எவ்வளவு கிடைக்கும் நம் M.P.க்களுக்கு … ?
நீங்கள் பாட்டிற்கு எதையாவது கற்பனை
செய்து கொண்டு விடாதீர்கள்….
நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாதாரணமாக
கிடைக்கக்கூடிய ஊதியம் மற்றும் அலவன்சுகளைப்
பற்றித்தான் சொல்ல வந்தேன்.
மக்களுக்காக இவ்வளவு உழைக்கும் நம் பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊதியம் மற்றும்
சலுகைகளைப் பற்றி அறிய எல்லாருக்குமே
ஆவலாகத் தான் இருக்கும். அவற்றைப் பற்றி
சில தகவல்கள் –
தன் சம்பளத்தை தானே தீர்மானித்துக் கொள்ளக்கூடிய
அதிருஷ்டம் நம்மில் எவ்வளவு பேருக்கு கிடைக்கும்?
நம் எம்.பி.க்களுக்கு அந்த அதிருஷ்டம் இருக்கிறது !
(கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கொள்கை அளவில்
இதை எதிர்க்கிறது -மற்றபடி மற்ற கட்சிகள்
அனைத்திற்குமே இதில் உடன்பாடு தான் !)
அவர்களுக்கான ஊதியம், அலவன்சுகள் –
Salary, Allowances and Pension of
Members of Parliament Act,1954 –
என்கிற அடிப்படை சட்டத்தின் கீழ், அவ்வப்போது
செய்யப்படுகிற மாறுதல்களின்படி கிடைக்கிறது.
கடைசியாக கிடைத்த உயர்வு – மதிப்பிற்குரிய
லாலு பிரசாத் மற்றும் முலாயம் சிங் – யாதவ்களின்
கூட்டு முயற்சியால் விளைந்தது !
என்னென்ன கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
பார்ப்போமா ?
மாதச் சம்பளம் – ரூபாய் 50,000/-
தொகுதி அலவன்சு – மாதம் ரூ.40,000/-
அவையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நாளும்
ரூபாய் 2000/- (சிட்டிங் பீஸ்).
கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் விமானப்
பயணம் இலவசம். உதவியாக கூட வரும் நபருக்கு
நான்கில் ஒரு பங்கு (25%) கட்டணம் செலுத்தினால்
போதும்.
வருடத்திற்கு மொத்தம் 34 சிங்கிள் விமானப்
பயணங்கள் – இலவசம்.
அவர்களது மனைவியோ, துணைவியோ அல்லது
கூட வரும் வேறு யாராவதோ – வும்
அனுமதிக்கப்படுவர் !
ரயிலில் ஏசி முதல் வகுப்பு படுக்கைவசதி இலவசம்.
உதவியாளருக்கு ஏசி இரண்டாவது வகுப்பு
படுக்கை வசதி.
டெல்லியில் அரசு குவார்ட்டர்ஸ் இலவசம்.
தண்ணீர் இலவசம்.
மின்சாரம் இலவசம்.
அலுவலகத்தில் ஒன்றும், வீட்டில் ஒன்றுமாக
இரண்டு டெலிபோன்கள் வழங்கப்படும்.
அவற்றில் வருடத்திற்கு 50,000 அழைப்புகள்
வரை இலவசம்.
இது தவிர மொபைல் போன்,
இண்டர்னெட் வசதி – இலவசம்.
அவர்கள் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.150/-
(அடேயப்பா எவ்வளவு பெரிய தொகை !)
பிடித்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கும்,
அவர்களது முழு குடும்பத்தினருக்கும்
இலவச மருத்துவ வ்சதி அளிக்கப்படும்.
வாகனம் வாங்க சலுகையில் கடன் வழங்கப்படும்.
அந்தப் பணம் அதிகபட்சம் 60 தவணைகளில்
அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும்.
இவை எல்லாம் பதவியில் இருக்கும்போது.
பதவிக்காலம் முடிந்த பிறகு –
கடைசி காலம் வரை மாதம் ரூ.20,000/- பென்ஷன்.
இதே போல் மாதம் ரூ.150/- க்கு இலவச
மருத்துவ வசதி.
காலம் முழுதும் தனியாக பயணம் செய்தால் ஏசி முதல்
வகுப்பிலும்,
கூட யாரையாவது அழைத்துச் செல்வதாக இருந்தால் –
இருவருக்குமே ஏசி இரண்டாம் வகுப்பிலும் –
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல
இலவச ரயில் பயணம்.
அ வ் வ ள வு தான் – எனக்குத் தெரிந்(த)து !
பி.கு –
எந்த வித ஊதியத்தையோ,
சலுகைகளையோ,
எதிர்பார்க்காமல்,
மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றும்
பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
அவர்களுக்கு நம் சல்யூட் !!



Wonderful Article.
I have shared in my Face Book page.
Thank You Sir.
ஊதியமே இவ்வளவுனா….
ம்பீக்களுக்கு தொகுதி மேம்பாட்டு செலவுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை உண்டுமே (ஒரு கோடியோ இரண்டு கோடியோ ) சின்ன பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதல் சம்பளவும் பெரிய பதவியில் உள்ளவர்களுக்கு
குறைந்த சம்பளவும் கொடுத்தால் போதுமானது. எத்தனை பேர்கள் ஒத்துக்கொள்வார்கள்.