பார்லிமெண்டில் -தூங்கும் பிரதமரும்,
எழுப்பாதீர்கள் என்று
எச்சரிக்கும் பிரனாப் முகர்ஜியும்… !
இன்றைய தினம் பார்லிமெண்டின் கூட்டு கூட்டத்தில்,
பட்ஜெட் கூட்டத்தைத் துவக்கி வைத்து, அரசின்
முக்கிய கொள்கைகளை விளக்கி ஜனாதிபதி
பிரதிபா பாடீல் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழக M.P.க்கள் – ஜெனீவா மனித உரிமை
கூட்டத்தில் இலங்கை பற்றி இந்தியா எத்தகைய
நிலையை மேற்கொள்ளப்போகிறது என்பது குறித்து
கொள்கை அறிவிப்பு எதுவும் வெளியிடுவாரா என்று
உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
அத்தனைக்கும் பொறுப்பான,
அதிகாரபூர்வமாக அத்தனை முடிவுகளையும்
எடுக்க வேண்டிய இந்த
நாட்டின் முதல் மனிதர் – பிரதமர் மன்மோகன் சிங்,
எல்லாவற்றையும் “அவர் (?)” பார்த்துக் கொள்வார்
என்று நிம்மதியாக பாராளுமன்றத்திலேயே
உறங்கும் காட்சி –
ஒரு இந்தியனாக – ஒரு தமிழனாக
நாம் ஒவவொருவரும் வெட்கப்பட வேண்டிய காட்சி.
வேதனைப்பட வேண்டிய காட்சி.




இவர்கள் மேல் ஒரு தவறும் இல்லை.
தங்கள் இயல்பு போலவே இருக்கிறார்கள்.
இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள்
தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக் கொள்ள
வேண்டியது தான் !
Sonia is there. She will look after everything. Let him sleep please. Samy
மொபைலில் ஆபாச படம் பார்ப்பதை விட தூங்குவது மேல். தூங்குவதை விட கண்ணை மூடிக்கொண்டு பார்லிமென்று
பேச்சுக்களை கேட்பது மேல். பிரதமர் தூங்குகிறார அல்லது உன்னிப்பாக கவனிக்கிறாரா? பாரத மாதாவுக்குத்தான்
வெளிச்சம்.
K.M,
Still you have the hope that this cuntry will change one day!! What a man you are Sir. A shameless country with the shameless PM,FM,HM and other
Ministers. Once Deva Gowda was famous PM for his shameless sleep in the
Parliament. Now this Sardarjee. This man should not be given today’s salary and other eligible perks.
அந்த நபர் தானே எழுந்து, உடனே உபதேசமும் செய்ய ஆரம்பித்தால்..அது தியானம்
அந்த நபரை மற்றவர்கள் எழுப்பி,உடனே அவர் உளர ஆரம்பித்தால்..அது அரைகுறை நித்திரை
அந்த நபரை மற்றவர்கள் எழுப்பியவுடன் அவர் திரு திரு என முழித்தால்….அது ஆழ்ந்த நித்திரை
அந்த நபரை எவ்வளவு முயன்றும் எழுப்ப முடியாமல் மற்றவர்கள் அலற ஆரம்பித்தால்..அது யாத்திரை
Mr.Ganpat,
simply F A N T A S T I C !
with all best wishes,
kavirimainthan
Thank you Sir!
Kind regards,
Ganpat
eppadi ungalukku mattum intha mathiri seithikal kidaikirathu!
it is gods gift for yours
ஒரு நல்ல(?) பொருளாதார வல்லுனரை நம்(?) அரசியலமைப்பு எப்படி கெடுத்துவிட்டது(?!?!) என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த காட்சி.
நீங்கவேற “முடக்குங்க”, “முக்குங்கன்னு” பதிவு போடுறீங்க.
பாவம் அந்த ஆள். என்னத்ததான் பண்ணி தொலைக்கிறது.
அதான்… கொர்ர்ர்…கொர்ர்ர்…
அது ஒன்றுமில்லை, இரவு முழுவதும் சர்தாஜியும், முகர்ஜியும் மாறி மாறி மம்தா காலில் விழுந்து அகிலேஷ், பாதல் பதவியேற்புக்கு போகாதீர் என்று கெஞ்சி அவர் சம்மதிப்படுக்குள் விடிந்து விட்டது. என்ன செய்வது எல்லாம் அன்னையின் கட்டளை. மீற முடியுமா! இந்த கட்டளையை நிறைவேற்ற சர்தாஜி பட்ட கஷ்டம் முகர்ஜிக்கு தான் தெரியும். அதனால் தான் அந்த “உஷ்” சப்போர்ட்டு.
பிகு: மம்தா மிகவும் உஷார் பேர்வழி. மேற்கு வங்கத்துக்கு “மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி” என்று ஒரு டீலை போட்டு விட்டு தான் சம்மதித்தாராம். நம்ப அம்மாவும் கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க உதவுவதற்கு மத்திய அரசிடம், தமிழகத்துக்கு “சிறப்பு நிதியுதவி” டீல் ஒன்றை போட்டு விட்டு உதவலாம். It will be Win-Win situation.
நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார்
மங்குனி போல்…… குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விடுவார்….