“வலையில் எழுதுவதால் என்ன பயன் ?
அரசியல் சார்பற்ற மக்களால் எதாவது
சாத்தியப்படுமா ?”
கடந்த 2 1/2 வருடங்களாக நான் இந்த வலைத்தளத்தில்
எழுதி வருகிறேன். பொதுவாக -அரசியல், சமூகம்,
பொருளாதாரம்,மொழி -இனம் சார்ந்த விஷயங்களில்
நிகழும் தவறுகளையும், ஊழலையும், காணப்படும்
சீர்கேடுகளையும் பற்றி முக்கியமாக எழுதுகிறேன்.
இதற்கான ஆதாரங்களையும் தேடிக் கண்டு பிடிக்கிறேன்.
முடிந்த வரையில் தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறேன்.
சில சமயங்களில் என் எழுத்து – என் பார்வையை
அடிப்படையாகக் கொண்டும் அமைகிறது.
இதில் முக்கியமான விஷயம் –
நான் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ,
அரசியல் தலைவரையோ சார்ந்தவன் இல்லை. எனவே
என் எழுத்துக்கள் நிச்சயமாக ஒருதலைப்பட்சமாக
இருக்காது. நிஜத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
எதைப்பற்றி எழுதினாலும், என் மனசாட்சி ஏற்றுக்
கொள்வதை மட்டுமே எழுதுகிறேன். அச்சமின்றி
எழுத வேண்டும் – ஆபாசமின்றி எழுத வேண்டும்
என்பது என் விருப்பம். ஜாதியோ,மதமோ,
அரசியல் சார்போ -இதில் நிச்சயம் குறுக்கிட முடியாது.
நேற்றைய தினம் பின்னூட்டம் இடும்போது –
ரிஷி என்கிற நண்பர் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது கேள்வி கிட்டத்தட்ட இப்படி அமைகிறது –
———————
“பிரச்சினைகளைப் பற்றி வெறுமனே எழுதுவதால்
மட்டும் நாம் எதைச் சாதிக்க முடியும் ?
சரியான தீர்வுகளைக் அலசி ஆராய்ந்து கண்டு
பிடிக்க வேண்டும்.
அவற்றை செயற்படுத்துதற்கான முயற்சிகளில்
இறங்க வேண்டும்.
தன்முனைப்போடு குழுக்குழுவாய் –
எல்லோரும் இயங்கும்போது தான் அதற்கு போதுமான
வலிமை சேரும்.
ஆனால் அரசியலற்ற மக்களால் இது சாத்தியப்படும் என்று
நினைக்கிறீர்களா?”
————————
இந்த கேள்வியை நான் இப்படி அணுக விரும்புகிறேன்-
பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமே,
பெரும்பாலான பொது மக்கள் அவற்றைக் கண்டும்
காணாமல் போய்க்கொண்டே இருப்பது தான்.
சில தவறுகள்,சீர்கேடுகள், ஊழல்கள்
வெளியே தெரிவதே இல்லை.
அப்படித் தெரிய வந்தாலும், –
நம்மால் இதில் என்ன செய்ய செயலும் என்று மக்கள்
ஒதுங்கிப் போகிறார்கள்.
ஜனநாயகத்தின் முக்கிய சிறப்பே அனைத்து
விஷயங்களிலும் மக்களின் பங்களிப்பு
இருக்க வேண்டும் என்பது தான்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டுப் போட்டு
அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதோடு தங்கள்
கடமை தீர்ந்தது என்று மக்கள் கருதுகிறார்கள்.
அதற்கு மேல் நடக்கும் நல்லது கெட்டதுகளை –
அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ளும் –அடுத்த
5 வருடத்திற்கு நம் பங்கு எதுவும் இல்லை
என்கிற இயலாமை உணர்வும் ஒரு காரணம்.
சாதாரண பொது மக்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும்
சார்ந்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை.
தேர்தல் வரும்போது தான் – எதாவது ஒரு கட்சியை
தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் வரும்போது மட்டும்
தான் – மக்கள் அரசியல் கட்சிகளை நம்ப வேண்டும்.
அரசியல் கட்சிகள் சுயநல நோக்குடையவை.
தங்கள் வளர்ச்சியையே முக்கிய நோக்கமாகக்
கொண்டவை. ஆட்சியை, அதிகாரத்தை –
கைப்பற்றுவதே அவற்றின் குறிக்கோள் !
மக்கள் நலன் என்பது அவற்றிற்கு 2ம் பட்சம் தான் !
ஒவ்வொரு சம்பவமும், தங்கள் கட்சி வளர்ச்சிக்கு
எந்த விதத்தில் சாதகம் அல்லது பாதகம் என்கிற
நோக்கில் தான் அவற்றின் அணுகுமுறை அமையும்.
பொதுவில் – நமது அணுகுமுறையே தலைகீழாக
இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும், மக்களின்
கருத்து/ஆதரவு எப்படி இருக்குமோ – அதைப்
பொருத்து தான் அரசியல் கட்சிகளின் நிலை
அமைய வேண்டும்.
ஆனால் – இங்கு. மக்கள் தாங்கள் ஒரு
நிலைப்பாட்டிற்கு வரும் முன்னர் அரசியல் கட்சிகள்
என்ன சொல்கின்றன என்று பார்க்கிறார்கள்.
தாங்கள் தான் இது விஷயத்தில் எஜமானர்கள்
என்பதை மக்களே உணர்வதில்லை.
இதற்கு முக்கிய காரணம் – பல நடப்புகள்
மக்களின் பார்வையில் படுவதில்லை. அரசியல்
தலைவர்களின் உண்மையான உருவமோ,
கட்சிகளின் சுயநலப் போக்கோ – பொது மக்களுக்கு
எளிதில் தெரியாவண்ணம் அவர்கள் பார்த்துக்
கொள்கிறார்கள்.
மிகப்பெரிய அளவில் எதாவது ஊழல் சம்பவம்
நிகழ்ந்தால் – 2ஜி போல –மட்டும் தான் பொது
மக்கள் எல்லாருக்கும் தெரிய வருகின்றது.
நண்பர் கேட்டாரே – அரசியல் சார்பற்ற மக்களால்
எதாவது சாத்தியப்படுமா ? – என்று –
இங்கு தான் அரசியல் சார்பற்ற, பொது நலனில்
அக்கரை கொண்ட மக்களின் அவசியம் தேவைப்படுகிறது.
சாதாரணமாக அதிகம் வெளியில் தெரிய வாய்ப்பு
இல்லாத பல விஷயங்களை இவர்களால் வெளிச்சத்துக்கு
கொண்டு வர முடிகிறது. நான் இதைத்தான் செய்ய
முயன்று வருகிறேன். என்னைப் போல் இன்னும்
பல நூறு பேர் இருக்கிறார்கள்.
ஊழல் ஒழிப்பு இயக்கங்கள், RTI ஆர்வலர்கள்
(தகவல் தெரிந்து கொள்ளும் உரிமை சட்டத்தின் கீழ்
பல உண்மைகளை கேட்டுப்பெற்று வெளியே கொண்டு
வருபவர்கள் ), நடுநிலை எழுத்தாளர்கள் – என்று
பலரும் இந்த கோணத்தில் தான் முனைந்து பணி
ஆற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆர்வத்துடன்
உழைக்கவில்லை என்றால் – பல ஊழல்கள்,
பல உண்மைகள் – ஆழக்குழி தோண்டி
புதைக்கப்பட்டிருக்கும்.
பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி, உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி ஆகியோர் குறித்த பல தகவல்கள்
இவ்வாறு வெளியே வந்திருக்கின்றன. நான் எழுதிய
பல கட்டுரைகள் இத்தகைய உண்மைகளின் அடிப்படையில்
அமைந்தவை தான்.
எனவே – ஒவ்வொருவரும் கூட்டமாக, குழுவாகச் சேர்ந்து
வீதியில் இறங்கி போராடினால் தான் என்றில்லை –
ஜனநாயகத்தில் மக்கள் கருத்தைத் திரட்ட பல்வேறு வழிகள்
உள்ளன. மக்களும் தேவைப்படும் போதெல்லாம்
முன்வந்து தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகத்
தெரிவிக்க முன் வர வேண்டும். விவாதங்களில்
பங்கு கொள்ள வேண்டும்.
இந்த விஞ்ஞான யுகத்தில் –
மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க எவ்வளவோ
வழிகள் இருக்கின்றன. facebook மூலம் 10 லட்சம்
மக்களை அண்மையில் எகிப்தில் திரட்ட முடிந்ததே.
தெருவில் இறங்கிப் போராடுவது என்பது கடைசி வழி.
அதற்கு முன்னால், முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம்
பொது மக்கள் தாமாகவே முன்வந்து தங்கள் கருத்துக்களை
தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு தெரிந்த உண்மைகளை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும்.
வலைத்தளத்தில், பத்திரிகைத் தளங்களில் – முக்கிய
செய்திகளை ஒட்டிய வாசகர் கருத்துக்களைப் பாருங்கள்.
ஒவ்வொரு செய்திக்கும் மக்களின் எதிரொலி உடனடியாக
அங்கே கேட்கும்.
அண்மையில், ஒரு செய்தி வலைத்தளத்தில் ஒரு
தலைப்புச் செய்தியின் கீழ் –
வாசகர்கள் எழுதிய கருத்துக்களை வைத்து தொகுத்தே
நான் ஒரு இடுகை பதிப்பித்தேன் -நினைவிருக்கிறதா ?
(தீக்குளிப்பேன் !)
இந்தப் பணியில் ஆர்வமுள்ள எவரும் பங்கு கொள்ளலாம்.
சுயமாக எழுத வசதி இல்லாதவர்கள், இத்தகைய
தகவல்களை – தங்களால் இயன்ற விதத்தில் பரப்பலாம்.
இந்த விமரிசனம் வலைத்தளத்தில் வரும்
சில முக்கிய இடுகைகளை, பலர் தங்கள்
வலைத்தளத்திலும், facebook லும் எடுத்துப்
போடுவதை எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். நானும்
பார்த்திருக்கிறேன்.
ஆக – மக்களிடையே, மறைக்கப்பட்ட அல்லது
மறக்கப்பட்ட பல விஷயங்களை கொண்டு செல்லவும்,
பல விஷயங்களை பொதுவில் வைத்து விவாதிக்கவும்,
பொதுக் கருத்தை உண்டுபண்ணவும்
அரசியல் சார்பற்ற மக்களால், நிச்சயம் முடியும்.
மக்கள் வலுவாகத் தங்கள் கருத்தை வெளிப்படையாகத்
தெரிவித்தால் – அரசியல் கட்சிகளோ, அரசாங்கமோ –
அதை காது கொடுத்துக் கேட்காமல் இருக்க முடியாது.
குழுவாக தெருவில் இறங்காமலே
மக்கள் தங்கள் கருத்தை வலிமையாக வெளியிட முடியும்
என்றும் தெருவில் இறங்கி போராடுவதை கடைசி
ஆயுதமாக வைத்துக் கொள்வோம் என்றும்
சொல்ல விரும்புகிறேன்.
வலைத்தள நண்பர்களே – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
“இத்தகைய இடுகைகளாலோ, வலைத்தளங்களாலோ
எந்த பயனும் விளையப் போவது இல்லை
– இது சுத்த waste “-
என்று உங்களுக்கும் தோன்றுகிறதா ?
இந்த இடுகையில் எழுப்பப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து
உங்கள் கருத்தை மறுமொழியில்
தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.



நண்பரே அருமையான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். நான் தாங்கள் தெரிவித்துள்ள அரசியல் சாராத ஆனால் அரசியலை கூர்ந்து கவனித்து வரும் பொதுமக்களில் ஒருவன். சுமார் 1965 — ஆம் ஆண்டு முதல் கூர்ந்து கவனித்து வருகிறேன்.அரசியல் தீமையும் நன்மையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. காமராஜ், பக்தவத்சலம், கருணாதி,எம்ஜீஆர் , ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி முறை கருத்துக்களை மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து வைத்திருந்தேன். ஆனால் வெளியில் வந்து என்னால் போராட முடியாது. இருப்பினும் இரண்டு முறை பஞ்சாயத்து
தேர்தலில் சுயேச்சையாக நின்று தோல்வியடைந்தேன். எனது மனதில் உள்ள பல்வேறு கருத்துக்களை வெளியே கூறுவதற்கு ஒரு வடிகாலாக தங்களது வலைத்தளம் அமைந்துள்ளது. இந்த வலைத்தளம் பற்றி தெரிந்தது முதல் எழுதி வருகிறேன். தொடர்ந்து எனது கருத்துக்களை கூறிக்கொண்டேயிருப்பேன் ஜனநாயக ரீதியான தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்..
மீண்டும் ஒரு நல்ல பதிவு.
பல உண்மைகளை அரை குறையாக தெரிந்து, அல்லது ஊகித்து மனதில் வெதும்பும் பல குடிமகன்களுக்கு வலைப்பதிவு ஒரு வடிகால். அரைகுறை அறிவு முழு வடிவம் ; விவாதங்களினால் கூர்மை அதிகரிக்கும். பரவலாக பேசப்படும் போது பெறும்; பெரும்பாலானவர்கள் உணர்வுகள் வெளிப்படும். ஆட்சியில் இருப்போரும் இதர கட்சிகளும் தம் அணுகுமுறையை மாற்றி, பெரும்பாலார் விரும்பும் வண்ணம் மாற்றிக்கொள்வர்/மாற்ற முயல்வர்.
ஆகவே இந்த வலை மிக நல்ல பணி ஆற்றி வருகிறது. பணி தொடர வேண்டுகோள்.
Respected sir !
i am greatest follower of your blog. i will read all your post. I come to know that blogging is a great weapon after seeing your blog .i have an idea to publish as a monthly or weakly magazine of your post and other blogger post which work towards social welfare. At present i am a student in a college pursing BE in cse department . I am feeling to talk to u. please mail when you are free
email id :vigneshjpm@gmail.com
Dear Mr.kavirimainthan,
Though I am regularly reading
your blog, this is the first time
I write.
vimarisanam blog gives very solid
information.
We can blindly depend on your
writings – as the same are
based on actual facts.
Many of us have no approach
to such areas.
This is a great service to the
soceity and as such
Please continue to write.
thanking you,
prabhu ramchandar
காவிரிமைந்தன் சார்,
விமரிசனம் வலைத்தளம் மிக மிக
பயன்தருவதாக இருக்கிறது. இதில்
எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
சாதாரணமாக எங்கள் பார்வைக்கு வராத
பல விஷயங்களைப் பற்றி நீங்கள் எடுத்து
எழுதுகிறீர்கள். எந்தவித அரசியல் கட்சியையும்
சாராமல் நீங்கள் எழுதுவது தான் எங்களுக்கு
பிடிக்க முக்கிய காரணம்.
நண்பர் ரிஷி சொன்னது போல், இந்த
விமரிசனம் வலைத்தளத்தையே கூட நாம் ஒரு
விவாத மேடையாகவும், கருத்து பரிமாற்றம்
செய்துக் கொள்ளும் குழுவாகவும் கூட
உருவாக்கிக் கொள்ளலாமே.
உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல்
இந்த வலைத்தளத்தை தொடர்ந்து எழுதி
வாருங்கள்.
வணக்கமும் நன்றியும்.
ராஜராஜசோழன்
அன்பின்,கா.மை.,
உங்கள் பணி பயனுள்ளது; பாராட்டத்தக்கது.
நம் பிரச்சினைகள்..
=மக்கள் பணம் வாங்கிக்கொண்டு, தகுதியற்றவர்களை தேர்வு செய்வது.
=அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ,மக்கள் பணத்தையே கொள்ளை
அடிப்பது.
=அறிவும் ஆற்றலும் உள்ள சிறுபான்மையினர் மிகவும் சுயநலவாதிகளாக இருப்பது.
=பரவியிருக்கும் ஜாதி,மத ஈடுபாடு/வெறி.
=மிகவும் வயதானோர்(உதா:வயது 70 க்கு மேல்) பொறுப்பான பதவிகளில் இருந்து ஒரு வேலையும் செய்யாமல் நேரத்தை வீணாக்குவது..
நம் இலக்கு வெகு தொலைவில் உள்ளது.
ஒருவர் ஒரு ஏரியில் தவறி விழுந்து தத்தளிப்பதை பார்த்து
ஒருவர் கூச்சல் போட்டு அங்கு சாலையில் செல்வோர் கவனத்தைக்கவர முயற்சிக்கிறார்.-இவர் பதிவாளர்.
அவர் கூச்சலால் ஈர்க்கப்பட்டு வேறு சிலரும் அங்கு வந்து அவரோடு சேர்ந்து கூச்சலிடுகிறார்கள்..-இவர்கள் பின்னூட்டம் இடுபவர்கள்.
இவர்கள் எண்ணம ,யாராவது நீச்சல் தெரிந்தவர்கள் வரமாட்டார்களா என்பதுதான்!
அப்படி நீச்சல் தெரிந்தவர்கள் வருவதும் வராததும் இறைவன் கையில்தான் உள்ளது.
உன் கடமையை சோர்வில்லாமல் செய்!எப்பொழுது,எவ்வகையில் அதற்கான பலன் அளிப்பது என்பதை நான் முடிவு செய்வேன்!-கீதையில் கண்ணன்.
BEST WISHES
அன்புள்ள காவிரிமைந்தன்,
தங்களின் இந்த இடுகைக்கு என் மனமார்ந்த வணக்கங்கள். தங்களது அனைத்து கருத்துகளிலும் – ஓரிரு இடங்களைத் தவிர – அப்படியே உடன்படுகிறேன். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்குமுன் அது பற்றிய ஒரு பொதுக்கருத்து உருவாக்குவதற்கு இணையம் நமக்குப் பேருதவியாக இருக்கிறது.
‘அரசியல் சார்பற்ற’ மக்கள் என்பதைவிட அரசியலற்ற மக்கள் என்பதே சரியாக இருக்குமெனக் கருதுகிறேன். இங்கு பலருக்கும் சரியான அரசியல் புரிதல் இல்லை. அரசியல் சார்பு என்றால் கட்சி சார்ந்து இருக்கவேண்டும் என்றில்லை. நீங்கள் கொண்டிருப்பது அரசியல் புரிதல் – சார்பு அல்ல. அதனால் நிச்சயம் நீங்கள் அரசியலற்றவர் கிடையாது. உங்களைப் போன்று நடப்பு அரசியலை அவதானிக்கும், தரம் பிரிக்கும், பிரச்சினையை அலசும், தீர்வுகளை முன்வைக்கும் – வகையிலான அரசியல் புரிதல்தான் நம் மக்களுக்கு அடிப்படைத் தேவை. இந்த அலசல் என்பது பெரும்பான்மையினருக்கு நன்மை ஏற்படும் வகையிலான, நலிந்தோருக்கு கைகொடுக்கும் வகையிலான பொதுக்கருத்தை உருவாக்குவதில் முடிய வேண்டும்.
உதாரணத்திற்கு, மக்கள் பணம் வாங்கிக்கொண்டு தகுதியற்றவர்களைத் தேர்வு செய்வதும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்கள் பணத்தையே கொள்ளையடிப்பதும் – ஒரு பிரச்சினை. இது பொதுப்படையான பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டு. இதற்கு அடிப்படையில் வலு கிடையாது. ஏன் கிடையாது?
நான் ஏற்கெனவே ஒரு பதிவில் – இதே விமரிசனம் தளத்தில் – நம் தேர்தல் முறையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு தொகுதியில் முப்பது விழுக்காடு வோட்டு வாங்கும் நபர், மற்றவர்களை விட அதிகமாக வாங்கியிருக்கும்பட்சத்தில் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். ஆனால் அந்த நபர் எழுபது விழுக்காட்டினரால் நிராகரிக்கப்பட்டவர் என்ற உண்மை பொட்டிலறைந்தாற்போல ஏன் யாருக்கும் உறைக்கமாட்டேன்கிறது??? எழுபது விழுக்காட்டினரால் நிராகரிக்கப்பட்ட வெற்றியாளர்(!!!) மக்களுக்கு நற்பணி செய்வார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
இதைத்தான் அரசியல் புரிதல் ஏற்பட வேண்டும் என்கிறேன். இந்த ஒட்டுமொத்த அமைப்பு முறையிலேயே பாரிய மாற்றம் வேண்டும் என்கிறேன். அதை நோக்கிதான் மக்கள் போராடவேண்டும், பொதுக்கருத்துகளை உருவாக்க வேண்டும் என்கிறேன்.
மற்றொன்று.. மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்விதம்.
எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பது என்னவென்றால் தலைவன் என்றால் எங்கிருந்தோ வருவான், நம்மைக் காப்பான் என்பதுதான். அவனை/அவர்களை ‘உருவாக்க’ வேண்டியது நாம்தான் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகிறோம். முந்தைய பின்னூட்டத்தில் நண்பர் கண்பத் அவர்கள் ‘நீச்சல் தெரிந்தவர்கள் வருவதும் வராததும் இறைவன் கையில்தான் உள்ளது’ என்கிறார். ஆனால் நீச்சல் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை நாம் ‘உருவாக்கி வைத்திருந்தால்’ நாம் இந்த பாடு படவேண்டியதில்லையே!! இறைவனை நாடவேண்டியதில்லையே!!
//வலைத்தள நண்பர்களே – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
“இத்தகைய இடுகைகளாலோ, வலைத்தளங்களாலோ
எந்த பயனும் விளையப் போவது இல்லை
– இது சுத்த waste “-
என்று உங்களுக்கும் தோன்றுகிறதா ?//
இதற்கு நான் அவசியம் பதிலளிக்க வேண்டும். இத்தகைய இடுகைகளால் பயனே இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு collective mass (or) critical mass உருவாக இது பயனளிக்கும். ஆனால் அந்த collective mass உருவானபின் அது அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற முன்னேற்பாடுகளுடன் இருந்தால் அது நாம் போகும் சரியான பாதையாக இருக்கும். இல்லையேல் முட்டிக்கொண்டு நிற்கும்; சிதறுண்டும் போகும்!
Once awareness has made, then only we can take action to support / against the situation. Awareness is the main thing. You are doing the same. We support your service. Thanks
THODARNDHU YEZHUDHUNGAL. VETTRIPERUVOM
ஒரு விழிப்புணர்ச்சி, உடனுக்குடன் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
வலைப்பதிவு, முகநூல் எல்லாம் பிரயோசனமானவை தான்.
நன்றி.
அரசியல் அக்கறையற்றவர்களாக மக்களை வைத்திருக்கிற விரும்புகிற சுரண்டல் வர்க்கம், அதன் இன்றைய தலைமை பீடத்தில் இருக்கிற உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் தாதாக்கள், அதற்கேற்ப வளைக்கப்படும் சட்டங்கள்…. இவை பற்றிய விமர்சனம் இல்லையே… அரசியல் சார்பற்ற நடு நிலை என்று எதுவும் கிடையாது. அப்படிச் சொல்லி ஒதுங்குவதே கூட ஒரு அரசியல்தான். ஒரு மாற்றம் தேவை என நாம் உணர்வ்திலும் உணர்த்த விரும்புவதிலும் இருப்பது அரசியல்தான். அரசியல் என்றால் கட்சி அரசியல் மட்டுமல்ல. எல்லா அரசியல் கட்சிகளையும் பொத்தாம் பொதுவாக சுயநலம்தான் நோக்கம், அதிகாரத்தைப் பிடிப்பதுதான் லட்சியம் என்று முத்திரை குத்தித் தள்ளிவிடுவது மக்களிடையே சரியான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவாது. அரசியல் போக்குகளைத் தீர்மானிக்கிற ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான சிந்தனைகளை மேலும் மேலும் முன்னெடுத்துசசெல்வோம்.
நல்ல முயற்சி பாராட்டுக்கள். எப்படிஇருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு வோட்டு அரசியல் மொழி மட்டுமே புரியும். இதனால் அரசியல் இல்லாத பொதுமக்கள் பொதுவான கருத்தின் அடிப்படையல் ஒன்று சேர வேண்டும்.நாங்கள் பூரண மதுவலக்கு வேண்டி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம் .எந்த அரசும் ஒத்துழைக்கவில்லை .இறுதியாக தேர்தலை மதுவிலக்கிர்காக பயன்படுத்த மோற்சித்தோம் .சங்கரன்கோயில் இடைதேர்தலில் மதுவிலக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்தினோம்.ஆர்னால் அரசியலுக்கு புதியவர்கள் ஆனதால் குறைந்த வோடக்கலையே பெற முடிந்தது .
thamilil yeppadi eluthuvathu vendru yaaraavathu sollungalen please
go to any tamil news paper news. go to comments. you can type in uni code. if you tyoe in english then hit space it will change into tamil.this is the easiest way what i found
Respected Kaveri maindhan
pl. continue your service. You are our eye opener.
ரிஷி ஸார்!
யார் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் ,இன்றைய இந்தியாவை கடவுளைத்தவிர யாரும் காப்பற்ற முடியாது.
அவர்(அந்த ரட்சகர்) இந்நேரம் பிறந்து கூட இருக்கலாம்.
அதே போல விகிதாசார தேர்வு முறையும் தீர்வல்ல.
இந்த எம் எல் சி ,எம் எல் ஏ,எம்.பி போன்ற பதவிகள் ஒழிக்கப்படவேண்டும்.குடிமக்கள் முதன் மந்திரி, ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும்.இவர்களுக்கு சம்பளம் கோடிகணக்கில் கொடுத்து ஆட்சிப்பொறுப்பை இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
நன்றி!
ரசித்தேன் கண்பத். 🙂
இதுபோன்ற மாற்று சிந்தனைகள் நிறைய வரவேண்டும். அவை ஆக்கபூர்வமாக இருக்கிறதா.. இல்லையா என்பதை தொடர் விவாதங்கள் மூலம் நாம் தெளிவு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சிந்தனைகள் தடையற்று வரவேண்டும் இந்த அமைப்பையே மாற்றியமைக்க.
Mr.Ganpath,
The idea is wonderful and certainly can be tried.
But how do you expect that a Parliament with people
like Lalu and Mulayam will agree to pass a bill
to this effect ?
At best It can be only a dream atleast in which we can be happy !
நண்பர்கள் ரிஷி மற்றும் பிரபுவிற்கு மனமார்ந்த நன்றி.
“Problems cannot be solved by the same level of thinking that created them.”
என்ற மேதை ஐன்ஸ்டைன் கூற்றுக்கிணங்க ,மாறுபட்டு சிந்தனை செய்வதே நமக்கிருக்கும் ஒரே வழி.
அடிப்படியில் நம் இறையாண்மை மற்றும் குற்றவியல் சட்டங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் தேவை.
to begin with,நாம் கீழ்கண்ட ஒன்றுக்காவது முயற்சி செய்யலாம்.
1 இடைத்தேர்தல்கள் ஒழிப்பு.
யாராவது எம்.எல்.ஏ அல்லது எம்.பி இயற்கை எய்தும் போது,மக்கள வேதனைஅடைகிறார்கள்.(ஐயையோ மீண்டும் இடைதேர்தலா என்று)
மிகவும் நேர,பணம்,உழைப்பை விரயம் செய்து மீண்டும் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்துவதில் எந்த பயனும் இல்லை.எனவே அடுத்த போது தேர்தல் வரை அந்த தொகுதி மக்கள் பிரதிநிதி இல்லாமல் இருக்கலாம்.அந்த தொகுதி மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
2 இரண்டு ஒட்டு முறை..
ஒவ்வொரு வாக்காளர்களும் இரண்டு ஒட்டு போடவேண்டும்.
முதல் ஒட்டு யாரை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ அவருக்கு…
இரண்டாவது ஒட்டு போட்டியிடும் மீதி வேட்பாளர்களில் யார் வெற்றிபெறவே கூடாது என அவர்கள் நினைக்கும் இன்னொருவருக்கு..
முதல் ஒட்டு +1 ஆகவும் இரண்டாவது ஒட்டு -1 ஆகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
மொத்தத்தில் எந்த வேட்பாளர் அதிக ஒட்டு பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர்.
தற்போதைய முறை:
உதாரணத்திற்கு..மொத்த ஓட்டுக்கள் 100
கருணா..32
ஜெயா..38
விஜயகாந்த்..20
அப்துல்கலாம்.10
வெற்றி பெற்றவர்..ஜெயா..
பரிந்துரைக்கும் முறை..
மொத்த ஓட்டுக்கள் 100
கருணா.. +32 -43 =-11
ஜெயா.. +38 -42 = -4
விஜயகாந்த்.. +20 -15 = 5
அப்துல்கலாம். +10 -0 = 10
வெற்றி பெற்றவர்..அப்துல்கலாம்…
விவாதிக்கலாமே!
சமூகத்தின் மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குகிறோம். இதுவே பெரிய மாற்றம்தான். இந்த மாற்றம் படிப்படியாக எல்லோரையும் சென்றடையும். பின் சமூகம் முழுக்க அந்த மாற்றம் வியாப்பித்திருக்கும்.
முகநூலில் ஒன்றிடன்டு நண்பர்கள் சேர்ந்து கோவிலொன்றை தூய்மை செய்தார்கள். இப்போது பெரும் குழுவாக அது மாறியிருக்கிறது. கோவில் என்றில்லை ஒருமித்த கருத்துடையவர்கள் நிச்சயம் சமூகத்தையும் தூய்மை செய்யமுடியும்.
தொடருங்கள் நண்பரே. உடன் நாங்கள் இருக்கிறோம்.
இந்த பதிவும் அதனோடு கூடிய பின்னூட்டங்களும் மிகவும் பயனுள்ள சிந்தனையை தூண்ட கூடியதாக இருக்கின்றன. களம் அமைத்து தொடர்ந்து எழுதி வரும் கா மை ஐயாவுக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும். தொடரட்டும் உங்கள் நற்பணி.
good post…vaalththukkal
மகிழ்ச்சியான விஷயம் – அனைத்து நண்பர்களுமே
நம்பிக்கையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறீர்கள்.
வலையெழுத்தால் –
கொஞ்சமாவது பயன் விளையும்
என்று தோன்றுகிறது.
தொடர்ந்து – சேர்ந்து பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே……
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
usefull – but how i can explain the problem ?
First your question is wrong? … so many truthful informations are i have found from this website. so many tamilnadu papers are telling fake news..but you and some more good blogs only telling truthful news..mainly about central news..before reading your blogs i did not have awareness of central politicians…your blog only telling truth news…..your blog is the guidance of this generation peoples… your blog contain very worthfull news…don’t stop Your Work…