டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. !

டாக்டர் ராமதாஸ் மிக  நன்றாகப்
பேசுகிறார் – சில சமயங்களில் …. !

யாரைப் பற்றியும், எதைப்பற்றியும்
கவலைப்படாமல் – மனதிற்குத் தோன்றியதைப்
பேசக்கூடியவர்கள் தமிழக அரசியலில் மிகச்சிலரே.

டாக்டர் ராமதாஸ், எப்போதாவது சில சமயம்,
அப்படிப் பேசுவார். டாக்டர் அப்படி மனம்
திறக்க வேண்டுமானால், சில சூழ்நிலைகள்
வசப்பட்டு இருக்க வேண்டும்.

ஒன்று – அவரது கட்சி மத்தியிலோ,
மாநிலத்திலோ, அரசில் அங்கம் வகிக்கக் கூடாது.

இரண்டு – அவரது கட்சி எந்த கட்சியுடனும்
கூட்டணி பந்தத்தில் இருக்கக் கூடாது.

மூன்று –  தேர்தல் காலகட்டமாக இருக்கக் கூடாது.
(இடைத்தேர்தல் பரவாயில்லை )

அத்தகைய சூழ்நிலை அமைந்துள்ள இந்த
காலகட்டத்தில் டாக்டர் ராமதாஸ் சென்ற வாரம்
ஆற்றிய வித்தியாசமான ஒரு உரையின்
சுருக்கம் கீழே –

(ஏனோ தெரியவில்லை – அநேகமாக
எந்த தமிழ் செய்தித்தாளுமே இதை விரிவாகப்
போடவில்லை !)

“திமுக துவக்கியுள்ள “திராவிட இயக்கத்தின்
நூற்றாண்டு கொண்டாட்டங்கள்”
போலித்தனத்தின் உச்சகட்டம்.

கடந்த 45 ஆண்டுகளாகவே –
ஒவ்வொரு முறையும் – பதவியில் இருக்கும்
வரை வாயே திறக்காமல் மௌனமாக இருந்து –
பதவி சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு,

பதவியை விட்டு தூக்கி எறியப்படும்போதெல்லாம்  
திராவிடத்தையும், திராவிட நாட்டையும்
பிடித்துக் கொண்டு தொங்குவது தான்
திமுக தலைவர்களின் வழக்கம்.

திராவிட இயக்கம்,  சமுதாயத்தில்
அரிய  சாதனைகளைப் புரிந்துவிட்டதாகக் கூறுவது
அபத்தம்.
அது செய்த ஒரே சாதனை  
வட்டங்கள், மாவட்டங்கள், மந்திரிகள், என்று
புதிது புதிதாக பல “புதிய பார்ப்பனர்களை”
உருவாக்கியது தான்.

அடுக்கு மொழியாலும், கவர்ச்சிப் பேச்சாலும்
எழுத்தாலும், மக்களைத் தங்கள் பக்கம் கவர்ந்து
இழுத்தது  திராவிட இயக்கம் என்பது உண்மையே.
ஆனால் 45 ஆண்டுக்கால திராவிட ஆட்சி –
சமுதாயத்தில் எந்தவித உருப்படியான
முன்னேற்றங்களையும் உருவாக்கவில்லை.

மாறாக, இயக்கத்தில் புதிய பணக்காரர்கள்
உருவானார்கள்.
புதிய தொழில் அதிபர்கள் உருவானார்கள்.

திமுக  தலைவர்களின் குடும்பத்தைச்
சேர்ந்த அவர்கள் உருவாக்கிய பத்திரிக்கை,
தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழர்களின்
பண்பாட்டையும், கலாச்சாரத்தையும்
சிதைத்தன என்பது தான் உண்மை.

எம்ஜிஆர் திமுகவில் இருந்த வரை
அவரது புகழையும், சினிமா கவர்ச்சியையும்
பிரச்சாரத்திற்கும், ஓட்டுக்களைக் கவரவும்
பயன்படுத்திக் கொண்ட திமுக,
அவர் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவை
துவக்கிய மறுகணமே  அவரை “மலையாளி”
என்று தூற்றத் தொடங்கி விட்டது.

திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும்,
சுயமரியாதையையும், சமத்துவத்தையும் பற்றி
வாய்கிழியப் பேசினாலும், நடைமுறையில்
மக்கள்  சுயமரியாதையுடன் பிழைக்க எந்த வழியும்
செய்யவில்லை. சாராயக்கடைகளைத் திறந்தும்,
இலவசங்களை அள்ளி வீசியும்,
மக்களை நிரந்தர வறுமையிலேயே
வைத்திருக்கின்றனர்.

சாதிக் கொடுமைகளைப் பற்றியும்
சாதியை ஒழிக்க வேண்டுமென்றும்
ஆண்டுக்கணக்கில் உரக்கப் பேசினார்கள்,
எழுதினார்கள், மகாநாடுகள் நடத்தினார்கள்.

ஆனால் தமிழ் நாட்டில்,
ஒரே ஒரு கிராமத்தில்,
ஒரே ஒரு தெருவில் கூட
சாதியை ஒழிக்க அவர்களால் முடியவில்லை”.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. !

  1. சவுக்கடி சந்திரகாந்தா's avatar சவுக்கடி சந்திரகாந்தா சொல்கிறார்:

    டாக்டர் ராம்தாஸ் அவர்கள் எந்த கட்சியுடனும்
    கூட்டணியில் இல்லாமல் இருப்பது தான்
    தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும்
    நன்மை பயக்கும் செயல் !

    அவர் ஆட்சிக்கு வருகின்றாரோ இல்லையோ,
    மனதில் தோன்றுவதை போட்டுடைத்து
    பேசவாவது செய்வார் அல்லவா ?.

  2. R.Gopalakrishnah's avatar R.Gopalakrishnah சொல்கிறார்:

    Mr.K.M,
    Enenthough Dr.Ramdoss speaks truth sometimes, he is totally untrustworthy. He will stoop down to any extent if he believes that if his son
    Anbumani has a fair chance of getting a ministerial berth either in Centre or in State he won’t hesitate to make an alliance under the leadership of Actor
    Karthik’s party. I am sorry to use the word that he is a single cellular
    organism. In fact, some years ago I had good respect about him.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நம்பவேண்டாம்..
    இவர்.
    பொறுப்பு இல்லாதபோது..
    அரிசந்திரர்
    பொறுப்பு கொடுத்தாலோ,,
    அழிசந்திரர்!

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    இவரும் கடந்த 20 ஆண்டுகளாக பாட்டாளி/வன்னியன் என்று வியாபாரம் செய்கிறார். ஆனாலும் திராவிடம் பேசும் “தமிழ் ஐயா”வைப் போலவே இவரும் பாட்டாளிகளை ஏச்சிதான் பிழைக்கிறார் என்பது உங்களுக்கு தெரியாதது இல்லையே காவிரிமைந்தன்!

  5. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    டாக்டர் ராம்தாஸ் அடுத்த கூட்டத்திற்கு,
    இந்த விஷயங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    பார்ப்பனர்களை ஒழிக்க அறைகூவல் விடுக்கும்
    திமுக தலைவர் கலைஞரின் முன்னாள் டாக்டர்
    ராமமூர்த்தி – ஒரு பார்ப்பனர்.
    முன்னாள் வக்கீல் வி.பி.ராமன் ஒரு பார்ப்பனர்.
    அவர் மனைவிகளுக்கு பிரசவம் பார்த்த
    டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் ஒரு பார்ப்பனர்.
    இன்னாளைய டாக்டர் கோபால் – ஒரு பார்ப்பனர்.
    ஆடிட்டர் ஜெகதீசன் -ஒரு பார்ப்பனர்.
    அவருக்கு யோகாசனம் சொல்லிகொடுத்த
    தேசிகாச்சாரி ஒரு பார்ப்பனர்.
    அவர் பேரன் கலாநிதி மாறனின் மனைவி
    காவேரி கலாநிதி ஒரு பார்ப்பனர்.
    இன்னொரு பேரன் தயாநிதி மாறனின் மனைவியும்
    இந்து ராமின் சகோதரர் மகளாகிய பார்ப்பனர் தான்.

    கலாநிதி, தயாநிதி, பேரன்கள் தயா, உதயா,
    ஆதித்யா அனைத்தும் சம்ஸ்கிருதப் பெயர்கள்.

    பேரன்களின் சன் டிவி, சன் ம்யூசிக், கே டிவி –
    தொலைக்காட்சிகள்,
    க்ளோவ்டு நைன், ரெட் ஜெயண்ட் -சினிமா
    தயாரிப்பு கம்பெனிகள் – அத்தனையும் ஆங்கிலம்.

  6. காவிரிமைந்தன்'s avatar காவிரிமைந்தன் சொல்கிறார்:

    நண்பர்கள் –
    ஆர்.கோபாலகிருஷ்ணன்,
    கண்பத்,
    சைதை அஜீஸ் –

    டாக்டர் ராம்தாஸ் பற்றி நீங்கள் கூறும்
    கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

    அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதி பற்றி
    டாக்டர் ராம்தாஸ் கூறும் கருத்துக்கள்
    மிகவும் வெளிப்படையாகவும், உண்மையை
    பிரதிபலிப்பதாகவும் இருந்ததால் தான்
    அதை முன்னிலைப்படுத்தி இந்த இடுகையை
    எழுதினேன்.

    நண்பர் லால்குடி நாராயணன் –

    உங்கள் பின்னூட்டத்தில்,
    நீங்கள் கொடுத்துள்ள கூடுதல் தகவல்களுக்கு
    மிக்க நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  7. அருள்'s avatar அருள் சொல்கிறார்:

    எல்லா கட்சிகளுக்கும் ஒவ்வொரு நேரத்தில் சில தார்மீக சங்கடங்கள் இருக்கும். இதில் ஒரு கட்சி அல்லது தலைவரை தனியாக பிரித்து – இவர் அப்போது ஏன் பேசவில்லை, இப்போது ஏன் பேசுகிறார் – என்பது விதண்டாவாதம்.

    மருத்துவர் இராமதாசு அவர்கள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போதும் நடுவண் அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காகவும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்காகவும் கடினமான போராட்டங்களை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் எய்ம்சில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடியதை நாடு அறியும். நடுவண் மருத்துவக் கல்வியில் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு எனும் வரலாற்று சாதனையைச் செய்தவர் அவர்தான்.

    திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் கூட திமுக ஆட்சியின் பல தவறான முயற்சிகளை மருத்துவர் இராமதாசு அவர்கள் கடுமையாக எதிர்த்தார். அப்போதும் மதுவிலக்கிற்காகப் போராடியதன் விளைவாகவே ‘டாஸ்மாக்’ நேரம் குறைக்கப்பட்டது.

    இதுபோல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

    “இவர். பொறுப்பு இல்லாதபோது..அரிசந்திரர் பொறுப்பு கொடுத்தாலோ,,அழிசந்திரர்!”
    “இவரும் பாட்டாளிகளை ஏச்சிதான் பிழைக்கிறார்”
    Enenthough Dr.Ramdoss speaks truth sometimes, he is totally untrustworthy

    —என்றெல்லாம் சிலர் கூறுவதற்கு காரணம் ஒருவிதமான “மஞ்சள் காமாலைக் கண்” பார்வைதான் காரணம்.

    (இங்கே, “மஞ்சள் காமாலைக் கண்” எனப்படுவது வன்னியர்களுக்கு எதிரான சாதி வெறி. – குறிப்பாக ஆதிக்க சாதி வெறி).

  8. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    “மஞ்சள் காமாலைக் கண்”!!!
    கோபம் வேண்டாம் நண்பரே!
    தமிழக முதலமைச்சராக கீழ்கண்ட மூன்று பேர்களில்
    (கருணா,ஜெயா,ராமதாஸ்..)நீ யாரை தேர்ந்தெடுப்பாய் என
    என்னைக்கேட்டால் ஏன் தேர்வு, சந்தேகமின்றி, உங்க தலைவர்தான்..ஆனால் வேறு பெயர்களும் சேர்க்கப்பட்டால்
    முடிவு வேறாக இருக்கும்..
    இவண்,
    ஆரோக்கிய கண் பட்

  9. Padman's avatar Padman சொல்கிறார்:

    திமுக வளர்ச்சிக்கு கருணாநிதிக்கு தேவை பார்ப்பன துவேஷம். பாமக வளர்ச்சிக்கு ராமதாசுக்கு தேவை புதிய பார்ப்பன துவேஷம். தமிழக வாழ்வுரிமை கட்சி வளர்ச்சிக்கு வேல்முருகனுக்கு தேவை தைலாபுரம்தோட்டம் ஒன்றரை ஏக்கர் எப்படி நூற்றி இருபது ஏக்கர் ஆச்சு என்ற துவேஷம். மொத்தத்தில் எல்லாரும் போடுவது பார்ப்பன து வேஷம்..என்ற வேஷம்.

  10. அழகாபுரம்.இரா.தங்கதுரை.'s avatar அழகாபுரம்.இரா.தங்கதுரை. சொல்கிறார்:

    மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளில் பங்கு வகித்தாலும், அரசின் மக்கள் விரோத செயல்களை / திட்டங்களைக் கண்டிக்கவும், போராடி அதை நிறுத்தவும் ஒருபோதும் தவறியதில்லை. இது மனசாட்சியுள்ள அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை ஏற்க மனமில்லை. அதற்காக அவர் ஒருபோதும் தன கடைமையை செய்யத் தவறியதில்லை. தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் அவர் தொடர்ந்துப் போராடிவருகிறார். போராடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேவையில்லாத, தெளிவில்லாத, கெட்ட எண்ணம் படைத்தவர்களால் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிரான, நாகரீகமற்ற, உண்மைக்குப்புறம்பான கருத்துக்கள் வரத்தான் செய்கின்றன.

    அழகாபுரம்.இரா.தங்கதுரை.
    அரியலூர் மாவட்டம்.

  11. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ஐயா லால்குடி நாராயணன், நீங்கள் அளித்த விபரங்களை படிக்கும் போது எனக்கு நேற்று பிராமணர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தான் ஞாபகத்துக்கு வந்தது. அறிக்கையை கீழ் உள்ள வலை தளத்தில் படிக்கலாம்…
    http://tamil.oneindia.in/news/2012/03/06/tamilnadu-brahmin-association-seeks-action-against-karunanidhi-aid0216.html
    இந்த அறிக்கயையில் கருணாநிதி எப்படி எல்லாம் பிராமணர்களை தனது தேவைக்கு பயன் படுத்தி கொண்டார் என்பதை தெளிவாக்குவது போல் இருந்தாலும், எனக்கு என்னவோ திராவிடம் பேசும் கருணாநிதிக்கு உதவிய ‘துரோகிகளை’ உலகறிய பட்டியல் போட்டது போல் இருந்தது.

  12. அருள்'s avatar அருள் சொல்கிறார்:

    மருத்துவர் அவர்கள் மீது வைக்கப்படும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு ‘அவர் அடிக்கடி கூட்டணி மாறுவார்’ என்பது. அந்த அடிப்படையில் அவரை கேலி செய்வதும் ஒரு வழக்கமாக உள்ளது.

    மருத்துவர் இராமதாசு அடிக்கடி கூட்டணி மாறினார் என்பது பொதுபுத்தியில் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாயை. உண்மையில் எல்லா கட்சிகளுமே ‘அடிக்கடி’ கூட்டணி மாறுகின்றன. இதுபற்றி விரிவாக இங்கே காணலாம்:

    விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? – அணிமாறும் பா.ம.க’வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

    கடந்த தேர்தலில் கூட ஒன்றாக இருந்த அதிமுக கூட்டணி இப்போது இடைத்தேர்தலில் இரு அணியாக நிற்கின்றன.

    ‘காமெடியான’ கட்சிகள் என்று பேச வேண்டும் எனில் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளுமே ‘காமெடிக் கட்சிகள்தான்’. இதில் மருத்துவர் மட்டுமே ‘சிலருக்கு’ தனியாக, காமெடியாக, கோமாளியாகத் தெரிவதற்கு அந்த சிலரின் ‘வன்னியர் வெருப்புணர்வுதான்’ காரணம்

  13. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    டாக்டர் ராம்தாஸிடம் எனக்கு மிகவும்
    பிடித்த ஒரு குணம் – அவர் எப்போதுமே
    தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது.

    பீடி, சிகரெட், சாராயம், சினிமா வெறி –
    இவற்றின் பிடியிலிருந்து தமிழ் இளைஞர்கள்
    வெளிவர வேண்டும் என்று அவர் ஒவ்வொரு
    சந்தர்ப்பத்திலும் வலியுறுத்துவதை நான்
    மனதார, விரும்பிப் பாராட்டுகிறேன்.

    இந்த இடுகையின் மூலப்பொருள் –
    “திமுகவின் திராவிட இயக்க நூற்றாண்டு விழா
    கொண்டாட்டங்கள்” பற்றியும், அதைத் தொடர்ந்து
    திமுக தலைவரின் போலி இயல்புகள்
    பற்றியும் தான். அதைப்பற்றி கருத்து
    சொல்வது தானே பொருத்தமாக இருக்கும் ?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  14. அருள்'s avatar அருள் சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் பெரும்பான்மை தமிழ்ச் சாதிகளுக்கு எதிரான சிறுபான்மை ‘திராவிட’ ஆதிக்க சாதிகளின் வியூகம் மிகத்தெளிவாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் பிரச்சாரத்தை செய்யும் ஊடக வலிமையும், பண வலிமையும் அவர்களுக்கு உண்டு.

    எனவே, “நாங்கள் பொதுவானவர்கள், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள், நல்ல அரசியலை விரும்புகிறவர்கள்” என்று வெளியில் பேசுகிறவர்கள் – உள்ளே ஆதிக்க திராவிடக் கூட்டத்தினராகவோ (தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் என்று படிக்கவும்), அல்லது அவர்களது மூலைச்சலவைக்கு பலியானவர்களாகவோ இருப்பதுதான் இயல்பு.

    எனவே, மருத்துவரின் முற்போக்கு கருத்துகள் எதிர்க்கப்படுவது இயல்பானதே.

  15. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இன்றைக்கு இரண்டு தீய சக்திகளான தி.மு.க / அ(தே)தி.மு.க.விற்கு மாற்றாக உள்ள கட்சிகள்..
    தே.தி.மு.க.
    காங்கிரஸ்,
    பா.ஜ.க.
    ம.தி.மு.க,
    பா.மா.க.
    இதில் தே.தி.மு.க. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை
    காங்கிரஸ்..இது முடிந்த கதை..
    பா.ஜ.க…இது முடியப்போகும் கதை..
    பா.மா.க…இரண்டு தீய சக்திகளுக்கும் மாறி,மாறி,பல்லக்கு தூக்கி தன்னை முழுவதாக அழித்துக்கொண்டது.
    ம.தி.மு.க,..ஒரு தீய சக்திக்கு பல்லக்கு தூக்கி தன்னை
    பாதி அழித்துக்கொண்டது.தனித்து செயல்பட்டால் மீதிபாதியை காப்பாற்றலாம்.
    Anyway 2016 is still a long way..

  16. அருள்'s avatar அருள் சொல்கிறார்:

    புதிய அரசியல் புதிய நம்பிக்கை” என்ற தலைப்பில் பாமக ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.