திருமதி சோனியா உலகின் 4வது பெரிய
பணக்கார அரசியல்வாதி –
அமெரிக்க தளம் தகவல் வெளியீடு !
ஏற்கெனவே “அன்னை” சோனியா காந்தியின்
“சாதனைகள்” நம்மை பிரமிக்க வைக்கின்றன.
இந்த சமயத்தில் அமெரிக்க வலைத்தளம் ஒன்றில்
வெளிவந்திருக்கும் தகவல் ஒன்று என்னை
பிரமிப்பில் ஆழ்த்தி விட்டது.
ஏற்கெனவே ஜீரோ லாஸ் புகழ் –
அமைச்சர் கபில் சிபல் – அவர்கள் கூகுள் மற்றும்
பேஸ்புக் போன்ற வலைத்தளங்களை இந்தியாவில்
தடை செய்ய வேண்டும் என்று பேசி வரும்போது,
அமெரிக்க வலைத்தளம் ஒன்று – திருமதி சோனியா
காந்தி அவர்கள் உலகின் மிகப்பெரிய பணக்கார
அரசியல்வாதிகளின் பட்டியலில் 4வது இடத்தில்
இருக்கிறார் என்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
முதலில் பணக்காரர்களின் முழு பட்டியலை
வெளியிட்டு விட்டு, பின்னர்
யாராவது சரியாக கவனிக்காமல் போய்
விடப்போகிறார்களே என்று தனியாக அழகான
புன்னகையுடன் கூடிய புகைப்படம் ஒன்றினைப்
போட்டு, பெரிதாக வேறு போட்டிருக்கிறார்கள்.
பட்டியலில், சவூதி அரேபியா மன்னர்,
மற்றும் ப்ரூனே சுல்தான் ஆகியோரின்
வரிசையில் 4வதாக “அன்னை”
சோனியா அவர்களைப் பார்க்கலாம்.
எங்கோ இத்தாலியில் பிறந்து,
எங்கோ லண்டனில் வளர்ந்து,
இந்தியாவில் வாழ்க்கைப்பட்டு,
இவ்வளவு உயர்ந்த இடத்தை ஒரு பெண்மணி
எட்டிப் பிடித்து இருக்கிறார் என்றால் அது
எப்பேற்பட்ட பெரிய சாதனை !
திருமதி சோனியா அவர்கள் அவசியம் அவரது
அனுபவங்களையும் அவர் எப்படி இவ்வளவு
உயர்ந்த நிலைக்கு வந்தார் என்பதையும் ஒரு
புத்தகமாகப் போட வேண்டும். அவரைப் பார்த்து
மற்றவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவது
எப்படி என்று தெரிந்து கொள்ள அது மிகவும்
உதவியாக இருக்குமல்லவா?
மேற்படி தகவலை நம்புவதா -கூடாதா ? –
எனக்குத் தெரியவில்லை.
ஒரு வேளை தவறான தகவலாக இருக்குமோ ?
அதையும் யோசித்தேன்.
ஆனால் -இப்படி தவறான ஒரு தகவலை
வெளியிடுவதால், ஒரு அமெரிக்க வலைத்தளத்திற்கு
என்ன லாபம் இருக்க முடியும் ?
இது உண்மையாக இருந்தால் – அவர் சாதனை
எல்லாரையுமே பிரமிக்க வைக்க்க்கூடியது தான் !!
இந்த தகவல் பொய் என்றால் – கபில் சிபல்
இவ்வளவு நாட்கள் எப்படி பொறுத்து இருக்கிறார் ?
தவறான தகவலாக இருந்தால், கபில் சிபல்
உடனடியாக அமெரிக்க வலைத்தளத்தின் மீது
நடவடிக்கை எடுக்க வேணுமாய்
மிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அவர் நடவடிக்கை எடுக்கத் தோதாக –
தகுந்த ஆதாரம் வேண்டும் அல்லவா ? எனவே,
அதை வலைத்தள விலாசத்துடன் –
புகைப்பட பிரதியாகவே கீழே கொடுத்திருக்கிறேன்.





நமக்குதான் எம்மா பெரிய கவுர்தி கெட்சீகீதுபா!
அந்த பொஸ்தகம் போட்டா மெர்ஸலா ஸேல் ஆகும் வாத்யாரே!
சோனியா காந்தி உலக பணக்காரர்களில் முதல் இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
இந்திய பாரம்பரியமே அற்ற, இங்கிலாந்தில் மது, உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஒரு இத்தாலிய பெண்மணியை, இந்தியாவின் அனைத்து அதிகாரமிக்க குடிமகளாக மாற்றியதோடு அல்லாமல், உலகின் நான்காவது பணக்காரராக மாற்றிய அதிசயம், உலகிலேயே இந்த இந்திய திருநாட்டில் மட்டும் தான் நிகழ முடியும்.
இது யாருடைய பணம்?