ஆட்டம் போட்ட மாதவன் நாயரின் – ஸீன் 3 !! நாடகம் பாதியில் முடிகிறது !!

ஆட்டம் போட்ட மாதவன் நாயரின் – ஸீன் 3 !!
நாடகம் பாதியில் முடிகிறது !!

இஸ்ரோ(ISRO) முன்னாள் தலைவர்
மாதவன் நாயரின்
தொலைக்காட்சி கூத்து 3வது சீனுக்கு வந்துள்ளது.

முன்கதைச் சுருக்கம் – 2005ல் மாதவன் நாயர்
இஸ்ரோ சேர்மனாக இருந்தபோது
தேவாஸ் என்கிற ஒரு பிராடு நிறுவனத்துடன்
செய்துகொண்ட உடன்பாட்டின்படி
2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ்  பேண்டு
ஒளிக்கற்றை வரிசையை
கொள்ளை அடிக்க திட்டம் போட்டதும்,
2ஜி ராஜாவின் ஊழல் வெளிவந்த வேகத்தில்,
இந்த விஷயமும்  வெளிவந்ததில் – உடன்பாடு ரத்து
செய்யப்பட்டதுடன் இந்த மோசடி முயற்சியின் பின்னணி
குறித்து விசாரிக்க இந்திய அரசு 2 கமிட்டிகளை
அமைத்தது.(திட்டக்குழு உறுப்பினர் பி.கே.சதுர்வேதி
தலைமையில் ஒன்றும், முன்னாள் தலைமை விஜிலன்ஸ்
கமிஷனர் பிரத்யுஷ் சின் ஹா தலைமையில்
மற்றும் ஒன்றும் )

சாதாரணமாக இந்த இஸ்ரோ ஆசாமிகள் ரிடையர்
ஆனாலும் கூட – எழுந்து நிற்க சக்தி இல்லாமல் போகும்
வரை எதாவது  ஒரு அரசுப்பிரிவில்/கமிட்டியில் –
ஆலோசகராக, அல்லது தலைவராக –
முழுச்சம்பளத்துடனும், எக்கச்சக்கமான அலவன்சுகளுடனும்
தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

கமிட்டியின் பரிந்துரைகளில் –மாதவன் நாயர், அவரது
கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர்களே ஆரம்பித்த
கம்பெனி தான் தேவாஸ் என்பதும், மத்திய அரசுக்கு
சொல்லாமலே,அதன் ஒப்புதலைப் பெறாமலே –
எஸ் பேண்டு அலைவரிசைகளை கொள்ளை அடிக்க
அவர்கள் திட்டமிட்டு முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டு
விட்டது.

பங்களூரை மையமாகக் கொண்டு, ரிடையரான சில
இஸ்ரோ அதிகாரிகளால் (ஒரு அமெரிக்க நிறுவனத்தையும்
பெயருக்கு சேர்த்துக் கொண்டு ) வெறும் ஒரு லட்சம்
ரூபாயை மட்டும் முதலாகக் கொண்டு (ஒர் ஷேர் பத்து
ரூபாய்)2004ல் துவக்கப்பட்ட நிறுவனம் தான் தேவாஸ்.
எஸ் பேண்டு ஒளிக்கற்றைக்கு  உரிமம் பெற்ற பிறகு
2009-10ல் பத்து ரூபாய் ஷேர்
ஒன்று 1,26,821 ரூபாய் என்கிற அளவிற்கு
லாபம் பெற்று விற்கப்பட்டிருக்கிறது என்றால் இந்த
கொள்ளையின் விஸ்தீரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

கமிட்டி ரிப்போர்ட்டில் உள்ள பரிந்துரைகளின்படி,
அவர்கள் மீது எடுக்கும் முதல் நடவடிக்கையாக,
ரிடையர் ஆகி விட்ட மாதவன் நாயர் மற்றும் அவரது
3 கூட்டாளிகளை அரசாங்க பொறுப்புகள் எதிலும்
மீண்டும் நியமிக்க கூடாது என்று  – மத்திய அரசு
சில நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து
மத்திய அரசு பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

விஷயம் டெல்லி ஆங்கில தொலைக்காட்சிகளில் கடந்த
வாரம் வெளிவந்தவுடன் மாதவன் நாயர் அடித்த கூத்து  தான் –

சீன்-1

மாதவன் நாயர் தொலைக்காட்சிகளில் குமுறல் –

“யாரைக் கேட்டு இந்த உத்தரவை பிறப்பித்தார்கள் ?
நான் என்ன டெர்ரரிஸ்டா ?
(அதை விட மோசம் !)
என் எதிர்காலத்தை என்னைக் கேட்காமல் நிர்ணயிக்க
இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
(ரிடையர் ஆன இவரை மீண்டும் வேலைக்கு
சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ய
இவரைக் கேட்க வேண்டுமாம் )
இஸ்ரோ(இன்றைய)சேர்மன் ராதாகிருஷ்ணனின்
பழி வாங்கும் வேலை தான் இது.
ராதாகிருஷ்ணனின் பெர்சனல் அஜெண்டா இது.
ராதாகிருஷ்ணன் ஒரு ஹிட்லர் !
அவருக்கு ராக்கெட்டுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது !
இஸ்ரோ இப்போது நாய்களிடம் போய் விட்டது !
(gone to dogs !)
உத்திரவை பிறப்பிக்கும் முன்னர் என்ன நடந்தது என்று
என்னைக் விசாரித்திருக்க வேண்டாமா ?
(கமிட்டி, துவக்கத்திலேயே ஆகஸ்ட் 10, 2011 அன்று
இவரை நேரில் கூப்பிட்டு விசாரித்து விட்டு  –
பல வினாக்களை அடங்கிய ஒரு
questionnaire ஐ இவர்களுக்கு அனுப்பி,
இவர்களிடமிருந்தே விளக்கங்களை எழுத்துபூர்வமாக
பெற்றிருந்த விவரம் –
இப்போது வெளியாகி இருக்கிறது –
முதல் சீனில் –
இதை சுத்தமாக மறைத்திருக்கிறார் மா.நாயர்!)

தேவாஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு
அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவில்லை என்கிறார்கள்.
இதைப் போல் ஆயிரம் ஒப்பந்தங்களை ஏற்கெனவே
செய்திருக்கிறோம். அரசின் அனுமதியைப் பெற வேண்டும்
என்று எந்த சட்டத்தில் சொல்லி இருக்கிறது ?

இப்போதே செயலில் இறங்கப்போகிறேன்.
இது என் தன்மானப் பிரச்சினை.
RTI தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி
விசாரணை அறிக்கையை பெறுவேன்.
விசாரணை அறிக்கையை வெளியிட்டால் இவர்கள்
வண்டவாளம் வெளிவந்து விடும்.
இவர்களை கோர்ட் மூலம் சந்திப்பேன்!”

மா. நாயரின் கடுப்பிற்கு காரணம் புரிகிறது.
ரிடையராகி விட்டாலும் தற்போது அவர் வகித்து வரும்  அரசாங்கப் பதவிகள் –
இஸ்ரோவில் விசிட்டிங் ப்ரொபஸர்,
பாட்னா ஐ.ஐ.டி.யில் நிர்வாகத் தலைவர்,
சி.எஸ்.ஐ.ஆர். என்கிற நிறுவனத்தின்
நிர்வாக கவுன்சிலின் தலைவர் –
ஒரே உத்திரவில்  அத்தனையும்  போச் !!!

சீன்-2

மற்ற ரிடையரான, பொழுது போகாத,
(அதாவது மறு வாழ்வு கிடைக்காத )
விஞ்ஞானிகளின் முறை இப்போது.
அவர்களின் கருத்து வெளியீடு –

“மாதவன் நாயரை நடத்திய விதம் மிக மிக
மோசமானது.
விஞ்ஞானிகளை இப்படி நடத்தினால் –
உலக அரங்கில் இந்தியாவை யார் மதிப்பார்கள் ?
என்ன நடந்தது என்று மாதவன் நாயரிடம்
விசாரித்திருக்க வேண்டாமா ?
விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா ?
எதிர்காலத்தில் யார் இந்த பணிகளைச் செய்ய
முன் வருவார்கள் ?
மத்திய அரசு, மாதவன் நாயரிடமும்
மற்ற விஞ்ஞானிகளிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்”.

விண்வெளி ஆராய்ச்சித் துறை பிரதமரின் நேரடி
பொறுப்பில் வருகிறது.
வழக்கம்போல் ம.மோ.சிங்  வாயே திறக்காததால் –

சற்றே  பயந்து போன,  பிரதமர் அலுவலகத்தில்
துணை அமைச்சராகப் பணி புரியும் நாராயணசாமி –
(வடிவேலு ஸ்டைலில்) –

“அப்படி என்ன நடந்து விட்டது இப்போது.
நாங்கள் கேட்டால் தானா ?
இப்போது கூட தாங்களாகவே   விஞ்ஞானிகள்
தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுக்கலாமே –
அரசாங்கம் திறந்த மனதுடன் தான் இருக்கிறது !”

(தொ.கா. நிருபர் – அப்படியானால் விஷயத்தை
மறுபரிசீலனை செய்வீர்களா ?)

“பரிசீலனை செய்ய மாட்டோம் என்று யாரும்
சொல்லவில்லையே !”

இஸ்ரோவின் தற்போதைய சேர்மன் ராதாகிருஷ்ணன் –
“கமிட்டிகளின் பரிந்துரைகளின்படி
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.மற்றபடி
நானாக இந்த விஷயத்தில் கருத்து எதுவும் கூற
விரும்பவில்லை.  கமிட்டி ரிப்போர்ட்டை
வெளியிட மத்திய அரசிடம் அனுமதி
கேட்டிருக்கிறோம். ரிப்போர்ட் வெளியிடப்பட்டால் –
குழப்பங்கள் தானாகவே தீர்ந்து விடும்”

சீன் -3

இது குறித்து விசாரிக்கப்பட அமைக்கப்பட்ட
2 கமிட்டிகளின் அறிக்கைகள்,
சத்தம் ஏதும் இல்லாமல், விளம்பரமின்றி –
அரசு தளத்தில் வெளியிடப்படுகிறது.
அவற்றில்  சொல்லப்பட்டிருப்பவை –

ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் உடன்பாடு நல்ல நோக்கத்தில்
செய்து கொள்ளப்படவில்லை ;
தேவாஸ் நிறுவனம் இஸ்ரோவில் பணி புரிந்துவந்த,
முன்னாள் விஞ்ஞானிகளால் சேர்ந்து துவக்கப்பட்டது.

எஸ் பேண்டு ஒளிக்கற்றைகள் பற்றி வெளியுலகில்
அதிகம் தெரியாது என்பதால், மிகவும் விலை மதிப்பு
கூடிய அதை அப்படியே தேவாஸ் நிறுவனத்திற்கு
மிகக்குறைந்த விலைக்கு விற்று விட்டு –
பின்னர் அதன் உண்மையான மதிப்பை சர்வதேச
சந்தையில் விற்று -இவர்களுக்குள்
பங்கு போட்டுக் கொள்ள முயற்சி நடந்திருக்கிறது.
எஸ் பேண்டை கொள்ளை அடிக்கவே இந்த உடன்பாடு
செய்து கொள்ளப்பட்டுள்ளது;
இதில் மாதவன் நாயரும் அவரது 3 சகாக்களும்
கூட்டணி வைத்திருக்கிறார்கள் –
பல முக்கிய விஷயங்களை இவர்கள் மத்திய அரசின்
பார்வைக்கே கொண்டு போகாமல் உள்நோக்கத்துடனே
மறைத்து விட்டார்கள் –
என்பது போன்ற விவரங்களை இந்த 2 கமிட்டிகளின்
அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த நிலையில் மாதவன் நாயர் அடித்த  
அந்தர் பல்டி தான் சீன் 3 –

“ரகசியமாக, அவசரம் அவசரமாக விசாரணை
அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

முழு அறிக்கையை வெளியிடவில்லை –
அறிக்கையிலிருந்து –
அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்களுக்கு
சாதகமான சில தகவல்களை மட்டும்
வெளியிட்டிருக்கிறார்கள்.
தைரியம் இருந்தால் முழு அறிக்கையை வெளியிடட்டும்
பார்க்கலாம் !
(கமிட்டி ரிப்போர்ட்டில் இந்திய அரசின் விண்வெளி
ஆராய்ச்சி பற்றிய பல ரகசிய தகவல்கள் விவரமாக
அலசி ஆராயப்பட்டிருக்கின்றன. அந்த ரிப்போர்ட்டை
அப்படியே வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு
உகந்ததல்ல. வெளியிட இயலாது.
அது தெரிந்தே – மாதவன் நாயர்  கூத்தாடுகிறார். )

எங்களைப் பற்றி விசாரிக்க இந்த கமிட்டி
மெம்பர்களுக்கு தகுதியோ, அனுபவமோ கிடையாது.
இஸ்ரோ மற்றும் ராக்கெட்  விவகாரங்களைப்பற்றி
இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

மீண்டும் ஒரு சரியான கமிட்டியை அமைத்து
விசாரிக்க வேண்டும். அதில் டெக்னிகலாக
ராக்கெட் நுணுக்கங்கள் பற்றி விஷயம் அறிந்தவர்கள்
மட்டும் இருக்க வேண்டும்.
அந்த  புதிய கமிட்டி எங்களைக் கூப்பிட்டு
விவாதித்து விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புதிய கமிட்டியுடன் நாங்கள் ஒத்துழைக்கத்
தயாராக இருக்கிறோம்.

இப்போது வெளிவந்துள்ள  கமிட்டி அறிக்கைகளை
மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

பின்குறிப்பு –

ஊழல் என்றாலே அரசியல்வாதிகள்
தான் பின்ன்ணியில் இருக்க முடியும் என்றிருந்த  நமக்கு
ஆச்சரியமூட்டும் வகையில் – இந்த எஸ் பேண்டு
விவகாரத்தில் ஒரு அரசியல்வாதி கூட
சம்பந்தப்படவில்லை ! முழுக்க முழுக்க முன்னாள்,
இந்நாள் விஞ்ஞானிகளே !

விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளுக்கு மேல் திட்டமிட்டு
கொள்ளை அடிக்க முடியும் என்பதை முதல் முதலாக
நிரூபித்துக் காட்டிய வகையில் மா.நா. வின் திறமை
நம்மை வியக்க வைக்கிறது.

மாதவன் நாயர் செய்த மிகப்பெரிய தவறு –
அரசியல்வாதிகள்  (முக்கியமாக
காங்கிரஸ் அமைச்சர்கள்) யாரையும் தன் கூட்டணியில்
சேர்த்துக் கொள்ளாதது தான்.
அமைச்சர்க்ளுக்கும்/அரசியல்வாதிகளுக்கும் உரிய
பங்கிருந்தால் -இந்த விஷயம் வெளி வரவே வாய்ப்பு
இருந்திருக்காது ! காங்கிரஸ் தலைமைக்கே தெரியாமல்
கொள்ளை முயற்சி நடந்ததால் –
பிரதமர் மன்மோகன் சிங் உடனடி நடவடிக்கை
எடுத்து விட்டார் !

இந்த சமயத்தில் -மாதவன் நாயர் போன்ற
சில ஜென்மங்களை வைத்துக்கொண்டு எல்லா
விஞ்ஞானிகளையும் நாம் எடை போட  வேண்டாம்.
நாட்டின் பெருமையை உயர்த்தும் விதத்தில்
செயல்பட்ட, செயல்படும் – விஞ்ஞானிகள் பலர்
இஸ்ரோவில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மீடியாக்கள் இதற்கு அதிக விளம்பரம் கொடுக்கவில்லை.
சீரியசாகப் போக வேண்டிய விஷயம் –
வடிவேலு காமெடி அளவிற்குப் போய் விட்டது !

இதற்கு காரணங்கள்  இரண்டு –

ஒன்று – நஷ்டம் ஏற்படுவதற்கு முன்னரே –
தடுக்கப்பட்டு விட்டது. ஒப்பந்தம் ரத்து
செய்யப்பட்டு விட்டது.
நம் மீடியா ஆட்களுக்கு அதில் பரபரப்பு செய்தி இல்லை.

இரண்டு – அரசியல்வாதிகள் யாரும் இதில்
சம்பந்தப்படவில்லை ! எனவே விருவிருப்பு கம்மி !!

நாயரின் ஆட்டம் தொடர்ந்தால், அரசு சிபிஐ விசாரணை
என்கிற ஆயுதத்தை கையில் எடுக்கும்.
நாயர் இனிமேலும் இதைப்பற்றி பேசுவது அவருக்கு தான்
ஆபத்து. இது நாயருக்கும் தெரியும்.
எனவே நாயர் இதோடு ஆட்டத்தை முடித்துக் கொள்வதை
தவிர வேறு வழி இல்லை.

எனவே  சீன்-4 க்கு வாய்ப்பு குறைவே !

(எஸ் பேண்டு விவகாரம் பற்றிய முழு விவரங்களையும்
அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் கீழே காணவும் )

https://vimarisanam.wordpress.com/2012/01/27/%E0%

AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%

8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%87-

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%

AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆட்டம் போட்ட மாதவன் நாயரின் – ஸீன் 3 !! நாடகம் பாதியில் முடிகிறது !!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நீங்க சொன்ன மாதிரி மன்மோகன்சிங்கே இவ்வளவு விரைவில் (!??) நடவடிக்கை எடுத்திருக்கிறாரென்றால், நாயர் ரொம்ப வில்லங்கமான ஆளாத்தான் இருப்பார் போல! ராஜா, சிதம்பரம் எல்லாம் ஜுஜுபியோ?
    கூப்பிடுபா சுப்ரமணியம் சுவாமியை…
    அப்போதான் இவர்களெல்லாம் வழிக்கு வருவார்கள்.

    • Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

      சு.சாமிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் அவரே எல்லாத்தையும் ஊத்தி மூடி விடுவார். ‘போபர்ஸ்’ வழக்கில் தான் அவரின் பச்சோந்தி தனம் அப்பட்டமாக பல் இளித்ததே….!!!

  2. thumbi's avatar thumbi சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது மிகச் சரி. அரசியல்வாதிகள்-குறிப்பாக-காங்கிரசுக்காரர்கள்- இல்லாததால் சீக்கிரம் வெளி வந்துவிட்டது; நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது; ஒரு சின்ன சேர்ப்பு: ஐ எ எஸ் அதிகாரிகளும் இல்லாதது ஒரு காரணம். அவர்கள் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்காமல் மறைத்து விடுவதில் கெட்டிக்காரர்கள் என்று ஒரு பேச்சு உண்டு.

  3. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    காங்கிரஸ் களவாணிகளை விடுங்க சார்… உயர்மட்ட அதிகார்கள் குழாமையே ‘நாயர் டீ’ கடையாக மாற்றி வைத்திருக்கும் நாராயணன், சிவ சங்கர மேனன் போன்றோரும் இவரை கை விட்டுவிட்டார்களா என்ன? ராஜ்வி காந்தி கொலை வழக்கில் மிக முக்கியமான டேப்பை இன்று வரை நாராயணன் சி.பி.ஐக்கு கொடுக்காமல் வைத்துள்ளார். மேலும் தனது சாக்கால் பலருக்கும் அதை போட்டு காட்டியுள்ளார். அப்படி பார்த்த பல மல்லுக்கள் இன்று நோகாமல் பல பதவிகளில் ஒட்டிக்கொண்டு உள்ளதாக கேள்வி. யாருப்பா அது…. மா.நாயருக்கும் சுட சுட ஒரு (சி)டி பார்சல்…!!!

  4. vetrimagal's avatar vetrimagal சொல்கிறார்:

    So much cloak and dagger in this episode!

  5. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    தொடர் பின்னூட்டங்கள் அவ்வப்போது இட்டு வந்தாலும் இந்தப் பின்னூட்டம் தமிழ்மண நட்சத்திர கௌரவ விருந்திற்கு.

    வாழ்த்துக்கள்.

  6. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    Madhavan Nair that you have a chance to go to the Court to solve this problem.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.