இவர்களுக்கு எல்லாம் கருட புராணத்தில் என்ன தண்டனை ..?

இவர்களுக்கு எல்லாம்
கருட புராணத்தில் என்ன தண்டனை ..?

இன்று செய்தியாளர்கள் கலைஞரிடம் –

“இத்தனைக்குப் பிறகும், மத்திய அரசு ஜெனீவா
மனித உரிமை சபை கூட்டத்தில் இலங்கையை
ஆதரித்தால், மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவை
விலக்கிக் கொள்வீர்களா “-

என்று கேட்டதற்கு
கருணாநிதி கூறியுள்ள பதில்  –

“நான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
கட்சியின் செயற்குழு இது பற்றி விவாதித்து
என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கும்.”

(PTI news)

சாதாரண ரெயில் கட்டண உயர்வுக்கே –
ஒரே நிமிடத்தில் –
மம்தா பானர்ஜி இவ்வளவு கடுமையான முடிவை
எடுப்பதைப் பார்த்த பிறகும்,

கலைஞர்  யோசிக்கிறார்.
இன்னும் யோசிக்க வேண்டுமாம் !
செயற்குழுவில் விவாதிக்க வேண்டுமாம் !!
இவர்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லையா ?

நேருக்கு நேர்  -முகத்திற்கு எதிராகவே –
நீங்கள்  இலங்கையை ஆதரித்தால்,
நாங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வோம்
என்று கூற முடியாமல்
இவரைத் தடுப்பது எது ?

இவர் கூறினால் செயற்குழு ஒத்துக் கொள்ளாமல்
கூடப் போய் விடுமோ ?
செயற்குழு விவாதித்து என்ன செய்யலாம் என்று
முடிவெடுக்குமாம் !

இன்னும் ஒரு 3 மணி நேரம் உண்ணாவிரதம்
இருக்கலாமென்று  முடிவு செய்யுமோ ?

சே……………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இவர்களுக்கு எல்லாம் கருட புராணத்தில் என்ன தண்டனை ..?

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    ஆதரவை விலக்கினால், கொஞ்ச நாளாய் பதுங்கி இருக்கும் வழக்குகள் எல்லாம் வீர்யம் பெரும் என்ற உண்மை அறியாதவரா கருணாநிதி?

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    கருட புராண தண்டனை இவருக்கு வேண்டாம். இன்னும் பல ஆண்டுகள் உயிருடன் இருந்து, எந்த குடும்பம், மனைவிகள், வாரிசு போன்றோருக்காக தமிழரை அழிப்பதில் துணை போனாரோ அந்த குடும்பம் வாரிசுகள் பதவி, பணத்துக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சின்னாபினமாகி போவதை பார்த்து கண்ணீர் விட்டு வருந்தி சாவதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.

  3. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    2-G – திஹார்?

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ஒரு ஆண்,பெண் வேஷம் தரித்துள்ளார் என வைத்துக்கொள்வோம்.
    அப்பொழுது அவர் செய்யும் ஒவ்வொரு அசைவும் நமக்கு விநோதமாக இருக்கும் பொருத்தமாக இருக்காது.ஏனெனில் நாம் அவரை ஒரு பெண் என நம்பி விட்டதால்.
    ஆனால் அவர் உண்மையில் ஒரு ஆண் என தெரிய வரும் பொழுதுதான் தெளிவு பிறக்கும்..

    அதே போல, கருணாநிதி ஒரு தலைவர்,அரசியல்வாதி,பகுத்தறிவுவாதி,
    உள்நாட்டு/வெளிநாட்டு தமிழர்களின் காவலர்,ராஜதந்திரி,புலவர் என்றெல்லாம் நாம் நம்பும்போழுது அவர் பேச்சும் செயல்களும் குழப்பங்களை உண்டாகி விடை காணமுடியாத கேள்விகள் பலவற்றை உருவாக்கும்.

    ஆனால் அவர் உண்மையிலேயே ஒரு கைதேர்ந்த வியாபாரி என தெரியவரும்போது எல்லா குழப்பங்களும் நீங்கி தெளிவு பிறக்கும்.

    ஒருவர் ஒரு வியாபாரியிடம் ஒரு முறை ஏமாந்தால் மன்னித்து விடலாம் …..
    அந்த வியாபாரியை..
    ஆனால் அதே வியாபாரி தொடர்ந்து ஐந்து முறை, அதே நபரை ஏமாற்றினால் மன்னிக்கவே முடியாது…..ஏமாந்த அந்த நபரை.

    In democracy people only get what they deserve…

    அறுபது ஆண்டுகள் தொடர்ந்து முட்டாள்களாக இருக்கும் மக்கள் கூட்டதிற்கும் கருட புராணத்தில் தண்டனை சொல்லப்பட்டிருக்கிறது..
    அதன் பெயர்கள்..
    கருணாநிதி,ஜெயலலிதா,மற்றும் சோனியா

  5. surendran's avatar surendran சொல்கிறார்:

    thamizhaga arasiyal vaadhigale vaittrirkku soru saappidungal mattravattrai alla

  6. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    //…நாங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வோம்
    என்று கூற முடியாமல்
    இவரைத் தடுப்பது எது ? ..//

    எதுன்ன … மத்திய பதவி தான் இன்னம் வருவாய் கொடுக்குது.
    மாநில அரசு கைவைக்காம பாதுகாப்பா இருக்குது. …

    எலாதுக்குமேல் இத்தனை நாள் சேர்த்த சொத்துகளை பாதுகாக்குது …
    யாரோ எப்பவோ செத்ததுக்கு … இப்ப இருக்குற பதவிய விட சொல்லி கேட்ட எப்படி…
    ஐயோ ஐயோ…
    நீங்க இன்னம் வளரனும் தம்பி…

  7. வேந்தன்'s avatar வேந்தன் சொல்கிறார்:

    நல்ல தலைவர்களின் சொற்களை மதித்து நாம் விவாதிக்கலாம். இந்த ஆளு ஒரு தலைவரு அதுக்கு நீங்க எதுக்கு ஆற்றாமையா ஒரு கட்டுரை. மொத்த வேஷமும் கலைஞ்சி போய் கேவலப்பட்டுக்கிட்டு இருக்காரு இப்போ போய் அவரப்பத்தி ஒரு கட்டுரை தேவைதானா..?

  8. Kavin SM's avatar Kavin SM சொல்கிறார்:

    Ovoru Thamizhan’um Ippadithaan..,Yaaru eppidi ponaa enna namma nallaa irunthaa sari nu nenaikuraan….!!vaazhga Tamil..!!

  9. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    கல்யாணத்துக்கே மேளம் அடிக்காதவர் தான், காது குத்துக்கு அடிக்க போகிறாரா? ச்பெற்றம் ஊழில் தன்னை அலைக்கழித்த சோனியாவை பழிவாங்கவும், அலை கழிக்கவும் கருணாநிதிக்கு கிடைத்த துருப்பு சீட்டு தான் ‘இலங்கைக்கு எதிரான தீர்மானம்’ விஷயம்.

  10. mageswari's avatar mageswari சொல்கிறார்:

    இவர்களுக்கு தண்டனை கருட புராணத்தில் இருக்காது. அதை விட அறுபது மடங்கு அதிகம்

    • Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

      சிறு திருத்தம்:
      ஒரு லட்சத்தி எழுபதாயிரம் கோடி மடங்கு அதிகம். (இதை நீங்கள் ஸ்பெக்ட்ரம் ரூபாயாக எடுத்துகொல்லாம். அல்லது கொல்லப் பட்ட தமிழர்களின் எண்ணிக்கை என்றும் எடுத்து கொள்ளலாம்)

  11. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    I Agree with k.M

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.