பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

பாவ மன்னிப்பு கோரவும்,
பரிகாரம் செய்யவும் –
கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

கலைஞர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் –

பிரதமருக்கு விசேஷ கடிதம் அனுப்பியும்,
டி.ஆர்.பாலு மூலமாக தூது அனுப்பியும்,
இன்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின்
பேச்சின் மூலமாகவும் –

ஐ.நா.சபையின் ஜெனீவா  மனித உரிமைகள்
மாநாட்டில் –

இலங்கைக்கு ஆதரவான நிலை எதையும்
இந்தியா மேற்கொள்ளக்கூடாது என்றும்,

இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் –

இது குறித்து மத்திய அரசு தன் நிலையை
வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும்.

வாய்மூடி மௌனியாக இருந்த
பிரதமர் மன்மோகன் சிங்கும் இறுதியாகத்  
திருவாய் மலர்ந்தருளி விட்டார்.

இலங்கைக்கு விரோதமாக எந்த
நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்றும்,
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
ஆதரிக்காது என்றும்,
கடிதம் எழுதி விளக்கி விட்டார்.

இந்த நிலையில் – கலைஞர் செய்யக்கூடியது
ஒன்றே ஒன்று தான்.

40,000 தமிழர்களை மே 2009ல் துடிதுடிக்க
அழித்த சக்திகளுக்குத் துணை போன பாவத்திற்கு
மனமார வருந்தி மன்னிப்புக் கேட்கும் விதமாகவும்,
ஒரு பாவப் பரிகாரமாகவும், பிராயச்சித்தமாகவும்  –

மத்திய அரசுக்கு வெளிப்படையாக தன் நிலையை
அறிவிக்க வேண்டும். தன் கோரிக்கையை மத்திய
அரசு ஏற்க முடியாது என்கிற பட்சத்தில்,

கொலைபாதக இலங்கை அரசுக்கு இந்தியா
துணை போகத்தான் செய்யும் என்கிற பட்சத்தில் –

தான் அந்தப் பாவத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாது
என்றும்,  திமுக – மத்திய அரசுக்கு ஆதரவைத்
தொடர இயலாது என்றும் தைரியமாக
அறிவிக்க வேண்டும்.

ஒரு மம்தா பானர்ஜியால் சாதிக்க முடிந்ததை,
கலைஞரால் செய்ய முடியாதா என்ன ?

சரித்திரத்தில் – தன் இடம் என்ன என்பதை
இறுதியாக தீர்மானம் செய்யக்கூடிய இன்னொரு
வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.

இதையும் செய்யவில்லை என்றால் – பாவமன்னிப்பு
கோரவும், பரிகாரம் தேடவும் கலைஞருக்கு
கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பையும்
தவற விடுகின்றார் என்றே பொருள்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

  1. சவுக்கடி சந்திரகாந்தா's avatar சவுக்கடி சந்திரகாந்தா சொல்கிறார்:

    sorry to say kavirimainthan
    உங்களுக்கு யாரிடம் எதை எதிர்பார்க்கலாம்
    என்பது தெரியவில்லையே.

  2. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    கனிமொழியின் விடுதலை தற்காலிகமானது தான் என்று கலைங்கருக்கு நன்கு தெரியும். எனவே காங்கிரசிடம் இருந்து பிரிந்து வந்து ‘சொந்த செலவில் சூனியம்’ வைத்துகொள்ள மாட்டார் அவர். மற்றபடி காதல் ஜோடிகளுக்கு (மன்மோகன், கருணாநிதி) இடையே நடக்கும் கடித பரிமாற்றத்தால் இந்திய அரசுக்கு ரூபாய் 10 லாபம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

  3. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Now,this MK will give a worthless and meaningless comments which noody
    can understand. To give a striking comments, he should have a striking guts
    which he has lost long back.

  4. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா செயல்படவேண்டும் என்பது எனது கருத்து. இருப்பினும் அதுபோல் நடைபெற்றால் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களின் நிலை என்னவாக இருக்கும்
    காவேரி மைந்தன் விளக்கவேண்டும்.

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நடப்பதற்கு வாய்ப்பே இல்லாத “மூன்றாவது அணி” பற்றி அவ்வளவு கோபமாக விமர்சித்ததிலிருந்தே புரியவில்லையா காவிரிமைந்தன், நம் இன தலைவருக்கு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளிவர மனமில்லை என்று!

    பாவமன்னிப்பும் பரிகாரமும் பாவிகளுக்கே, சாத்தான்களுக்கு அல்ல!

  6. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    நெடுமாறன் ஐயா நேற்று ஒரு பேட்டியில் (தினமணி)

    “தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கையைக் கண்டனம் செய்து, அதற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பேரவையில் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பிரிட்டன், அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஆனால் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கொள்கைகளைச் சார்ந்த அரசு ஆட்சியில் இருந்த நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா.பேரவையில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி ஒரு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரு தயங்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது இப்படி இருக்க “குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு”. என்று காங்கிரஸ் ரெகார்டு போட்டு, சப்பை கட்டு கட்டுவது, முழு பூசணிகாயை சோத்துக்குள் மறைப்பதோடு அல்லாமல் காங்கிரஸ் என்ன நிலை எடுக்க போகிறது என்பதையும் தெளிவு படுத்துகிறது.

    நீங்கள் சொல்வது போல் இது கலைஞருக்கு பாவமன்னிப்பு கோரியும், பரிகாரம் தேடியும் ‘முதல் அடி’ எடுத்து வைக்க ஒரு சந்தர்ப்பம். இனப் பற்றா இல்லை இவர் ஈன்றவர்கள் மேல் பற்றா? விரைவில் விடை தெரியும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஆமாம் நண்பர் எழில்,

      நேற்று பாராளுமன்றத்தில் பிரனாப் முகர்ஜி
      பேசும்போது நான் பார்த்தேன்.
      நெடுமாறன் அவர்கள் மிக்சரியாகச் சொல்லி
      இருக்கிறார்கள்.
      தவறான தகவலை பாராளுமன்றத்திற்கு
      தந்ததாக யாராவது உரிமைப்பிரச்சினை கூட
      கொண்டு வரலாம்.

      காங்கிரஸ்காரர்கள் – பொய்யர்கள்.
      அடியிலிருந்து முடிவரை முழுவதும் பொய்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    கா மை ஐயா, தமிழக காங்கிரஸ்சும் களத்தில் குதித்திருப்பதால், ஒரு வேளை இந்தியா ‘abstain ‘ எனப்படும் ‘வாக்கெடுப்பில் இருந்து விலகி இருத்தல் நிலை’ முடிவை எடுக்கலாம்.

    அப்படி நடந்தால் அது கூட தமிழருக்கு எதிரான நிலைப்பாடு என்ற கருத பட வேண்டும்.

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஆம் நண்பரே,

    இன்றைய இரவு – இங்கிலாந்தின் சானல்-4
    திரையிடலுக்குப்பிறகு, ஆப்பிரிக்க நாடுகள் கூட
    தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளக்கூடும்.

    இந்தியாவின் ஆதரவு இல்லாமலே கூட
    தீர்மானம் நிறைவற வாய்ப்பு இருக்கிறது.

    இருந்தாலும், காங்கிரஸ் தலைவியின்
    தமிழர்களைப் பழிவாங்கும் போக்கை
    நாம் அனுமதிக்கக்கூடாது. நம்மால் இயன்ற
    அனைத்து விதங்களிலும் இந்திய அரசின் போக்கை
    மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
    காங்கிரசும், மத்திய அரசும் – மிகக் கடுமையான
    விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை
    அவர்களுக்கு முடிவெடுக்கும் முன்னரே
    தெரியப்படுத்த வேண்டும்.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  9. பாரதி's avatar பாரதி சொல்கிறார்:

    ஐயா,
    வேணும்னா அரை மணி நேர உண்ணாவிரதத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

  10. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    இந்த கொடுமையை பார்த்தீர்களா?

    கிருஷ்ணா நாடாளுமன்றத்தில் படித்த, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் இந்தியாவின் நிலை (?) பற்றிய அறிக்கை இன்னும் முழுதாக எந்த இந்திய செய்தி தளத்திலும் இல்லை. ஆனால் பிரபல கொழும்பு பத்திரிக்கை தளத்தில் அவர் படித்து சில மணித்துளிகளில் முழுதாக வெளியிட படுகிறது.

    http://dailymirror.lk/news/17455-need-to-keep-implications-in-mind-india.html

    கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் கொடுக்காமல் இவர்கள் எப்படி வெளியிட முடியும்? கூட்டு களவாணிகள் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் தேவை!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.