திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ!

திருமதி சோனியா காந்தியின் வீட்டில்
அடுத்த சமையல்காரர் யாரோ!

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல்
நேற்று பரபரப்பாக வெளியானதும்,
அதன் தொடர்புடைய பல விஷயங்கள்
என் நினைவிற்கு வந்தன –

2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி
சோனியா காந்தியின் (personal choice)
-சொந்த விருப்பமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார்
இந்திரா காந்தி காலத்திலிருந்தே குடும்பத்திற்கு
மிகவும் பழக்கப்பட்டவர் – வேண்டியவர் !

அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில்
உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய்
பணத்துடன் தேர்தல் கமிஷனால் கையும் களவுமாக
பிடிக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ வின்
பெருமைமிக்க தாய் !

கடந்த ஜூலை 7ம் தேதி, தன் திருமண ஆண்டு
விழாவைக் கொண்டாட 73 உறவினர்களுடன்
அரசாங்க செலவில் தனி விமானத்தில்
டெல்லியிலிருந்து திருப்பதி சென்று –
திரும்பிய பெருமைக்குரியவர் !

இரண்டு உறவினர்கள் பெயரில் 32.93 லட்சம்
ரூபாய் கடன் வாங்கி, அவை திரும்பக்
கொடுக்கப்படாததாலும்,
சொந்த அண்ணன் மற்றும் பிற உறவினர்கள்
2 கோடி அளவுக்கு சுருட்டியதாலும்,
மஹாராஷ்டிராவில், சொந்த ஊரில் –
தன் பெயரில் துவக்கப்பட்ட வங்கியை தானே
திவால் ஆக்கி மூட வழி செய்த பெருமைக்குரியவர் !

நடந்து கொண்டிருந்த கொலைவழக்கு
ஒன்றில் தலையிட்டு – அதில் கொலைக்குற்றம்
சாட்டப்பட்டிருந்த அண்ணன் – வழக்கிலிருந்து விடுபடக்
காரணமாக இருந்த பாச மலர் தங்கை !

ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள ஒரு
ஆசிரமத்தில், 38 வருடங்களுக்கு முன்னர்
இறந்து போன தன் ஆன்மிக குரு பாபா லேக்ராஜ்
என்கிற சாமியாரின் ஆவியுடன் பேசியதாகக் கூறி
பரபரப்பை உண்டாக்கிய ஆன்மிகவாதி !

மொத்தம் 12 தடவைகளில் –
79 நாட்களில்,
சுற்றம் சூழ – அதாவது கணவர், உடன்பிறந்தோர்,
பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள்,
நண்பர்கள் புடைசூழ தனி விமானங்களில்,
22 வெளிநாடுகளுக்கு பயணம் செய்து
மத்திய அரசுக்கு 205 கோடி செலவு வைத்து –
ஏர் இந்தியாவுக்கு ரூபாய் 169 கோடியும்,
வெளிநாட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு  மிச்சம்
36 கோடி பணத்தையும்  வரவு வைத்தவர் !

உலகில் எவ்வளவோ நாடுகள் இருந்தாலும்,
5 வருட பதவிக்காலத்தில் இவர் செல்ல முடிந்த
நாடுகள்  இவை மட்டுமே –

மெக்சிகோ, பிரேசில்,
பூடான், வியட்னாம், சிலி,
இந்தோனேஷியா, ஸ்பெயின்,
போலந்து, ரஷ்யா,
இங்கிலாந்து உட்பட யூரோப்பிய நாடுகள்,
தஜ்கிஸ்தான், சைப்ரஸ், சீனா,
லாவோஸ், கம்போடியா,
ஐக்கிய அரபு குடியரசு, சிரியா,
மொரிசியஸ், ஆஸ்திரேலியா,
தென் கொரியா,
ஸ்விட்சர்லாந்து……….. !!!!!!!!!

நல்ல வேளை பதவிக்காலம் முடிய இன்னும்
4 மாதங்கள் இருக்கின்றன. எனவே –அதற்குள்
சவுத் ஆப்பிரிக்கா -முழு பரிவாரங்களுடன் தான்-
செல்வதற்கான திட்டங்கள் முடிவு செய்யப்பட்டு
வருகின்றன.விரைவில் கிளம்புவார்கள்.
அடுத்த RTI பதிலில்  205 கோடியுடன்
அந்த்ச் செலவையும் ஞாபகமாகச்
சேர்த்தாக வேண்டும் !

சென்ற வருடம், ராஜஸ்தானைச் சேர்ந்த
காங்கிரஸ் அமைச்சர் அமீன்கான்
என்பவர் இவரைப் பற்றி கிண்டலாக –
மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் வீட்டில்,
சம்பளம் வாங்காமல் சமையல் வேலை செய்து
(விருந்தினர்களுக்கு டீ, காப்பி தயாரித்து )
அவரது அபிமானத்தைப் பெற்றதால்,
இவருக்கு இந்த பதவி கிடைத்தது  என்று
கூறப்பெற்றவர். (பின்னர் அந்த அமைச்சர்,
பதவியை இழந்ததும், மன்னிப்பு கேட்க
வைக்கப்பட்டதும் தனிக்கதை )

சரி –  இடுகை முடிவுக்கு வந்து விட்டது.
தலைப்புக்கு காரணம் சொல்லியாக
வேண்டுமே !

அடுத்த  4 மாதங்களில் ஜனாதிபதி பதவிக்கு
தேர்தல் வருகிறது. தகுந்த நபர் தேர்ந்தெடுக்கப்
பட்டாக வேண்டுமே ! அதற்காகத தான்
இந்த கேள்வி – “அன்னை”யின் வீட்டில்
அடுத்த சமையல்காரர் யாரோ ?
———————————————————

(இந்த இடுகைக்கும் இந்த புகைப்படத்திற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.
இது அண்மையில் 78 வயதிலும் பெண்மணி
ஒருவர் உர்சாகமாக டேபிள் டென்னிஸ்
ஆடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் !)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ரெஹான் வத்ரா மற்றும் மிரயா வத்ரா ஆகிய இருவரின் “கால்” கழுவும் வேலை காலியாக இருந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும். CV அனுப்பி வைப்போம். தேர்ந்தெடுக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்குப்பின், 2032-ல் நிச்சயம் மிகவும் “கண்ணியமான” பதவி உறுதி.

  2. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ராதாகிருஷ்ணன், சஞ்சீவரெட்டி, ஜெயில் சிங் என்று திறமையானவர்கள் பொறுப்பில் இருந்த இடத்தில் இன்று ”பொம்மைகள்” உட்கார வைக்கப்படுகின்றனர். கவர்னர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளையே எடுத்து விடலாம். ஆட்சி கவிழ்ந்தால் முப்படையின் பொறுப்பில் அரசு வருமாறு சட்டத் திருத்தம் செய்து விடலாம். கோடிக்கணக்கில் அரசின் பணம் வீணே செலவழிக்கப்படுவதாவது குறையும். இறைவா, வேறு வழியே இல்லை. எப்படியாவது இந்த நாட்டைக் காப்பாற்று!! மக்களின் மனதில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வா!!

  3. R.Gpalakrishnan's avatar R.Gpalakrishnan சொல்கிறார்:

    Dear KM
    I feel the next fittest incumbent (if the choice is from TN) will be either Thankabalu or
    Narayanasamy. Am I correct Sir?

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    தற்போது காங்கிரஸ் இருக்கும் நிலையில் இன்னொரு அன்னையின் சமையல்காரர் ஜனாதிபதியாக வருவது கடினம் என்றே தோன்றுகிறது. அப்துல் கலாம் மாதிரி பொதுவாக சகலராலும் ஏற்றுகொள்ள கூடிய ஒருத்தரே சாத்தியம் என்று என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது.

    ஒரு வேளை அன்னையின் சமையல்காரர் ஜனாதிபதியாக வருவதற்கு ஒட்டு போடுவதற்கு நமது கடலில் போட்டாலும் கட்டு மரமாய் மிதக்கும் தலைவர், தனது குடும்பத்தில் ஒருவருக்கு உப ஜனாதிபதி பதவி கேட்டாலும் கேட்பார்.

  5. surendran's avatar surendran சொல்கிறார்:

    arasiyal vaadhigalaal keduketta indha naattai kadavul kaappaattrattum

  6. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    இன்றைய விமர்சனத்தின் மீது எனது விமர்சனம் ஏதுமில்லை. இருப்பினும் பொதுவாக தங்களது அனைத்து விமர்சனங்களின் மீதான என்னுடைய விமர்சனத்தை சுமைதாங்கியான தங்களிடமே இறக்கி வைத்து எனது மனச்சுமையை குறைத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும். அதாவது அரசியல், அரசியல்வாதிகள், பொது, பொதுவானவை, மற்றுமுள்ளவைகளை கூறித்தான் விமர்சனங்களை துவங்குகிறீர்கள். உண்மைதான். ஆனால் கூறப்படும் அதிகபட்ச விமர்சனங்கள் அரசியல் அல்லது அரசியல்வாதிகளை பற்றித்தான் உள்ளதே தவிர கஷ்டப்படும் சாதாரண மக்களை , தொழிலாளர்களை வேலையில்லாத பட்டதாரிகளை மற்றும் அரசு ஊழியர்கள் நிலைமையை குறித்த பொதுவான

    பிரச்சனைகளை குறித்த விமர்சனங்கள் குறைவாகத்தான் உள்ளது என்று கூறுவதில் வருந்துகிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பத்மனாபன்,

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      பிறிதொரு சமயம் இது பற்றி விவரமாக
      எழுதுகிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. Sivadev's avatar Sivadev சொல்கிறார்:

    i need your message.. its all good and ture

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.