தீக்குளிப்பேன் – வரலாறு காணாத வரவேற்பு !
ஒரே ஒரு வார்த்தை -தமிழ்நாட்டில்
எப்பேற்பட்ட புரட்சியை உண்டு பண்ணி விட்டது !
இதற்கு முன் வேறு எந்த ஒற்றை வார்த்தைக்கும்
இந்த அளவு ரீ-ஆக் ஷன் இருந்ததில்லை.
தலைவர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் –
ராஜினாமா செய்வேன் என்று கூறியபோது
ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் இப்போது காண்பது –
முன் எப்போதுமே கண்டிராத –
வரலாறு காணாத வரவேற்பு.
நான் எதுவும் எழுதப்போவது இல்லை.
அடேயப்பா தமிழில் தான் மக்கள் எவ்வளவு அழகாக
எழுதுகிறார்கள்.
என்ன – அவர்களுக்கு அடிக்கடி சரியான
வாய்ப்பு கிடைப்பதில்லை !
வாராது போல் வந்த மாமணியாக
இந்த வார்த்தை வெளிவந்ததும் –
வாய்ப்பு கிடைத்ததும் – பாருங்களேன்
வலைத்தளத்தில் தான் எத்தனை எத்தனை உற்சாகம் !
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற –
நான் ஒன்றுமே செய்யவில்லை – just
வலைத்தளத்தில், இந்த செய்திக்கு
பல இடங்களில் கிடைத்த
பின்னூட்டங்களில் – மிகச்சிலவற்றை –
repeat -மிகச்சிலவற்றை மட்டும் கீழே
தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
நீங்களே பாருங்களேன் –
எத்தனை வரவேற்பு –
எவ்வளவு உற்சாகமென்று !
—————————-
கலைஞரே – இப்போதாவது, நீங்கள் சொன்னதைச்
செய்தால் நன்றாக இருக்கும் !
இதை செய்தீங்கன்னா ஒங்களுக்கு கோடி புண்ணியம்
உண்டாகும் !
கலைஞர் டிவியில் நேரடி ஒளிபரப்பு உண்டா ?
ரிப்போர்ட்டர் அய்யா – நல்ல காதுல வாங்கினீங்களா,
தீ குளிபேன்னா சொன்னாரு ?
டீ குடிப்பேன் னு சொல்லி இருப்பாரு !
பெட்ரோல் செலவு என்னுது !
பெட்ரோல், தீப்பெட்டி சேர்த்து செலவு என்னுது !
கூடவே வாரிசுங்களையும் கூட்டிப் போனால் நல்லது –
அம்மா, அம்மா -ஒங்க கால்ல விழுந்து கேக்கறோம்.
நீங்க தான் தெய்வம் –
தயவு செஞ்சு ஒடனே இடிக்க உத்தரவு போடுங்க !
FLASH NEWS-
நூலகத்தை இடிக்க ஸ்டாலினும், அழகிரியும்
கூட்டாக முயற்சி !
we are eagerly waiting
with OB Van sir….
Times Now tv, Headlines today tv,
24×7 NDTV
அம்மா – தமிழ்நாட்டுக்கு இப்போ
மின்சாரம் வேண்டாம்,
இலவசம் வேண்டாம்,
வேறு எதுவுமே வேண்டாம் –
அந்த கட்டிடத்தை மட்டும் இடிங்க போதும் !
ரொம்ப நேரமா வித்தை காட்ராரு – ஆனா
பாம்பை மட்டும் வெளியே எடுக்க மாட்டேங்கறாரே !
தலீவா – ஒன் வார்த்தைய சீரியசா எடுத்துக்கினு,
ஒன் வாரிசுங்க ஒடனே இடிச்சிடப்போறாங்க.
கொஞ்சம் பொறு தலீவா –
பசங்க பரீட்சை முடிஞ்ச ஒடனே செஞ்சிடலாம் !
ஒரு நூலகம் அழிந்தால் தான் தமிழ்நாட்டைக்
காக்க இயலும் என்றால் தாராளமாகச் செய்யலாம்
முதல்வர் அவர்களே – தயவு செய்து உடனே இடிக்க
உத்திரவிடுங்கள்.
விஷயம் முடிந்த பிறகு மீண்டும் கட்டிக்கொள்ளலாம் !
சினிமாசெய்திகள் –
ஒரு சிறந்த கதை,வசனகர்த்தா – இப்போது
காமெடியனாகவும் ஆகிறார்.
பாத்து பேசு தலே – ஒன் புள்ளைங்க காதுல விழுந்து
ஒடனே இடிச்சூடப்போறாங்க !
அம்மா – எல்லா கேசையும் வாபஸ் வாங்கிக்கறோம்.
ஒடனே இடியுங்க அம்மா !
அம்மா – தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய
கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு -பயன்படுத்திக்
கொள்ளுங்கள் !
சீக்கிரம் இடிங்கப்பா -நாட்டுல நல்லது நடந்து
ரொம்ப நாளாச்சு !
மீரா படத்துல எம் எஸ் பாட்டு ஒண்ணு உண்டு –
“அந்த நாளும் வந்திடாதோ ?”
கெண்டகி கர்னலும், அஞ்சாநெஞ்சனும்
மனசு வெச்சா இன்றிரவே நடக்கலாம் !
கொலை மிரட்டல் மட்டுமல்ல –
தற்கொலை மிரட்டலும் சட்டப்படி குற்றம் தான் !
நல்ல காரியங்களுக்கு உதவ நான் எப்போதுமே தயார் !
குடு குடு குடு குடு –
நல்ல காலம் பொறக்குது –
நல்ல காலம் பொறக்குது !
தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது!!
நிச்சயம் தானா சொல்லுங்கள் –
எல்லா தமிழர்களும் திரண்டு வருகிறோம் !
நல்ல காரியத்தை தள்ளிப்போடாதீங்க தலைவா !
தலைவரே -இந்த வெளையாட்டுல
தன்மானத்தலைவர்
வீரமணியையும் சேர்த்துக்குங்களேன்.
கொஞ்சம் மாத்திக்கலாமா ?
ஜெனீவாவில் காங்கிரஸ் அரசு இலங்கையை
ஆதரித்தால் என்று வைத்துக் கொள்ளலாமா ?
ஓடாத புகைவண்டி,
கொளுத்தாத தீ,
கொடுக்காத ராஜினாமா –
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் …!
அய்யா நீங்க ஒரு மேட்டர் மிஸ் பண்ணிட்டீங்க –
கொடுக்காத தந்தி ?
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே !
அம்மா – இடியுங்களேன் –
என்ன ஆகுது பாக்கணும் !
இரண்டு பேருமே கூட்டாகச் சேர்ந்து –
தலைவருக்கு நன்றி
ஸ்டாலின்,
தேங்ஸ்ப்பா –
அழகிரி !
கடுமையான நெருக்கடியில் சிக்கி சிரிப்பையே
மறந்து விட்ட தமிழர்களை
சிரிக்க வைக்கும் தலைவா- நீ வாழ்க !
—————————————
இதில் வேடிக்கை என்னவென்றால் – இத்தனையையும்
பிரசுரித்து விட்டு வலைத்தளம் சொல்கிறது –
“வாசகர் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டே
வெளியிடப்படுகின்றன.”
—————————————–
பின் குறிப்பு –
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல காமெடி
நாடகத்தைப் பார்த்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
உங்களுக்கும் அதே உணர்வு தான் என்று நினைக்கிறேன்.
எல்லாரும் தமாஷ் செய்கிறார்களே தவிர,
கலைஞர் உரையை அவர் பேசியபடி கீழே தருகிறேன் –
எவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் பேசி இருக்கிறார்
என்று பாருங்கள் –
“அண்ணா நூலகத்தை ஆஸ்பத்திரியாக்கப்
போகிறோம் என கூறுகிறார். அதற்காக சுப்ரீம் கோர்ட் சென்றிருக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மீறி
நூலகத்தை இடித்தே தள்ளுவேன் என்று
அடம் பிடித்தால், அந்த நாள்,
கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.”



வடிவேலு காமெடியைப் பார்த்து நாளாகிவிட்டது. அந்தக் குறையைப் போக்கிவுட்டது தமிழினத் தலைவரின் 2012-ன் ‘காமெடி நம்பர் ஒன்’
அப்புறம் ஜகா வாங்கிடுவாருல்ல…. அரசியல்வாதியாச்சே…
vetkam ketta arasiyal vaadhi
எத்தனை பேர் ஒரு சாவை எதிர்பார்க்கின்றனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இவர் எத்தனை முறை தன் பேச்சில் நிலையாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
பின்னொரு நாள் இதை பற்றி கேட்கும் போது யாருக்கும் புரியாத மாதிரி ஒரு கேள்வியை இவரே கேட்டு அனைவரின் வாயையும் மூடிவிடுவார்.
அதுதான் பட்டமே கொடித்தாகிவிட்டதே… “கலைஞர்” என்று. இப்போ வருந்தி என்ன பிரயோஜனம்.
கலைவாணரின் காமெடியை விட கலைஞ்சரின் தீக்குளிப்பு காமெடி சூப்பர் படு சூப்பர். கருணாநிதி பிராமணர்களை
நடுங்க வைத்துவிட்டார்.
கருணாநிதிக்கென ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.அவர்களுக்கு இவர் தெய்வம் போல.இவர் என்ன செய்தாலும் அவர்கள் மாறமாட்டார்கள்.
ஏன்,நம் வலைத்தளத்திலேயே யுவக்ரிஷ்ணா என்ற பதிவர் கருணாநிதி பக்தர்.இப்பொழுது கூட அவர் இலங்கை தமிழர்களை ஏமாற்றியது வை.கோ. என்ற பொருள் வரும்படி ஒரு பத்தி எழுதியுள்ளார்.
ஆனால் ஒன்று! பொய் சொல்வதில் கருணாநிதி எட்டு அடி என்றால் அவர் சிஷ்யர்கள் பதினாறு அடி..
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி மக்கள் வாக்குகளை பெற்று தன் திருவிளையாடல்களை நிகழ்த்தி வரும் ஒருவரை, அவர் மறைவில்தான் நம் பிரச்சினை தீரும் என நினைப்பது ஆபாசமான,அநாகரீகமான சிந்தனை.
அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழட்டும்.
நாம் மட்டும் அவருக்கு ஒட்டு போட வேண்டாம்.
நண்பர்களே –
கலைஞர் 100 ஆண்டுகளும், அதற்கு மேலும்
நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும்.
இந்த கட்டுரையில் உள்ள பின்னூட்டங்கள்
ஒன்று கூட
சீரியஸாக எழுதப்பட்டவை அல்ல.
முழுக்க முழுக்க நகைச்சுவை தான்.
அதை எழுதியவர்களும் உணர்ந்து தான்
எழுதி இருக்கிறார்கள்.
நேற்று கூட அவர் அளித்துள்ள ஒரு
பத்திரிகைப் பேட்டியைப் பாருங்கள் –
கேள்வி – தாங்கள் கூறித்தான் 4 திமுக மத்திய
அமைச்சர்கள் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்ததாக
கூறப்படுகிறதே ?
பதில் – இந்த தகவல் உண்மையாகவும் இருக்கலாம்.
பொய்யாகவும் இருக்கலாம் !
———————————
பகுத்தறிவுச் சிங்கமாக கருதப்பட்டவர்
இப்போது இம்சை அரசனாக,
கோமாளியாக –
கருதப்படுவது ஏன் ?
இவ்வளவு பெரிய கட்சியையும்,
மக்களின் நம்பிக்கையையும்,
எதிர்பார்ப்பையும்,
அன்பையும், ஆதரவையும் –
முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காக,
தன் வளர்ச்சிக்காக,
தன் மனைவிகளின், மகள்களின்,
மகன்களின், பேரன்களின் -வளர்ச்சிக்காக
பயன்படுத்திக்கொண்டதை பெரும்பாலான மக்கள்
உணர்ந்து கொண்டதன் விளைவு இது.
இன்னமும் கூட சிலர் திமுகவில் இவரைக்
கொண்டாடுகிறார்கள் என்றால் – அது
அவர்களின் அறியாமை காரணமாக அல்ல –
அங்கிருந்து அவர்களுக்கு இன்னும் கிடைத்து வரும்
சலுகைகளும், பதவிகளுமே !
(சரி தானே நண்பர் கண்பத் ?)
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
உங்கள் கருத்துக்கள் மிகவும் சரி,நண்பர் கா.மை.அவர்களே!
ஆனால் எல்லாரும் மயங்கியது அவரது வெற்று வசனங்களிலும்,
வசவுகளிலும் தான்.மற்றபடி அவராவது,தன் குடும்பம் அல்லாத மற்றவருக்கு கொடுப்பதாவது ..எச்சில் கையால் காக்கை ஒட்டாத வள்ளல அவர்.
அவர் தீக்குளிப்பு எத்தகையது என்பது பற்றி இட்லி வடை வலைதளத்தில் பதிவான புகைப்படம்தான் நான் மிகவும் ரசித்தது.
வணக்கம்..
yarum idippean innu sollavea illai hospital aga matrrathan irukirarkal,
Dear KM,
This a usual and cheap tactics of Karunanidhi whenever he wants to escape attention from
some other crisis question. Here, the question is on withdrawing the support of his party if the
Govt of India does not back the US resolution on Srilanka.He is a man to go to any extent to
save his own skin and his family’s skin. More than some 50 years back,,he threatened the father
of Mr.Udayakumar (a 17 years Annamalai University student who was murdered and thrown into
a lake.) to tell the police that it was not his son’s body. Most of today’s youngsters who are less
than 40 years of age do not know various cruel faces of this saturn .
(இவர்) … முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
VENDAAM IDHU PONRA VIMARSANANGAL. ADHU NAMMAI NAAMEY PILAVU PADUTHUM