முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும் வரை …

முடக்குங்கள் பாராளுமன்றத்தை –
வாக்குறுதி பெறும்  வரை …

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான
தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதனன்று
அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது.

இதன் மூலம் உலக சமுதாயத்தின் முன்னர் –
தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இலங்கை
அரசாங்கம் தள்ளப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது இந்தியா இதுவரை தன்
நிலையை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
அதற்கு பதிலாக, இலங்கை அரசு – இந்தியா
தம்மை ஆதரிக்கின்றது என்று சொல்லிக் கொள்கிறது.

அதிமுக,திமுக,மதிமுக,தேமுதிக,பாமக,
இடதுசாரிக் கட்சிகள், பாஜக, அதிசயமாக தமிழக
காங்கிரஸ் உட்பட தமிழ்நாட்டின் அனைத்துக்
கட்சிகளும் இந்திய அரசு அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்திருக்கின்றன. இந்த அளவிற்கு தமிழக கட்சிகள்
அனைத்தும் ஒன்று சேர்ந்ததே இல்லை என்று கூடச்
சொல்லலாம்.

அப்படியும் மத்திய அரசு இன்னும் தன் நிலையை
வெளிப்படையாகக் கூறவில்லை.வாய்மூடி மவுனமாக
இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் காலை வாரிவிட
அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

நாளை பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்
துவங்குகிறது. எது எதற்கோவெல்லாம் இதுவரை
பாராளுமன்ற நிகழ்ச்சிகள் முடக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ஒரு முறை –
மனிதாபிமானத்திற்காக,
இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு
நியாயம் கேட்பதற்காக,
கொலைகாரர்களை கூண்டுக்குள் கொண்டு வர –

நாளைக் காலையில் பாராளுமன்றம் கூடும்போது,
மத்திய அரசு தெளிவாக, உறுதியாக, அமெரிக்கா
கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை இந்தியா
ஆதரிக்கும் என்று வாக்குறுதி கொடுக்கும் வரை –
நடவடிக்கைகள் முடக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டின் அனைத்து M.P.க்களும்
ஒன்று சேர்ந்து  இதை உறுதிப் படுத்த வேண்டும்.

செய்வார்களா ?
பின் குறிப்பு  –
(தாமதமாக சேர்க்கப்பட்டது )

பார்த்தாலே  ரத்தம் கொதிக்கிறது.

நெஞ்சில் 5 துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சி,
ராஜபக்சேயின் ராணுவத்தால் –
படுகொலை செய்யப்படும் அளவிற்கு இந்த
12 வயது பாலகன் செய்த பாவம் என்ன ?

பிரபாகரனுக்கு மகனாகப் பிறந்தது தவிர ?

இந்தப் புகைப்படம் அனைத்து பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கொடுமை, சமூகம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும் வரை …

  1. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    மனிதாபிமானம் உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பார்கள்.. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி
    ஆதரவளிக்குமா அல்லது இந்தியாவின் மவுன சாமியாராக தமிழர்களுக்கு எதிராக செயல்படுமா?

  2. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    புவியியல் ரீதியில் தமிழ் நாடு இந்தியாவுடன் இனைந்து இருந்தாலும்,அரசியல் ரீதியாக இலங்கை தான் தமிழ் நாட்டை விட இந்தியாவுக்கு முக்கியமாக படுகிறது. எனவே தமிழ் நாடு ‘இலங்கை’ ஆகும் வரை, இந்தியா எப்போதுமே இலங்கை பக்கம் தான்.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்குமே யாரும் எதையும் முடக்கவில்லை. இதிலே இலங்கையாம்… தமிழாம்… இனமாம்… படுகொலையாம்… மனிதாபிமானமாம்… அய்யோ அய்யோ…

    அங்கே கேரளாவில் இரண்டு மீனவர்களை சுட்டார்களாம், கடற்படை அந்த கப்பலை சிறைபிடித்து அதில் இருந்த இத்தாலியரை சிறையிலிட்டது. இத்தாலியிலிருந்து உயரதிகாரிகள் வந்தும் இன்றுவரை அவர்கள் சிறையிலுள்ளனர்.

    எண்ணுவதெல்லாம் உயர்வெண்ணல் என்று பெரியவர்கள் கூறியதை நீங்கள் இவ்வளவு ஸீரியஸ்ஸாக எடுத்துக்காதீங்க காவிரிமைந்தன்.
    ஆனாலும் நீங்கள் நினைத்தபடி நடந்தால், பாராளுமன்றம் முடங்கினால்…
    பார்ப்போம்!

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    கா மை ஐயா, நெஞ்சில் ஈரமுள்ள எந்த தமிழனுக்கும் வரும் நியாயமான அவா தான் உங்கள் பதிவு. ஆனால் நடக்காது என்பதே யதார்த்தம்.

    ஈழ தமிழர் பிரச்னையை தமிழக இரு ‘பெரிய’ கட்சிகளில் இதய சுத்தியுடன் அணுகிய ஒரே கட்சி அதிமுக – எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை. அதன் பின் ஈழ தமிழர் பிரச்சனை, மத்தியில் இருக்கும் காங்கிரசுக்கு காவடி தூக்கவும், மிரட்டி காரியம் சாதிக்கவும் மட்டுமே இரு கட்சிகளாலும் பயன் படுத்த பட்டது. மூன்றாவதாக இருக்கும் சோனியா காலால் இட்ட கட்டளையை தலையால் செய்யும் தமிழக காங்கிரஸ் பற்றி பேசி பயனில்லை.

    ஆனால் இன்று தமிழக சகல கட்சியினரும் ஒரே குரலில் இந்திய அரசு அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க காரணம் தமிழக மக்கள், ஈழ படு கொலைகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்ற பயம் தான். இந்த கட்சிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்த தமிழக வாக்காள பெருமக்கள், தமிழ் ஊடகங்கள், உணர்வாளர்கள் என்று அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    நாடாளுமன்றத்தை முடக்கா விடினும் ஒரே குரலில் இவர்களை பேச வைத்ததே முதல் வெற்றி என்று எண்ணுகிறேன். இன்று இல்லாவிடினும் நாளையாவது ஈழ தமிழருக்கு விடிவு வரும் என்று நம்புவோம்.

    பிகு: தாதாவுக்கு “Sri Lanka’s Killing Fields ” ஆவன படத்தை பார்த்தபின் வடிக்க ஆரம்பித்த கண்ணீர் இன்னும் நிற்கவில்லையாம்.
    http://tamil.oneindia.in/news/2012/03/09/tamilnadu-karuna-insists-centre-support-un-resolution-aid0128.html
    தமிழக மக்களின் ஞாபக சக்தி மேல் இவருக்கு இருக்கும் நம்பிக்கை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

  5. சவுக்கடி சந்திரகாந்தா's avatar சவுக்கடி சந்திரகாந்தா சொல்கிறார்:

    கருணாநிதி வடித்தது, விடித்தது எல்லாம் போதும்.

    உடனடியாக மத்திய மந்திரிசபையில், ;திமுகவை
    சேர்ந்த மந்திரி மக்கள் அனைவரும் சேர்ந்து ஐ.நாவில்
    அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று
    ஒரு தீர்மானம் கொண்டு வரட்டும். மத்திய அரசு
    இதற்கு என்ன பதில் சொல்லபபோகிறது பார்பபோம்.

    (ராஜினாமா பற்றி எல்லாம் பேசி பயன் எதுவும் இல்லை
    என்பதால், இந்த குறைந்த பட்ச முயற்சி)

    பாராளுமன்றத்திலும், திமுக உறுப்பினர்கள் அனைவரும்
    சேர்ந்து , இலங்கை பிரச்சினையை விவாதிப்பதற்காக
    ஒரு ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரட்டும்.
    பார்ப்போம். அதற்கும் மத்திய அரசு என்ன சொல்கிறது
    பார்ப்போம்.

    கருணாநிதி இது வரை ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு கொஞ்சமாவது பிராயச்சித்தம்
    செய்யட்டும்.

    இதை அவர்கள் செய்யத் தவறினால் –
    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் யாரையும் இனி
    தமிழ் நாட்டிற்குள் வர விடக்கூடாது.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நம் மத்திய அரசிற்கு,

    சீனாவைக் கண்டால் பயம்..

    பாகிஸ்தானைக் கண்டால் பயம்..

    பங்களாதேஷைக் கண்டால் பயம்..

    நேபாளைக் கண்டால் பயம்..

    பூடானைக் கண்டால் பயம்..

    பர்மாவைக் கண்டால் பயம்..

    சிறிலங்காவைக் கண்டால் பயம்..

    மால்டிவ்சைக் கண்டால் பயம்..

    சொந்த நாட்டிலோ,

    இருபத்தேழு மாநிலங்கள் மற்றும்
    ஏழு மத்திய ஆட்சி பிரதேசங்களை
    கண்டாலும் பயம்!!

    என்ன ஒரு மாநிலம் குறைகிறதே என்று யோசிக்கிறீர்களா?

    அதுதாங்க நம்ப தமிழ்நாடு..

    நம்மைத்தான் யார் வேண்டுமென்றாலும் அடிக்கலாமே!..

    நம் “ஒற்றுமை”யோ உலகப்பிரசித்தம் ஆயிற்றே!!!

    தமிழையோ,தமிழர்களையோ பழித்தவனை
    என் தாய்,(ஏன் தெய்வமே) ,சொன்னாலும் அடிக்கமாட்டேன்
    என்பதல்லவா நம் கொள்கை!

    அமெரிக்கர்களுக்கு மனிதர்கள் மீது இருக்கும் ஒரு அக்கறை கூட,நமக்கு சக தமிழர்கள் மீது இல்லை என்பது நிதர்சனம்..

    வெட்கம்,வேதனை,வெகுளி இவை மூன்றும் ஒருங்கே எழுகின்றன.

    இனி நாம் நம் தமிழ் எம்.பி. க்களையோ,மத்திய தமிழ் அமைச்சர்களையோ நம்பி பயனில்லை..

    பாராளுமன்ற வளாகத்தில் தென்னிந்திய உணவுசாலை நடத்தி வரும் தமிழருக்கு ஒரு வேண்டுகோள்..

    நீங்கள் தயாரிக்கும் இட்லி,வடா,சாம்பார்,
    மசாலா தோசை,காபி
    மிகவும் பிரசித்தம்..

    தயவு செய்து அடுத்த சிலநாட்களுக்கு இவற்றை தயாரிக்காதீர்கள்..

    பாராளுமன்றமே ஸ்தம்பித்து விடும்.

    அப்பொழுதாவது ஒரு விடிவு கிடைக்கிறதா என பார்க்கலாம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.