கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி
விசித்திரமான சிந்தனைகள் ?
மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல
முடியவில்லை.
காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும்,
மலைக்குகைகளிலும் விலங்குகளைப் போல் சுற்றித்
திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம்
பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில்
நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே
பல்லாயிரம் ஆண்டுகளாயின.
கொஞ்சம் கொஞசமாக நாகரீகம் அடைந்து,
தனக்கென நிலம், நீர், இடம், பயிர், ஆடு மாடு
என்று சொத்து சேர்க்கத் துவங்கினான்.
யார் வேண்டுமானாலும் –
யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்
என்பது போய், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று
தனக்குப் பிடித்த ஆண் –
பெண்ணுடன் சேர்ந்து இருக்க ஆரம்பித்தார்கள்.
பெண்களைச் சொந்தம் கொண்டாடியதால் தான் –
உறவு முறை துவங்கியது.
கணவன் – மனைவி என்கிற உறவு தோன்றியதால்
தான், அப்பா-அம்மா, மகன், மகள் என்கிற
உறவுகள் தோன்றின.
மனிதன் தனியாக இருந்த வரை சுயநலவாதியாகவே
இருந்தான். பசி, தாகம், இருப்பு, பாதுகாப்பு –
எல்லாம் தன்னைப் பொறுத்ததாக,
தனக்கென்று மட்டுமே தேடினான்.
அவனுக்கென்று ஒரு பெண் துணை வந்த பிறகு
தான் அவளுக்காகவும் சேர்த்து தேட ஆரம்பித்தான்,
அவளுக்காகவும் சேர்த்து உழைக்க ஆரம்பித்தான்.
அவர்களுக்கு சொந்தமாக குழந்தைகள் பிறந்தவுடன்
அந்த குழந்தைகளுக்காகவும் சேர்த்து
உழைக்க ஆரம்பித்தான். மனைவியையும்,
குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பையும்
சேர்த்து ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.
தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்த
சுயநலவாதியாக இருந்த மனிதன் தனக்கென்று
ஒரு குடும்பம் ஏற்பட்ட பிறகு தான் மற்றவர்களுக்காகவும் –
கவலைப்பட ஆரம்பித்தான்.
சுயநலத்திலிருந்து – பொது நலம் பிறந்ததே
குடும்பம் என்று ஒன்று வந்ததால் தான்.
மனைவி, குழந்தைகள் வந்தவுடன், அவர்களின்
பாதுகாப்பிற்கான வழிமுறைகளைத் தேட ஆரம்பித்தான்.
கூட்டமாக, குழுக்களாக வசிக்க ஆரம்பித்தார்கள்.
கிராமங்கள் தோன்றின. அவர்கள் தங்கள்
பொதுநலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்
சில சட்ட திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும்
ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களாகவே முன்வந்து
உருவாக்கிக் கொண்ட, ஏற்றுக் கொண்ட,
கட்டுப்பாடுகள் அவை.
ஒரே மாதிரி பழக்க வழக்கங்கள் உடைய
குடும்பங்களிடையே பெண் கொடுத்து பெண்
வாங்கும் திருமண பந்தங்களும், சமூகங்களும்
ஏற்பட்டன. திருமணம் செய்யக்கூடைய உறவுகள்
எவை -செய்யக்கூடாத உறவுமுறைகள் எவை என்று
தீர்மானிக்கப்பட்டன. அத்தை, மாமன், சித்தி,
சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மைத்துனன்,
மைத்துனி – பங்காளி உறவுமுறைகள்
எல்லாம் ஏற்பட்டன.
நாகரீகம் வளர்ந்தது. சமுதாய முன்னேற்றங்கள்
ஏற்பட்டன. பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர
ஆரம்பித்தது.
பல தார வழக்கம் தொலந்தது.
அறியாப்பருவத்திலேயே “பால்ய விவாகம்”
செய்யும் பழக்கம் தொலைந்தது.
விதவைகள் மறுமணம செய்வது சகஜமாக
ஏற்கப்பட்டது.
பெண்களுக்கு கல்வி அவசியம் என்று உணரப்பட்டது.
பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் நிறைய
உண்டாயின. திருமணத்தில் ஆண்களின்
விருப்பத்தை அறிவது போல் பெண்களின்
விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க
ஆரம்பிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத சமயங்களில்,
திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெற –
விவாகரத்து முறையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு நாளுக்கு நாள் சமுதாய அமைப்பு
மேலும் மேலும் வலுப்பெறும் விதத்தில்,
வாழ்க்கை முறைகள் உருவெடுத்து, மனிதன்
அமைதியாகவும், உறவுகளுடன் சந்தோஷமாகவும்
வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்
இந்த காலத்தில் –
சமூகம் இன்னும் மேம்பாடு அடைவதற்கான வழியை
யோசிக்காமல் – விரும்பும் வகையில்
“செக்ஸ்” அனுபவிப்பது ஒன்று தான் வாழ்க்கையின்
ஒரே குறிக்கோள் என்பது போல் யோசித்தால் அதை
வக்கிர சிந்தனை என்று சொல்லாமல் வேறு
என்னவென்று சொல்வது ?
நடிகர் கமலஹாசன் மட்டும் அவ்வப்போது –
விசித்திரமான சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் அவர் டெல்லியிலிருந்து
இயங்கும் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் –
திருமணம் என்கிற உறவையே தான் ஏற்றுக்
கொள்வதில்லை என்றும் அது ஒரு தேவையில்லாத
பந்தம் என்றும் கூறி இருக்கிறார்.
தங்களுக்குப் பிடித்த ஆணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வதற்கு யாருடைய அனுமதியோ,
எந்தவித கட்டுப்பாடோ தேவை இல்லை என்பதே
தன் கருத்து என்று கூறி இருக்கிறார்.
பேட்டியாளர் – இருந்தாலும் 2 முறை நீங்கள்
திருமணம் செய்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு-
“மற்றவர்களைத் திருப்தி செய்வதற்காக நான் செய்த
மடத்தனமான காரியம் அது.
ஆனால் இதை செய்தால் அன்றி அவர்கள் என் உறவை
ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் நான் திருமணம் செய்து கொண்டது
அவர்கள் எனக்கு தேவை என்பதற்காக நான்
செய்துகொண்ட ஒரு சமரசம் தான்”
“திருமண உறவு என்பது தொன்று தொட்டு வந்த
பழங்காலத்து வழக்கம். உன் திருமணம் தோல்வி
அடைந்து விட்டதால் ஏன் திருமணத்தையே
குறை கூறுகிறாய் என்று கேட்பவர்களுக்கு
நான் கூறிக்கொள்வேன் –
திருமணம் பழமையான முறையும் அல்ல –
பலமான உறவும் அல்ல.”
இந்த சிந்தனையில், பேச்சில் – எவ்வளவு வக்கிரம்
தெரிகிறது பாருங்கள்.
“திருமணம் என்கிற சடங்கை செய்யாவிட்டால்
அந்த பெண்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள்
என்பதால் 2 முறை திருமணம் செய்து கொண்டேன் ”
என்று கூறுகிறார். அதாவது இவருக்கு நம்பிக்கை
இல்லாவிட்டாலும், தான் விரும்பியதை அடைய
தனக்கு நம்பிக்கை இல்லாத காரியத்தை
செய்திருக்கிறார்.
திருமணம் பழமையான முறையும் அல்ல –
பலமான உறவும் அல்ல என்றும் கூறுகிறார்.
திருமணம் பழமையான முறை அல்ல என்று கூறுவது
எவ்வளவு தவறோ அதே அளவு தவறு தான்
பலமான உறவு அல்ல என்று கூறுவதும்.
இவரைப் போல் – நம்பிக்கை இல்லாமல்,
சுயநலத்திற்காக அதை ஒரு சடங்காகச்
செய்பவர்களுக்கு
அது பலமான உறவு அல்ல தான்.
மற்றபடி இந்த நாட்டில் 99.9 % பேர் அதை
ஒரு வலுவான, அவசியமான, பந்தமாகக் கருதி
நம்பிக்கையுடன் தான் ஏற்றுக்கொள்கிறார்கள்.
முக்கியமாக, பெண்கள் இதை மிகவும் பாதுகாப்பான
வாழ்க்கை முறையாகவே கருதுகிறார்கள்.
திருமண பந்தம் இல்லை என்றால் –
பிறகு சமுதாயத்தில் உறவு முறைகளுக்கு பாதுகாப்பு
எப்படி இருக்கும் ?
யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும்,
எந்தவித பந்தமும் இல்லாமல் விரும்பும்போது
சேர்ந்து வாழலாம். விரும்பாத போது பிரிந்து வேறு
யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்
என்றால் –
அதன் பின் விளைவுகளுக்கு இவர் கூறும் தீர்வு என்ன ?
பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு யார்
பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் ?
ஆண்களால் குழந்தைகளை
வளர்க்க முடியுமா ?
இல்லை – பிரிந்த பிறகு பெண் மட்டும் தனியாக
எப்படி குழந்தைகளை வளர்ப்பாள் ?
குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம், எதிர்காலம்
எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பு ?
குழந்தைகளை அப்படியே அநாதைகளாக
விட்டு விடலாமா ?
பொருளாதாரம் ஒரு முக்கியமான பிரச்சினை என்றாலும்,
குழந்தைகளுடன் வரும் பெண்ணை வேறு ஆண்
மகிழ்வுடன் ஏற்பானா ?
இப்படி எவ்வளவு முறை மாறி மாறி வாழ முடியும் ?
எத்தனை வயது வரை இப்படி வாழ முடியும் ?
45-50 வயதான பிறகு ?
யார் துணை சேரத்தயாராக இருப்பார்கள் ?
பின் – முதுமையில், தனிமை தான் வாழ்க்கையா ?
கணவன், மனைவி, அப்பா, அம்மா, மாமனார்,
மாமியார், அத்தை, மாமன், மைத்துனன், மைத்துனி
போன்ற உறவுமுறைகள் எல்லாம் காணாமல் போக
வேண்டியது தானா ? குடும்ப வாழ்வு தேவை இல்லாத
ஒன்றா ?
இவர் சொல்லும் ஆலோசனையைக் கேட்கப்போவதால்
கிடைக்கப் போகும் பயன் என்ன ?
(free sex என்பதைத் தவிர ?)
இதுகுறித்து முன்பொரு முறை நான் வலையில் எழுதினேன்.
பிறகு அவருக்கே கூட ஒரு மடல் எழுதினேன். பதில்
ஏதும் இல்லை.பதில் பெறும் அளவிற்கு நான் பெரிய
மனிதன் அல்ல. ஆனால், அவர் சொன்ன கருத்து
விவாதத்திற்கு வரும்போது – மேற்கொண்டு விளக்கம்
அளிப்பது அவர் கடமை, பொறுப்பு.
அண்மையில், இவரது அண்ணனாகப் பட்ட
(80 வயதைக் கடந்த ) திருவாளர்
சாருஹாசன் அவர்கள் கூட இதே போல் பேசியதே
இந்த இடுகையை எழுத என்னைத் தூண்டியது.
புகழ் பெற்ற மனிதர்களில் –
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் சிறப்பான
திறமை இருக்கும்.
எவ்வளவோ துறைகளில் –
எதாவது ஒன்றில் !
அபூர்வமாக வெகு சிலருக்கு –
ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளிலும் கூட.
கமலஹாசன் ஒரு நல்ல கலைஞர்.
அவர் சார்ந்த துறையில் அவருக்கு நிறைய
அனுபவம் இருக்கிறது. அது பற்றிய விஷயங்களில்
அபிப்பிராயம் கூற நல்ல தகுதியும்
இருக்கிறது.
ஆனால் –
சமுதாயத்தைப் பற்றி, பல்லாயிரம் ஆண்டுகளாக
மக்கள் வாழ்ந்து வரும் முறையை பற்றி –
ஒருவர், முற்றிலும் விரோதமான,
எதிர்மறையான கருத்து
ஒன்றைக் கூறும்போது –
அதை சமூகத்திற்கு பரிந்துரை செய்ய தனக்கு
என்ன தகுதி இருக்கிறது என்று யோசிக்க வேண்டாமா ?
எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவதற்கோ,
புகழ்வதற்கோ – எந்தவித விசேஷ தகுதியும்
வேண்டியதில்லை.
ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக
நடைமுறையில் இருந்து வரும் சமுதாய
வழிமுறைகளைக் குறை சொல்வது என்றால் –
அதற்கான சில தகுதிகள் அவசியம் தேவை.
குறைந்த பட்சம் தான் அதை ஏன் குறை கூறுகிறோம்,
எதனால் அதை குறை என்று கருதுகிறோம்,
அவற்றைப் போக்குவதற்கான மாற்று வழிகள் என்ன
என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். தான் கூறும்
யோசனைகளையொட்டி எழும் கேள்விகளுக்கு
பதில் அளிக்கவும், விவாதங்களில் கலந்து
கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
அவரது பேட்டியைத் தொடர்ந்து எழுப்பப்படும்
கேள்விகளுக்கு கமலஹாசன் விளக்கம் அளிக்க
முன் வர வேண்டும் – அது தான் நேர்மையான
அணுகுமுறை.
————————————————————————
இதை அடுத்து நான் அண்மையில் பார்க்க நேரிட்ட
ஒரு விளம்பரத்தை அப்படியே எடுத்து கீழே போடுகிறேன்.
நான் இதைப்பற்றி விமரிசனம் எதுவும் எழுதப்
போவதில்லை.
இந்த ரியல் எஸ்டேட் பிசினஸை செய்வது
கமலஹாசனா அல்லது அவரது பெயரைப் பயன்படுத்திக்
கொண்டு வேறு கம்பெனிகள் எதாவது செய்கின்றனவா
என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது
பெரிய அண்ணன் சாருஹாசன்
இந்த விளம்பரத்தில் அடிக்கடி பங்கெடுக்கிறார்.
இதில் உள்ள வாசகங்கள் அத்தனையும்
அப்படியே விளம்பரத்தில் வந்துள்ளன –
(இதில் targeted prospective buyers –
என்று விளம்பரதாரர்கள் எதிர்பார்ப்பது –
கமலஹாசனின் ரசிகர்களைத் தான். அந்த ரசிகர்களைப்
பற்றி அவர்கள் எந்த அளவிற்கு எடை போட்டிருக்கிறார்கள்
என்பது விளம்பர வாசகங்களைப் பாரத்தால் விளங்கும் !)
Madras City Properties.com
presents Dr. Kamal Haasan Highway City
Madras City Properties.com உங்கள்
முதலீட்டின்சிறந்த நண்பன்
நம்ம Madras City Properties.com
பெருமையுடன்வழங்கும் Dr. Kamal Haasan
Highway City,
திண்டிவனம்.
நம்ம கமல் ஹாசன் Sir க்கு உலகம்
முழுவதும் fans
இருப்பதால்தான்
அவருக்கு உலக நாயகன் என்கிற பட்டத்தை
குடுத்திருகாங்க , உலகம் முழுக்க போற்றபடும்
கமல் sir க்கு Madras City Properties.com
கோடிகணக்கான Fans சார்பாக இவங்களோட
அடுத்த landmark
project எ dedicate
பண்ணிருக்காங்க. …..
…..Dr . Kamal Haasan Highway City,
அவருக்காக அவருடைய 50 வருட
திரைவாழ்க்கைக்கும், சமுக
சேவைக்கும்
நம்ம MCP.com ஓட tribute. இது மட்டும்
இல்லைங்க இந்த Kamal Haasan Highway
City ல
இருக்கிற streets எல்லாம் நம்ம kamal sir
அவரோட success
க்கு காரணமாக இருந்தவங்களுகும்.
இப்போ இருக்கிறவர்களுக்கும்
dedicate பண்ணி இருக்காரு.
திர. கமல் Sir dedicate பன்னிர்க்ரவங்க்ள
சில பெர்யர்கள்
1. சிவாஜி கணேசன்
2. கே.பாலசந்தர்
3. பாலமுரளிக்ருஷ்ணா
4. ஸ்ருதி ஹாசன்
5. crazy மோகன்
6. எ.வி மெய்யப்பன்
7. கௌதமி
8. அக்ஷரா ஹாசன்
9. ஆர். சி. ஷக்தி
10. எல். வி பிரசாத்
11. சுப்பலக்ஷ்மி ஹாசன்
12. கே தங்கப்பன்
13. D. ஸ்ரீனிவாசன்
14. ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன்
15. சாரு ஹாசன்
16. சந்திர ஹாசன்
17. நளினி ரகு
18. தஞ்சை நடராஜன்
19. அனந்து
20. K தங்கப்பன்
Dr. kamal Haasan Highway City
இது சென்னையிலிருந்து Pondicherry
செல்லும் National
Highway இல்
அமைந்து உள்ளது .இங்க ஒரு Sq. Ft. ஓட
விலை வெறும் Rs. 175/ -மட்டுமே.
நம்ம site க்கு பக்கதில உள்ள ஊர்கள் நு
பார்த்தால்
Pondycherry, Thiruvannamalai,
Kanchipuram,
VIllupuram, Marakanam மற்றும் Cuddalore.
இங்கிருந்து
pondycherryபக்கத்திலேயே இருப்பதால்
basic facilities, அதாவதுschools,
colleges,
hospitals,banks, supermarkets,
transport
facilities,
வேலை வாய்ப்புகள் எதையுமே நினைச்சுகவலை பட
வேண்டியது
இல்லை.
இது chennai to pondy செல்லும்
national highway ல இருப்பது மட்டும்இல்லாம
tourist
spot ஆன,
pondicherryum மற்றும் கோவில் நகரமான
திருவண்ணாமலையும்
அருகில்இருப்பதால் இங்க land ஓட
appreciation valueஉயர்ந்துகிட்டு இருப்பதை
கண்கூடாக பார்க்கலாம்.
……. இந்த Madras Recreation Club,
RCI என்கிற ஒரு organisation ஓட
tie-up பண்ணியிருக்காங்க . இதனால
இவங்க 4500 resorts
ல 100 countries ல
30 years க்கு holiday facilities
பண்ணி தராங்க.
இந்த offer அ நீங்க foreign trips
இல்ல domestic
holidays
plan பண்றப்ப ரொம்ப useful ஆ இருக்கும்.
உங்கள் முதலீட்டின் சிறந்த நண்பன் Madras
City Properties.Com உங்களோட
investment safe & Secure எஇருக்கணும் நா
Madras City
Properties.com ஓட இந்தlandmark
project ல
invest பண்ணுங்க.





///ஒருவர், முற்றிலும் விரோதமான,
எதிர்மறையான கருத்து
ஒன்றைக் கூறும்போது –
அதை சமூகத்திற்கு பரிந்துரை செய்ய தனக்கு
என்ன தகுதி இருக்கிறது என்று யோசிக்க வேண்டாமா ?///
சரியான கேள்வி கேட்டிர்கள். நடிகரை நடிகராக பார்க்காமல் ஆலோசனை வழங்கும் அறிவு ஜீவியாக பார்ப்பது நமது தவறு. அவர்களும் அதே போல நினைத்து கொள்வதும் வேடிக்கையானது.
Sir, Idhu avaroda thanipatta karuthu,idha thappunu sola namaku enna rights iruku?
ipdidhaan seyanumnu avar yaarukum solaliyae….adha pathi thanaku ulaa enangala solirukaaru..avar solradhu unga sentimentsa baathikra maadri,neenga solrathu avar sentimentsa baathikaadha?
//மனிதன் தனியாக இருந்த வரை சுயநலவாதியாகவே
இருந்தான். பசி, தாகம், இருப்பு, பாதுகாப்பு –
எல்லாம் தன்னைப் பொறுத்ததாக,
தனக்கென்று மட்டுமே தேடினான்.//
இது சரியல்லன்னு நினைக்கிறேன். மனிதர்கள் கூட்டமாக தான் வாழ்ந்திருக்க முடியும். தனி வாழ்கை கற்காலத்தில் சாத்தியமே இல்லை.
இப்ப வேண்ணா எதாவது வேலைக்கு போய், தனி அப்பர்மெண்டில் தங்கிகொண்டு, பணத்தை வங்கியில் வைத்து ஓட்டலில் சாப்பிட்டு..தனி வாழ்க்கை சாத்தியம்.
அப்போ தனியா தூங்கினா புலிக்கு சாப்பாடகவேண்டியது தான்.
உறவு, குடும்பம்னு இல்லாமல் இருந்தாலும் தனிவாழ்கை அந்த காலத்தில் சாத்தியம் இல்லை.
ஒரு வகையில் திருமணம் பற்றி கமல் சொன்னது சரிதான். ஆனால் . திருமணத்தில் நம்பிக்கை இருக்கும் பெண்ணை , திருமணத்தை தானும் ஏற்றுக்கொள்வதாக காட்டி திருமணம் செய்து அனுபவிப்பது சுத்தமான 420, கிரிமினல் குற்றம்.
கமல் சொன்னது நீண்டகால அளவில் சரியான விஷயம். எதிர்காலத்தில் திருமணம் வழக்கொழிந்து போகும் அந்தகாலத்தை பார்க்க நாம் இந்த உடலில் இருக்க மாட்டோம்.
திருமணம் பந்தம் குடும்பத்தை சமுதாயத்தின் மிக சிறிய கூறாக கட்டுகிறது. ஆனால் குடும்பம் என்பது எதற்காக?
ஆண் தான் சொத்து வேறுயாருக்கும் போக கூடாது என்பதற்காகதான் , இதில் தெய்வீகம், சொர்க்கம் என்பது எல்லாம் கப்சா.
திருமணம் ஒருவகையில் பெண்கள்க்கு பாதுகாப்பு என்றாலும் அதற்கு பெண்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். உண்மையிலேயே குழுவாழ்க்கை முறைதான் பெண்களுக்கு குடும்பத்தை விடவும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
///கணவன், மனைவி, அப்பா, அம்மா, மாமனார்,
மாமியார், அத்தை, மாமன், மைத்துனன், மைத்துனி
போன்ற உறவுமுறைகள் எல்லாம் காணாமல் போக
வேண்டியது தானா ? குடும்ப வாழ்வு தேவை இல்லாத
ஒன்றா ?
உங்களுக்கு இப்ப இருக்கும் நம் சூழல் பழகி விட்டதால் இது பெரிய விஷயமாக தெரிகிறது.. ஒரெ கணவனை மணந்த பெண்களை பார்த்திருப்பீர்கள். ஒரே மணைவியை பல கணவர்கள் மணப்பதை ஏற்றுகொள்வீர்களா?
ஆனால் நமது நாட்டில் இப்போதும் நடைமுறையில் இருக்குப்பது தான் இது பார்க்க. http://tinyurl.com/77fynup
திருமணம் காலவதியாகும்போது அதற்கு முன்னால் சொத்துடைமைமுறைகாலவதியாகி இருக்கும்.
இவர் சொல்லும் ஆலோசனையைக் கேட்கப்போவதால்
கிடைக்கப் போகும் பயன் என்ன ?
(free sex என்பதைத் தவிர ?)///
திருமணம் இல்லைன்ன செக்ஸ் இப்போ இருப்பதை விடவும் சிரமாமான விஷயமாக இருக்கும். ஆண்களின் பாடு இதில் ரொம்பவும் சிரமம் தான். திருமணம் இருப்பதால் கல்லானலும் கணவன் ன்னு பெண்கள் போக வேண்டி இருக்கு. யாரும் யாருடனும் இருக்கலாம்னா , குடிகாரன், நோஞ்சான், வேலையில்லாதவன் இவர்கள்க்கு துணையாக பெண்கள் இருப்பார்களா?.ஆண்கள் பல தடைகளை தாண்டினால் தன் பெண் கிடைப்பது சாத்தியம்…பெண்களுக்கு பெண்ணாக இருந்தாலே போதும். அதே சமயம் உடல்வலு, அறிவு , இருப்பவர்களூக்கு முதலிலேயே பல துணைகள் இருப்பர்கள். அப்படிபட்டவர்கள் வேண்டும் நினைக்கும் ஆண்/பெண் பலதுணைவரில் ஒருவராக இருக்கவேண்டும், அதற்கு மற்ற துணைவர்களும் ஒப்பு கொள்ள வேண்டும்.
வடிவேல் ஒரு படத்தில் கல்யாண சுந்திரம் என திருமணத்துக்கு காத்திருந்து வெளிநாட்டு பெண்ணை மணக்கும்போது, கூட 4 பேர் வந்து இவர்களும் கணவர்கள் தான் என சொல்வரே அதெபோல்…
ரம்யா
நான் என் மனைவியுடைய தாயை வைத்துக்கொள்கிறேன்
நான் என் மகளை வைத்துக்கொள்கிறேன்
இப்படி சொன்னால் நீங்க என்ன சொல்வீங்க?
# 1 “அது அவருடைய செண்டிமென்ட்”
# 2 “அட சீ… நாய் பொழைப்பு”
உலக நாயகன் சொல்வது என்னை பொருத்தவரை #2 ரகம்.
உங்களை பொருத்தவரை #1 என்றால்
நான் மேலே குறிப்பிட்டது போல நடந்தால் …..
அய்யோ பயமாக உள்ளது நினைக்கவே!!!
நாம் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்கிறோம் என்பதில் உள்ளது நம் பிறப்பின் பயன்.
@Ramya…
கமல்ஹாசன் எனும் யாரோ ஒருவர் இப்படி “பொன்மொழி”களை உதிர்த்தார் என்றால் அதை நீங்கள் சொல்வதுபோல அலட்சியப்படுத்திவிடலாம்.
ஆனால் இந்த கமல்ஹாசன் அகில இந்திய அளவில்
ஒரு புகழ் பெற்ற திரைப்பட கலைஞர்.
அவருக்கென்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அவர்களில் பலர் இளைஞர்கள்.
இவர்களில் ஒரு சிலராவது,
“எங்க தலிவர் வலி நடப்போம்”
என முடிவு செய்தால்,
நாடு என்ன ஆவது?
எனவேதான் நண்பர் கா.மை.பொறுப்பாக
இதை கண்டித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு வாழும் வள்ளுவர்,
வீட்டை நிர்வகிக்க மனைவி,
வெளியில் கூட்டிபோக துணைவி,
சமைத்துபோட உணவி,
படுக்கைக்கு இணைவி,
சொத்து பத்துகளை கவனித்துக்கொள்ள பணவி
என்று வைத்துக்கொள்வதில் தவறில்லை என
ஒரு நவீன தொல்காப்பிய இலக்கணம் வகுத்துள்ளார்!
போதாக்குறைக்கு இப்படி
கமல் சாரு,
நித்யானந்தா சாரு,
சாரு ஹாசன் ,
சாரு நிவேதிதா
போன்ற பண்பாளர்கள் வேறு
அவ்வப்போது மனித குலத்தை
வழி நடத்தி செல்லும் பணியையும்
செய்கிறார்கள்.
ஏதோ ஒரு மூலையில் கா.மை சாரின் குரலும் ஒலிக்கட்டும், தாயே!
பி.கு:நிறைய space கொடுத்து டைப் செய்திருப்பதால் இதை கவிதை என நினைத்துவிடவேண்டாம்! :-))
@சைதை அஜீஸ்
Sir, Enakkum avar solra karuthula udanpaadu kedayathu.Avaruku saarba sonaa avar karuthayum aadharikrenu kedayathu.Avar endha context la apdi pesinarun-garhtu mukiyam ilaya? Oru nadigana interview panra timela, avaroda thanipaata karuthukala solirukaaru..Namaku avar karuthu othu varlanaa,adha pathi pesave theva ilayae? Pidikatha ona pethi edhuku pesanum. Oru pathivu odra alavuku idhu worth ilaatha matter
Kamalhaasan city pathi soneengala,adhu naalu peruku vizhipunarvu varum..Idhuku pinaadi unmaiyulmae avar involve aayirukaaranu yosichu property vaanguvaanga. But avar thanipatha karuthukala pathi discuss pana vendiya avasiyam namaku ila.
Mr. Kamal has many times told NOT to follow him and it is his private life. Only because of his popularity this has attention. Can any body deny there is no such behaviour in any of our known ordinary persons?. We pay for our entertainment by his ACT & may feel proud of his Multiple Acts from a Tamilian. That is all.He did not call you to follow. It is the Press , for their survival , asking these questions
Kudumbathudan iruppavarkalukku athan arumai theriyum.
Kazhuthaikku theriyuma karpoora vasanai?
ஐயா, இது உங்கள் இடுக்கையில் கூற வந்த முக்கிய கருத்துக்கு தொடர்பு இல்லாவிடினும், “மனித குலம் தோன்றி…” என்று உங்கள் இடுக்கை ஆரம்பித்திருப்பததால் எழுதுகிறேன். ஆரம்ப கூட்டு மனித வாழக்கை காலங்களில் சமூகம் – பெண் ஆதிக்க, பெண்ணை தலைமையாக கொண்ட குழுக்களாக வாழ்ந்ததாக – அதாவது பெண் தலைமை விரும்பும் போது ‘சேவை’ செய்ய பல ஆண்கள் இருந்ததாகவும் இது காலப் போக்கில் ஆண்களில் சமயோசிதத்தால் (சூழ்ச்சியால்) தலை கீழாக மாறியதாகவும் தற்போது உள்ளது போல் ஆண்களை தலைமையாக கொண்டு மாறியதாக படித்ததாக ஞாபகம். இது தவறாக இருப்பின் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
ஏங்க… நீங்க பெரியார படிச்சிருக்கிங்களா…. படிச்சா கமல குத்தம் சொல்ல மாட்டிங்க… பெரியாரும் கிட்டத்தட்ட இதே கருத்த சொல்றார்… எந்த விசயமும் எந்த பண்பாட்டு செயல்முறைகளும் மாறத்தான் செய்யும் கமல் சொல்வது இந்தக் காலத்துக்கு வேணும்னா சரிவராம போகலாம் ஆனால் வரும் காலங்களில்… அத நீங்களோ நானோ கமலோ முடிவு பண்ண முடியாது … கால தேச வர்த்தமானத்தை அனுசரிச்சு அந்தப் பண்பாடும் மாறக்கூடியது… பெரிய கட்டுரை எழுதும் முன் பெரியாரையும் படிச்சுட்டு எழுதணும்….
Ur writeup is good & valid too
Kamal is not sincere to his family & the producers. Recall Kalaipuli Dhanu’s production
People like Mr.Kamal hasan will never attain mental maturity even after they reach 100 years of age One such.Example from his own family is Mr.
Charuhasan. These people think that because they are popular among the population, people will take it for granted anything they say. These people are called ‘idotic momgoloid’ eventhough their appearance doesn’t look like that. But definitely, their mental make up is very shabby and awkward.
வக்கிர புத்திக்காரர்கள் எப்போதுமே தங்கள் செயல்களுக்கு
நியாயம் கற்பிக்க கையாளும் தகிடுதத்த பேச்சைத்தான்
உலக நாயகனும் (முதலில் இவர் உள்ளுரிலே நாயகனா?)
கைக்கொன்டுள்ளார்.
புகழ் வெளிச்சத்திலே இருக்கிற ஒரே காரணத்தினால் தான்
இம்மாதிரி மனிதர்களை மீடியாக்கள் பயன்படுத்திக்
கொள்கின்றன.
இவரை பிரிந்த பின் வாணி (கணபதி)யும், சரிகாவும் இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வதாக தகவல்கள் இல்லை. கலைத்துறையில் இருந்தவர்கள் ஆனாலும், இன்னொருவருடன் சேர்ந்து வாழத் துணியவில்லை. ஆனால்,
இவர்?
ஒன்னு கெட்டு, இரண்டு கெட்டு…. மூன்றாவதாக, (தாலியும்) வாழ்வும் ஒரு பிள்ளையையும் கொடுத்தவனை விட்டு விலகி வந்தவளோடு வாழ்ந்து (?!) கொண்டு இருக்கிறார். தனது பிள்ளைகளை எவ்விதம் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் என்பதை (தமிழ்) நாடறியும்.
தன்னை ஓர் பகுத்தறிவுவாதியாகவும், இறை நம்பிக்கை இல்லாதவராகவும், சமூகத்திலே பெருவாரியான மக்களால்
பின்பற்றப்படுகிற விஷயங்களை, போதுமான அறிவும் ஆதாரமும் இல்லாமல், மறுப்பவராகவும் இருக்கின்ற இவர் தான் இவர் தான் தமிழனுக்கு பொங்கலுக்கும், புத்தாண்டுக்கும் தொலைக்காட்சிகளிலே வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறார். என்ன செய்ய?
dr kamal haasan highway city கருப்பு வெள்ளையாகும் திட்டமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக, தாங்கள் இரண்டு இடுகைகள் போட்டு (தங்கள்) நேரத்தை வீனாக்கிவிட்டீர்கள்.
கமலஹாசனின் கருத்தை ஆதரித்து
மறுமொழி எழுதிய நண்பர்களுக்கு –
இது கமலஹாசனின் தனிப்பட்ட கொள்கை/
லட்சியம்/கருத்து – என்று சொல்பவர்களுக்கு –
கமலஹாசன் பேட்டி கண்டவரிடம் “இது என்
தனிப்பட்ட வாழ்க்கை.இது பற்றி நான்
பொதுவில் விவாதிக்க விரும்பவில்லை” என்று
சொல்லி இருந்தால், நாம் அதைப்பற்றி
பேசவே வேண்டாம்.
எப்போது அவர் ஒரு தேசிய தொலைக்காட்சி
பேட்டியில் தன் கருத்தைக் கூறுகிறாரோ –
“திருமண முறை பழமையானதும் அல்ல –
பலமான உறவும் அல்ல ” என்று கூறுகிறாரோ
அப்போது அது விவாதத்திற்குரிய பொருளாகி
விடுகிறது.
மேலும்,இடுகையில் நான் கீழ்க்கண்ட
அடிப்படையான வினாக்களை எழுப்பி இருந்தேன்.
கமலஹாசனின் கருத்தை ஆமோதிப்பவர்கள்
அவற்றைப்பற்றியும் கருத்து வெளியிட்டால்,
இதை மேற்கொண்டு விவாதிக்க வசதியாக
இருக்கும்.
1) பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு யார்
பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் ?
2) ஆண்களால் குழந்தைகளை
வளர்க்க முடியுமா ?
3) இல்லை – பிரிந்த பிறகு பெண் மட்டும் தனியாக
எப்படி குழந்தைகளை வளர்ப்பாள் ?
4) குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம், எதிர்காலம்
எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பு ?
5) குழந்தைகளை அப்படியே அநாதைகளாக
விட்டு விடலாமா ?
6) பொருளாதாரம் ஒரு முக்கியமான பிரச்சினை
என்றாலும், குழந்தைகளுடன் வரும் பெண்ணை
வேறு ஆண் மகிழ்வுடன் ஏற்பானா ?
7) இப்படி எவ்வளவு முறை மாறி மாறி
வாழ முடியும் ?
எத்தனை வயது வரை இப்படி வாழ முடியும் ?
8) 45-50 வயதான பிறகு ?
யார் துணை சேரத்தயாராக இருப்பார்கள் ?
9)பின் – முதுமையில், தனிமை தான்
வாழ்க்கையா ? இது தேவையா ?
10) இப்போது இருக்கும் நடைமுறைகளை விட –
அவர் சொல்லும்
புதிய முறை எந்த விதத்தில் சிறந்தது ?
(நண்பர் ஆர்.நாகராஜ் அவர்கள் கவனத்திற்கு –
என்னுடைய சுய அறிமுகத்திலேயே நான் சொல்லி
இருக்கிறேன் – எனக்குப் பிடித்தவர்கள் பாரதியும்,
பெரியாரும் என்று. அப்படி இருக்கையில் பெரியாரைப்
படிக்காமல் இருப்பேனா ?
பெரியார் – திருமணம் என்பதற்கு பதிலாக வாழ்க்கை
ஒப்பந்தம் என்று சொன்னார். அது அவசியம் இல்லை
என்றால் 76 வயதில் அவர் ஏன் திருமணம் செய்கிறார் ?
அவர் சொன்னதன் கருத்து – திருமணம் என்கிற
உறவைச்சொல்லி பெண்களை அடிமைப் படுத்தக் கூடாது
என்பது தான்.
மேலும் –
பெரியார் சொன்னதிலும், ஏற்க முடியாத கருத்துக்கள்,
நடைமுறைக்கு ஒத்து வராத கருத்துக்கள் எவ்வளவோ
உள்ளன. பெரியார் சொன்னது அத்தனையையும் நாம்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லையே.)
மற்றுமொரு விஷயம் –
அவரது டாக்டர் கமல்ஹாசன் ஹைவேசிட்டி ப்ராஜக்ட்
பற்றியும், அவர் தன் வாழ்க்கையில் முக்கிய இடம்
பெற்ற 20 பேர்களின் பெயர்களை தெருக்களுக்கு
வைத்தது பற்றியும் ஏன் யாருமே கருத்து சொல்ல
மாட்டேன் என்கிறீர்கள் ?
இதுவும் அவரது “பெர்சனல் மேட்டரா” ?
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
Please do not take two three issues from a single point and disscuss, as the esssay becomes ess…..ay and makes tough to read.
Iam with you with the second part of the essay, that is on kamalhasan highway city issue. But as of the first part it is the view of The Great Periyar.
Mathivanan.V
I would suggest you to read Periyar properly or please get it known from known persons or leaders. This marriage sustem itself is against communism and leads to protect property in which women were also considered as property of men. Please understand Periyar properly and then talk or even comment against periyar. No body told Periyar should not be commented or should be blindly followed. But do not do the same without proper knowledge through which we become unneccesary prey to enemies of this concept.
நடிகனை அறிவு ஜீவியாக கருதினால் சமூகத்தை தங்கள் சுயநலத்துக்குப் பலி கொடுக்கத்தான் செய்வானுக. அவர் ஏற்கனவே ஒரு காமக் கவிதை பாடி கேவலப்பட்டார். அந்த கேவலத்தை துடைத்து எறிந்து விட்டு புதுக்கருத்து சொல்கிறார்..காலத்தின் மாறுதல் தானாக கனிவது, இவரைப் போன்ற பெரியார்கள் தடியால் அடித்தால் கனியாது கன்னிப் போகும்.
நண்பர் மதிவாணன்
நீங்கள் ஏன் இப்படி எகிறி குதிக்கிறீர்கள் ?
காவிரிமைந்தன் அவர்கள் கேட்ட கேள்விகள்
எதற்கும் பதில் சொல்லாமல்
ஏன் பெரியாரின் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள் ?
பெரியார் சொன்னது எல்லாவற்றையும்
ஏற்றுக் கொள்ள முடியாது என்று கா.மை.
சொல்வதில் என்ன தவறு ?
பெரியார் சொன்னதைக் கேட்டு நீங்கள் திருமணம்
செய்யாமல் இருப்பீர்களா ? இல்லை மனைவி
கையால் தாலி கட்டிக் கொள்வீர்களா ?
தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று
சொன்னதை ஏற்க வேண்டுமா ?
பெரியார் 80 வருடங்களுக்கு முன்னால் இருந்த
மனிதர்களுக்குச் சொன்னதை இன்றும்
மனப்பாடம் செய்ய வேண்டாம். நிகழ்காலத்தில்
இருங்கள்.
10 கேள்விகள் கேட்டு இருக்கிறார் –
யார் பின்னாலும் ஒளியாமல் சொந்த அறிவில்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
கமல் சொன்னதில் எந்த வித தவறும் இல்லையே
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் அவர் வாழ்க்கைலயே பதில் இருக்கே
1) பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு யார்
பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் ?
குழந்தை பிறப்புக்கு யார் காரணமோ அவர்கள் தன பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் ( அவருக்கு திருமண உறவை தாண்டியும் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது, இது முழுக்க முழுக்க அவரும் அந்த பெண்களும் தொடர்புடையது) ஆனா அவர் செய்த மடத்தனமான காரியத்தால் பிறந்த குழந்தைகளை இன்று வரை அவர் தானே பார்த்து கொள்ளுகிறார்
2) ஆண்களால் குழந்தைகளை
வளர்க்க முடியுமா ?
ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். எந்த விதத்தில் வளர்க்க முடியாது என்று சொல்லுகிறீர்கள்?
3) இல்லை – பிரிந்த பிறகு பெண் மட்டும் தனியாக
எப்படி குழந்தைகளை வளர்ப்பாள் ?
ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். எந்த விதத்தில் வளர்க்க முடியாது என்று சொல்லுகிறீர்கள்?
4) குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம், எதிர்காலம்
எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பு ?
எந்த இருவரால் அந்த குழந்தை பிறந்ததோ அவர்கள் தான் பொறுப்பு.
5) குழந்தைகளை அப்படியே அநாதைகளாக
விட்டு விடலாமா ?
அனாதைகளாக விட்டுவிட வேண்டும் அல்லது விட்டு விடுவார்கள் என்று எந்த அடிப்படையில் சொல்லுறிங்க?
6) பொருளாதாரம் ஒரு முக்கியமான பிரச்சினை
என்றாலும், குழந்தைகளுடன் வரும் பெண்ணை
வேறு ஆண் மகிழ்வுடன் ஏற்பானா ?
நீங்கள் தற்போது உள்ள காலத்தில் தான் இருக்குறீர்களா? நமது நாட்டில் நீங்கள் சொல்லுகிற 99 .9 % பலவான உறவில் தான் 25 % பேர் விவாகரத்து செய்து கொள்ளுகிறார்கள். அவர்கள் யாருமே மறுமணம் செய்து கொள்ளுவது இல்லையா? பெரியாரை படித்தவன் என்று சொல்லிக்கொண்டு எந்த ஆண் மறுமணம் செய்வான் என்று கேட்பது உங்களுகே ஏற்புடையதா?
7) இப்படி எவ்வளவு முறை மாறி மாறி
வாழ முடியும் ?
எத்தனை வயது வரை இப்படி வாழ முடியும் ?
உடலில் வலுவும் மனதில் தன்னம்பிகையும் இருக்கும் வரை ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் கண்டிப்பாக வாழ முடியும்.
8) 45-50 வயதான பிறகு ?
யார் துணை சேரத்தயாராக இருப்பார்கள் ?
கண்டிப்பாக யாரவது இருப்பாங்க அய்யா. நாளைக்கு நடக்க போறதை பத்தி இன்னைக்கு ஏன் கவலை?
9)பின் – முதுமையில், தனிமை தான்
வாழ்க்கையா ? இது தேவையா ?
உடல் உறவு இல்லேன்னா தனிமையா? கல்யாணம் ஆனாலும் மனதினுள் தனிமையாக இருப்பவர்களும் உண்டு. திருமண பந்தமே இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பவர்களும் உண்டு
10) இப்போது இருக்கும் நடைமுறைகளை விட –
அவர் சொல்லும்
புதிய முறை எந்த விதத்தில் சிறந்தது ?
அவர் சொல்லுவது புதிய முறையே அல்ல என்பது தான் என் கருத்து. நீங்கள் சொல்லும் திருமணம் என்பது தான் புதிய முறை. பெண்களை அடிமைபடுத்தும் முறை. திருமண வாழ்கை முறையை போல முட்டாள் தனம் வேற எதுவும் இல்லை. பெரியாரின் கருத்து தான் என் கருத்தும்.
லால்குடி நாராயணன்:
நண்பர் மதிவாணன்
நீங்கள் ஏன் இப்படி எகிறி குதிக்கிறீர்கள் ?
காவிரிமைந்தன் அவர்கள் கேட்ட கேள்விகள்
எதற்கும் பதில் சொல்லாமல்
ஏன் பெரியாரின் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள் ?
அவர் இப்பொழுது கேட்ட கேள்விகளுக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் பதில் சொல்லிவிட்டார். அதனால் அவர் பெரியார் பின்னால் ஒளிந்து கொள்வதில் தவறு எதும் இல்லையே
பெரியார் சொன்னது எல்லாவற்றையும்
ஏற்றுக் கொள்ள முடியாது என்று கா.மை.
சொல்வதில் என்ன தவறு ?
ஏன் ஏற்று கொள்ள முடியாது என்று விளக்குங்களேன்?
பெரியார் சொன்னதைக் கேட்டு நீங்கள் திருமணம்
செய்யாமல் இருப்பீர்களா ? இல்லை மனைவி
கையால் தாலி கட்டிக் கொள்வீர்களா ?
தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று
சொன்னதை ஏற்க வேண்டுமா ?
பெரியார் சொன்னதுன்னு சொல்லி எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. அப்புறம் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர் சொன்னதை சொன்ன விதத்தில் புரிந்து கொண்டால் கண்டிப்பாக அவர் சொன்னதை நீங்களும் கண்டிப்பாக ஏற்று கொள்ளுவீர்கள்.
பெரியார் 80 வருடங்களுக்கு முன்னால் இருந்த
மனிதர்களுக்குச் சொன்னதை இன்றும்
மனப்பாடம் செய்ய வேண்டாம். நிகழ்காலத்தில்
இருங்கள்.
அய்யா அவர் 80 வருடங்களுக்கு முன்பே நாம் இப்போது இருக்கும் நிகழ்காலத்தை பற்றி சொல்லி இருக்கீறார்.
10 கேள்விகள் கேட்டு இருக்கிறார் –
யார் பின்னாலும் ஒளியாமல் சொந்த அறிவில்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
கேள்விகளுக்கு என் கருத்தை சொல்லிவிட்டேன். உங்கள் கருத்து என்ன?
கமல் ஹாசனின் கருத்துக்கள் இங்கே முழுமையாக சொல்லப்படவில்லை. அவர் திருமணம் என்னும் சடங்கை தான் நம்பவில்லை என்று சொன்னார். குடும்பம் என்னும் விஷயத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் சொன்னார். அவரையும் அவரது மகளையும் அதற்கு சான்றாக எடுத்துக்காட்டினார். அவருடைய சொந்த வாழ்கையையும் அவர் சொன்ன கருத்தையும் ஒன்றாக சேர்த்து தவறாக புரிந்து கொள்கிறோமோ என்று நினைக்கிறேன்.
Society may not remain stable with complex relationship between human beings. Kamalhasan’s view may be liked by few people but not by common man.
ver nice
வாய் இருக்கறதால என்ன வேணாலும் பேசலாம்னு நெனெப்ப mr காவிரி மைந்தன் .
நண்பர் பார்த்திபன்,
உங்கள் கருத்தையும் இந்த இடத்திலேயே
நீங்கள் தாராளமாகச் சொல்லலாமே !.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
aamaa… athu enna suppuluxmi hassan???????