) எழுதியுள்ளீர்கள் காவிரி மைந்தன். உங்கள் நற்பணி தொடரட்டும்.

  2. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.

  3. P.M.Saran's avatar P.M.Saran சொல்கிறார்:

    மிக அற்புதமான கட்டுரை நன்பரே!..இந்தியாவை இத்தாலிய சனி பிடித்த நேரம்,இராஜிவ் எனும் நேர்மையான மனிதனின் மனோபாவத்தை மரத்து போக செய்து வலிமையான,வளமான,இந்தியாவை காணவேண்டும் என்கிற குறிக்கோளை உடைத்தெறிந்து,சுயநல கும்பலின் கைப்பாவையாய் மாறி,அவர் வாழ்க்கையை அரசியல் போராட்டத்தில் தொலைத்தவரை,இத்தாலிய மாபியா ராணியின் லீலைகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போனது.இப்போது தெரிந்தும் நாம் ஒன்றும் புடுங்க போவதில்லை…ஆனால் அடையாளம் காட்டாமல் போணால் எதிர்கால சந்ததி வீனாய் போய்விடும்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சோனியா-வையும் சோணியா காங்கிரஸையும் ஆட்சி,அதிகாரத்திலிருந்து வெளியேற்ற இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்…தொடருங்கள் உங்கள் அரிய பணியை!..வாழ்த்துக்கள்.

  4. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    arumai yaana padhivu. Idhu indiava Ithalia va

  5. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    அருமையான தொகுப்பு ஐயா. பல மணி நேரம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதை சுருக்கி சுவை குன்றாமல் நேர்மையோடு எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். நன்றி.

  6. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    18 –4 –2012 –மற்றும் 20 -4 –2012 — மற்றும் 24 –4 –2012 — தேதியிட்ட எனது விமர்சனங்களில்கூறியது போல் போபர்ஸ் ஊழல் ,மாட்டுத்தீவன ஊழல் , சர்க்காரிய கமிஷன் ஊழல் ஆகியவற்றை குறித்து மத்திய அரசு கவலைப்பட போவதில்லை மேலும் இவர்களெல்லாம் மக்கள் மன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியர்கள் மட்டுமல்ல
    பொதுமக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.
    தற்போது மீண்டும் போபர்ஸ் ஊழல் விவரங்களில் கூறியுள்ளது போல் தேவையில்லாமல் அமிதாப்பச்சன் போன்றோர்களை சேர்த்திருப்பது அவர்களிடமிருந்தும் பணம் கறப்பதற்கு வேண்டிய நடவைக்கையாக
    இருக்கும்.

  7. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    மாமியார் வீடுதான். அதிலென்ன சந்தேகம்?

    இந்த சித்ரா சுப்ரமணியம் இதை எழுத ஆரம்பித்தது
    இந்தியன் எக்ஸ்ப்ரஸில். (நி.இ.எ. அல்ல). அருண் ஷோரி
    அதன் ஆசிரியராக இருந்த காலம். பின்னர் தான் சி.சு
    இந்துவில் எழுதினர்.

    நல்ல பதிவு.

  8. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    வழக்கம் போல இன்னொரு அருமையான ,ஆழமான ,பதிவு ;நன்றி கா.மை அவர்களே.

    Bofors case ஹிந்து ராமிற்கு உதவியது போல வேறு யாருக்கும் உதவினாறபோல தெரியவில்லை.ஒரு சில மாதங்கள் ஹிந்துவின் தலைப்பு செய்தியே இதுதான்.இதை ரசிக்காத அந்நாள ஹிந்து ஆசிரியரும் ராமின் நெருங்கிய உறவினரும் ஆகிய திரு.கஸ்துரி பதவி விலக ,ராம் முடிசூட்டிக்கொண்டார்.

    ராஜீவ் அவர் அன்னையை போல் இல்லாமல் சற்று அனுபவமும் துணிவும் குறைவாக இருந்ததும் ஹிந்து நாளிதழிற்கு அனுகூலமாகிற்று.

    பின்னால் வந்த ஊழல்களோடு ஒப்பிடுகையில் Bofors ஒரு ஜுஜுபி.இதே நேர்மையாளர் ராம் தன்னால் முடிந்தவரை 2G ஊழலில் ராசாவிற்கு சப்பைக்கட்டு கட்ட பார்த்து தோல்வியுற்றார்.(ராசா கைது செய்யபடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட,அவர் நிரபராதி என்ற எண்ணம தோன்ற ஹிந்துவில் ஒரு பெரிய பேட்டி வெளியாகியும் பயனில்லை.

    ஊழலுக்கே பிதாமகரான தி.மு.க தலைவரை எதிர்த்து தன் சுண்டு விரலைக்கூட அசைத்தது இல்லை ஹிந்து நாளிதழ்.(ராம் ஆசிறியராக இருந்தபோது)

    இனி இந்த நாட்டில் உண்மை வரவேண்டுமெனில் கா.மை போன்ற bloggers,
    Internet,Twitter மூலமாக வந்தால்தான் உண்டு.Indian Print media have already become blackguards

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்கள் வருகைக்கும் –
      அருமையான பின்னூட்டங்களுக்குக்கும்
      மிக்க நன்றி நண்பர்களே

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.