ஜெகதலப்பிரதாபன் உம்மன் சாண்டியின் புதிய தகிடுதத்த முயற்சிகள் ….!

ஜெகதலப்பிரதாபன் உம்மன் சாண்டியின்
புதிய தகிடுதத்த முயற்சிகள் ….!

அதிகாரம் பெற்ற கமிட்டி அனுப்பிய
இரு நிபுணர் குழு -முல்லைப்பெரியாறு அணைக்கு,
கேரள அரசு சொல்வது போல்,
நில அதிர்வுகள் எந்தவித  பாதிப்புகளையும்
ஏற்படுத்தவில்லை என்று அறிக்கை கொடுத்தவுடன் –

அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க
வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கை
ஐவர் கமிட்டியால் நிராகரிக்கப்பட்டது.

இதன் விளைவாக கேரள அரசுக்கு ஏற்பட்ட
சறுக்கலை சமாளிக்க, உம்மன் சாண்டி  தமிழ் நாட்டை
சேர்ந்த பத்திரிகை அதிபர்களை (நிருபர்களை அல்ல !)
கேரள அரசின் சார்பில் 07/01/2012 சனிக்கிழமையன்று
திருவனந்தபுரத்திற்கு வரவழைத்து விருந்து கொடுத்து,
அவர்களிடம் ஒரு அறிக்கையையும் கொடுத்தார்.

எந்த எந்த பத்திரிகை அதிபர்கள் சென்றார்கள் என்கிற
விவரத்தை இதுவரை யாரும் வெளியிடவில்லை.
அவர்களது (விமான ?) போக்குவரத்துக்கு
கேரள அரசே ஏற்பாடு செய்திருந்தது.

அந்த கூட்டத்தில் யாராவது  கேள்விகள்
கேட்டார்களா, கேட்டது யார் போன்ற விவரமும்
வெளியாகவில்லை. தமிழ் நாட்டிலிருந்து
சென்றவர்கள் அவரிடம் நிறைய கேள்விகளைக்
கேட்டிருக்கலாம் – அவரது நாடகங்களை வெளிப்படுத்த
முயற்சி செய்திருக்கலாம். செய்ததாகத் தெரியவில்லை.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு என்று
ஒரு தனிப்பட்ட வலைத்தளம் இருக்கிறது. அதில்
வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி,கூட்டத்தில்
உம்மன் சாண்டி சொல்லியிருப்பதன் சுருக்கம் –

(http://www.keralacm.gov.in/index.php/
component/content/article/557 )
—————————
தமிழ் நாட்டுடன் கேரளாவிற்கு எந்த மோதலும் இல்லை.
கேரளாவிற்கு வரும் தமிழர்கள் அனைவரும்
அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.
தமிழ் நாட்டுடன் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த
பிரச்சினையை தீர்க்கவே கேரளா விரும்புகிறது.
தமிழக அரசு தான் ஒத்துழைப்பு தர மாட்டேன் என்கிறது.
இருமுறை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தபோதும்,
தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு  வரவில்லை.

தமிழ் நாட்டிற்கு தண்ணீரும், கேரள மக்களுக்கு
பாதுகாப்பும் என்பது தான் கேரள அரசின் கொள்கை.
தண்ணீர் விட தாங்கள் என்றுமே மறுத்ததில்லை.

அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் கேரள மக்கள்
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அச்சத்துடனே
வாழ்கிறார்கள்.  பள்ளிச் சிறுவர்கள் கூட நடுங்கிக்
கொண்டே தான் செல்கிறார்கள். அவர்கள் அச்சத்தை
போக்குவது கேரள அரசின் கடமை.
எனவே, புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு.

1979-ல் மத்திய நீர்வளத்துறையிடம் பேச்சு
வார்த்தை நடந்தபோது, தமிழ் நாடு, இப்போதுள்ள
அணையிலிருந்து, 366 மீட்டர் தொலைவில்
புதிய அணை கட்டும் திட்டத்தை
ஒப்புக்கொண்டது. இப்போது மறுக்கிறது.

தன்னுடைய சொந்த நிலத்தில், சொந்த செலவில்
புதிய அணையை கட்ட கேரள அரசுக்கு யாரின்
அனுமதியும் தேவை இல்லை. இதில் தலையிட
மத்திய அரசுக்கே உரிமை இல்லை.

கேரளா நினைத்தால் –
எப்போது வேண்டுமானாலும் புதிய அணையைக்
கட்டலாம். தமிழ் நாட்டின் ஒத்துழைப்புடன் அதைச்
செய்ய வேண்டும் என்று தான் பொறுமையாக
பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறோம்.

——————–

கேரள முதலமைச்சரின்  வலைத்தளத்தில்
இந்த அளவு செய்திகள் மட்டுமே கொடுக்கப்பட்டு
இருக்கின்றன.

தமிழ்ப் பத்திரிகைகளில் இது குறித்து செய்திகள்
எதுவும் இன்று வந்ததாகத் தெரியவில்லை.

இன்றைய “இந்து” ஆங்கில பத்திரிகையில்
இதைத் தவிர, மேற்கொண்டு, இன்னும் சில
விவரங்கள் வந்துள்ளன.  அவை –

1) சுப்ரீம் கோர்ட் இது விஷயத்தில் இறுதியாக
கொடுக்கும் தீர்ப்பை ஏற்று அதன்படி நடந்து
கொள்வீர்களா ? என்கிற கேள்விக்கு,

அரசியல் சட்டத்தின்படி, கேரள அரசு தன்
உரிமையை பாதுகாத்துக்கொள்ள அனைத்து
விதத்திலும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி
இருக்கிறார்.

2) கேரள அரசு சொல்லும் புதிய அணையை –
தமிழ் நாடு அரசே, தன் சொந்த செலவில் கட்டவும்,
பராமரித்துக் கொள்ளவும் ஒத்துக் கொள்ளுமானால்,
அதற்கு கேரளா தயாரா என்கிற கேள்விக்கு –

உம்மன் சாண்டி நேரடியான பதில் எதையும்
அளிக்கவில்லை. மாறாக, தமிழ் நாட்டிற்கு
தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் தர கேரளா
தயாராக இருக்கிறது என்றும், இது குறித்த
வாக்குறுதியை சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுமானாலும்
தர கேரளா தயார் என்று  மட்டும் கூறி இருக்கிறார்.

3) மீண்டும் – புதிய அணையை இரண்டு மாநிலங்களும்
சேர்ந்து கூட்டாக கட்டலாமே என்று கேட்டதற்கு –

முதலில் தமிழ் நாடு புதிய  அணை கட்டுவது
என்கிற யோசனையை ஒப்புக்கொள்ளட்டும்.
மற்ற விவரங்களை பின்னால் பேசி முடிவு
செய்யலாம் என்று நழுவி இருக்கிறார்.

சுற்றி வளைத்து தான் சொன்னதையே மீண்டும் மீண்டும்
சொல்லி இருக்கிறாரே தவிர,  மற்ற கேள்விகள்
எதற்கும் நேரிடையான பதில் இல்லை.

மேலும், அவரது அதிகாரபூர்வமான வலைத்தளத்தில்
கூட்டத்தில் வெளியான  அனைத்து விவரங்களையும்
வெளியிடவில்லை. அவர் சொல்ல நினைத்ததை
மட்டுமே வெளியிட்டிருக்கிறார்.
அதாவது பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியான
மற்ற விவரங்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்து
கொடுப்பதை கூட  தவிர்க்கிறார் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஜெகதலப்பிரதாபன் உம்மன் சாண்டியின் புதிய தகிடுதத்த முயற்சிகள் ….!

  1. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    All Rivers in India should be Nationalised by the Central Government to solve this problem.

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    திரு smtvkendra அவர்களே
    மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறதா?
    அது மட்டுமில்லை, பிரச்சனையை முடிக்கவேண்டும் என்று யாருக்கும் எண்ணமில்லை.
    இப்போது பாருங்கள், மணிமண்டபம் கட்டப்போறாங்களாம். ரொம்ப முக்கியம்!

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    welcome my friend smtv kendra,

    Yes – Nationalisation of all Rivers under one Regulatar Body
    can be the only solution.
    Had vajpai continued in office, nationalisation of rivers
    could have taken some shape by this time.

    smtv kendra – the title looks something different.
    Can you – if you dont mind – explain it represents what ?

    -with all best wishes,
    kavirimainthan

  4. Padmanabhan Potti's avatar smtvkendra சொல்கிறார்:

    Please excuse me.

  5. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    நதிகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கிவிட்டால் நீர் பிரச்சனை வராது என்பது பகல் கனவு. இன்னும் சொல்ல போனால் மலையாளிகள் சூழ்ந்துள்ள இந்திய அரசியலில் அப்படி செய்வது தற்கொலைக்கு சமம். நதிகள் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் மீட்டு எடுக்க ஒரே தீர்வு “தனி தமிழ்நாடு” மட்டுமே. காரணம் இரண்டு நாடுகளுக்கு இடையே தண்ணீர் பிரச்சனை வரும்போது அவை பரம்பரை எதிரிகளாக இருந்தாலும் (உதாரணம். இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா) உலக நீர் பகிர்வு சட்டங்களின் அடிப்படையில் ‘கடை கோடி’ உபயோகிப்பாலரான தமிழ் நாட்டுக்கே முன்னுரிமை வழங்கப் படும். தமிழ் நாட்டுக்கு அப்போது உம்மன் சாண்டி(இந்தியா) தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவோ, தட்டிக் கழிக்கவோ,புத்ய அணை கட்டவோ முடியாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.