திருமதி சசிகலாவின் கணவராகிய
ம.நடராசன் என்கிற …IPC-420
சும்மா ம.நடராசன் என்று சொன்னால் –
தமிழ் நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும் ?
திருமதி சசிகலாவின் கணவர் நடராசர் என்று
சொன்னால் தானே தெரியும் ?
இப்படி மனைவியின் பெயரை சொன்னால் தான்
அடையாளம் தெரியும் என்கிற நிலையில் உள்ள
தமிழ் நாட்டின் ஒரே ஒரு தலைவர் –
( அவரே சொல்லிக் கொள்கிறாரே –
தலைவர் என்று -நானென்ன செய்வது ?)
அடிக்கிற கூத்தைப் பாருங்கள்.
காமெடி-வில்லனாக மறைந்த நடிகர் அசோகனை
நினைவுபடுத்தும் இவர்,
தஞ்சாவூரில் பொங்கலின் போது, தனக்குச்
சொந்தமான திருமண மண்டபத்தில் நடத்திக்
கொண்ட விழாவிலிருந்து சில காட்சிகள் –
முதலில் செய்தி – பின்னர் விமரிசனம் !
——————-
“பிரனாப் முகர்ஜியின் உறவினர் கிருஷ்ண மோகனை
நான் அழைத்து வந்தது உள்துறை அமைச்சருக்கு
(ப.சி.) காய்ச்சலாக இருக்கிறது !
இந்தியா முழுதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் –
தமிழகமே தாங்காது !
இது வரை கட்டுண்டோம் –
பொறுத்திருந்தோம்.
காலம் மாறி இருக்கிறது.
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்பது போல்
கட்டுப்பாடற்ற நடராஜனாகி இருக்கிறேன்.
நான் இரண்டு பேருக்கு தான் கட்டுப்பட்டு
இருக்கிறேன். ஒருவர் அய்யா (பழ.நெடுமாறன்).
மற்றொருவர் என் மனைவி(சசிகலா) !
வேறு எவருக்கும்
கட்டுப்பட மாட்டேன் !!”
– நடராஜன்.
அடுத்து, தஞ்சாவூரில் அமைய உள்ள முள்ளிவாய்க்கால்
நினைவுத் தூணுக்காக –
தன்னுடைய 3 கார்களையும்,
வாட்ச் ஒன்றையும் ஏலம் விட்டார்.
அதில் கிடைத்த 50 லட்ச ரூபாய் பணம் மேடையிலேயே
பழ.நெடுமாறனிடம் ஒப்படைக்கப்பட்டது.
“இனி நான் பொது வாகனங்களையே
பயன்படுத்த உள்ளேன்.
நிறைய பேர் –
“முடிவு எடு தலைவா (!)”
என்கிறார்கள்.
நான் முடிவெடுக்காமல் எப்போது இருந்தேன் ?
நான் முடிவெடுத்ததால் தானே –
கடந்த ஆட்சியே போனது ?
நான் ஏன் அமைதி காக்கிறேன் ?
என் முடிவுகளால் தமிழகத்தின் பொது நன்மைக்கு
பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாதே என்று பார்க்கிறேன் !
என் மனைவியின் வழக்கும் அங்கே இருப்பதால்,
அதற்காகவும் அமைதி காக்க வேண்டி இருக்கிறது.
இன்று வரும் இடர்ப்பாடுகளைக்கண்டு யாரும்
அச்சப்பட வேண்டாம்.
சரியான நேரத்தில் முடிவெடுப்பேன்.
அதுவரை காத்திருங்கள் ” என்றும் பேசி முடித்தார்
நடராஜன்.
கார்களை ஏலம் விட்டு விட்டதால் விழா முடிந்ததும்
சாலையில் நடந்தே சென்றார் நடராஜன் !
சிலர் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி,
வேறு ஒரு காரில் ஏற்றிச் சென்றனர்.
————————–
தனக்குச் சொந்தமான 3 கார்களை மேடையில்
50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டார் –
3 கார்கள் வைக்கும் அளவிற்கு இந்த நபருக்கு
என்ன தேவை ?
எப்படி வந்தது இந்த வசதி ?
குடும்பம், மனைவி – யாரும் கூட இல்லை.
எப்போது வாங்கினார் இவற்றை ?
இந்த ஆள் என்ன தொழில் செய்து இத்தனை
சொத்துக்களையும் சம்பாதித்தார் ?
நமக்குத் தெரிந்து சில ஆண்டுகள் தமிழக அரசில்
(கருணாநிதின் முந்தைய ஆட்சிக்காலத்தில்)
செய்தித்துறையில் இரண்டாம் கிரேடு அதிகாரியாக
பணி புரிந்தார். அந்த நிலையில் இவ்வளவு
சம்பாதித்திருக்க முடியாது.
மற்றபடி இவர் என்ன தொழில் செய்கிறார் ?
நடத்தும் “புதிய பார்வை” பத்திரிகையும்
நஷ்டத்தில் தான் இயங்குகிறது !
இவரது வருமானத்திற்கான வழி என்ன ?
மனைவியின் பெயரையும், இடத்தையும் வைத்து
அடித்த கொள்ளை தானே ?
கார் வாங்கிய பெரிய மனிதர்களை (?)
ஏற்கெனவே இவரே செட்டப் செய்து
வைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
(வாங்கியவர்களின் யோக்கியதாம்சங்கள்,
விற்பனைக்கான வரி போன்ற விவரங்களை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்
என்று நம்புகிறேன்.)
காரை விற்று விட்டதால் – விழா முடிந்ததும்
சாலையில் நடந்தே போனாராம் – மற்றவர்கள்
சமாதானம் செய்து காரில் ஏற்றினராம் – ரஜினி படம்
பார்த்ததன் விளைவோ ?
முதலில்”ஐயா”விற்கு கட்டுப்பட்டவராம் –
இவரது சரித்திரம் முழுவதும் தெரிந்தும்
பெரியவர் பழ.நெடுமாறன் இவரை எப்படி
சகித்துக் கொள்கிறார் ?
அடுத்து “மனைவி”க்கு கட்டுப்பட்டவராம் –
அது தான் எல்லாருக்கும் தெரியுமே !
அதனால் -மதுரை கோர்ட்டில்,
கஞ்ஜா வழக்கில் சிக்கிப் பரிதவித்த
அந்த “ஜரீனா” என்கிற அப்பாவிப் பெண்ணின்
முகம் இன்னும் மக்கள் மனதில் இருந்து
மறையவில்லையே !
தன்னை தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர்
எந்த கூட்டத்தின் தலைவர் ?
கொள்ளைக் கூட்டத்திற்கும் கூடத்தான்
தலைவன் என்று ஒருவன் இருக்கிறான்.
இவரது மன்னார்குடி கொள்ளைக் கூட்டத்தைத்தான்
சொல்கிறாரா ?
IPC (இந்தியன் பீனல் கோடு ) பிரிவு 420ல்
கூறப்படும் அத்தனை யோக்கியதைகளையும்
கொண்ட -(Section 420.
Cheating and dishonestly inducing
delivery of property……..)
தமிழ் நாட்டையே சுரண்டி சாப்பிட்டு விட்ட –
இந்த மனிதனும், இவரது கூட்டமும் ஓட ஒட
விரட்டிப் பிடிக்கப்பட வேண்டியவர்கள்.வளைத்துப்
பிடித்து “உள்ளே” தள்ளப்பட வேண்டியவர்கள்.
அடேயப்பா – எத்தனை எத்தனை “கரன்”கள் !
சொந்தக்காரர்களுக்குப் பஞ்சமே இல்லையே இவரிடம் –
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் –
வந்து கொண்டே இருக்கிறார்கள்
டஜ்ன் கணக்கில் சொந்தக்காரர்கள் !
அத்தனை பேர் மீதும் –
தகுந்த முறையில், வெளிப்படையான விசாரணை
நடத்தப்பட்டு,
இவர் பெயரிலும், இவரது உறவினர்களின்
பெயரிலும் கடந்த 20 ஆண்டுகளில் வாங்கப்பட்டுள்ள
சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல்
செய்யப்பட வேண்டும்.




இது போன்ற நபர்களை கண்டு கொள்ளாமல் அவர்களது பேச்சுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
ஏ மேகங்கள் அது போல சோகங்கள் கலந்தோடும்
நீ போகும் பாதையெல்லாம் ஞாயங்கள் சபையேறும்
எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே 🙂
அதை விட இந்தப் பாடல் இன்னும் பொருத்தமாக இருக்கும்! 🙂
விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
இந்த ஆள் ஒரு வெத்து வேட்டு.
இவர் மனைவி போயஸ் தோட்டத்தில் இருந்த
வரை தான் இவர் ஆட்டம் எல்லாம்.
இப்போது இவர் ஆட்டம் குளோஸ்.
இப்போது மட்டுமல்ல -அம்மையார் ஆட்சியிலிருக்கும்
காலம் முழுதும் இவர் வாயத்திறக்க முடியாது.
திறந்தால் கம்பி எண்ணப் போக வேண்டியிருக்கும்.
இவர் மனைவிக்கு கட்டுப்பட்டவரா இல்லை
ஜெயிலுக்கு பயந்தவரா என்பது ஜரீனா மேல் கஞ்சா
கேஸ் வந்தவுடன் எல்லாத்தையும் மூடிக்கொண்டு
உட்கார்ந்ததில் இருந்தே தெரியுமே.
எத்தனை நாள் ஆனாலும், இவர்
வெளிப்படையாக ஒரு முடிவும் எடுக்கப்போவதில்லை.
கார்டனுடன் மோதினால் தானே சிக்க நேரிடும்
என்பதால், தான் சம்பந்தப்படாத ரகசியங்களை
மட்டும் இவர் கருணாநிதியிடம் மறைமுகமாகக்
காட்டிக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதான் கலைஞரும் வலை வீசிப் பார்க்கிறாரே !
நெடுமாறன் ஐயாவுக்கு இந்த ஆளு சகவாசம் தேவை தானா?!