கவிஞர் வைரமுத்துவுக்கு நேர்ந்தது அவமானமா ?
ஆம் என்றால் அதற்கு யார் காரணம் ?
கவிஞர் வைரமுத்து அண்மையில் ஒரு பேட்டியில்
கூறுகிறார் –
“கவிப்பேரரசு என்று நீங்களெல்லாம் கொண்டாடுகிறீர்கள்.
ஆனால் சென்னையிலேயே எனக்கு நேர்ந்த ஒரு இலக்கிய
அவமானத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி
பெயர்க்கப்பட்டால் தவிர எல்லை கடக்க முடியாது.
மொழி பெயர்க்கப்படுவது கூட முக்கியமில்லை.
உலகச் சந்தையில் உரிய இடத்தில் பரவச்செய்வதற்கு
சர்வதேச பதிப்பு நிறுவனங்கள் தேவை.
நானும் பதிப்பகங்கள் தேடியலைந்தேன்.
கடைசியில் கள்ளிக்காட்டு இதிகாசம்,
கருவாச்சி காவியம்,
வைரமுத்து கவிதைகள் – இந்த மூன்றையும் மொழி
பெயர்ப்பதற்கு Oxford University Press -ன்
லண்டன் தலைமையகத்தில் அனுமதி பெறப்பட்டது.
முதலில் கள்ளிக்காட்டு இதிகாசத்தை எடுத்துக்
கொண்டோம். மொழிபெயர்ப்புப் பிரிவின் தலைவர்
மினிக்ருஷ்ணன் அற்புதமான ஆங்கிலப் புலமையாளர்.
ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் வாழ்க்கையையும்
வட்டார வழக்கையும் அவர் முற்றும் அறியாதவர்.
அவர் மொழிபெயர்ப்பு பணியை ஒரு பெண்மணியிடம்
ஒப்படைத்தார். அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர்.
டெல்லியில் வளர்ந்தவர். கிராம வாழ்க்கை பற்றிய
அனுபவ ஞானம் அற்றவர். அவர் மொழிபெயர்ப்பில்
வார்த்தை இருந்தது. வாழ்க்கை இல்லை.
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் உள்ளார்ந்த உயிர் அதில்
இல்லை. ஏழெட்டு முறை சந்தித்தோம். ஒவ்வொரு
சந்திப்பும் சூடான விவாதங்களில் முடிந்தது.
மொழி பெயர்ப்பாளரை மாற்றுங்கள் என்றேன். அவர்
ஒப்புக்கொள்ளவில்லை.
மொழி பெயர்ப்பை மேம்படுத்துவதற்கு ஒரு வல்லுனர்
குழு அமைத்துத் தருகிறேன் என்றேன். அதற்கும்
அவர் சம்மதிக்கவில்லை.
மொழி பெயர்ப்பில் நேர்த்தியும் இல்லை –
காலக்கெடுவில் நேர்மையும் இல்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஒரு நாள்
தொலைபேசியில் அவரை அழைத்து ஒப்பந்தத்தை
ரத்து செய்து விடுங்கள்.நன்றி என்று சொல்லி விட்டேன்.
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத்தேவரை நான்
சாகடித்தேன். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி என்னைச்
சாகடித்தது. எப்படித் தமிழை உலகமெல்லாம் கொண்டு
செல்வது ?
தமிழ்நாட்டிலேயே தடை -தமிழ் இலக்கியத்திற்கு !”
————————-
வைரமுத்து அவர்களின் வாதம் சரி என்று
எனக்குத் தோன்றவில்லை.
முதலாவதாக – தன் நூலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து வெளியிட, தானே பதிப்பகங்கள்
அனைத்தையும் தேடி அலைந்ததாகக் கூறுகிறார்.
ஒரு எழுத்தாளர் –
புகழ்பெற்ற எழுத்தாளர்,
வெளியீட்டாளரைத் தேடி அலைந்தார் என்றால் –
அது அவர் தனக்குத் தானே தேடிக்கொண்ட அவமானம்
என்று தான் பொருள்.
எனக்குத் தெரிந்து தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில்,
தங்கள் படைப்புக்களை மொழி பெயர்க்க ஆள் தேடி
அலைந்து கொண்டிருப்பவர் – சாரு நிவேதிதா
மட்டும் தான். இப்போது அந்த வரிசையில் திருவாளர்
வைரமுத்துவும் சேருகிறாரோ ?
” திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்” என்றான்
மகா கவி பாரதி.
வள்ளுவரோ, கம்பரோ, பாரதியோ –
என் எழுத்துக்களை வெளியிடுங்கள் என்று கேட்டு
எந்த பிறமொழி பதிப்பகங்களைத் தேடி அலைந்தார்கள் ?
அவை மற்ற மொழிகளில் வெளிவரவில்லையா ?
ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்
படவில்லையா ? அவர் இப்படித்தான் அலைந்தாரா ?
இவர் ஒரு நல்ல இலக்கியவாதியாக அறியப்பட்டிருந்தால்,
இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா ?
தமிழ் நாட்டிலேயே பெரும்பாலானவர்கள்,
வைரமுத்து அவர்களை சினிமா பாடலாசிரியர்
என்று தானே அறிவார்கள் !
பின் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி அவரை எப்படி மதிக்கும் ?
தனது 40 வருட இலக்கிய வாழ்வில், எத்தனை
இலக்கியங்களை படைத்திருக்கிறார் திரு. வைரமுத்து ?
இரண்டு முடித்திருக்கிறார் -மூன்றாவதை எழுதிக்
கொண்டிருக்கிறார்.
மற்றபடி ?
பெரும்பாலானவை மெட்டுக்கு எழுதப்பட்ட
சினிமா பாடல்கள் தானே ?
அடுத்து –
சில நயங்களை மொழி தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்க
முடியும். அது இயற்றப்பட்ட மொழியை அறிந்தவர்கள்
மட்டுமே ரசிக்க முடியும். மொழி பெயர்ப்பில் அந்த
நயங்களை கொண்டு வரவோ, ரசிக்கவோ முடியாது.
மொழி பெயர்ப்பில் அந்த நூலின் பொருள் நயத்தையும்,
பின்னணியையும் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
முக்கியமாக வட்டார வழக்குகளை அடிப்படையாகக்
கொண்ட ஒரு நூலை அதன் நுணுக்கம் அறியாதவர்கள்
எப்படி ரசிக்க முடியும் ?
இதை வைரமுத்து அவர்கள் அறிய மாட்டாரா ?
கொங்கு தமிழை,
நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்கை கூட –
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எவ்வளவு
தமிழரால் புரிந்து கொள்ள முடியும் ?
“மொழிபெயர்ப்பில் வார்த்தை இருந்தது.
வாழ்க்கை இல்லை.
இதிகாசத்தின் உள்ளார்ந்த உயிர் அதில் இல்லை.
மொழி பெயர்ப்பாளரை மாற்றுங்கள் என்றேன். அவர்
ஒப்புக்கொள்ளவில்லை.
மொழி பெயர்ப்பை மேம்படுத்துவதற்கு ஒரு வல்லுனர்
குழு அமைத்துத் தருகிறேன் என்றேன். அதற்கும்
அவர் சம்மதிக்கவில்லை.”
மொழிபெயர்ப்பாளர் யாரென்று தெரியாமல்,
ஒப்பந்தம் போட்டது யார் தவறு ?
-தன்மானம் உள்ள எந்த மொழிபெயர்ப்பாளர் இவரது
நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்வார் ?
மற்றுமொரு விஷயம் – ஆங்கில மொழிபெயர்ப்பு
என்பதால் இவருக்கு இருக்கும் ஆங்கில அறிவை
வைத்துக்கொண்டு – மேடை கோணல் (!) என்கிறார்.
ஒரு வேளை அது பிரெஞ்சிலோ, ஜப்பானிய
மொழியிலோ இருந்தால் – மொழிபெயர்ப்பு உயிர்ப்புடன்
இருக்கிறதா இல்லையா என்பதை இவர் எப்படி
அறிவார் ?
அடுத்து –
“கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத்தேவரை நான்
சாகடித்தேன். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி என்னைச்
சாகடித்தது.”
யுனிவர்சிடியுடன் ஒப்பந்தம் போடும்போது இவர்
தீர்மானித்திருக்க வேண்டிய விஷயங்கள் அல்லவோ
இவையெல்லாம் ? துவக்கத்தில் எப்படியாவது
பதிப்பகம் ஒப்புக்கொண்டால் போதும் என்று
அணுகி விட்டு பிற்பாடு ஏசினால் எப்படி ?
அடுத்து –
“தமிழ்நாட்டிலேயே தடை -தமிழ் இலக்கியத்திற்கு !”
-இதென்ன பேத்தல் ?
இவரது இலக்கியத்திற்கு தமிழ்நாட்டில் யார் தடை
போட்டார்கள் ?
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரெஸ்ஸுக்கும் இவருக்கும்
ஒத்துப்போகவில்லை என்றால் தமிழ்நாடு எப்படி
இதற்கு பொறுப்பாகும் ?
பி.கு.-
நான் கேட்க வந்தது, தனக்குள்ள அரசியல் மற்றும்
சினிமா தொடர்புகளை வைத்துக் கொண்டு வைரமுத்து
அவர்கள் எவ்வளவோ சமூக நலன்களை
கவனித்திருக்கலாமே – தமிழ்ச் சமுதாயத்திற்கு
எவ்வளவோ செய்திருக்கலாமே !
குறைந்த பட்சம் –
தென் மாவட்டங்களிலிருந்து, சென்னையில் பணி
நியமனம் பெற்று -இங்கு வந்து, தங்க சரியான,
பாதுகாப்பான இடங்கள் (பெண்கள் ஹாஸ்டல் )
இல்லாமல் இளம் பெண்கள் தவிக்கிறார்களே.
குறைந்த பட்சம் பெண்கள் தங்கும் விடுதிகள்
சிலவற்றையாவது உருவாக்க தன் செல்வாக்கை
வைரமுத்து அவர்கள் பயன்படுத்தி இருக்கலாமே –
(கடந்த ஆட்சியில் முதல்வருடன் அவருக்கிருந்த
நெருக்கம் அனைவருக்கும் தெரிந்ததாயிற்றே !)
தனக்கென்று எவ்வளவோ செய்து கொண்டீர்கள் –
பரவாஇல்லை –
ஆனால் பிறருக்காக இதைக்கூடச் செய்ய வேண்டும்
என்று தோன்றவில்லையா கவிஞரே
என்று கேட்கத்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன்.
விஷயம் எங்கெங்கோ போய் விட்டது.
ஆனால் ஒன்று -இவை எல்லாம் பிறர் சொல்லித்தானா
தெரிய வேண்டும் ? இந்த சமுதாயத்தால்
பெயரும், புகழும், பணமும் இன்ன பிற வசதிகள்
அத்தனையும் பெற்ற பெரிய மனிதர்கள் –
எந்தெந்த விதங்களில் சமுதாயத்திற்கு தங்கள் கடனை
திரும்பச் செலுத்துவது என்று துடிக்க வேண்டாமா ?
திரும்பத் திரும்ப தன் சுகம், தன் பெருமை பற்றியே
யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி ?




ஏங்க தினமும் வைரமுத்துவை இப்படி வறுத்து எடுக்கறீங்க? அவர் என்ன சமூக சேவை பண்றேன்னு சொல்லிய கலைத்துறைக்கு வந்தாரு? அவர் பிழைப்பை அவர் பார்க்கறார். பல வாக்குறுதி கொடுத்து பின்னாடி ஒண்ணுமே செய்யாத ஊழல் அரசியல்வாதியிடம் உங்களுக்கு கோவம் வருவதில்லை. சமூக நன்மை எல்லாம் வைரமுத்துவிடமும் நீங்க எதிர்பார்த்தால், சிரிப்பு தான் வருது.
//(கடந்த ஆட்சியில் முதல்வருடன் அவருக்கிருந்த
நெருக்கம் அனைவருக்கும் தெரிந்ததாயிற்றே !)//
போட்டோ சூப்பர்’ங்க ஐயா..
உளரல் என்பது இதுதானோ ?
பாண்டியன்ஜி
கா மை ஐயா, தவறு எங்கள் மீது தான். உங்கள் முந்தைய பதிவின் இறுதியின் ஒரு அன்பர் பின்னூட்டம் இட்டது போல் வைரமுத்துவை வெறும் சினிமாகாரனாகவே கருதியிருக்க வேண்டும். அதையும் மீறி அவரை ஒரு இலக்கியவாதியாக நாம் உருவகப்படுத்தும் போது தான் நமது எதிர் பார்ப்பு அதிகரிக்கிறது. இதற்க்கு காரணம் நாம் ஏற்றகனவே இலக்கியவாதிகள், அறிஞர்கள், கவிஞர் என்று ஏற்றுகொண்டோர் வாழ்ந்த வாழ்க்கையும், அவர்கள் தமிழுக்கு விட்டு சென்ற பொக்கிஷங்களும். எனவே இவரை வெறும் சினிமாகாரன் (கலைஞர்!), தமிழ் வியாபாரி என்பதோடு நிறுத்தி, நாம் தமிழ் அறிஞ்சர்களிடம் எதிர் பார்ப்பதை, இவரிடம் எதிர்பார்க்காமல் இருப்பதே நலம். இவரிடம் தமிழ் புலமை இருக்கிறது. ஆனால்அதை போது நலம் கருதாது, சுய நலத்துக்கே பயன் படுத்துவது வருந்த தக்கதாயினும் அது அவர் சுய விருப்பம். நாம் ஆதங்கப்பட்டு பலனில்லை.
ண்பர் எழில் கூறியது போல் இவர் ஒரு தமிழ் வியாபாரி. கலைஞ்சர், கவிஞ்சர் என்று கூறுவதற்கு லாயக்கற்றவர்.
மறுமுறையும் இவர் குறித்து விமர்சனம் மேற்கொள்ளவே தகுதியானவர் அல்ல .எப்படியேனும் அனைத்து பட்டங்களையும் பெற முயற்சிப்பவர்.
அன்பின் கா.மை.,
நாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது பூசணிக்காய்,பரங்கிக்காய் மொத்த வியாபாரம்..
எதற்கு திடீரென்று களாக்காய் பக்கம் நம் பார்வை போகவேண்டும் ?
வேண்டாமே!
நன்றி..
நண்பர் கண்பத்,
நீங்கள் சொல்வது ஒரு பக்கம் சரி தான் என்றாலும் –
போலி வேடதாரிகளைக் கண்டால் நமக்கு எரிகிறதே –
அவர் பேச்சும், பேட்டியும் எழுதத் தூண்டுகிறதே –
என்ன செய்ய !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
//புகழ்பெற்ற எழுத்தாளர்,
வெளியீட்டாளரைத் தேடி அலைந்தார் என்றால் –
அது அவர் தனக்குத் தானே தேடிக்கொண்ட அவமானம்
என்று தான் பொருள்.//
சார் இதுல மான, அவமானம் எல்லாம் பார்த்தா முடியுமா? நாங்க அப்புறம் எப்படி நொபெல் பரிசு வாங்குவதாம்?
//ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்
படவில்லையா ? அவர் இப்படித்தான் அலைந்தாரா ?/
ஹி.ஹி. ஜெயகாந்தனும் நாங்களும் ஒண்ணாங்க. நாங்கள்லாம் துட்டுக்கு, முட்டை போடும் பெட்டைக் கோழிங்க இல்லீயா…
//துவக்கத்தில் எப்படியாவது
பதிப்பகம் ஒப்புக்கொண்டால் போதும் என்று
அணுகி விட்டு பிற்பாடு ஏசினால் எப்படி ?//
என்னாங்க நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க. அப்போ நடந்தது அய்யா ஆட்சி. இப்போ நடப்பது அம்மா ஆட்சி. புக்கே ரிலீஸானாலும் விழா எடுக்க முடியுங்களா? அப்படியே எடுத்தாலும் போணி ஆகுமுங்களா?
//தென் மாவட்டங்களிலிருந்து, சென்னையில் பணி
நியமனம் பெற்று -இங்கு வந்து, தங்க சரியான,
பாதுகாப்பான இடங்கள் (பெண்கள் ஹாஸ்டல் )
இல்லாமல் இளம் பெண்கள் தவிக்கிறார்களே.
குறைந்த பட்சம் பெண்கள் தங்கும் விடுதிகள்
சிலவற்றையாவது உருவாக்க தன் செல்வாக்கை
வைரமுத்து அவர்கள் பயன்படுத்தி இருக்கலாமே //
ஏனுங்க.. எங்களுக்கு என்ன வேற வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சீங்களா? இதே கேள்வியை எங்க ஐயா ”வாலி:யைப் பாத்து கேக்க முடியுமா நீங்க? இல்லை மத்த சினிமாக்காரங்க கிட்டதான் கேக்க முடியுமா? மக்களுக்கு சேவை செய்ய நாங்க என்ன அரசியல்வாதிங்களா? கலைஞர்கள்ங்க.
பாத்து சூதனமா நடந்துக்கங்க. இல்லைன்ன “வசைக்கவி” பாடிப்புடுவேன். ஆமா. சொல்லிப்புட்டேன்.
🙂
இவர் எப்போ அமெரிக்காவுக்கு வந்தாரோ அன்றோடு போச்சு இவரில் இருந்த மரியாதை. பண்ணிய அலம்பல் இருக்கே சொல்லி மாளாது. மூன்றுமுறை அறிவித்தாலே மேடைக்கு வருவேன் என்ச் சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! (அவர் விழா இடத்துக்கு வந்துள்ளார் என ஒருமுறை, விழா மண்டபத்துக்குள் நுழைகிறார் என இன்னொன்று, மேடைக்கு வருகிறார் என அடுத்தது 😦 …..
ஒரு இலக்கியவாதி இவ்வளவு பந்தா பண்ணுவார் என அன்றைக்கே கண்டுகொண்டேன்.
இத்தகைய அனுபவம் எனக்கும் கிடைத்தது.
கலைஞர் ஆட்சியின்போது, ஒரு நாள் காலையில் வள்ளுவர் கோட்டம் போயிருந்தேன். திடீரென்று இரண்டு கார்கள் வந்தன. புகைப்படம் எடுப்பவர்கள், உதவியாளர்கள் என்று ஒரு அரை டஜன் ஆட்களுடன் வந்தார்.
வள்ளுவர் கோட்டத்தின் பின்னணியில், உட்கார்ந்து கொண்டு,
நின்று கொண்டு, படிகளில் அமர்ந்து கொண்டு, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு , புல்தரையில் படுத்துக் கொண்டு என்று
பல தினுசு போஸ்களில் ஒரு 100 படம் இருக்கும் – எடுத்துக் கொண்டார்.
அவ்வப்போது ‘டச் சப்’ பும் செய்தார்கள்.
புதிதாக வெளி ஆட்கள் யாரும் உள்ளே வராமல், கூட வந்தவர்கள்
பார்த்துக் கொண்டார்கள். அப்போதைய ஆட்சியில் இவர் செல்வாக்குடன் உலவி வந்ததால், அவர்களுக்கு எல்லாம் சுலபமாக நடந்தது.
தங்களின் நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் நீங்கள் வைரமுத்துவிடம் கொண்ட கால்ல்புனற்சிக்கான வடிகாலாகவே தெரிகிறது அவருடைய சிகரங்களைநோக்கி போன்ற பல நூல்கள் இளய்ந்கர் களை கவர்ந்து உள்ளது அவருடைய அரசியல் நிலைபாடும் ஜால்ரா போடுவதும் விமர்சனதிற்கு உரியது ஆனால் அதற்காக அவருடைய இலக்கிய பணிகளை கொச்சை படுத்தாதீர்கள் அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பாரதியார் உட்பட ஒருவர் கூட தேற மாட்டார்கள்
ஆமாம், தமிழ் தமிழ் என்று எப்போதும் கூவிக்கொண்டிருக்கும் இவருக்கு, இவருடைய (இலக்கிய நயம் செறிந்த) படைப்புக்கு ஏன் இந்த மொழி தாண்டிய புகழ் தேடல்.
இத்தனை நாழாக தமிழ் தமிழ் என்றதெல்லம் தமிழர்களை ஏமாற்றும் கண்துடைப்பு தானே.
“தமிழ்நாட்டிலேயே தடை -தமிழ் இலக்கியத்திற்கு !” – பதவி போய் தனக்கு இக்கட்டு வரும் போதெல்லாம் திராவிடம் பேசும் இவரது தலைவரை போலவே இவருக்கு நெருக்கடி என்றவுடன் தமிழ் இலக்கியத்துக்கு தடை என்கிறார். ஒரே குட்டையில் ஊறிய பெரிய மட்டையும் சிறிய மட்டையும்.
““தமிழ்நாட்டிலேயே தடை -தமிழ் இலக்கியத்திற்கு !”
ஹைர…ஹைர…ஹைரப்பா….ஹில்கோரே…ஹில்கோரே வுக்கெலாம் எப்போ தமிழ் நாட்டில் தடை வந்தது? சொல்லவேயில்லையே!!!!
excellent writeup. he is worthless
He wrote a Kavithai ” Chinna theekuchikku thinna koduppom” about tamil movies when he did not get a chance. when he get a chance, he never comment about movie now. He is just a “Pachonthi”. According to both of his “Kalli kaattu ithikasam” & Karuvachi kaviyam” are just a story. Not litrature. He always play with word in kavithai like how Karunanithi doing in vasanam. No soul in it. Tamil people should read other litrature. Then, we can understand the level of vairamuthu and karunanithi. Pillai illatha veetula kilavan thulli vilaiyandan ….or illatha urukku illuppai poo sakkarai….
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70402191&edition_id=20040219&format=html
த. தலைவர், தனக்கு அரசியல் ரீதியான பின்னடைவுகள்
நேரும்போதெல்லாம், தமிழனைச் சபிப்பார்.
பழக்க தோஷம் காரணமாக க.பே, “தானே ரத்து செய்து கொண்ட
உடன்பாட்டை” தமிழ் இலக்கியத்திற்கு தமிழ் நாட்டிலேயே தடை
என்கிறதாய் பிரஸ்தாபிக்கிறார்.
ஜெயகாந்தன் மொழி பெயர்க்க அலைந்தாரா? என்றால் அவருக்கு
அவசியம் ஏற்படவில்லை. ஊர் அறிந்த பார்ப்பானுக்கு பூணூல்
எதற்கு?
மொழி பெயர்ப்பாளராக பொன்மணியை ஏற்பாடு செய்ய முனைந்து
தோற்றிருக்கலாம். யார் கண்டது?
ஊர் அறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? ஆம் ஊர் அறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு?
AT LEAST IN “IDIKASAM” ONE LINE STORY WAS THERE ABOUT VAIGAI DAM CONSTRUCTION AND SHIFTING OF THE VILLAGERS.
IN “KAVIYAM” VAIRAMUTHU’S PERVERSION ONLY WAS EXIHIBITED. IT IS JUST LIKE A CINEMA STORY LIKE “MIRUGAM ” PICTURE. ANY TAMIL LOVING PEOPLE WOULD NOT ACCEPT THESE TWO ARE THE WORTH IN TAMIL LITERATURE.
HIS “FEES” WAS MORE THAN ONE LAKH RUPEES WHEN HE CAME TO DAMMAM TAMIL SANGAM . SO MANY POOR PEOPLE MONEY!! APART FROM THAT HIS ACCOMODATION, AIR FARE, GIFT!!! HE IS SELFISH BUSINESSMAN. THAT IS ALL .HE NEVER DID A GOOD THING TO SOCIETY.
கவிஞருக்கு மருத்துவத் துறையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், அவரே டாக்டர்களுக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். உணவு, மருத்துவம், கல்வி இதற்குச் செய்வதுதான் உதவி; மற்றது எல்லாம் ஆடம்பரம் என்பது கவிஞரின் கருத்து!