வைரமுத்து அவர்களின் மனசாட்சி பேசுகிறது….
அண்மையில் கவிஞர் வைரமுத்து அவர்களின் பேட்டி
ஒன்றைப் படித்தேன். அது பற்றி சில விஷயங்கள்
இடுகையில் விவாதிக்க வேண்டும் என்று தோன்றியது.
எழுதத் துவங்கியபோது, நான் சில மாதங்களுக்கு
முன்னர் இதே வலைத்தளத்தில் எழுதிய இடுகை ஒன்று
நினைவிற்கு வந்தது. இப்போதைய கருத்துக்களைச்
சொல்லும் முன்னர், முன்பு எழுதிய இடுகையை
ஒருமுறை படிப்பது உதவும் என்று தோன்றியது.
எனவே முதலில் முந்திய இடுகை –
———————————–
மீசை முத்தம் என்றால் பெண்ணே!
நான் உனக்குத் தருவது.
மீசை இல்லாத முத்தம் என்றால்
நீ எனக்குத் தருவது.
தண்ணீர் முத்தம் என்றால் அன்பே
தடயமில்லாமல் இடுவது
தரையின் முத்தம் என்றால் கொஞ்சம்
தடயத்தோடு விடுவது.
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டளைப்படியே செய்வாயா?
என்னை மெதுவாய் துடிக்கவிடு
எச்சில் மாற்றி உண்டுவிடு
உடையை மெல்ல உதறிவிடு
உன்னை எனக்கு உடுத்திவிடு
சிவந்த பாகம் வெளுக்கவிடு
கறுத்த பாகம் சிவக்கவிடு
எந்தன் உயிரை உறிஞ்சிவிடு
உந்தன் உயிரால் நிரப்பிவிடு.
கட்டில் மேலே பத்துக்கட்டளை
கட்டுப்பட்டு நடப்பாயா?
நயனம் இரண்டும் மூடிவிடு
நான்கு புலன்கள் திறந்துவிடு
கூறைப் புடவை களைந்துவிடு
கூந்தல் சேலை உடுத்திவிடு
என்னைக் கொஞ்சம் ஆளவிடு
எதிர்ப்பது போல வளைந்து கொடு
கவிதை போல் சில உளறிவிடு
கட்டில் கடன்கள் திருப்பிக்கொடு
எந்த சுகங்களை நீ ரசித்தாயோ
அந்த சுகங்களைப் பேசிவிடு
அந்த சுகங்கள் தொடர்ந்திடவே
அரைமணி நேரத்தவணை கொடு.
———————————
எதையோ தேடிக்கொண்டிருந்தேன் இணையத்தில்.
இது வந்து மாட்டியது – யார் எழுதியது ?
எப்போது எழுதியது ? எதில் எழுதியது ?
விவரம் பார்த்தேன் – திகைத்துப் போனேன் !
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்
மனசாட்சி அவரிடம் எப்படிப் பேசுமோ –
நமக்குத் தெரியாது. ஆனால் –இப்படிப் பேசி இருந்தால்
நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது –
———————————
35 ஆண்டுக்காலம்.
பல நூறு திரைப்படங்கள்.
பல ஆயிரம் சினிமாப் பாடல்கள்.
இன்னும் திருப்தி அடையவில்லையா
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே ?
திரை உலகில் நீங்கள் சம்பாதித்தது போதாதா ?
அரசியல் தொடர்புகள் – அதிகாலைத்
தொலைபேசி அழைப்புகள் – அதன் மூலம்
கிடைத்த வர்த்தகத் துணைகள் –
கார், வீடு, பங்களா, தோட்டம்-துரவு,
நிலம்-நீச்சு, மனைவி, மகன்கள் –
நல்ல அந்தஸ்து –
இன்னும் என்ன தான் தேவை உங்களுக்கு ?
இந்த சமூகத்துக்கு – உங்களை இந்த
நிலையில் தூக்கி வைத்துள்ள –இந்த தமிழ்ச் சமூகத்துக்கு
இது வரை நீங்கள் செய்தது என்ன என்று
யாராவது கேட்டால் பெருமையாக நீங்கள்
பதில் சொல்ல முடியுமா ?
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும்
ஒவ்வொருவருக்கும் ஒரு சமுதாயக்கடமை இருப்பது
உங்கள் நினைவிற்கு வரவில்லையா ?
உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி விட்ட
தமிழ் மக்களுக்கு நீங்கள் இது வரை செய்தது என்ன ?
அருமையான தமிழ்ப் புலமை -சொல் ஆளுமை,
மொழி அறிவு, சிந்திக்கும் அறிவாற்றல் –
அத்தனையும் உங்களுக்கு உண்டு.
உங்கள் எழுத்தை ரசித்துக்கொண்டே இருக்கலாம் –
உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
உண்மை –
ஆனால் அவை அனைத்தும் நீங்கள்
பணம் பண்ண மட்டும் தானா ?
இந்த சமுதாயத்துக்கு நீங்கள் செய்தது என்ன ?
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கவிப்பேரரசு என்ற பட்டத்தை சுமந்து கொண்டிருக்கும்
நீங்கள் அந்த பட்டத்திற்காவது நியாயம்
தந்திருக்கிறீர்களா ?
தமிழ் இலக்கியத்திற்கு நீங்கள் ஆற்றிய பணி என்ன ?
உங்கள் படைப்பாற்றல் திரைப்படங்களோடு நின்றால்
போதுமா ? இத்தனை திரைப்படப் பாடல்களும் எத்தனை
நாட்கள் நிலைக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
தமிழில் -காலத்தால் அழியாத காவியங்களைப்
படைக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இல்லையா ?
காசுக்காக போதையூட்டும் பாடல்கள் எழுதியது போதும் –
60 வயதிற்கு மேலாவது நல்ல இலக்கியப்படைப்புகளையும்
உருவாக்குவோம் என்று தோன்றவில்லையா
உங்களுக்கு ?
உடனே கேட்கலாம் – நான் என்ன
இலக்கியம் படைக்கவில்லையா ? இதிகாசம்
எழுதவில்லையா என்று !
ஆமாம் – உங்களுக்கே சந்தேகம் மற்றவர்கள்
கூறுவார்களோ இல்லையோ என்று –
எனவே நீங்களே தலைப்பில் இட்டு விட்டீர்கள்
கள்ளிக்காட்டு “இதிகாசம்”
கருவாச்சி “காவியம்” என்று !
வேறு என்ன செய்திருக்கிறீர்கள் சொல்லுங்கள்
பார்ப்போம்.
சரி … போகட்டும். இன்னும் உங்களுக்கு
நிறைய வயதிருக்கிறது – அவகாசம் இருக்கிறது.
இப்போதாவது துவங்குங்கள்.
தமிழ்ச் சமுதாயத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்கும்
நீங்கள் ஆற்ற வேண்டிய பணியை இனியாவது
துவக்குங்கள் -கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே !




மன்னிக்கவும் நண்பர் விநோ,
உங்கள் பின்னூட்டத்தில் பயன்படுத்தியுள்ள
வார்த்தைகள் தரக்குறைவாக இருப்பதால்
நீக்கி விட்டேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்.
–
கண்ணதாசனின் கால் தூசுக்கு வராத இவரது பாடல்கள் விமர்சனம் செய்வதற்கு கூட லாயக்கற்றவை. கருணாநிதியின் தயவால் உயர்ந்தவர். காலத்தால் அழியாதவை கண்ணதாசன் கவிதைகள்.
HE SURVIVES BECAUSE OF MK, RAJNI & KAMAL SUPPORT NOT BASED ON KNOWLEDGE
YOUNSTERS ARE BETTER THAN V.MUTHU
நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. இதை வைரமுத்து அவர்கள் படித்து சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மையை உணர்வார். தகுதியும் திறமையும் உள்ள கலைஞர். கண்ணதாசனுக்கு அடுத்து கவித்துவம் உள்ள பல பாடல்களை (குப்பைகளையும் சேர்த்து) தந்தவர்.
வெறும் சினிமா பாடல்களும், கவித்துவக் கட்டுரைகளும், கருவாச்சி காவியங்களும் வரலாற்றில் நிலைத்திருக்கச் செய்யாது. கண்ணதாசன் திரைப்பாடல்களால் மட்டுமல்ல, இயேசு காவியத்தாலும், அர்த்தமுள்ள இந்துமதத்தாலும் இன்றும் நிலைத்திருக்கிறார். என்றும் நிலைத்திருக்கிறார். வாலி கூட பாண்டவர் பூமி என்று சில முயற்சிகள் செய்து கொஞ்சம் இடம் பெற்றிருக்கிறார். கவிஞர்???
இன்னும் வயதிருக்கிறது. இனிமேலாவது முயலட்டும். வெற்றுக் கூச்சலும், வீண் பகுத்தறிவுவாதமும் எந்தப் பயனும் தராது உணர்ந்து வரும் தலைமுறைகளிலும் அழியாமல் தன் பெயரை நிலை நிறுத்த ஏதாவது செய்யட்டும்.
இந்த கவிஞர் பல வெளி நாடுகள் சென்று தமிழின் பெயரால் காசு பார்த்ததோடு இல்லாமல் பல நன்மைகளும் அடைந்துள்ளார். அவரை பல விதத்திலும் அரவணைத்து, ஊக்குவித்து அனுப்பியவர்கள் பலர் ஈழ தமிழர். அவர்களோடு அங்கு இருக்கும் போது ஈழ தமிழரின் வீரத்தையும், கண்ணீரையும் கவிதையாய் கொட்டியவர், ஈழத்தில் கொத்து கொத்தாய் கொலை பாதகம் நடக்கும் போது கருணாநிதியின் கடைக்கண் பார்வைக்கு அஞ்சி மௌனியானார். இதை ஒரு ஈழ தமிழரே என்னிடம் கூறி, இக்கட்டுகள் தான் மனிதனின் உண்மையான நிறத்தை வெளிக்காட்டும் என்று ஆதங்க பட்டார். – வைரமுத்து ஒரு வெற்றிகரமான தமிழ் வியாபாரி. ‘கவிபேரரசு’ என்பது கூட ஒரு வியாபாரத்தில் பெற்றது தான்.
நமக்கு நாமே பட்டம் கொடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?
இவர், புதிய பாடலாசிரியர்கள் வருகை
குறித்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது கூறுகிறார் –
“எண்ணிக்கை என்னவோ மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால்
trend setter என்று சொல்லப்படும் தடம் அமைத்தவர்கள் இதில் யார்
என்ற கேளவிக்கு பெரிதாக பதில் இல்லை.
ஓசைகளின் பள்ளத்தாக்கை நிரப்பும் பொருளாக பாடல் அமைந்து விடுமோ
என்கிற அச்சம் எழுகிறது.
கலை என்பது எந்திரத்தின் இடுக்கில் கசியும் எண்ணையாக இருந்து விடக்கூடாது.”
தன் ஒருவரைத் தவிர வேறு எவரையும் கவிஞராக அங்கீகரிக்கவே இவர் தயாரில்லை.
படங்களில் ஏ.ஆர.ரெஹ்மானின் மெட்டுக்கு பாட்டு அமைத்த
(எந்திரனில் கூட ) கவிஞர் தான் இதைக் கூறுகிறார்.
இதை தாழ்வு மனப்பான்மை என்று கூறுவதா அல்லது அகம்பாவமா ?
காவிரிமைந்தன் சார் – நீங்கள் சொல்ல வந்தது
இந்த பேட்டியைப் பற்றித் தானோ ?
கவி கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால்
கவிதை வருமா கழுதைக்கு… (அவரது வரிகள் தான்).
கண்ணதாசன் “கவியரசு” என அறியப்பட்டதாலும்,
புகழப்பட்டதாலும், மனம் வெம்பிய இவரது ஆத்மார்த்த
ரசிகர்கள் (?!) இவரை, கவி பேரரசு என விளித்து
வருகின்றனர்.
பிழைக்கத் தெரிந்தவர் ஆனதால் தமிழின தலைவரைக்
கெட்டியாக பிடித்துக்கொண்டார். தலைவரும் இவரது
சேவையை மெச்சி பலவித சலுகைகளையும் சகாயங்களையும்
வாரி வழங்கி(னார்.) வருகிறார்.
இவரைப் போலவே சகாயமடைந்த இன்னொருவர்,
தமிழ் தத்தா (உ வே சா இல்லை) சாலமன் பாப்பையா.
முன்னவரின் மகனுக்கு அண்ணா பல்கலையில் பணி
என்றால் பின்னவரின் மகளுக்கு காமரா(ஜ்)சர் பல்கலையில்
பணி. தகுதியெல்லாம் பார்த்து இப்பணிகள் தரப்படவில்லை
என்பது ஊரறிந்த ரகசியம்.
இருவரும் தமிழ் சமூகத்திற்கு செய்துவரும் சேவை உங்களுக்குத்
தெரியாது போலிருக்கிறது. தாத்தாவின் ஹாஸ்யத்தைக் கேளாமல்
த. சமூகம் ஒரு விழாவையும் கொண்டாடுவதில்லை. பேரரசின்
தம் கட்டிய பேச்சில்லாமல் தலைவரின் பொது நிகழ்ச்சிகள் நிகழாது.
வேறென்ன வேண்டும் உங்களக்கு???
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், உங்கள் அணுகுமுறை கேள்விக்குறியது.
புலவன், எழுத்தாளன், கவிஞன்…இத்யாதி இத்யாதி எல்லாம் பணம் சம்பாதிக்கதான் எழுதுகிறார்கள். அப்புறம், அவரகள ஏன் இலக்கியத்திற்கு சேவை
செய்வது இல்லை எனற புலம்பல்!
தமிழன் என்றைக்கு சினிமாவை விட்டு வெளியில் வருகிறானோ அன்று தான் அவன் சுயமாக சிந்திக்க ஆரம்பிப்பான். காவேரி பிரச்சனியா, இல்லை, வேற எதுவாக இருந்தாலும் ஏன் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும். அவனுங்களைத் தவிர வேற எவனும் தமிழனை சுரண்டவில்லையா???
உதாரனாமாக,டாக்டர்கள், வக்கீல்கள், இது மாதிரி எல்லா தொழில் செய்பவர்கள்… எல்லாம்….தமிழ்நாடு பூரா ஒரே கொள்ளையர் கூட்டம். எந்த XXXXXXXXXனும் இதற்ககு விதி விலக்கு இல்லை…
அப்புறம், ஏன் சினிமாக் காரனை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிரீர்கள
மீதி தொழில் செய்பவன் எந்த XXXXXXXXXணவது அவனுங்க தொழிலுக்கு எதாவது சேவை செய்து இருக்கனுங்களா? எல்லாருமே, இந்தியாவில், வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சதவைத்து தான் சுரண்டரானுங்க. எதாவது ஆராய்ச்சி பண்ணி எந்த எழவையாவது எந்த XXXXXXXXXணவது ஏதாவது கண்டுபிச்சு சமூகத்திற்கு சேவை செய்திருக்கானுங்கள?
அது வரைக்கும் சினிமாக்காரனை நோன்டுவதை விட்டுடுங்க!!
I join Nambalki in his opinion. Our comments get attention if it is on Cinema and politics. What is wrong in the general meaning in the poem? if we are true to be our concious it is an expression by an adult person. He express in his poetic language which we may not have. In general , it is an unavoidable feeling, expression by most of us but within four walls.
tamilan eppothume poramaikaran
Tamilan eppothume poramaikkaran. Yarume valamaga valakkudathu. athu avanukku pittikathu. varumai, Bharathi avarkalai vatti vathaithathu, tamilan kandukollavilai. avan maraidan. tamilkoorum nallulaku potrukindrathu.enna vedikkai.
.valluvanum ilangovanum kabanum bharathium enna seytharkal tamilukku? thangalin elluthaiyum karuthaiyum thantharkal. vairamuthuvum athaidan seyamudium. verenna seyanum?
Pavam Kalaigayar mellulla kasappu vairamuthukkum serukindrathu.
Salaman pappaia maganukku MKUvil pani. epperpatta aneethi ! Avar magan peon panikkuthane poyirukkavendum. Enne tamil pannpu.
Valga tamilan ,valaga tamil
umakku ennyya poraamai, aduthavangalai saadhikka solradha vittuttu neenga saadhichu kaattunga.
பொறாமை அல்லது ஆற்றாமை.
பழுத்த மரம்தான் கல்லடி படும் – கவிஞருக்கு பிடித்த வரிகள். நல்ல இலக்கியவாதியை மட்டுமே விமர்சனம் பண்ண முடியும் என்பதை காவிரிமைந்தன் அறிவாரோ??
பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடல் – என்ன நல்ல கருத்துக்களை உலகிற்கு சொன்னது என்று சொல்வீரோ???