ப.சி.க்கு எதிரான குற்றச்சாட்டு –
எப்போது நிரூபிக்கப்பட வேண்டும் ?
சிபிஐ கோர்ட்டில் டாக்டர் சுப்ரமணிய சுவாமி –
2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் அவர்களையும்
விசாரிக்க வேண்டும் என்று கொடுத்த கோரிக்கை
நீதிபதியால் நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் இதை மாபெரும் வெற்றியாகக்
கொண்டாடுகிறார்கள்.பட்டாசு வெடிக்கிறார்கள்.
இனிப்பு கொடுக்கிறார்கள்.
“சுப்ரமணியன் சுவாமி இனி
கடவுளிடம் தான் அப்பீல் செய்ய வேண்டும்” என்று
திமிருடன் பேட்டி கொடுக்கிறார் “ஜீரோ லாஸ்”
கபில் சிபல்.
இவர் சொன்ன ஜீரோ லாஸ் தியரியை
எதிர்த்து சுவாமி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு
தொடுத்த போது,முதலில் இதே போன்று தான்
தோல்வி கிடைத்தது. பின்னர் விடாமல் சுப்ரீம்
கோர்ட்டில் அப்பீல் செய்து தொடர்ந்து போராடியதன்
விளைவு – நேற்றைய முன் தினம் சுப்ரீம் கோர்ட்
122 லைசென்சுகளையும் ரத்து செய்தது !
வெட்கம் மானம் இருக்குமேயானால் –
“ஜீரோ லாஸ்” என்று சொன்ன கபில் சிபல்
முந்தாநாளே ராஜினாமா செய்து விட்டு –
அரசியல் சந்நியாசம் வாங்கிக் கொண்டு
போயிருக்க வேண்டும்.
சொரணை கெட்ட அரசியல்வாதிகளில்
முதல் வரிசையில் முந்திக் கொண்டு இடம் பிடிக்கும்
கபில் சிபலுக்கு இதெல்லாம் எங்கே
உரைக்கப் போகிறது ?
பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ கோர்ட்டில் என்ன
காரணம் காட்டி வழக்கு நிராகரிக்கப்பட்டது ?
சுவாமியின் மனு மீது என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டது ?
“ப.சி. மீதான குற்றச்சாட்டு டாக்டர் சுவாமியால்
நிரூபிக்கப்படவில்லை” என்று.
குற்றத்தை நிரூபிப்பது எப்போது சாத்தியமாகும் ?
சந்தேகப்படும் ஒருவரை அழைத்து விசாரித்தால் தானே,
இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில்
குறுக்கு விசாரணை செய்தால் தானே குற்றத்தை
நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் ?
அந்த வாய்ப்பையே அளிக்காமல் -குற்றச்சாட்டை
நிராகரித்தால் – அது எப்படி நியாயமான தீர்ப்பாகும் ?
சிபிஐ கோர்ட் தீர்ப்பு இறுதியானதல்ல.
இதற்கு மேல் ஹைகோர்ட்டும் இருக்கிறது.
அதற்கு மேல் சுப்ரீம் கோர்ட்டும் இருக்கிறது.
இந்த வழக்கில் – நேரடியாகவே டாக்டர் சுவாமி
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் சட்ட விதிகள்
அனுமதிக்கின்றன. அங்கு -வித்தியாசமான தீர்ப்பு வர
வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன.
அடிப்படையிலேயே தவறான இந்த
தீர்ப்பு, திருத்தப்படுவதற்கு
அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.
அதனால் – கபில் சிபல் போன்ற “ஜீரோ”க்கள்
அடக்கி வாசிப்பது நல்லது !
(கபில் சிபல் சொன்னது போல் –
ஆண்டவனிடம் அப்பீல் செய்ய வேண்டிய
அவசியமே இல்லை.
“அவன்” எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான்
இருக்கிறான். தர வேண்டிய தீர்ப்பை- தர வேண்டிய
நேரத்தில் தருவான். “அரசன் அன்று கொல்வான் –
தெய்வம் நின்று கொல்லும்” என்பதெல்லாம்
கபில் சிபலைப் போன்ற அரைவேக்காட்டு பேர்வழிகளால்
உணரக்கூடிய விஷயமில்லை ! )




I am not supporting P.C. We all know, during his tenure as Finance Minister, his motto was ” FLEECE WHOM YOU CAN AND WHEN YOU CAN ” as an effort to shorten the Deficit. If he has the power, he would not allow the loss. We all know the present PM is only a namesake head. All the ministers have individual authority in their dept.More over there may inside power rivarlry boosted this issue.
my dear friend,
Even assuming that P.C. is
innocent and honest –
(as you feel )
how he allowed this fraud to take
place right under his nose when
he was supposed to boost the
wealth of the Nation as
Finance Minister ?
Was he serving the interest of his
Country or his Party BOSS ?
தங்களது விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. அரசன் அன்று கொல்வான் தெய்வம்
நின்று கொல்லும்