தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் !

தமிழக முதலமைச்சருக்கு
ஒரு வேண்டுகோள் !


15 லட்சம் கோடி தமிழ் நாடு
தொலை நோக்குப் பார்வை – விஷன் -2023
திட்டம் பிரம்மாண்டமாக இருக்கிறது.

சந்தேகமே இல்லாமல் இது தமிழ் மக்கள் அனைவரின்
வாழ்க்கைத் தரத்தையும் நல்ல உயரத்தில் கொண்டு
போய் விடும். இதைச் செயலில் நிறைவேற்றிக் காட்டும்
மனத்திடமும், திறனும் – உங்களுக்கு நிச்சயம் உண்டு.
இந்த திட்டம் வெற்றி பெறவேண்டும் என்று நெஞ்சாற
வேண்டுகிறேன்.

ஒரே ஒரு சின்ன விஷயம்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும் ?
இந்த ஒளிமயமான எதிர்காலத்தை அனுபவிக்க
இதே மக்களும் (ஆரோக்கியத்துடன்)
இருக்க வேண்டுமே !

டாஸ்மாக் கடைக்கு தினமும் “அட்டென்டென்ஸ்”
கொடுக்கும் தமிழ்க் ‘குடிமகன்’களில் எத்தனை பேர்
இந்த திட்டத்தின் பலனை அனுபவிக்க
உயிரோடு இருப்பார்கள் ?
எத்தனை குடும்பங்கள் மிஞ்சி இருக்கும் ?

15 லட்சம் கோடி அளவிற்கு திட்டம் போடும்
தமிழக அரசு மனம் வைத்தால் வெறும்
15,000 கோடி மட்டுமே வரவு வைக்கும்
சாராயக்கடைகளின் வருமானத்திற்கு
மாற்று கண்டுபிடிக்க முடியாதா ?

ஒரே உத்திரவில் டாஸ்மாக் கடைகளை
நிரந்தரமாக மூடி அத்தனை குடும்பங்களுக்கும்
நிம்மதியையும் மகிழ்ச்சியையும்
கொடுக்க முடியாதா ?

இன்றில்லா விட்டாலும் நாளையாவது –
இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம் !

செய்வீர்கள் என்று நம்புகிறோம் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் !

  1. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    Paavam Kaviri maindhan., Poponayai paalai paadhukakka sollum nilai ungaludaiyadhu.
    Paridhaba padugireuin ungalai kandu.

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    டாஸ்மாக்-ஐ மூடச்சொன்னதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதற்காக
    //விஷன் -2023 திட்டம் பிரம்மாண்டமாக இருக்கிறது. சந்தேகமே இல்லாமல் இது தமிழ் மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் நல்ல உயரத்தில் கொண்டு
    போய் விடும்// என்று எப்படி கூறுகிறீர்கள் காவிரி?
    விஷன்-2023 என்பதிலேயே கூட்டுதொகை ஏழு வருகிறதே, அதை வைத்தா?
    அல்லது கடந்த 25 ஆண்டுகளாக நடந்தவை எதுவும் அம்மாவுக்கும் தெரியாது சித்திக்கும் தெரியாது என்பதாலா?

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    டாஸ்மாக் கடைகளை மூடுவதானால் அதை குறுகிய காலத்தில் செயல் படுத்த வேண்டும். சில வருடங்களுக்கு பின் டாஸ்மாக்கை பயன் படுத்துவோர் எண்ணிக்கை கணிசமான ஓட்டு வங்கியாகி விடும். அதன் பின் ராமதாஸ் கூட டாஸ்மாக் பற்றி பேசுவதை நிறுத்தி விடுவார்.

  4. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.

  5. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    உங்களது இன்றைய தலைப்பு தமிழகத்தில் மதுவிலக்கு. நல்ல யோசனை. ஆனால் பலரால் பலநேரங்களில் எழுப்பப்பட்ட விவாதம். நீங்களே கூறியுள்ளீர்கள். மாண்புமிகு மாநில முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நினைத்தால் முடியுமென்று. நான் பல்வேறு விமர்சனங்களில் கூறியுள்ளேன். அதாவது நாட்டுக்கு நன்மையே செய்யும் ஜனநாயக ரீதியான ஒரு சர்வாதிகாரி வரவேண்டுமெண்டு. ஜெயலலிதா அவர்கள் சர்வாதிகாரி அல்ல. ஆனால் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு திட்டத்தை மேற்கொண்டால் விடாப்பிடியாக அதனை செய்தே முடிக்கும் போராட்ட குணம் கொண்டவர்.

    தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டால் (1 )மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில் பெண்கள் நிலை உயரும். (2 )ஏழை பெண்களின் வீடுகளில் பொருளாதார உயர்வு ஏற்படும். (3 )கருணாநிதியால் முடியாத காமராஜ் ஆட்சி கொண்டு வரப்படும். (4 ) புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் போற்றும் தாய்மார்களுக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் செய்யும் சேவையானது ஜெயலலிதா நிரந்தர முதல்வராக நீடிப்பார் என்பதற்கு அத்தாட்சியாகும்..

    இவையனைத்தும் மதுவிலக்கினால் ஏற்படும் நன்மைகளாக (பாசிடிவ்) இருக்கும் அதே நேரத்தில் தீமைகளையும் (நெகடிவ்) நாம் பார்க்க வேண்டும்.

    மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டால் (1 )டாஸ்மாக்கில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும். (2 )குடிகாரர்கள் பக்கத்து மாநிலத்துக்கு குடிக்க சென்று விடுவார்கள். (3 ) தமிழ்நாட்டில் கள்ள சாராயம் ஆறாக ஓடும். (4 ) மதுவினால் கிடைக்கும் நிதி ஆதாரம் இழக்க நேரிடும். (5 )சட்டம் ஒழுங்க பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. (6 ) குடிகாரர்கள் உடல்நிலை மோசமாகும்.

    தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதா ஆட்சியை அமோகமாக ஆதரித்து , அங்கீகரித்துள்ள சூழ்நிலையில் மாநில முதல்வர் மக்களுக்காக ஏதேனும் செய்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்?

    • ilatchiyakudumbam's avatar ilatchiyakudumbam சொல்கிறார்:

      mathuvilakku amal saithal tasmac workers can do some other work.2.It is not possible to go everyday to near state.3. no illicit arrack now why because govt is vigilent. only due to political,police official help illicit arrack can be sold. 4.it is true,but the money saved with the poor people.5.ha ha it is a joke 6.fantastic joke consult doctors

  6. ஜெகதீஸ்வரன்'s avatar ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    மதுவிலக்கு நடந்தால் நன்மைகள் மிக அதிகம்.

    1. குடிக்கும் செலவு மிச்சமாவதால், குடும்பத்தின் வருமானம் பெருகும்.
    2. குடித்து விட்டு தர்க்குறைவாக பேசாசதால் பெண்களின் மதிப்பு கூடும்.
    3. கல்விக்கு வைத்திருக்கும் பணம் பறிக்கும் அப்பாகள் அழிந்து குழந்தைகளுக்கு நல்ல அப்பா கிடைப்பார்.
    4. குடித்துவிட்டு உலகை மறக்கும் இளைஞர்கள் குடிக்காததால் அவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
    5. குடித்துவிட்டு நிகழ்த்தும் விபத்துகள் குறையும், மரணங்கள் குறையும்.
    6. நல்ல தலைவர்களுக்கு மட்டுமே ஓட்டு கிடைக்கும், நல்ல அரசியல் நிகழும்.
    7. குடிப்பது கேடு என விளம்பரம் செய்யும் செலவு அரசாங்கத்திறகு குறையும்.
    8. குடித்து உடல்நலம் குன்றிபோகும் மனிதர்களுக்கு செலவு செய்வது ஒவ்வொரு வீ்ட்டிற்கும் குறையும்.
    9. வெளிநாடுகளிலிருந்து மருந்து வாங்கும் செலவு அரசாங்கத்திற்கு குறையும்.
    10. மதுக்கு கலக்குவதற்காக வாங்கும் பூச்சிக் கொள்ளி கொக்க கோலாவும், பெப்பசியும் போன்ற குளிர்பானங்கள் வாங்கும் செலவு மக்களுக்கு குறையும்.
    11. கோழியும், ஆடும் காக்கப்பட்டு உயிர்வதை குறையும்.
    12. எல்லா குடும்பத்திலும் சேமிப்பு அதிகமாகும்.
    12. ஒட்டுமொத்த சமூகமும் உயர்நிலைக்கு வரும்.

    இன்னும் பெரிய பட்டியல் கூட தயார் செய்ய இயலும். நண்பர்களே கள்ளச்சாராயம் பற்றிய பயம் கொள்ளாதீர்கள். அங்கிகரிக்கப்பட்ட மது நிலையங்களால் வரும் விளைவுகள் வருங்கால சந்ததிகளை ஒட்டுமொத்தமாக குப்பையாகி கொண்டிருக்கின்றன.

    அன்புடன்,
    சகோதரன் ஜெகதீ்ஸ்வரன்.
    sagotharan.wordpress.com

  7. subramanian's avatar subramanian சொல்கிறார்:

    It is to be noted with high regard that our present C.M. Selvi Jeyalalitha alone had the guts to abolish lottery system in Tamilnadu, She did not worry about the revenue,retrenchment of the govt staff and the earning of the lottery agents. Prohibition is also possible if the Central Govt assists the State. Unfortunately we are having an unpatriotic central Govt.

  8. MARIAPPAN V K's avatar MARIAPPAN V K சொல்கிறார்:

    We can save atleast our next generation from consuming liquor by closing the TASMAC at the earliest.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.