தில்லு முல்லு – தில்லு முல்லு ! பி.வி.ஆசார்யா -அப்பாவி முகம் – ஆனால் பின்னால் இருப்பது …?

தில்லு முல்லு – தில்லு முல்லு !
பி.வி.ஆசார்யா -அப்பாவி முகம் –
ஆனால் பின்னால் இருப்பது …?

முதலிலேயே சொல்லி விடுகிறேன் – வழக்கின்
merits and de-merits க்கு உள்ளாக நான்
போவதாக இல்லை. இது வழக்கின் பின்புலனைப்
பற்றியது மட்டுமே !

சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு வழக்கறிஞராகப் பணி
புரியும் பி.வி.ஆசார்யா சென்ற வாரம் கர்நாடகா அரசின்
அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யும்போது
மீடியாவிற்கு ஒரு விசேஷ பேட்டியும் கொடுத்தார்.

தான் அட்வகேட் ஜெனரலாக பதவி வகிப்பதை விட
சொ.கு.வழக்கில் சிறப்பு வழக்கறிஞராகத் தொடர்ந்து
நீதிமன்றம் தனக்கு இட்ட பணியை நிறைவேற்றுவதையே
சிறப்பாக நினைப்பதாகச் சொன்னார்.

தான் 2 பதவிகளையும் தொடர்ந்து வகிப்பதில் சட்டப்படி
எந்த தவறும் இல்லை என்றாலும், பிஜெபி மத்திய
தலைமை, தான் சொ.கு.வழக்கிலிருந்து வெளிவர
வேண்டுமென்பதற்காகவே தனக்கு அட்வகேட் ஜெனரல்
பதவியைக் கொடுத்தது என்றும், இரண்டில் ஒன்றை
மட்டும் வைத்துக்கொள்ளச் சொன்னால் – தான்
சொ.கு.வழக்கிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று
பிஜேபி தலைமை நினைத்ததாகவும் கூறி இருக்கிறார்.

முதல் பார்வையில் –
ஊழல் வழக்கில் தன் பணியைத் தொடர்வதற்காக,
அட்வகேட் ஜெனரல் பதவியையே
துச்சமாக உதறித் தள்ளும் இவரது சிறந்த கடமை
உணர்ச்சியை பாராட்டவே தோன்றியது.இருந்தாலும்,
மனதில் ஒரு மூலையில் ஏதோ நெருடியது.

சரி என்று கொஞ்சம் பின்புலத்தை விவரமாக
ஆராய ஆரம்பித்தால் –
அடேயப்பா –  முற்றிலும் வித்தியாசமான ஒரு
கோணம் கிடைக்கிறது ! பிறகு என் டெல்லி
நண்பர்களுடன் பேசிய பிறகு கிட்டத்தட்ட
உறுதியாகிறது !!

திரு ஆசார்யாவிற்கு இப்போது வயது கொஞ்சம்
தான் -78 முடிந்து 79 நடக்கிறது (!)
இன்னும் ஒரு விஷயம் – இவர் உண்மையில்
2 பதவிகளில் இருப்பதாகச் சொன்னது சரி இல்லை.
மொத்தம் 3 பதவிகள். ஆம் –
1)ஸ்பெஷல் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்
2)அட்வகேட் ஜெனரல்
3)மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும்
சட்டக் கமிஷன் உறுப்பினர்.

சாதாரணமாக ஆளும் கட்சிக்கு அனுசரணையாக
இருப்பவர்களைத் தான் சட்டக்கமிஷன் உறுப்பினராகவோ,
அட்வகேட் ஜெனரலாகவோ நியமிப்பது வழக்கம்.

இவர் அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டது
இது முதல் தடவை அல்ல –4வது தடவை.ஏற்கெனவே –
1989 (ஒரு வருட காலத்திற்கு),
1992 (இரண்டு வருட காலத்திற்கு),
2007 (ஒரு வருட காலத்திற்கு)ஆகிய காலங்களில்
அ.ஜெனரலாகப் பணியாற்றி இருக்கிறார்.

முதலில் ஒரு சின்ன உதாரணம்.
ஒரு ஆசிரியர், துவக்க காலத்தில் 8ஆம் வகுப்பிற்கு
பாடம் எடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
காலம் செல்லச் செல்ல, அவருக்கு வயது ஏறுகிறது.
அனுபவம் கூடுகிறது.
சீனியர் ஆசிரியர் ஆகிறார்.
பிற்பாடு தலைமை ஆசிரியராகவும் ஆகிறார். ஆனால் –
தலைமை ஆசிரியர் ஆன பிறகு கூட,
அவர் 8ஆம் வகுப்பிற்கு நான் தான்
பாடம் எடுப்பேன் என்று சொன்னால் –
எங்கோ உதைக்கவில்லை ?

சொ.கு.வழக்கில் இவர் விசேஷ அரசுத் தரப்பு
வழக்கறிஞராக கர்நாடக உயர்நீதி மன்றத்தால்
நியமிக்கப்பட்டது 2004ஆம் ஆண்டில்.
8 ஆண்டுகளுக்கு பிறகும்,
இவருக்கு வயதும், அனுபவமும், பதவியும் –
கூடிய பிறகும் –
அந்த வழக்கை நான் தான் தொடர்வேன்
அதற்காக அட்வகேட் ஜெனரல் பத்வியை
வேண்டுமானாலும் ராஜினாமா செய்யத் தயார்
என்றால் …. ?

செய்தியாளர் கூட்டத்தில் அவர் – மாநில அரசு
தன்னை இரண்டில் ஒரு பதவியை விட்டுக் கொடுக்கச்
சொல்கிறது என்று சொல்வது தான் சரியாக
இருந்திருக்கும்.

ஆனால் -பிஜேபி தலைமையின் வற்புறுத்தல்
காரணமாக, மாநில அரசு தன்னை ஒரு பதவியை
விட்டுக் கொடுக்கச் சொல்கிறது என்று கூறுகிறபோது
அங்கே அரசியல் தெரிகிறதே !

அட்வகேட் ஜெனரல் பதவி என்பது – இவருக்கும்,
மாநில அரசுக்கும் இடையேயான விவகாரம். இவர்
ஏன் பிஜேபி தலைமையை வம்புக்கு இழுக்கிறார் என்று
ஆராய்ந்தால் – நிறைய விஷயங்கள்
வெளியே வருகின்றன.

இவர் ஏற்கெனவே , வீரப்ப மொய்லி மூலமாக,
காங்கிரஸ் தலைமைக்கு மிக நெருக்கமானவர்.
தற்போதைய மத்திய அமைச்சரும்,
முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான வீரப்ப மொய்லி
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா லஞ்ச வழக்கில் சிக்கியபோது,
இவர் அவருக்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி விடுதலை
வாங்கித் தந்தார் – அந்த நெருக்கம் இப்போதும்
தொடருகிறது.

பல முறை, மத்திய அரசால் ஸ்பான்சர் செய்யப்பட்டு,
பல வெளிநாடுகளுக்கு  சுற்றுப் பயணம் செய்து
வந்திருக்கிறார்.

காவிரி நீர் வழக்கில், ட்ரைபியூனில்
கர்நாடக அரசின் சார்பாக வாதாடிய புண்ணியவான்
இவர் தான்.

மூன்று எஞ்ஜினீரிங் கல்லூரிகள் மற்றும் ஒரு சட்டக்
கல்லூரியை நடத்தும் பிஎம் எஸ் எஜுகேஷன் ட்ரஸ்ட்
என்கிற அமைப்பிற்கு இவர் தலைவர் !

இவர் மீது 2  பொது நலவழக்குகள் கர்நாடக
லோக் ஆயுக்தா கோர்ட்டிலும், உயர்நீதி மன்றத்திலும்
நிலுவையில் உள்ளன.

சொ.கு.வழக்கை
கடைசி வரை எடுத்துச்சென்று –
வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்கிற குறி (task)
இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம் !
அதன் காரணமாகவே அடவகேட் ஜெனரல்
பதவியையும் இவர் “தியாகம்” செய்ய
முன் வந்திருக்கலாம் !

ஒன்று -இவர் சொன்னது போல் பிஜேபி தலைமை
இதில் ஆர்வம் காட்டி இருக்கலாம். அதற்கும்
சாத்தியக் கூறுகள்  இருக்கின்றன

இரண்டுகாங்கிரஸ் தலைமையிலிருந்து கிடைத்த
வழிகாட்டுதல் காரணமாகவும், இருக்கலாம்.

இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம் !

என்னைக் கேட்டால் –
இரண்டுமே காரணமாக  இருக்கலாம் என்று தான்
சொல்வேன் !!!

பி.கு –
எந்த செய்தியையும்
“மேலோட்டமாக பார்க்காதே” –
என்று மீண்டும் ஒர் தடவை
எனக்கு மண்டையில் அடித்து
பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது
இந்த விவகாரம் ! அதற்காக  நான்
பி.வி.ஆசார்யாவிற்கு நன்றி சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறேன் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to தில்லு முல்லு – தில்லு முல்லு ! பி.வி.ஆசார்யா -அப்பாவி முகம் – ஆனால் பின்னால் இருப்பது …?

  1. யாத்ரிகன்'s avatar யாத்ரிகன் சொல்கிறார்:

    இந்த செய்திக்குப் பின்னால் இவ்வளவு
    அர்த்தங்களா ?
    நீதிமன்றங்களில் நீதிதேவதையின் கண்கள்
    கருப்புத் துணியால் மூடப்பட்டு,ஒரு சிலை
    இருக்கும் -பாரபட்சம் அற்ற நீதி அங்கே
    கிடைக்கும் என்கிற அர்த்தத்துடன்.
    ஆனால் இப்போது எனக்கு வேறு அர்த்தம்
    தோன்றுகிறது.
    அங்கே நிகழும் அவலங்களை காணச்சகிக்காமல்
    நீதி தேவதை தன் கண்களை மூடிக்கொண்டு
    விட்டதாக எண்ணத் தோன்றுகிறது.

    இந்த அரசியல்வாதிகள் எதையும் விட்டு வைக்க
    மாட்டார்கள் இந்த நாட்டில்.

  2. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    அம்மாடியோவ்,
    அப்பாவி முகத்திற்குப் பின்னால்
    இத்தனையா ?

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அனைத்து விவரங்களுக்கும் நன்றி.

    எல்லாரும் தில்லு முல்லுதான்..

    ஆனால் தான் செய்த ஒரு தில்லுமுல்லு வெளிப்படும்போது..

    ஜெயா “அது பொய்” என மறுப்பார்..

    கருணா “யார்தான் செய்யவில்லை” என மறைப்பார்

    மன்மோகன் முழிப்பார்

    அத்வானி வழிவார்

    ராம்தாஸ் முறைப்பார்

    ஆனால் இதை அறியவரும் வாக்காளர்களோ

    முதலில் மலைப்பர்.

    உடனே மறப்பர்.

  4. raj's avatar raj சொல்கிறார்:

    இது அருமையான பதிப்பு……
    இந்த கோணத்தில் பார்க்கவில்லை

  5. R.Gopalakrishnah's avatar R.Gopalakrishnah சொல்கிறார்:

    Dear Mr.K.M,
    Do you still think that this country will change in future. No, Sir, it will never.
    Or atleast I will not be alive to see such a change. So, good luck to you and
    the younger generation.
    R.Gopalakrishnan

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    Dear Shri.R.Gopalakrishnah,

    You are not alone Sir!

    M/s Obama,Hu Jintao and Manmohan singh had a meeting with the God and discussed the major problems which were affecting their nations..

    First Mr.Obama asked God,
    “Lord ! When USA would be free of all terrorists related problems?”
    God said,”In another 20 years!”
    On this, Mr.Obama started crying and said,
    “Oh Lord! I may not be there to witness that!”

    Then it was Mr.Hu Jintao ‘s turn..
    He asked God,
    “Lord ! When China would be able to contain its population explosion?”
    God said,”In another 40 years!”
    On this, Mr.Hu Jintao started crying and said,
    “Oh Lord! I may not be there to witness that!”

    Finally it was our sardar..
    He politely asked God,
    “Lord ! When India would be totally free from corruption?”
    On this The Lord started crying and said,
    “Manmohan! I would not be there to witness that!”

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    welcome Mr.Gopalakrishnan,

    Do you think – I am young ?
    Having already met with an attack,
    I am prepared for a smooth take off at any time !!

    Yet – Still I believe,
    whether we are there to witness or not –

    I am sure –
    one day –
    this country will change and
    come out from the clutches of
    these rotten politicians.

    with all best wishes,
    Kavirimainthan

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Dear friend Ganpat,

    I see your remarks now – after replying
    Mr. Gopalakrishnan.!

    You may laugh at me –
    Still -I feel – things will change one day
    I believe HIM !

    with all best wishes,
    Kavirimainthan

  9. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை.

    You shall live for hundred years!!.

    உங்கள் எண்ணம்(things will change one day) நிறைவேறினால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

    உங்களை பரிகசிக்க வேண்டும் என்ற சிந்தனையும் எனக்கு அணுவளவும் இல்லை.அது என் குணமும் இல்லை.

    இருப்பினும் உங்கள் மனதை என் பதிவு ஏதாவது தெரியாமல் கூட புண் படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    நம் ஜனநாயகம் மிக இளமையானது அது முதிர்ச்சி அடைய இன்னும் பல தலைமுறைகள் ஆகும்.சுருக்கமாக சொன்னால் இப்பொழுதுதான் சிப்பாய் கலகம் துவங்கி உள்ளது.நாம் அடையவேண்டியதோ இந்திய சுதந்திரம்.

    ஆனால் பல ஆண்டுகளுக்குப்பிறகு அந்த கோட்டை கட்டி,முடிக்கப்படும்போது அதில் ஏதோ ஒரு சுவற்றின், ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கல்லின பெயர் காவிரி மைந்தன் என இருக்கும்.ஐயம் வேண்டாம்.!!

    வாழ்த்துக்கள்.

  10. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் கண்பத்,

    என்னால் உங்கள் எண்ண ஓட்டங்களை ஓரளவு
    நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
    உங்கள் எழுத்தில் தவறாக எடுத்துக் கொள்ளும்படி
    எதுவும் இல்லை.

    நீங்கள் பின்னூட்டம் போடும் nature ஐ
    குறிப்பதற்காக you will laugh at me என்று
    சகஜமாகவே எழுதினேன் -அவ்வளவு தான்.

    தனித்தனியே சிந்தித்தாலும் –
    நம் எல்லாருக்குமே goal post ஒன்று தான் !
    “இந்த நாடு உருப்பட வேண்டும் ”

    உங்கள் நல்லெண்ணங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றி.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  11. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Mr.Ganpat & Mr.K.M,
    Presently I am in US for the past two months. I am really glad to have beautiful like minded and faceless people like you. By chance only, a couple of years back while was inUS I came to know of this site. From that day onwards till to-day,I am surfing this atleast 4 to 5 times reading the old issues. Mr.K.M .you have strong will power & Mr.Ganpath you have powerful
    sense of humour from head to foot. All the best Sirs..

  12. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    Thank you Shri.Gopalakrishnan for your kind words.
    Regards,
    Ganpat

  13. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Thanks a lot Mr.Gopalakrishnan.

    Wherever you may be – todays’ technology has brought
    us very close.

    Just imagine – the position even some 10 years ago ?

    I welcome you Mr.Gopalakrishnan – for putting your views also
    on this blog whenever you feel so.

    -with all best wishes,
    Kavirimainthan

    p.s.
    Mr. Ganpat is a gifted friend who was introduced
    to me only by this system !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.