“ஜீரோ லாஸ்” கபில் சிபல் கன்னத்தில் ஒங்கி அறைந்தது சுப்ரீம் கோர்ட் ! அத்தனை லைசென்சுகளும் ரத்து !! 1.76 கோடியில் பாதியாவது மீள வாய்ப்பு !!!

“ஜீரோ லாஸ்” கபில் சிபல் கன்னத்தில்
ஒங்கி அறைந்தது  சுப்ரீம் கோர்ட் !
அத்தனை லைசென்சுகளும்  ரத்து !!
1.76 கோடியில் பாதியாவது மீள வாய்ப்பு !!!

இன்றைய தினம் ரிடையர் ஆகும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
ஏ.கே.கங்குலி  அவர்கள் – போகின்ற சமயத்தில்
ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கி இந்திய மக்களுக்கு
பொது வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி
விட்டுப் போகிறார் !

இன்று சுப்ரீம் கோர்ட்டில்  2ஜி அலைக்கற்றை வழக்கு
சம்பந்தமான சில முக்கியமான தீர்ப்புகள் –

சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் ஆ.ராஜாவால்
ஜனவரி 2008ல் வழங்கப்பட்ட 122 லைசென்சுகளும்
ரத்து செய்யப்படுகின்றன. ஜீரோ லாஸ் என்று கூறிய
கபில் சிபலின் முகத்தில் பளாரென்று ஓங்கி அறைகிறது
இந்த தீர்ப்பு.

ஏலம் மூலம் – சந்தை மதிப்பை தீர்மானித்து அதன் மூலம்
லைசென்சு வழங்கும் புதிய முறையை தொலைபேசி
ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) 2 மாதங்களுக்குள்
தீர்மானித்து அதன்படி அடுத்த 2 மாதங்களுக்குள்
மத்திய அரசு புதிய லைசென்சுகளை வழங்க  வேண்டும்.

தகுதி இல்லாமலே லைசென்சு பெற்ற சில கம்பெனிகளுக்கு
50 லட்சம் முதல் 5 கோடி வரை சுப்ரீம் கோர்ட்டால்
அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அபராதத் தொகையில் பாதி( 50%) சுப்ரீம் கோர்ட்டில்
டெபாசிட் செய்யப்பட்டு, வசதி இல்லாத ஏழைகளுக்கு
சட்ட உதவி செய்யும் பணிக்காகப் பயன்படுத்தப்படும்.

மீதிப் பாதி, பாதுகாப்பு அமைச்சக்த்தின் மூலமாக –
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்
படும்.

நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் ஒரு வாசகம்
மிக மிக முக்கியமானது.

“அதிருஷ்டவசமாக சில பொதுநல அமைப்புகளால்.
இந்த வழக்கு மட்டும் கோர்ட்டின் பார்வைக்கு கொண்டு
வரப்பட்டிருக்கா விட்டால் – இந்த தேசத்தின்
இத்தனை செல்வமும், வளங்களும்,  –
யாருடைய கவனத்திற்கும் வராமலே அதிகாரத்தில்
இருக்கும் சிலரால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கும்”

பின்குறிப்பு –
மீண்டும் புதிதாக, 2ஜி அலைக்கற்றைகள் ஏலம்
விடப்படும்போது அதன் உண்மையான சந்தைமதிப்பு
தெரிய வரும்.  அது, ராஜா மட்டுமல்ல,
கபில் சிபல் மட்டுமல்ல,
2ஜி விவகாரத்தில் தவறு ஏதும் நிகழவில்லை
என்று வாதம் செய்து வந்த அத்தனை பேரின்
செவிட்டிலும் அறைகிறாப் போல் இருக்கும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to “ஜீரோ லாஸ்” கபில் சிபல் கன்னத்தில் ஒங்கி அறைந்தது சுப்ரீம் கோர்ட் ! அத்தனை லைசென்சுகளும் ரத்து !! 1.76 கோடியில் பாதியாவது மீள வாய்ப்பு !!!

  1. jayakumar's avatar jayakumar சொல்கிறார்:

    super good news…thank you….jayakumar

  2. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    SO THIS PROVES THIS DAMAGE IS ATLEAST RECOVERABLE. WHAT ABOUT SCAMS LIKE COMMON WEALTH BOFORS ETC.

  3. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    மத்தியில் ஆளும் கட்சிக்கு தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் மூக்குடைப்பு.

  4. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    The UPA government has lost all sense of shame with repeated snub in the higher Courts one after the other.. But MMS will continue, or rather, will be continued by Soniaji. PC’s continuance is of course shaky.

  5. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    தகவலை ஏற்கனவே அறிந்தேன்.கபில்சிபலை தலைப்பில் குட்டியது இப்பவே பாதி 2G கிடைச்ச மாதிரி:)

  6. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    டிவியில் கபில் சிபல் பேட்டி பார்த்தேன்.
    இல்லவே இல்லை
    என்று இப்போதும் சாதிக்கிறார் சிபல்.

    இவர்களை எல்லாம் இப்படி விடக்கூடாது.
    நடுத்தெருவில் நிறுத்தி,
    பெண்கள் கையால் துடைப்பத்தால்
    நாலு சாத்து சாத்தினால் தான் புத்தி வரும்.

    • Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

      உங்களுக்கு கை வலி எடுப்பது தான் மிச்சம்… சூவால அடி வாங்கியும் கூட ப.சி மூஞ்சை சிரிச்சமாதிரியே வச்சிக்கிட்டு சுத்துறதை நீங்க பாக்கலியா?

  7. கிரி's avatar கிரி சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி

  8. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    நல்ல தீர்ப்பு. மகிழ்ச்சியாக இருக்கிறது. ரிடயர் ஆகிப் போவதற்கு முன் ஒரு நல்ல காரியத்தைச் செய்து விட்டுப் போயிருக்கிறார் கங்குலி. நான் கூட இவர் ரியடர் ஆனதும் கேஸையே இழுத்து மூடி விடுவார்கள் என நினைத்தேன். நல்லது நடந்திருக்கிறது. இது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

    டாக்டர் சுப்ரமண்ய சுவாமிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

    ’தத்தகாயக் கதிரவன்’ ராசா ஊழலே செய்யவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

  9. indian's avatar indian சொல்கிறார்:

    sir, each and every posting in this site is a pearl. continue the good work.

  10. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை.,
    சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.கங்குலி அவர்களின் புகைப்படத்தை (அதுவும் பெரிய அளவில்) வெளியிட்டமைக்கு நன்றி பாராட்டுக்களும் கூட!.உங்கள் சீறும் பணி சீரும் சிறப்புமாக தொடரட்டும்.

  11. R.Gpalakrishnan's avatar R.Gpalakrishnan சொல்கிறார்:

    This Kapil Sibal is to be condemned tooth and nail. This man is totally unfit to be a human specie.Leave alone his role as a politician. An abundant courage is needed to accept a crime/fault.Whereas this man still defend this Himalayan fraud. This is cowardice. Mr.M.M.Singh is the sole cause for the entire episode. What a shame!!!

  12. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    காங்கிரச்னா என்ன? சுவீட்டா, இல்லை காரமான்னு கேக்குற அளவுக்கு அது தமிழ் நாட்டி காணமா போச்சு….. விரைவில் அது இந்தியா லெவலில் நடக்கும்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.