“துக்ளக் சோ” அவர்கள் இம்மையிலேயே
நரகத்தை அனுபவிக்க ..
இந்த வார துக்ளக் தலையங்கத்தில் –
ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள
இலங்கை தீர்மானம் தேவையற்றது,
அதை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று
வாதம் செய்து – சோ கூறுகிறார் –
————-
“மீண்டும் சொல்கிறேன். அங்கே நடந்தது
யுத்தம் அல்ல.தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும்
இடையே நடந்த மோதல்…..
தீவிரவாதிகளான புலிகள், சிவிலியன்களை
கேடயங்களாக பயன்படுத்தினார்கள் …
அப்போது அரசு என்ன செய்ய வேண்டும்?
சரி, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
தீவிரவாதிகளை அப்படியே விட்டு விட
வேண்டியது தான் – என்று ஒதுங்கி இருந்து விட
வேண்டுமா ? அல்லது தீவிரவாதிகளின் மீதான
நடவடிக்கையை தொடர வேண்டுமா?
இலங்கை அரசு அதைத்தான் செய்தது.
இந்த மாதிரி நேரங்களில் – (40,000
மக்கள் இவருக்கு சில ஆகி விட்டது )
சில -சிவிலியன்களது மரணம் நேர்ந்தால் அது
மிகவும் வருந்தத் தக்கது.
ஆனால் அதை வைத்துப் போர்க்குற்றம்
நடந்து விட்டது என்று கூற முடியாது.
——————
சேனல்-4 ஒளிப்படங்களைக் கண்ட பிறகும்,
குழந்தைகளையும், சிறுவர்களையும்
கைக்கெட்டும் தூரத்தில் நெருங்கி நின்று
சிங்கள ராணுவத்தினர் வெறித்தனமாக சுட்டுக்
கொன்றிருப்பதைக் கண்ட பிறகும்,
பெண் போராளிகளை சுட்டுக் கொன்றதுடன்
திருப்தி அடையாமல், அவர்களை நிர்வாணமாக்கி
சிதிலப்படுத்தி வன்புணர்ச்சி செய்து
பேரானந்தம் கொண்ட சிங்கள நாய்களைப்
பார்த்த பிறகும்,
கண்களையும், கைகளையும் கட்டி,
நிர்வாணமாக்கி – மனிதர்களை – விலங்குகள்
போல் சிங்கள ராணுவத்தினர் வேட்டையாடுவதை
காட்சியாகக் கண்ட பிறகும்,
“பாதுகாக்கப்பட்ட பிரதேசம்” என்று சிங்கள
ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட இடத்தில்
தஞ்சம் புகுந்த தமிழ் மக்களை கொத்து குண்டு
போட்டு கொன்று குவித்ததை கண்ட பிறகும்,
குண்டு காயம் பட்டு குத்துயிராகக் கிடக்கும்
மக்களுக்கு ஐ.நா.விடமிருந்தோ, செஞ்சிலுவை
சங்கத்திடமிருந்தோ மருத்துவ உதவி கூட
கிட்டாமல் கோத்த பயல் ராஜபக்சே திட்டம் போட்டு
தடுக்கும் காட்சிகளைப் பார்த்த பிறகும்,
60 ஆயிரம் பேருக்கு 4 நாட்களுக்கு போதுமான
உணவுப் பொருட்களை அனுப்பி –
அதை 3 லட்சம் மக்கள் 15 நாட்களுக்கு
பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று
சதி செய்ததை ஆவணத்தில் கண்டறிந்த பிறகும்,
குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் –
கையிலும், காலிலும், முகத்திலும் காயங்களுடன்
ரத்தம் வழிய துடிதுடித்துக் கொண்டே அலறிக் கொண்டு
ஓடும் காட்சிகளைக் கண்ட பின்னரும்,
3 லட்சம் மக்கள் வீடு வாசல் இழந்து,இடம் பெயர்ந்து,
சொந்த நாட்டிலேயே – அநாதைகளாக
அகதிகளாக அலைவது தெரிந்தும்,
3 மாதங்களில் 87,000 பெண்கள் விதவைகளாக்கப்
பட்ட செய்தி தெரிந்திருந்தும்,
13,000 சிறுவர்/சிறுமிகள் தாய் தந்தையற்ற
அநாதைகளாக ஆக்கப்பட்ட அக்கிரமம் தெரிந்தும்,
போருக்குப் பின்னர் –13 வயது தமிழ்ப் பெண்கள்
எல்லாம் சிங்கள ராணுவத்தினரால் மிருகத்தனமாக
வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப் பட்ட
செய்திகள் தெரிந்தும்,
போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்கு
எந்த நிவாரணமும் கிடைக்காமல் இருப்பதையும்
உணர்ந்தும்,
மனசாட்சி என்கிற ஒரு உணர்வே இன்றி,
நெஞ்சில் சிறிதும் இரக்கம் இல்லாமல்,
மீண்டும் மீண்டும் ( 3 ஆண்டுகளுக்கு முன்பே
முற்றிலுமாக அழித்து ஒழித்து விட்டதாக சிங்கள
அரசே சொல்லிக் கொண்ட ) விடுதலைப் புலிகளைப்
பற்றிய வியாக்கியானங்களைச் சொல்லி –
ராஜபக்சே அரசின் படுகொலைகள நியாயப்படுத்தும்
துக்ளக் “சோ ராமசாமி” 100 ஆண்டுகள்
வாழட்டும். ஆனால் –
இந்த ஈழத்தமிழர்கள் பட்ட
துன்பங்களை,
துயரங்களை
அவரும் தன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டும்.
ஒரு நாளாவது –ஒரே ஒரு நாளாவது –
இந்த நரக வேதனையை அவர் அனுபவிக்க வேண்டும்.
அப்போது தான் அவருக்கு,தான் செய்கின்ற
வீம்பு, திமிர் வாதங்கள் எவ்வளவு
தவறானவை என்பது புரியும். மற்றபடி வேறு
எந்த விதத்திலும் அவருக்கு புரிய வைக்க முடியாது –
விதண்டாவாதம் செய்து கொண்டே தானிருப்பார்.



முத்து 1:
ஜெயலலிதா மிக சிறந்த நிர்வாகி;நேர்மையானவர்;தேசபக்தி மிகுந்தவர்;இந்தியாவின் பிரதமராக இவருக்கு முழு தகுதியும் இருக்கிறது..
முத்து 2:
“மீண்டும் சொல்கிறேன். அங்கே(இலங்கை) நடந்தது
யுத்தம் அல்ல.தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும்
இடையே நடந்த மோதல்….
மேற்கண்ட முத்துக்களை இவர் உதிர்த்தது தன் அலுவலகத்திலிருந்தோ/வீட்டிலிருந்தோ ..யான் அறியேன்!
ஆனால் இவருடைய அடுத்த முத்து என்ன,
அதை அவர் எங்கிருந்து உதிர்ப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது..
முத்து 3:
அமைதிக்கான நோபல் பரிசிற்கு முற்றிலும் தகுதியானவர் அடால்ப் ஹிட்லர்
இதை இவர் உதிர்க்கப்போவது..இன்னும் ஓராண்டுக்குள்..
அரசினர் மனநோய் மருத்துவ மனை, கீழ்பாக்கம், சென்னை 10 லிருந்து..
இறுதியாக:
மற்றவர்கள் அறிவை அவமதிப்பது.. (தன்) அழிவின் தொடக்கம்..
மற்றவர்கள் உணர்வை அவமதிப்பது… அதன் நிறைவு…
இதை விட ஒரு செருப்படி சோ விற்கு தேவையில்லை சார். அதுவும் கடைசி இரண்டு வரிகள் போதும் சார்…
கா மை ஐயா… உணர்ச்சி பொங்கும் பதிவு. அதி மேதாவித்தனம் எனும் கொடிய நோய் சோவுக்கு முற்றி விட்டது. இவருக்கு கண்கள் இல்லை முகத்தில் இரண்டு புண்கள் மட்டுமே.
நீங்கள் கடைசி பத்திகளில் எழுதியதை நான் இதுவரை கருணாநிதிக்கு மட்டுமே வேண்டி கொண்டிருந்தேன். இப்போது அவருக்கு துணை வந்து விட்டது.
நடக்க வேண்டியது நன்றாகவே நடக்கும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
இதுல என்ன ஆச்சரியம் இருக்கு? ஏதோ நேத்து அவர் தெளிவா எழுதுன maadhiriyum, இன்னைக்கு தான் மூளை கொலம்பி மாத்தி எழுதுதுற மாதிர்யும் பேசுறீங்க? காக்கா கருப்பு தான். ‘சோ’வுக்கு தமிழன் என்றாலே வெறுப்பு தான்.
மனிதாபிமான அடிப்படையில் (சோ கூறிய காரணத்தின் அடிப்படையில் அல்ல.) தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க
வேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் திட்டவட்டமாக இருக்கும் இந்த நேரத்தில் தீர்மானம் நிறைவேறிய
பின்னர் எதிர் காலத்தில் இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில்
கொள்ளவேண்டும்.
நண்பரே,
இப்போது மட்டும் என்ன வாழ்கிறது ?
ஒன்றுபட்ட இலங்கைக்கு இனி வாய்ப்பே இல்லை.
சூடான் போல் ஐ.நா.மேற்பார்வையில்
தமிழ் ஈழம் உருவாவது மட்டும்
தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.
இது எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக
நடக்கிறதோ – அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும்,
இழப்புகளும் குறையும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பார்பனியம் இதையும் செய்யும். இதற்க்கு மேலும் செய்யும் தமிழன் ஒரு குரலில் எதிர்க்காமல் ஏமாளியாக இருக்கும் வரை.
தமிழரிடையே ஒற்றுமை என்பது கனவே. இருந்தாலும், சில அடிப்படை வாழ்வாதார விஷயங்களிலாவது ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.
யாரயாவது ஆதரித்து கோஷ்டி கானம் பாடினாலும், முக்கிய விசயங்களில் முழு ஒற்றுமை இருந்தால் அடிக்க வருபவன் நிறுத்துவான்.
அது வரை, கடைசி தமிழன் உள்ள வரை ‘சோ’ போன்றவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
நண்பரே – தயவுசெய்து ஜாதிப் பெயரைச்
சொல்லி யாரையும் இழிவுபடுத்திப் பேசாதீர்கள்.
பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்று
நினைப்பதை விட்டுவிடுங்கள்.
கருணாநிதியை விட தமிழ்ப்பற்று உள்ள
பார்ப்பனர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
பார்ப்பனியம் என்பது சாதி பேறல்ல. ஒருவர் பார்ப்பனிய வரையறைக்குள் வருவதற்கு அவர் பார்ப்பனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று கா மை உணர்ச்சிவசப் பட வேண்டாம். நண்பர் எஸ்.எஸ்.கே கூறியவை முற்றிலும் சரியானவை.
CHO vin parpanathanam – eppodhum maaraadh
சோ போன்ற நடுநிலை அரசியல் விமர்சகரை நீங்கள் விமர்சிப்பதைக் கண்டு அவரைப்போலவே நடுநிலை பின்பற்றும் நாயகர்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்து உங்களை வசைபாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்
நடுநிலையாளர் சோ ஈழத்தமிழர் விஷயத்தில் எடுத்திருக்கும் நிலை “ஈழத்தமிழர் அனைவரும் விடுதலைப்புலிகள் ஆகவே அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்” என்ற சிங்கள அரசின் பிரச்சாரத்தை வழிமொழிவதாகும். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், போதை மருந்து முதல் பழங்கலைப்பொருட்கள் வரை கடத்தியவர்கள் என்பது முதல், மாத்தையா முதலிய தம்மவர்களையே ஒரு தனிமனிதனின் உயர்வுக்காகக் கொன்றவர்கள் என்பதும், அமிர்தலிங்கம், பத்மநாபா முதலிய தமிழர் தலைவர்களைக் கொன்று குவித்த தலைமைப் பதவி வெறிமிக்க மனிதனின் தலைமையில் போரிட்டவர்கள் என்பதும் உலகறிந்த விஷயம். ஈழத்தமிழர் அனைவரும் விடுதலைப் புலிகளே என்பது தமிழ்நாடு மக்கள் அனைவரும் 176000 கோடி ரூபாய் ஊழலில் பங்கு பெற்றவர்கள் ஆகவே ஊழல்வாதிகள் என்று சொல்வது போல அபத்தமானது.
ஈழத்தமிழர் விஷயத்தில் ‘சோ’வின் பேச்சு சொல்லிழுக்கு என்று சொல்வது மிக மென்மையான கண்டிப்பே. இந்த நிலை எடுத்ததற்கு அவர் சோகாப்பார்.
விடுதலை புலிகள் தீவீரவாதிகளா ? அல்லது சுதந்திர போராட்டக்காரர்களா? யாரேனும் சொல்லுங்களேன்? துக்ளக்
சோ அவர்கள் விடுதலை புலிகளுக்கு எதிராகவும் மற்றவர்கள் ஆதராகவும் கூறுகிறார்களே. எது சரி ?
ஏன் – உங்களுக்கு தெரியாதா ?
நீங்கள் என்ன அண்டார்டிகாவிலா இருக்கிறீர்கள் ?
நாகர்கோவிலில் இருப்பவருக்கு
ஈழத்தில் நடந்த கொடுமைகள் தெரியாதா ?
அங்கு சிங்களர் நடத்துவது இன அழிப்பு. தங்கள் இனத்தை தக்கவைத்துக்கொள்ள தமிழர்கள் போராடுகிறார்கள்.
சாத்வீகம் பலிக்காததால், தற்காத்துக் கொள்ள
ஆயுதம் தாங்கவேண்டிய
கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.
அவர்களை எப்படி தீவிரவாதிகள் என்று
சொல்லலாம் ?
நண்பர் பத்மனாபன் அவர்களே,
மணியாச்சி வாஞ்சிநாதன் –
சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது
தீவிரவாதியா ?
பகத்சிங்,ராஜகுரு,சுக்தேவ் –
சுதந்திரப் போராட்ட வீரர்களா அல்லது
தீவிரவாதிகளா ?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ?
“சோ”அவர்கள் தன் முடிவில் அனைவரையும்
கட்டுப்படுத்தப் பார்க்கிறார்.
தனக்குப் பிடிக்காத அனைவரையும்
மனம் போனபடி எல்லாம் அவமதிக்கிறார்.
இதுவே அவர் மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும்,
மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாகக்
குறையக் காரணமாகிறது.
தன் பிடிவாதம் காரணமாகவும்,
விதண்டாவாதம் காரணமாகவும்,
சோ தன் அபிமானிகளை இழந்து வருகிறார்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
–
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள்..அவர்களை ஆதரிக்கும் இந்திய(வில்)ர்கள் உள்ளவர்கள் தேச துரோகிகள்..
தமிழர் படுகொலை ஆதரிக்கும் இந்திய(வில்)ர்கள் உள்ளவர்கள் தேச துரோகிகள்..
விடுதலைபுலிகளே இந்த படுகொலைகளுக்கு காரணம், மக்களை விடுவிக்காமல் மனிதகேடயமாக தானே சண்டை போட்டார்கள். அப்புறம் இந்த பிரச்சனையை தமிழ் சிங்கள் பிரச்சனையாக பார்க்காமல் திமிர் பிடித்த யாழ்பாணிகள் போராட்டமாக பாருங்கள். மலையக தமிழர்கள் என ஒரு இனம் சிங்களவர்கள் மத்தியிலே பரந்து வாழ்க்கிறார்கள் அவர்களில் எத்தனை பேர் போராட்துக்கு ஆதரவு??
சோ வின் மறு பெயர் Unmai!
புலி ஆதரவு கோழ்டி வெகு அபாயமானது. கொடிய கொலை செய்தவர்களை கூட தூக்கில் போடகூடாது என வக்காலத்து வாங்குவார்கள். ஒரு பொய்யை பல முறை சொன்னால் உண்மையாக்கலாம் என்பதை நன்றாக அறிந்தவர்கள். இப்படி தான் ராஜீவ் கொலையாளிகளை வாழ்த்திகொண்டு , ராஜீவ் கொலையாளிகளை தங்கள் தளங்களில் பாராட்டுவார்கள் .ஆனால் அவர்கள் அப்பாவிகள் என தமிழ்நாட்டில் கூப்பாடு போடுவார்கள். மானம் கெட்ட ஜன்மங்கள்
நண்பரே,
திரும்பத் திரும்ப முடிந்து விட்ட கதையை
ஏன் பேசுகிறீர்கள் ? இனியாவது இந்த
கோணத்தில் பேசுவதை நிறுத்துங்கள்.
இன்று ஈழத்தமிழர்கள் படும் துன்பம்
சொல்லொணாதது.
ஈழம் தமிழர்களுக்குச் சொந்தமான மண்.
அதைக் கோர அவர்களுக்கு எல்லா
உரிமைகளும் உண்டு. அவர்களின்
இன்றைய துன்பத்திற்கு ஒரு முடிவு
கண்டே ஆக வேண்டும்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
அதை ஈழ தமிழர்கள் சொல்லட்டும். புலம் பெயர்ந்த ஈழ தமிழ் கூட்டம் சொல்ல கூடாது. போர் வெறியால் இலங்கையில் வாழும் தமிழ்ர்கள் கூட்டத்தை சிதைத்தவர்களே அவர்கள் தான். இதை போல தீர்மானம் போராட்டம் எல்லாம் சீரான வாழ்க்கைக்கு திரும்பி கொண்டு இருக்கும் அவர்கள் நிம்மதியை குலைப்பதில் தான் ஆகும். சற்று நேரம் இருந்தால் ஈழ தமிழர்கள் போரங்களில் போய் பாருங்கள். புலம் பெயர்ந்த புலிகள் அடுத்தது ஈழம் தான் என்று குத்தாட்டம் போடுகிறார்கள். கூடவே இந்தியாவையும் திட்டி கொண்டே.. அதில் ஒருவன் சொல்கிறான் “ இந்தியா தானும் ரவுடிதான் என நிருபித்து விட்டதாம்.
இந்த தீர்மானங்கள் தமிழ் நாட்டு வெற்று கோழங்கள் ஈழ தமிழ்ர்கள் வாழ்க்கையை மேலும் சிதைக்கதான் செய்யும்.
அப்போ நீங்க யாரு?
//திரும்பத் திரும்ப முடிந்து விட்ட கதையை ஏன் பேசுகிறீர்கள் ? இனியாவது இந்த கோணத்தில் பேசுவதை நிறுத்துங்கள்.//
Unmai சொன்னது மிக சரி. நீங்கள் மட்டும் திரும்பத் திரும்ப புலிகளின் தமிழ் ஈழம் என்கின்ற கொலை வெறி கனவை பிரசாரப்படுத்தலாமா? புலிகளின் தமிழ் ஈழத்தை நீங்கள் எடுக்கின்ற போது முடிந்து போன புலிகளை பற்றி கதைப்பது தவிர்க்க முடியாது.
BC நண்பரே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். புலிகளுக்கு மட்டும் தான் ஈழம் கனவு என்றால் ஐக்கிய இலங்கை என்று கூறிக்கொள்ளும் டக்லஸ் மற்றும் அவர் கட்சி தொடர்ந்து தமிழர் பகுதியில் தேர்தலில் தோற்பதற்கு காரணம் என்ன? அதே போல் புலிகள் ஆதரவு கட்சி என்று சிங்களரால் கூறப்பட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதன் காரணம் என்ன?
ஈழ தமிழர்களை விட மலையக தமிழர்களே இந்திய தமிழர்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் எப்படி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இலங்கையில் வாழ்க்கிறார்கள். யாழ்பாண தமிழர்கள் யாரோடாவது ஒத்து போகி இருக்கிறார்களா? அவர்களுக்கு எல்லாருமே துரோகிதான். ஆனால் அவர்கள் மட்டுமே உத்தமர்கள்.
மலையக தமிழர்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இலங்கையில் வாழ்க்கிறார்கள்; அவர்கள் வீட்டில் பாலாரும் தேனாறும் ஓடுகிறது. அவர்களின் நிலையை பார்த்து பாராட்டி ராஜபக்சே அவர்கள் தலைவனுக்கு மந்திரி பதவி கொடுத்தார். அவர் அந்த மிதப்பில் கோவையில் வந்து லாட்ஜில் மப்பில் பணிப்பெண் கையை பிடித்து இழுத்தார். …நினைவிருக்கிறதா நண்பரே!
பார்பனர்கள் தமிழர்கள் என்றால் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது நமெக்கெல்லாம் துடித்த ரத்தம் தமிழ்நாட்டில் ஒரு பார்பனுக்கு கூட துடிக்காதது ஏன் ?
அப்படி துடி துடித்து நீங்கள் என்ன செய்தீர்கள் நண்பரே ?
அண்ணே…. கலைஞர் அந்த நேரத்திலதான், தியாகத் திருவிளக்குக்கு … பட்ட பெயர் சூட்டி பாராட்டுவிழா நடத்திக்கிட்டு இருந்தார்… அவருக்கு உள்ளுக்குள்ள துடிச்சுருக்ம் ஆனா உதட்டல துடிக்கல… அதெ முதல்ல பாரும்.
Strongly condemn cho…though I like CHO..He should think outside his zone…It was not the war Between government and terroists. Its Between government and civilians.
நண்பரே, அவரர் கையை புடிச்சு இழுத்தாருன்னு தெரியுமா? சரி அத விடுங்க.மலையக தமிழர் மேட்டர் ஏதும் உங்களுக்கு தெரியாது போல இருக்கு. இதுல இலங்கை தமிழர் ஆதரவு என கூச்சல்.
u don’t hav to publish this comment!if u interact with ten people frm particular community fr instance ..say nadars….u will get mixed opinion in this regard i mean eelam issue!but if u talk to ten brahmins they all hav same opinion against eelam!u better do this experiment urself u wil get a clear picture abt brahmins!the reason is simple…if eelam tamils get a seperate state it will influence indian tamils to go fr seperate state.broader india will be more helpful fr brahmins than a seperate tamil state.in the case of cho.ramasamy,he branded prabhakaran as a terrorist but narendra modi as a patriot!wat to say….?he never admitted ipkf committed crime in sri lanka!according to him who ever died in this conflict, all of them r terrorists!
நண்பர்களே,
என்னைப் பொறுத்த வரையில் நான் ஜாதி அடிப்படையில்
எந்த பிரச்சினையையும் அணுகுவதில்லை.
எனக்கு ஜாதி உயர்வு/தாழ்வுகளில் நம்பிக்கை இல்லை.
உயர்வோ, தாழ்வோ – மனிதன் தன் குணத்தாலும்,
செய்கைகளினாலும் தான் பெற வேண்டுமே தவிர,
ஜாதியினால் அல்ல.
இந்த விமரிசனம் வலைத்தளத்தில் ஜாதிகளைப் பற்றி
விவாதம் செய்வதை நான் விரும்பவில்லை.
அது நான் விவாதத்திற்கு எடுத்துகொண்ட பொருளின்
தன்மையை சிதைத்து விடும்.
எனவே தயவுசெய்து, இந்த வலைத்தளத்தில் எழுதும்போது.
யாரும், ஜாதிகளைக் குறிப்பிட்டு எழுதுவதைத்
தவிர்க்கவும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
parpanam enpadhu jaadi illai.. athu oru kunam.. ! entha jaathiyinarum andha kunathinil varalam.. CHO vidam andha parpana pudhi ekkachakkam.. avvalavey
//அருண்பிரபு says: நடுநிலையாளர் சோ ஈழத்தமிழர் விஷயத்தில் எடுத்திருக்கும் நிலை “ஈழத்தமிழர் அனைவரும் விடுதலைப்புலிகள் ஆகவே அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்” என்ற சிங்கள அரசின் பிரச்சாரத்தை வழிமொழிவதாகும்.//
புலிகள் மோசமன பயங்கரவாதிகள் நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்று புலிகளை ஆதரிக்காத இலங்கை தமிழர்கள் சொல்கிறோம். ஆனால் இந்திய தமிழ்நாட்டில் உள்ள சீமான் ,வைகோ புலம் பெயர் சொகுசு புலி ஆதரவாளர்கள் போன்றோர் தான் இலங்கை தமிழர்கள் அனைவரும் புலிகளே. புலிகளின் தமிழீழம் மட்டும் தான் இவர்களுக்கு தீர்வு என்று தங்களது ஆசையை எங்களது தலையில் திணிப்பு வைக்கிறார்கள்.
அருண்பிரபு, ஈழத்தமிழர் அனைவரும் விடுதலைப்புலிகள் என்று இலங்கை அரசு சொல்லி நாம் இதுவரை அறியவில்லை. உங்களிடம் ஆதாரம் இருத்தால் அறிய தரவும். இலங்கை தமிழர்கள் எல்லோரும் புலிகளே பிரபாகரன் மட்டுமே இலங்கை தமிழர்கள் தலைவர் என்று செயல்பட்டு ஏற்காத இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்கள் புலிகள்.
மக்கள் வீடு வாசல் இழந்து இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அநாதைகளாகபட்டு பெண்கள் விதவைகளாக்கப்டது எல்லா கொடுமைளுக்கு காரணமே பயங்கரவாத புலிகள்.
சோ போன்ற நல்வர்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
சரியாக சொன்னீர்கள் BC. அதெப்படி டக்லஸ், கருணா. பிள்ளையான் போன்ற ஈழ தமிழர்கள் ராஜபக்சேவிடம் இரந்துண்டு வாழும் போது இலங்கை தமிழர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் என்று இலங்கை அரசு சொல்லும்!
ஜாதி பெயர்களை தவிர்த்தால் இந்த தலைப்பின் கீழ் ஆரோக்கியமான விமர்சனம் நடை பெற்றுள்ளது.வாழ்த்துக்கள்
ஒரு நல்ல விவாதம், துரதிருஷ்டவசமாக இரண்டு தவறான பாதைகளில் நுழைந்து செல்ல துவங்கியது.நல்ல வேளையாக அவற்றில் ஒரு பாதையை கா. மை.தடை செய்து விட்டார்..
அந்த இரண்டாவது பாதை…ஈழ தமிழர்களின் படுகொலைக்கும்,விடுதலை புலிகளின் இயல்பிற்கும் முடிச்சிட்டு சிங்கள அரசின் காட்டுமிராண்டிதனத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்வது!
கேள்வி ஒன்று:பிரபாகரன் தீவிர வாதியா?
ஒருவன் காரணம் ஏதுமின்றி கன்னத்தில் அறையும் பட்சத்தில்..
மறு கன்னத்தையும் காட்டுபவன் ..காந்தி,
ஒன்றுமே நிகழாதது போல இருப்பவன் ..மன்மோகன்சிங்.
உடனே திருப்பி அறைபவன்..நரேந்திர மோடி
அடித்தவன் கையை உடைப்பவன்..ஜெயலலிதா
மன்னிப்போம் மறப்போம் என வசனம் பேசி, சிறிது காலம் கழித்து, ஆள் வைத்து அவன் கையை உடைத்து விட்டு உடனே அவன் மருத்துவ செலவிற்கு
ரூ ஒரு லட்சம் கொடுப்பதாக சொல்லி பத்தாயிரம் கொடுத்துவிட்டு மீதியை அடிப்பவன்…கருணாநிதி.
அடிவாங்கியவன் மேற்கண்ட எந்த அவதாரம் எடுத்தாலும் அதில் தப்பு கண்டு பிடிப்பவன்..சோ.
இவர்கள் மத்தியில் வாழும் நமக்கு…
அடித்தவன் கையை வெட்டுபவன்..பிரபாகரன்
எனும் ஒரு குண இயல்பை எப்படி புரிந்து கொள்ள முடியும்?.
கேள்வி இரண்டு:அப்படியானால் சிங்கள அரசு அப்பாவி தமிழர்களை கொன்றது தவிர்க்கமுடியாததா?
சில தினங்களுக்கு முன் திருடர்கள் என கருதப்படும் ஐந்து நபர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஒரு வேளை போலீஸ் அத்துடன் நில்லாமல் அந்த தெருவிலுள்ள அனைத்து நபர்களையும் சுட்டு கொன்று விடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.இதை நாம் எப்படி நோக்குவோம்?
மேலும் அந்த தெருவில் நமக்கு நெருங்கிய உறவினர்களும் இருந்து,பாதிக்கப்பட்டனர் என்றும் வைத்துக்கொள்வோம்;
இப்பொழுது நம் கருத்து என்னவாக இருக்கும்?
இதை யாரும் வெளிப்படையாக சொல்ல வேண்டாம்.
தத்தம் மனசாட்சிக்கு சொன்னால் போதும்.
இதுவே கேள்வி இரண்டிறகான பதிலும் கூட.
நன்றி.
நண்பர் கண்பத்,
மிக அழகாக விளக்கி விட்டீர்கள்.
இதைவிடத் தெளிவாகவும்,
சுள்ளென்று உரைக்கிர மாதிரியும்
எழுதுவது அநேகமாக யாருக்கும்
இயலாத செயல்.
மீண்டும் சொல்கிறேன். பல சமயங்களில்
இதுபோன்ற பின்னூட்டங்களால் –
இடுகைக்கு சுவையும்,
சுவாரஸ்யமும் பல மடங்கு கூடுகின்றன.
நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
My dear Kaa.Mai,
My sincere thanks for your magnanimity.
Kind regards,
Ganpat
வழி மொழிகிறேன். நன்றி!
I agree to your points regarding Cho.I belong to the most criticized community.I have been studying lot of blogs. you are the first one doesn’t mention about brahmin community .Well done
ராஜபக்சேயின் செயலை யாரும் நியாய படுத்தவில்லை .அப்பாவி மக்களை மிரட்டி தங்களுடன் இழுத்து சென்று கேடயமாக்கி அவர்களை கள பலி கொடுத்த புலிகளை யாரும் விமர்சிக்காதது மட்டும் அல்ல அவர்களை உத்தமர்கள் போல் சித்தரிக்க முயலும் போது தான் வெறுப்பு ஏற்ப்படுகிறது
//BC நண்பரே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். புலிகளுக்கு மட்டும் தான் ஈழம் கனவு என்றால் ஐக்கிய இலங்கை என்று கூறிக்கொள்ளும் டக்லஸ் மற்றும் அவர் கட்சி தொடர்ந்து தமிழர் பகுதியில் தேர்தலில் தோற்பதற்கு காரணம் என்ன? அதே போல் புலிகள் ஆதரவு கட்சி என்று சிங்களரால் கூறப்பட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதன் காரணம் என்ன?//
எழில் நண்பரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதை புலிகள் ஒழிக்கபட்டதுடன் தெளிவுபடுத்திவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் துப்பாக்கி முனையில் வைத்திருந்ததை சிங்களவரும் அறிவார் .தமிழர்கள் வாழும் இலங்கையின் பிரதேசங்களலான வட ,கிழக்கு மாகாணங்களில் பாரளுமன்ற எம்பிக்கள் தொகை 31அதில் 13 எம்பிக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மிகுதி இதர கட்சி எம்பிக்கள்.இப்படியான உண்மைகளை தட்ஸ் தமிழ் போன்ற தமிழ்நாட்டு செய்தியாளர்கள் அறிய தரமாட்டார்கள்.
கருத்துக்கு நன்றி! பிரிவினைவாதம் பேசினால் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தமது கட்சி தடை செய்யப்பட கூடும் என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈழம் கோட்பாட்டில் இருந்து பின் வாங்கி இருக்கலாம் அல்லவா! மேலும் பெரும்பான்மை தமிழ் மக்கள் அவர்கள் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும் கீழ் உள்ள சுட்டியின் மூலம் அறியலாம்.
http://dbsjeyaraj.com/dbsj/archives/1440
எனவே ஈழம் என்பது புலிகளுக்கு மட்டுமே உரித்தான கனவு என்று உங்கள் வாதம் ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை.
நண்பர் கண்பத் கருத்து – உண்மையின் வெளிச்சம்.
என் வேண்டுகோள்..
துக்ளக் படிப்பதை நிறுத்துங்கள்