கருணாநிதி பார்த்து அழுத –
ஆனாலும் மந்திரி சபையிலிருந்து விலக மறுக்கும்-
புகைப்படங்கள் சில –
சானல்-4 தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோ
விலிருந்து, சில புகைப்படங்கள் கீழே இடம்
பெறுகின்றன.
இவற்றைக் கண்ட பிறகும் கருணாநிதி சொல்கிறார்
மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக விலகினால்,
அரசு கவிழ்ந்து விடும்.திருமதி சோனியா
தலைமையிலான மத்திய அரசு கவிழ்வதை நான்
விரும்பவில்லை !
(நேற்றைய தினம் தான் சென்னையில்,
நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
செயற்குழு கூடி விவாதிக்கும் என்று கூறினார்.
அதற்குள் அதை மறந்து இன்று நெல்லையில் –
(இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில்
நிறைவேறுவதை விட) சோனியா காந்தியின் அரசு
காப்பாற்றப்படுவது முக்கியம்
என்பதை வெளிப்படையாகவே கூறி விட்டார்.
இவரிடமிருந்து நாம் வேறு எதை
எதிர்பார்க்க முடியும் ?
கீழ்க்காணும் புகைப்படங்கள் நேற்றைய தினம்
சானல்-4-ல் திரையிடப்பட்ட வீடியோவிலிருந்து
எடுக்கப்பட்டவை.
நிறைய பேர் வீடியோவை பார்த்திருப்பார்கள்.
அதைக் காணாத சிலருக்காகவும்,
குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை இவை
நம் மனதில் இருந்து, உறுத்திக்கொண்டே இருக்க
வேண்டும் என்பதற்காகவும் –
இவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
உலகில் மனசாட்சியுள்ள எந்த மனிதராவது
இதை சகித்துக் கொள்வார்களா ?
(நிர்வாணமாக உள்ள, சிதைக்கப்பட்ட சில
பெண்களின் படங்களும் வீடியோவில் காட்டப்பட்டன.
அவற்றை பிரசுரிக்க எனக்கு மனம் வரவில்லை.)













படங்களை பார்த்ததும் மனத்தை பிசைகிறது. இந்த படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிக்க கூடாது. சோனியாவுக்கு
ஆட்சி முக்கியம். கருணாநிதிக்கு குடும்பம் முக்கியம். ஆட்சியில் பங்கு அவசியம். இவர் தமிழர்களுக்காக தீ குளிப்பாராம். தொண்டர்களை மறைமுகமாக தூண்டுகிறார். தமிழ்நாட்டு மக்களை அப்பட்டமாக ஏமாற்றுகிறார்
இவர்கள் உலகை ஊரையல்ல தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றார்கள். பட்ட சூடு போதாதா? இனியும் ஏன் இந்த முதலைக் கண்ணீர்?
கருணாநிதி தமிழன் இல்லை என்பதில் இலங்கைத்தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.