மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க
ஏகப்பட்ட பேர் தயார்.
ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி –
ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ?
சென்னையில் – பீகார் கொள்ளைக்காரர்களை
போலீசார் சுட்டு விட்டார்களா ?
திண்டுக்கல்லில் ஆளைக் கடத்தி 2 கோடி ரூபாய்
தராவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய
ஒரு மலையாளியை சுட்டு விட்டார்களா ?
தெற்கே தேடப்பட்டுவந்த ஒரு நக்சலைட்டை
கைது செய்து விட்டார்களா ?
-இவர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்க,
பத்திரிகைகளுக்கும்,
காமிராவுடன் காத்துக் கொண்டிருக்கும்
புதுப் புது தொலைக் காட்சிகளுக்கும் –
பேட்டி கொடுக்க –
தமிழ் நாட்டில் ஏகப்பட்ட அமைப்புகளும்,
மனித உரிமை ஆர்வலர்களும்,
‘சிஎம்’க்கு “கூட்டு பெட்டிஷன்”
கொடுக்கும் ஞானிகளும்,”முற்போக்கு”
எழுத்தாளர்களும்
நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால் – இன்னொரு பக்கம் நிகழும்
மனிதாபிமானமற்ற ஒரு விதிமுறை
தொடரவதற்கு
நாமும் ஒரு காரணமாக இருக்கிறோமே !
சென்னையில் மாதம் முழுவதுக்கும்
சம்பளம் வாங்கி ஓவர்டைமும் செய்யக்கூடிய
நிலையில் தொழிலாளர்கள் இருக்கையில் –
கோவையிலும், திருப்பூரிலும், கரூரிலும்,
சிவகாசியிலும் – மின் தட்டுப்பாடு காரணமாக
மாதம் 15 நாட்களுக்கு கூட சம்பளம் வாங்க
முடியாத அவலத்தில் தொழிலாளர்கள்
இருப்பது எப்படி என்றோ –
சென்னையில் பகலில் 2 மணி நேரம்
‘பவர்’ போனாலும், மாலையில்/இரவில் –
நிம்மதியாக ட்யூப்லைட் வெளிச்சத்தில்
மாணவர்கள் படிக்கவும்,
இரவில் மின்சாரம் தடைபடாமல் மின் விசிறியின்
கீழ் மக்கள் தூங்கவும் பெறும் வசதி –
சென்னை தவிர தமிழ் நாட்டின் இதர பகுதிகள்
அனைத்திலும் –
மாலையில்,இரவில் – மின் வெளிச்சம் சிறிதுமின்றி,
இருள் சூழ சிம்னி விளக்கில் கண்களைக்
கசக்கிக் கொண்டு சிறார்கள் படிக்க முடியாமல்
படிக்கும், எழுதும் பரிதாபமும் –
நடு இரவில், பின்னிரவில், அதிகாலையில்,என்று
நினைத்தபோதெல்லாம் மின்சாரம் தடைப்பட்டு –
மின்விசிறி கூட இல்லாமல் –
வியர்வையில், கொசுக்கடியில் -தூக்கம் கெட்டு
பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் –
தவிக்கும் பரிதாபமும் –
ஏன் இந்த அவலம் ?
தமிழ் நாட்டில் 40 % மின்சக்தி பற்றாக்குறை.
ஆனால் -சென்னையில் தொழிற்சாலைகளுக்கு
மின்வெட்டு சுத்தமாக கிடையாது.
பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் A/c வசதியுடன்
வேலை நடக்கிறது.
வீடுகளில் – பகல் நேரத்தில் மட்டும் 2 மணி நேரம்
மின்வெட்டு.
இரவில் மின்வெட்டு இல்லை. குறைந்த பட்சம்
நிம்மதியாகத் தூங்கவாவது முடிகிறது.
கோவையோ, திருப்பூரோ, கரூரோ, சிவகாசியோ
எல்லாமே சென்னை இருக்கும் இதே தமிழ்நாட்டில்
தானே இருக்கின்றன ?
சென்னையில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வசதி
தமிழ் நாட்டில் உள்ள மற்ற ஊர்களில்
வசிப்பவர்களுக்கு மறுக்கப்படுவது நியாயமா?
கரூரில், திருப்பூரில், சிவகாசியில் உள்ள
சிறு சிறு தொழிற்சாலைகளும், அதில் பணி புரியும்
ஊழியர்களும் என்ன பாவம் புரிந்தனர் ?
அவர்கள் மட்டும் தொழில் செய்ய முடியாமல்,
அரைச் சம்பளம் கூட பெற முடியாமல் தவிப்பது
நியாயமா ?
பற்றாக்குறையை அனைவரும் பங்கு போட்டுக்
கொள்வது தானே நியாயம் ?
சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தாரிடம் பேசிக்
கொண்டிருந்தேன். தினம் 300 ரூபாய்
சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியால்,
150 ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லையாம்.
அந்த குடும்பங்கள் எவ்வளவு அவதிப்படும் ?
மின்சாரம் இல்லை – உற்பத்தி இல்லை.
வேலை இல்லை – சம்பளம் இல்லை.
இந்த சுமையை நாம் அனைவரும் பங்கு போட்டுக்
கொண்டால் – அவர்கள் துன்பம் ஓரளவு குறையும்.
10 மணிநேர மின்வெட்டு 6 மணிநேரம் ஆகும்.
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து மனிதாபிமானத்தோடு
இந்த பிரச்சினையைப் பாருங்கள்.
எவ்வளவு சீக்கிரம் இது தீர்ந்தாலும் நல்லதே.
ஆனால் அதுவரை –
இருப்பதை அனைவருக்கும் சமமாகக் கொடுங்கள்.
சுமையை அனைவரும் சேர்ந்து சுமப்போம்.
பின் குறிப்பு –
நானும் ஒரு சென்னைவாசி தான்.
இவ்வளவு நாள் இதைப்பற்றி யாருமே பேசாமல்/
எழுதாமல் இருந்தது – எனக்கு உறுத்தலாக இருந்தது.
நான் எழுதுவதால் மட்டும் எதுவும் நடந்து விடப்
போவதில்லை. இருந்தாலும்,மற்றவர்களின் துன்பம்
பற்றிய இந்த எண்ணங்களை
பகிர்ந்து கொண்டதன் மூலம் – என் மனதில்,
ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல்
ஒரு உணர்வு ஏற்படுகிறது.
இந்த கருத்தில் பங்கு கொண்டால் –
உங்களுக்கும் அதே உணர்வு தோன்றும் என்றே
நம்புகிறேன்.
என்ன நண்பர்களே – சரி தானே ?



சென்னைக்கு மட்டும் மின்சார சலுகை கொடுப்பது சரியா? என்ன காரணத்தால் அரசு அதுபோல் செயல்படுகிறது?
மற்ற இடங்களில் மின்சாரம் இல்லாமையால் ஏற்பட்டுள்ள சம்பள இழப்புக்கு மீனவர்களுக்கு கொடுப்பது போல்
அனைத்து தொழிலாளர்களுக்கும் இழப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கலாம். மேலும் மின்சார விநியோக
நிலைமை சரி செய்வதற்கு நீண்ட நாட்களாக ஆகும் என்ற சூழ்நிலைதான் உள்ளது. எனவே அனைவருக்கும்
மிக்சி, கிரைண்டர் . மற்றும் மின்விசிறி இலவசமாக கொடுப்பதற்கு பதிலாக இன்வேர்டர் அல்லது ஜெனரேடர்
வழங்கி மின்வெட்டை சரி செய்யலாம்.
வர்த்தக நிறுவனங்களை மாலை 6 மணிக்கு கண்டிப்பாக மூடுவது
அதாவது வேலை நேரம் காலை 6 முதல் மாலை 6 வரை
கண்டிப்பாக FOCUS LIGHTS எனும் அதிக மின்சாரத்தை உறிஞ்சும் அலங்கார பல்புகளை பயன்படுத்த தடைவிதிப்பது
வீடுகளில் கண்டிப்பாக AC பயன்படுத்த தடை விதிப்பது
எந்த விழாவாக (அரசு/தனியார்) இருந்தாலும் இரவுகளில் நடப்பதை தவிர்ப்பது
முக்கியமாக IPL போட்டிகளை ஒளிபரப்புவதை தமிழகத்தில் தடை செய்வது
மேலே உள்ளவையெல்லாம் என்னுடைய அறிவுக்கு எட்டிய, சின்ன சின்ன யோசனைகளே!
ஐயோ ஐயோ…
நீங்க ரொம்ப காமெடி பண்ணுறீங்க அண்ணே..
சென்னை மேல அரசுக்கு ஒன்னும் தனிப்பட்ட பாசம் எல்லாம் இல்லை.
அமைசர்களும் அதிகாரிகளும் சென்னையில் தான் இருக்காங்க. அதனால் அவங்களுக்கு விதி விலக்கு.
நீங்க சொன்ன மாதிரி தினம் 150 சம்பாதிக்கும் கூலி பேன் இல்லாம கொசு கடியில் அவதி படலாம்.
30000 சட்டப்படிமும் மேசைக்கு அடியில் கோடிகளும் சம்பாதிக்கும் அமைச்சு , அதிகாரிகள் அவதி படலாம ?
பன்னாடை .. சாரி பன்னாட்டு தொழில் நிருவனத்தூக்கு மின்சாரத்தை நிறுத்தினால் யார் மேசைக்கு அடியில் கோடிகள் தருவர் ?
தினமும் 150 சம்பாதிக்கும் கூலிகலால் தான் இந்தயா ஏழை நாடக உள்ளளது.
5 வருசத்துக்கு ஒருமுறை 500 ஐ விட்டெறிந்தால் வந்து ஒட்டு போட்டுட்டு போக வேண்டியது தானே ..
அத விட்டுட்டு .. நிர்வாகம் பற்றியெல்லாம் அதிக பிரசாங்கி தனமா பேசின மிச்சம் இருக்கும் 14 மணிநேர மின்சாரமும் இருக்காது. ..
இப்படியே போனா பொது மக்கள் ஆயுத போராட்டம் செய்ய வேண்டிவரும்.
கம்யுனிசம் வரப்போகுதுங்கோ…
This is all outcome of improper planning. Not just power situation in Tamil Nadu, if we try to evaluate each and every basic need of people living in Tamil Nadu we can able to find of N number of drawbacks and shortcomings. It seems government has turned like a corporate company and more focussed on only huge profits (in the name of taxation or sucking common man’s blood) under its balance sheet and in turn giving nothing to the public.
For every ruling party voters are just like dumbs who sell their voting rights for freebies, biriyani, liquor and mere 500 rupees. How can we blame them after getting all the above from them and how dare we ask them to work for state’s development, they are more busy on getting back their investment and they also need profit, who knows what happens after 5 years.
I’m sorry to say not only communism or dravidian or aryan… whoever it may be, God will also not be able to help us to overcome our situations if we have politicians like these amongst us. Just we are keep on tilting the power every 5 years and nothing gets changed, again we look for another election to cast… sorry to sell our votes.
My comments are only referred to a common man whose hard earned even 100 rupees per day matters more for his family… And for elite peoples Chennai is heaven for them, they are the one born to enjoy weekends, cinemas, clubs, pubs… and government work hard to keep them cool.
அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
சிவகாசி மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் மின்வெட்டால் தொழில் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஜனநாயக ஆட்சியில், எம்மை அறியாமலே துணை போகும், அப்பட்டமான மனித உரிமை மீறல். எருமை மாட்டில் மழை பெய்தது போல சுரணை கெட்டு, பல நடப்புகளை ‘taken for granted ‘ ஆக எடுத்து கொள்ள பழகிவிட்ட எம்மை சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு.
அனைவரின் ஆதங்கத்தைமிக அழகாகப்
பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
>>பற்றாக்குறையை அனைவரும் பங்கு போட்டுக்
கொள்வது தானே நியாயம் ?<<
மன்னிக்கவும் கா.மை.உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
பற்றாக்குறைக்கு காரணமானவர்கள வசிக்கும் நகரில் அதிக வெட்டும்,
மீதி இடங்களில் குறைவான வெட்டும் இருப்பதே நியாயம்..
பற்றாக்குறைக்கு காரணமானவர்கள அதிகம் இருப்பது சென்னையில்..
எனவே சென்னையில் 10மணிநேரம் மின்வெட்டும்,
மீதி ஊர்களில் 4மணிநேரம் மின்வெட்டும் இருப்பதே நியாயம்.
wait.. wait… சென்னைவாசிகள் என் மேல் பாயவேண்டாம்..
சென்னையிலும் பற்றாக்குறைக்கு காரணமானவர்கள வசிக்கும் பகுதிகளில்
அதிக வெட்டும், மீதி இடங்களில் குறைவான வெட்டும் இருப்பதே நியாயம்..
அதிர்ஷ்டவசமாக இந்த இழி நிலைக்கு காரணகர்த்தாக்கள் இருவரும் சென்னையில் ஒருவருக்கொருவர் மிக அருகாமையில்தான் இருக்கின்றனர்..
எனவே கோபாலபுரத்திற்கும்,போயஸ் கார்டனுக்கும் 24 மணிநேரம் மின்வெட்டும் மீதி பகுதிகளில் 7மணிநேரம் மின்வெட்டும் இருப்பதே நியாயம்.
என்ன சரியா?
பின் குறிப்பு –
நானும் ஒரு சென்னைவாசி தான்.
நான் எஸ்.ஐ.டி காலணிக்கு போயிடுவேன். நான்கூட சிருதாவூருக்கு / கொடநாடு போயிடுவேனாக்கும்..
உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை நண்பர் கண்பத் !
இருவர் வீட்டிலும் ராட்சத ஜெனரேட்டர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எந்த பவர் கட் -டும் அவர்களை ஒன்று செய்ய முடியாது.
பாவம் அந்த பகுதியில் உள்ள மற்ற பொது ஜனங்கள் தான்
அவதிப்படுவார்கள் !!
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
It,s correct
i am live in tirupur.