இப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!

இப்போது ராகு(ல்) காலம் –
பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் –
சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!

(இந்த தேசத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் .முன்  வரிசையில் …….)

இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
“வாராது வந்த மாமணி போல்” இன்னுமொரு காந்தி –
தீவிர அரசியலுக்கு வந்து விட்டார் !
இம்முறை – ராபர்ட் ப்ரியங்கா காந்தி.
(ராபர்ட் வாத்ராவின் பெயரை தவறாகப் போட்டு விட்டேன்
என்று நினைக்கிறீர்களா ? – கணவரை முன்நிறுத்தி
மனைவி இருந்தால், கணவனின் குடும்பப்பெயர் வரும்.
மனைவியை முன்நிறுத்தி கணவன் இருந்தால் –
மனைவியின் குடும்பப்பெயர் தானே வர வேண்டும் ?)

(இது தான்  ஒரிஜினல்  காஸ்டியூம் )

உத்திரப் பிரதேச தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக
முதலில் ராகுல் காந்தி வந்தார்.
பின்னர் அவருக்கு உதவ ப்ரியங்கா காந்தி வந்தார்.
இப்போது அவர் பின்னால் ராபர்ட்(ப்ரியங்கா)காந்தி
வந்திருக்கிறார். (கூடவே  காந்தி(?) குடும்பத்தின்
குட்டி வாரிசு – அவர்களது பெண் “ராய்ஹன்”உடன் வர)

உ.பி.தேர்தலில் புகைப்படங்கள் –
ப்ரியங்கா, ராபர்ட், ராகுல் காந்தி
(இது ச்சும்மா – தேர்தலுக்காக )

ராபர்ட்(ப்ரியங்கா) காந்தியுடன் அவரது
குட்டி வாரிசான “ராய்ஹன்” (அடுத்த தலைமுறை
பிரதமர் வேட்பாளர்  ?)

ஏற்கெனவே அரசியலில் குதிக்க காத்திருந்த ராபர்ட்,
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதை
வெளிப்படையாகவே கூறி விட்டார்.

“இப்போது நான் ராகுல் காந்திக்கு
உதவ வந்திருக்கிறேன்.
இது  ராகுல்  காலம்.
பிற்பாடு  ப்ரியங்கா வருவார் – அப்போது நானும்
வருவேன். அப்போது எங்கள் காலமாக இருக்கும் !”

“நான் திருமணம் செய்துகொண்டது
ஒரு அரசியல் குடும்பத்தோடு –நான் மட்டும்
குடும்பப் பொறுப்பிலிருந்து எப்படி விலக முடியும் ? !!”

ராபர்ட் அரசியலுக்கு வருவதன் பலன்  நேற்றே
தெரிந்தது. ராகுலின் அமேதி தொகுதியில் ஒரு
மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் வந்தார்  ராபர்ட்.
அவருடன் ஏகப்பட்ட வண்டிகள் வந்தன.
அந்த தொகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராக
தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்த
(கலெக்டர் அந்தஸ்து உள்ள ) பவன் சென் என்கிற
அதிகாரி ஊர்வலத்தை நிறுத்தி, வாகனங்களின்
எண்ணிக்கை தேர்தல் கமிஷன் விதித்துள்ள
வரம்பைத் தாண்டக் கூடாது என்று
வலியுறுத்தினார். தேர்தல் விதிமீறல் புகாரையும்
பதிவு செய்தார்.


4 மணி நேரத்தில் அதன் விளைவை அவர் எதிர்நோக்க
நேர்ந்தது. ஆமாம் – அவர் உத்திரப் பிரதேசம்,
அமேதி தொகுதியிலிருந்து உடனடியாக கோவா
மாநிலத்திற்கு தேர்தல் பணிக்காக இடமாற்றம்
செய்யப்பட்டார்.

ஆனால், இது மீடியாவில் உடனடியாக வெளியாகி
செய்தி விஸ்வரூபம் எடுத்ததால், தலைமை
தேர்தல் கமிஷனர் குரேஷி தலையிட்டு, அமேதியில்
ஓட்டுப்பதிவு முடியும் வரையில் மாற்றலை நிறுத்தி
வைத்துள்ளார். (ரத்து செய்யவில்லை !)

ஒரு வேளை இந்திய மக்கள்  செய்த
பாவ/புண்ணியங்களின் விளைவாக, எதிர்காலத்தில்
எப்போதாவது ராகுல் காந்தி பிரதமர் பொறுப்பை
ஏற்பாரேயானால், இந்த ராபர்ட் தான் உள்துறை
அமைச்சர் என்பது உறுதி.

எனவே இப்படிப்பட்ட  ஒளிமயமான எதிர்காலம் உடைய
ராபர்ட்டைப் பற்றி சில விஷயங்களை நம் மக்கள்
தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

இது  ராபர்ட் (வதேரா) காந்தியின்
வரலாற்றுப் பின்னணி –

திருமதி சோனியா காந்தியின் நம்பிக்கையை ராபர்ட்
பெற முடிந்ததன் முதல் காரணம் –
இவரும் ஒரு அரை இந்தியர் என்பது தான்.
ராபர்ட் ராஜீந்தர்  வாத்ரா என்ற பெயருடைய
(உத்திரப் பிரதேசம் -மொராதாபாத்)
இந்தியத் தந்தைக்கும்,
மௌரீன் என்கிற பெயருடைய
ஸ்பானிஷ் தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.
ராபர்ட்டின் தாய் ஏற்கெனவே திருமதி சோனியாவின்
குடும்ப நண்பர் !

அடுத்து இந்த குடும்பத்தில் நேர்ந்த மர்மமான இறப்புகள்
குறித்து கூறியாக வேண்டும் –

முதலில் – திருமதி சோனியாவின்
மைத்துனர் சஞ்சய் காந்தி –
விமான விபத்தில் இறந்தார்.
-23 ஜூன் 1980 (33 வயதில்)

அடுத்து – மாமியார் இந்திரா காந்தி – அவரது சொந்த
பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார்.
-31 அக்டோபர் 1984

பின் கணவர் ராஜீவ் காந்தி –

விடுதலைப்புலிகளின்தற்கொலைப்படையைச் சேர்ந்த
தணுவால் வெடி விபத்தில் கொல்லப்பட்டார்.
-21 மே 1991 (aged 46)

திருமணத்திற்கு பின்னர் ராபர்ட் வாத்ராவின்
சகோதரி – மிச்சில் 2001ஆம்  ஆண்டு ஒரு விபத்தில்
உயிர் இழந்திருக்கிறார்.

பின்னர்  ராபர்ட் வாத்ராவின் சகோதரர்
ரிச்சர்டு  வாத்ராவும்  2003 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம்  வசந்த் விஹார்
என்கிற குடியிருப்பில்
மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இன்னும் கொஞ்ச நாட்கள்  கழித்து,
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 2- ஆம் தேதி
ராபர்ட் வாத்ராவின் தந்தை ராஜீந்தர் மர்மமான
பின்னணியில் தற்கொலை
செய்து கொண்டு இறந்து போனார்.

ஒரே குடும்பத்தில் இவ்வளவு துர்மரணங்கள் –
ஆச்சரியமாக   இல்லை ?

அடுத்த விசேஷம் –

விமான நிலையங்களில் அனைவரையும்
பரிசோதிக்கும் செக்யூரிடி  செக்கப்
(frisking)  ராபர்ட்டுக்கு கிடையாது.

இவர் எந்தவித செக்யூரிடி பரிசோதனைகளும் இன்றி  
இந்தியாவின் எந்த விமான நிலையத்திற்கு
உள்ளே போகவும், வெளியே வரவும்
விசேஷ அனுமதி பெற்றவர்.

மத்திய அரசின் விசேஷ உத்திரவு ஒன்று –
ஜனாதிபதி, பிரதம மந்திரி, சுப்ரீம்
கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருக்கு
இணையாக இந்த  நபரையும்  செக்யூரிடி
பரிசோதனையிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.
விமான நிலையத்தில் அதைத் அறிவித்து
வைக்கப்பட்டிருக்கும் நோட்டீஸ் போர்டு இதோ –

(கடைசி எண் -31  ராபர்ட் வாத்ரா )

நிதி வசதி பின்னணி –

திருமணத்திற்கு முன்னர் –
சாதாரண ஒரு நகை மற்றும் கைவினைப் பொருட்கள்
ஏற்றுமதி கம்பெனி ஒன்றை மட்டும் வைத்திருந்த
இந்த நபர் இன்றைய தினத்தில் மிகப்பெரிய கோடீஸ்வர
தொழில் அதிபராகத் திகழ்கிறார். தன் மாமியார்
குடும்பத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கும்
பொறுப்பினைத்தவிர –

கீழ்க்கண்ட தொழில் முதலீடுகளிலும் அவர்
முனைப்புடன்  ஈடுபட்டுள்ளார்-

இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான
DLF Limited – உடன் முதலீடு,

ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி  என்கிற நிறுவனத்தின்
மூலமாக,
டெல்லி ஹில்டன் கார்டன் இன் என்கிற மிகப்பெரிய
ஓட்டலில் பங்குதாரர்,

ப்ளூ ப்ரீஸ் என்கிற விமானங்களை வாடகைக்கு
விடும் நிறுவனம்,

நார்த் இந்தியா  ஐ.டி.பார்க்ஸ் நிறுவனம்,

ரியல் எர்த் எஸ்டேட்ஸ் என்கிற நிறுவனம்,

ஸ்கைலைட் ரியல்டி ப்ரைவேட் என்கிற நிறுவனம்.

நமக்குத் தெரிந்து –
வெளிவந்திருப்பது இவ்வளவு தான். இன்னும்
வெளிவராத முதலீட்டுத் தகவல்கள்  எவ்வளவோ !

தப்பித் தவறி உத்திரப் பிரதேச தேர்தலில் காங்கிரசுக்கு
சொல்லிக் கொள்கிற அளவிற்கு சீட்டுக்கள் கிடைத்து
விட்டன என்றால் போதும் –

மிக வளமையான எதிர்காலத்தை இந்திய மக்கள்
இந்த காந்தி குடும்பத்தின் மூலம் எதிர்பார்க்கலாம் !

“மக்களின் தகுதிக்கு ஏற்றார்போல்  தான் –
அவர்களுக்கு கிடைக்கும் அரசனும் இருப்பான் “

-என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன்
சொன்னான். நம் தகுதி என்ன, நாம் எதற்கு
கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதை உத்திரப்
பிரதேச  தேர்தல் தான் வெளிப்படுத்தப் போகிறது !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    வீட்டு மருமகனுக்கே நாம் எவ்வளவு மரியாதை கொடுக்கும்போது, இவர் நம் நாட்டு மருமகனாச்சே! விமான நிலையத்தில் நுழைவது என்ன…. அதையும் தாண்டி…
    முன்பு கஜினிமுகம்மது பின் ஆங்கிலேயர்கள் இப்போது இத்தாலிய/ஸ்பானிஷ் கொள்ளை கும்பல்…
    நாம (இந்தியர்கள்) ரொம்ப நல்லவங்க!
    எவ்வளவு (கொள்ளை)அடிச்சாலும் தாங்குவொம்!!

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    இந்த பாவிகள் கட்சியை நாட்டை விட்டே ஒழித்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும். அதற்கு வாக்களிக்கும் மக்கள் இவர்களை பற்றி உணரவேண்டும். இது நடக்கும் வரை வல்லரசா… மண்ணாங்கட்டி!

  3. Sridhar's avatar Sridhar சொல்கிறார்:

    Only two persons by name to be there in the list.

    My doubt is when 30. SPG protectees is there then why should 31. Robert Vadara when with SPG protectees be mentioned separately. (Shri.. Romba Mukkiyam)

    If they had mentioned, husband of UPA Chairperson’s Daughter, then it would have given much more persons opportunities.

    Really disgusting to see the dynasty rule coming back.

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நம்பிக்கையுடன் இருப்போம் !

    இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

    உ.பி வாக்காளர்கள் மெத்தப்படித்த அறிவு மிக்கவர்கள்.

    இந்தியாவிலேயே புத்திசாலிகள்.

    அவர்கள் எல்லா வாக்காளர்களையும் சீர் தூக்கி மிக சிறந்த வேட்பாளர்களையே தேர்வு செய்வார்கள்.(கடந்த அறுபது ஆண்டுகள் செய்து வருவதைப்போல )

    உ.பி பீகார் போன்ற வடமாநிலங்களில் நல்ல அரசு அமையும்போது தென்மாநிலங்களிலும் நல்ல அரசு அமையும்.

    இந்தியாவின் கஷ்டங்களல்லாம் விலகி ஒரு பெரிய பணக்கார வல்லரசுநாடாக இந்தியா உருவாகும்.

    அராஜகம்,ஊழல முற்றிலும் மறைந்து எங்கும் நேர்மை,உழைப்பு ஒற்றுமையே மிகுந்து காணப்படும்.

    எப்படி இருந்த நாடு இப்படி ஆகி விட்டது என அனைத்து அயல்நாட்டினரும் மூக்கின் மேல் விரல் வைப்பர்

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    போதும் நண்பரே,

    இதற்கு மேல் தாங்காது !

    கண்பத் – நான் உ.பி.வாக்காளர்களை
    மிகவும் நம்புகிறேன் !

    அவர்களின் புத்திசாலித்தனத்திற்காக அல்ல –
    ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பக்கம் போய்,
    உருப்படியாக யாருக்கும் மெஜாரிடி கிடைக்காமல்
    பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    அதற்கு மேல் – அவன் சித்தம் !!

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா,மை

    நீங்கள் ஓரு நட்சத்திர பதிவாளர்.அதற்கு ஏற்ப ஒரு மங்களகரமான பின்னூட்டம் போடும் ஆசையில் விளைந்ததே என் முதல் பின்னூட்டம்,என்ன இருந்தாலும் முகாரி பாடுவதில் உள்ள சுகம் ஆனந்த பைரவி யில் இல்லைதான்!!
    -வாழ்த்துக்களுடன்
    Ganpat

  7. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    //என்ன இருந்தாலும் முகாரி பாடுவதில் உள்ள சுகம் ஆனந்த பைரவி யில் இல்லைதான்!!//
    so nicely put!

  8. Padmanabhan Potti's avatar Padmanabhan சொல்கிறார்:

    kaalam cheytha kolam

  9. Thakkudu's avatar Thakkudu சொல்கிறார்:

    எல்லாம் நம்ப தலைவிதியை தான் சொல்லனும்! ஊர்ல இருக்கும் எல்லா மொள்ளமாரியையும் தேடி புடிச்சு ஆட்சில உக்காத்தி வச்சு அழகு பாத்துகிட்டு இருக்கோம்.

    Note – ஆனந்தபைரவி & முகாரியை வச்சு Ganpat சார் போட்ட கமண்டை மிகவும் ரசித்தேன். 🙂

  10. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    கலாம் கனவு காணுங்கள் என்கிறார்.
    கண்பத் முதல் பின்னூட்டம் கூட கனவு காண்கிறது.

    எனக்கு ஆனந்தபைரவியே பிடிச்சிருக்குது:)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.