சனிக்கிழமை ப.சிதம்பரம் சாருக்கு கொஞ்சம் சங்கடமான நாள் …..

சனிக்கிழமை ப.சிதம்பரம் சாருக்கு கொஞ்சம்
சங்கடமான  நாள் …..

கடந்த மாதம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
சிபிஐ கோர்ட்டில் ஒரு சாட்சியாக ஆஜரான போது,
ப.சிதம்பரம் அவர்களையும் 2ஜி வழக்கில் சேர்க்க
வேண்டும் என்று வாதாடினார்.

தன் வாதத்திற்கு வலிவு சேர்க்க –
சிபிஐ ஜாயிண்ட் டைரக்டர் ஹிதேஷ் அவஸ்தி
மற்றும் முன்னாள் நிதியமைச்சக இணைச்செயலாளர்
சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோரையும் சாட்சிகளாக அழைக்க
வேண்டும் –அதற்கான சம்மனை கோர்ட் பிறப்பிக்க
வேண்டும்  என்று கோர்ட்டில் வேண்டுகோள்
வைத்திருந்தார்.

இது குறித்து உத்திரவு பிறப்பிக்கும்போது,
பாட்டியாலா கோர்ட் “நீங்கள் சமர்ப்பித்து இருக்கும்
ஆவணங்களை தகுந்த முறையில் உறுதி செய்து
(certified true copies ) கொடுத்தால்,
அவர்களை சாட்சிகளாக கூப்பிட வேண்டிய அவசியமே
ஏற்படாது” என்று கூறி இருந்தது. டாக்டர் சுவாமி
அடுத்த கட்டத்தில் இதைச் செய்து தருவதாக
கூறி இருந்தார்.

சட்ட வல்லுநர்கள் –
கோர்ட் இவ்வாறு கோருவது, அடுத்த கட்டத்தில்,
நேரடியாகவே  ப.சிதம்பரம் அவர்களுக்கு –
கிரிமினல் ப்ரொசீஜர்  கோட்,பிரிவு 319ன் கீழ்
(குற்றத்தில் தொடர்புடையவராக கருதப்படும்
மற்றவர்களின் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்த
பிரிவு இது)
சம்மன் பிறப்பிப்பதில் போய் முடியக்கூடும் –
என்று கூறுகிறார்கள்.

டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி,
இன்றைய தினம், பிரதமர் அலுவலகமும்,
நிதியமைச்சகமும், டாக்டர் சுவாமி கொடுத்த
ஆவணங்களை உறுதி செய்து (certification)
கொடுத்து விட்டனவாம்.

சனிக்கிழமை டாக்டர் சுவாமி இந்த ஆவணங்களை
சிபிஐ  கோர்ட்டில் சமர்ப்பிக்க இருக்கிறார்.
எனவே  சனிக்கிழமை ………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சனிக்கிழமை ப.சிதம்பரம் சாருக்கு கொஞ்சம் சங்கடமான நாள் …..

  1. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    ப.சி. ராஜினாமா. ஓகே வா…

  2. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    விரைவில் அவரோடு இன்னொரு மண்டையும் உருளப் போகிறது. அதனால் காய் ‘கனி’களோடு எல்லோரும் ’குடி’ அரசு தினத்தை சிறப்பாக் கொண்டாடலாம். 😉

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ரமணன் சார்,

    நீங்கள் அவர் ‘திறமை’ யை இவ்வளவு
    குறைவாக எடை போடலாமா ?

    “அன்னை”யின் அருள் முழுவதுமாக
    இருக்கும்போது – விஷயம்
    அவ்வளவு சீக்கிரம் மசி ந்து விடுமா ?

    there are many a slips between
    the cup and the lips ….!

    காத்திருப்போம் ….!!!

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    today is சனிக்கிழமை
    waiting for your updated பதிவு
    advance வாழ்த்துக்கள்
    கலக்குறீங்க போங்க!
    keep it up

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர் சைதை அஜீஸ்,

    டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தன் வாக்கைக்
    காப்பாற்றி விட்டார் – இன்று குறிப்பிட்ட
    ஆவணங்களை சிபிஐ கோர்ட்டில் சமர்ப்பித்து
    விட்டார்.

    வழக்கு ஜனவரி 21ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்
    பட்டிருக்கிறது.

    ……..காத்திருப்போம்.
    (போகிற போக்கைப் பார்த்தால் நிறைய பேர்
    காத்திருக்கிறார்கள் போலிருக்கிறதே !)

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.